திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

பொ-ரை :- சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே! மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.

வி-கு :- அலர்மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று உறை மார்பா என்க. அலர்மேல் மங்கை – தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார். அமரர் – தேவர்களுமாம்.

    ஈடு :- பத்தாம்பாட்டு. 1தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக்கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். 2மேலே ஒன்பது திருப்பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தைச் சொன்னார். இதில் தம்முடைய சொரூபம் சொல்லிச் சரண்புகுகிறார். 3மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும், அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். 4இத் திருப்பாசுரத்தை, துவயத்தில்

இத்திருப்பாசுரத்திற் சொல்லப்படுகிற சரணாகதியினுடைய சீர்மையை
அருளிச்செய்கிறார் ‘இத்திருப்பாசுரத்தை’ என்று தொடங்கி. என்றது,
“அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,
“உறைமார்பா” என்கையாலே, நித்திய யோகமும், “நிகரில் புகழாய்”
என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”
என்ற சொல்லின் பொருளும், “புகல் ஒன்றில்லா அடியேன்”
என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற
அதிகாரியும், “உன்னடிக்கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற
சொல்லின்பொருளும், “அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,
“பிரபத்யே” என்ற சொல்லின்பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின்பொருளைத் தெரிவிக்கும் பதம்

திருப்பாசுரத்தில் இல்லையே? எனின், “புகுந்தேன்” என்றதனால்
“சரணம்” என்ற சொல் கோல்விழுக்காட்டாலே வருவது ஒன்றாம்
ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க. இப்பொருள் தன்னையே விவரணம்
செய்கிறார் ‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்
‘பதத்தோடே சேரக்கடவனவாம்’ என்றது முடிய.

பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது. 1அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.

அகலகில்லேன் இறையும் என்று – 2இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தேயாயிற்று ‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது. 3நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘நித்தியாநுபவம்
பண்ணுவார்க்கெல்லாம்’ என்றது, “நச அஹம்அபி ராகவ – இராகவனே!
உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

4நாட்டாருடைய அகலகில்லேன் போல் அன்று, இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வருவது; இது விஷயங் காரணமாக விளையுமது. அலர்மேல்மங்கை –5அவனை, “பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்.“நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.
ஸ்ரீராமபிரான் கூறியது.

6பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை. உறைமார்பா – 1இதனால், நித்தியயோகம் சொல்லுகிறது. எனக்கு ஒருகாலம் பார்த்துச் சரணம் புகவேண்டும்படியாயோ இருக்கிறது? என்றது, இத் தலையில் குற்றங்களையும் ஈசுவரனுடைய சுவாதந்திரியத்தையும் நினைத்துப் பிற்காலிக்க வேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.

2“ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன, நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க, அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து துவயத்தை அருளிச்செய்கையில் அருளிச்செய்தவார்த்தை” என்று சீயர் அருளிச்செய்வர். “இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க, “அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க, இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ; அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலைகொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே. அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.” போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ; இங்ஙனே இருக்கச்செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே. இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி; இவன் செய்த குறைகளைத் தான் காணாக்கண் இட்டிருக்கை அன்றிக்கே, தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ. ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில்அவனோடு ஒப்புச்சொல்லி, முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது. தொட்டாரைத்தொட்டு 1“குற்றம் செய்யாதார் யாவர்” என்னக்கடவ இவள், “நகஸ்சிந் ந அபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-‘நம்மை ஒரு காரியத்தில் ஏவுவது காண்’ என்று காலத்தை எதிர்நோக்கி இருக்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. தன் வார்த்தை கேளாதார்க்கும் கூட 2“ஆடவர்களுள் ஏறு போன்றவரான இந்த இராமபிரான், இராச்சியத்தை விரும்புகிறவனாயிருக்கிற உன்னால் சிநேகிதராகச் செய்து கோடற்குத் தக்கவர்” என்னக்கடவ இவள், தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. “மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”

என்பது, ராமா. சுந். 21 : 19.3“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ. என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித்தரவேணும்’ என்ன, ‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி. ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”

என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.

“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின், பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

நிகரில் புகழாய்-4அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது. தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் ‘என்னடி யார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2. என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது. உலகம் மூன்றுடையாய் – தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத சம்பந்தம் சொல்லுகிறது. என்னை ஆள்வானே – சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக்கொடுக்கும்படி. 5மோக்ஷத்தளவும்செல்ல நடத்திக்கொடு போந்து 1நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது. நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – 2அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது. புகல் ஒன்று இல்லா அடியேன் – 3ஆகிஞ்சந்யமும் சொரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ. உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள். அமர்ந்து – நடு ஓர் 4இடையீடு இன்றிக்கே இருக்கை. புகுந்தேனே – 5இந்த உறுதியும் உபாயபாவத்தில் சேராமையாலும், 6செய்ந்நன்றியறிதல் சொரூபமாகையாலும், பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும், இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன அன்றோ. 7இவையெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக்கடவனவாம்.1அகலகில்லேன். . . . . . .புகுந்தேன் – இதில் உபாயத் தன்மை சொல்லச்செய்தே, உபேயவிஷயமும் சூசகமுமாயிருக்கிறது. 2அதாகிறபடி எங்ஙனே? என்னில், 3இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமைசெய்வது; அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். 4இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப்பிராப்யத்வம் அன்றோ. 5நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாகவல்லது. அகலகில்லேன் இறையும் என்று-6இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று. தனக்கு அகலுகைக்குக் காரணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும், அங்குத்தை இனிமையை நினைத்து, கணநேரமும் நான் அகலுகைக்குச் சக்தியுடையவள் ஆகிறிலேன் என்னும். 1“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லாநிற்கச்செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது; “அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”
என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.

கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று. அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில், தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன்தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள். என்றது, 2அவனை, “பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” “நஜீவேயம்
க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.என்னப்பண்ணுமவள் என்றபடி. 3உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்; 4அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ, 5இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும், அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை; ஆனால், இந்த வார்த்தை சொல்லுவதற்குக் காரணம் என்? என்னில், அவனாகையாலே வந்தது; 6உலகத்தாருடைய பிரார்த்தனை கர்மம் அடியாக வருமது; இவளுடைய பிரார்த்தனை விஷயத்திற்குக் கட்டுப்பட்டதாக விளையுமது.  உறை மார்பா – 1முதற்பதத்தில் மதுப்பால் சொல்லுகிற நித்திய யோகத்தைச் சொல்லுகின்றது; 2இதுவும் இங்ஙனே பலிக்கக் கண்டோமித்தனை. 3இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய சுவாதந்திரியத்தை யாதல், தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல் நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது, அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்சவேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி. 4அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி. 5பிராட்டிபக்கல் அபராதம், காகத்துக்கும் இராவணனுக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், இவள் சந்நிதியாலே தலைபெற்றது காகம்; அத்தனை அபராதம் இன்றியிலே இருக்க, இராவணன் தலை அறுப்புண்டான் அன்றோ இவள் சந்நிதி இல்லாமையாலே. 6இத்தனை உண்டே அன்றோ இவள் அருஇல் இருப்பதற்கும் அருகில் இராமைக்கும் வாசி.1தமப்பன் பகையாக, தாய் அருஇல் குழந்தையை அழியச்செய்ய மாட்டாமையும் ஒன்று உண்டே. 2அவன் செய்த குற்றத்திற்குப் பிரஹ்மாஸ்திரத்தை விட்டு, அது தொடர்ந்து கெரண்டு திரிந்தவாறே புகல்அற்று விழ, இவளை நோக்கி, பிரஹ்மாஸ்திரத்திற்கு ஒரு கண்ணழிவு சொல்லிவிட்டான் அத்தனை அன்றோ. 3“அந்தக் காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்” என்றதுவும், “ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:”

என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.

4. “த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”

என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

4“நான் வணங்கேன்” என்றதுவும் இரண்டும் பயன் அற்றவை. அது என்? என்னில், காகத்துக்கும் போகிறபோது மனத்தில் 5நினைவு அதுவே அன்றோ. 6அங்ஙன் அன்றாகில்,“காகோ ஜகாம ஸ்வகமாலயம்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32.

“தன் இருப்பிடத்தை அடைந்தான்” என்கிறபடியே, போகப் பாரானே; 1செயல் மாட்சியாலே விழுந்ததித்தனை அன்றோ இது இராவணனுக்கும் உண்டாயிருக்கச் செய்தே காரியமாயிற்றது இல்லை அன்றோ, இவள் அருஇல் இராமையாலே. 2மேலே கூறிய அர்த்தவிசேடங்கள் எல்லாம் துவயத்தில் முதற்பதத்தோடே அற்றது.

இனி, ‘நிகரில்’ என்று தொடங்கி ‘திருவேங்கடத்தானே” என்னுமளவும் வர, துவயத்தின் 3அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது. நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள்தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது, 4‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப்பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி. ‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக்கண்டேன்’ என்று காட்டிக்கொடுத்தாலும், ‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ? தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை. இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்; அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது. 5இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய சுவாதந்திரியத்தை நினைத்து ‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும், அவன் இவளுடைய மிருதுத்தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும். ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

உலகம் மூன்றுடையாய் – 2தான் குணங்கள் இல்லாதவனாயினும் விடஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது. “சிதகு உரைக்குமேல்” என்ற இடத்தில், அவளுக்குச் சொரூபத்திற்குத் தகுதியான குணங்கள் இல்லாதகாலத்திலே அன்றோ அவள் அது சொல்லுவது; அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும் விட ஒண்ணாத குடல்தொடக்கைச் சொல்லுகிறது. 3அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரைகட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விடஒண்ணாது என்கிறார்
‘அவன் அல்லேன்’ என்று தொடங்கி. ‘செற்கற்சீரை கட்டி
வளைக்கலாம்படி’ என்றது, காஷாயவஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப்
புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.

இனி, இவன் தான் யாதாயினும் ஒரு காலத்து வணங்குதலைச் செய்து, பின்பு கைகழியப் போகப் பார்க்கிலும், காலிலே விலங்கைத் தைத்துக் காரியம் கொள்ளலாம்படியான உரிமை சொல்லுகிறது மேல்;என்னை ஆள்வானே – 1அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது, 2‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி, என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – 3அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமைசெய்கிறதும் இங்கே அன்றோ. 4“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது; குணநிஷ்டரும் கைங்கரிய நிஷடரும். திருவேங்கடத்தானே – 5அதற்கு முடிந்தபொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ. 6குணயோகமும், சேஷித்வமும், விசேஷகடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு. இவன் விரும்பியவை அனைத்தையும்இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலைபெற்றிருக்கின்றான் என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ. 2இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில், 3“மாமேகம் – என்னையே” என்ற இடத்தில், சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது. 4இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு. அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான். எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம். அங்குத்தானும் 5“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினையுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று. அதுவும் இல்லை அன்றோ இங்கு.

இனித் தம் படி சொல்லுகிறார்: புகல் ஒன்று இல்லா அடியேன் – 6மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச்சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், சொரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச்செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்லவேணுமன்றோ. அவற்றை 1இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில், அவனுக்கு உபாயத் தன்மை சொரூபமானதைப் போன்று. இவனுக்கும் இந்த நினைவு சொரூபமாகையாலே. 2இவனுக்கு இது இல்லாதபோது சர்வமுக்தி பிரசங்கமாமே. அடியேன் – 3துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை, இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி. உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது. 4அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக்கடவதன்றோ. அமர்ந்து புகுந்தேனே – 5“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறுபோலே. 6அவனுக்கு ஒரு துணைவேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார், புகுந்தேன் – 1போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ. இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார். 2துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சிபோல் அன்று; துவயத்தில் “பிரபத்யே – அடைகிறேன்” என்று நிகழ்காலமாக இருக்க,
இங்கு, “புகுந்தேன்” என்று இறந்தகாலமாகச் சொல்லுவான் என்? என்ன,
அது போக்கிய புத்தியாய்ச் சொல்லுகிறதித்தனை; உபாயத்துக்கு ஒரு
முறையே அமையும் என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘துவயத்தில்’ என்று தொடங்கி. என்றது, நினைவின் தொடர்ச்சி போன்று,
சாதனமாகச் சொல்லப்பட்டதன்று; இனிமையாலே நிகழ்காலமாகச்
சொல்லப்பட்டது அங்கு என்றபடி. இவர் “ஸக்ருத்கர்த்த: ஸாஸ்த்தார்த்த: –
ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்யவேண்டும்” என்கையாலே,
இறந்த காலமாகச் சொன்னார் என்றபடி. ‘சாஸ்திரார்த்தம்’ என்றது,
பிரபத்தியை.

3ருசிகாரியமாய் வருகையாலே பேற்றினை அடையுமளவும் நிற்பது ஒன்றாம்

3எல்லாச் சாத்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய், இச்சாத்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார். 2ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடையவருமான இவர் ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு. 3இந்த உபாயத்தைப்பற்றி வேறு பிரயோஜனங்களைக் கொள்வாரும், வேறு சாதனங்களைப்பற்றி இவனையே பிரயோஜனமாகப் பற்றுவாருமாய் இருப்பர்கள் புறம்புள்ளார். அங்ஙன் அன்றிக்கே, இவனையே பிராப்பியமும் பிராபகமுமாக அறுதியிட்டு இருக்கிற ஏற்றம் உண்டு இவர்க்கு. 4பிராப்பியம் இவனேயாகில், வேறு சாதனங்களை மேற்கொண்டால் வரும் குற்றம் என்? என்னில், அவை சாத்தியமுமாய்ப் பலவுமாய்ச் செய்யமுடியாதனவுமாய்ச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவுமாய் இருப்பனவாம். 5இப்படி இருக்கும் சாதனங்கள் பல. அவை யாவை? என்னில், கர்மயோக ஞானயோக பக்தியோகங்கள். 6கர்மயோகமாவது, ஆத்மாவை உள்ளபடி அறிகின்ற ஞானம் முன்னாகத் தன் சாதிக்கும் தன் ஆஸ்ரமத்துக்கும் தக்கதாய் விதிக்கப்பட்ட கர்மத்தைப் பலத்தில் விருப்பமில்லாதவனாகியும் நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவனாயும் பற்றையும் விட்டவனாகிப் பகவானுக்குச் செய்யப்படும் ஆராதனம் என்ற எண்ணத்தோடு செய்தல்வேண்டும்; அவ்வாறு செய்யவே விரோதியான பாபம் அழியும்; அது அழியவே மனம் மலம் அறும்; அது அறவே சொரூபப் பிரகாசமும் உண்டாம்; அது உண்டாகவே பகவானை அறிகின்ற ஞானமும், அவனிடத்தில் பிரேமமும் பிறக்கும்; பின்னர், பரபக்தி பரஞான பரமபக்தியாய்ப் பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம். ஞானயோகமாவது, இந்திரியங்களை நியமித்துக்கொண்டு சொரூபத்தை விஷயமாக்கினால் பகவானை அறிகிற ஞானமும் அவன் விஷயமான பிரேமமும் பிறக்கும்; அவை பிறக்கவே பரபக்தி பரஞான பரமபக்திகளும் பிறக்க, பின்பு பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம். அங்ஙன் அன்றிக்கே, மேலே கூறிய 1கர்மஞானங்கள் இரண்டனையும் பகவத் விஷயத்திலே யாக்குவது; அங்ஙனமாக்கினால் “என்னிடத்தில் மனத்தை வைத்தவனாயும் என்னிடத்தில் பக்தியையுடையவனாயும் என்னை ஆராதிக்கிறவனாயும்“மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”

என்பது, ஸ்ரீகீதை, 9 : 34.

ஆகக்கடவாய்; என்னை நமஸ்காரம் செய்வாய்” என்கிறபடியே, செய்ய, பரபக்தி பரஞான பரமபக்திகள் பிறக்கும்; பின்பு, பெற்றோடே தலைக்கட்டுவது பக்தியோகம் எனப்படும்.

இவைபோல் செய்தற்கு அருமையுடையன அன்றிக்கே, திருநாமத்தை எளிதான உபாயமாக 1விதித்தது; எங்கே? என்னில், வீடுமர் தருமபுத்திரனுக்குப் பல தருமங்களையும் சொல்ல, 2“தருமங்கள் பலவற்றிலும் எந்தத் தருமம் உம்மால் மேலான தருமமாகக் கொள்ளப் பட்டிருக்கிறது; பிறவி எடுத்தவன் எதனை ஜபித்தால் பிறவியினின்றும் சம்சாரம் என்னும் தளையினின்றும் விடுபடுவான்” என்கிறபடியே, உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்லவேணும் என்ன, 3“இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின், தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ. “கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”

என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.

3. “ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”

என்பது, மஹாபாரதம் சஹஸ்ரநாம அத். ‘திருநாமம்’ என்றது, திருநாம
சங்கீர்த்தனத்தினை.

நன்று, திருநாமம் சாதனத்திற்கு அங்கம் அன்றோ? அது, தானே சாதனமாமோ? என்னில், 4“பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும், 5“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்.“வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்”

என்பது, மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.

இந்தத் தேசம் பரிசுத்தமானது, மிக உயர்ந்தது, புண்ணிய கரமானது, விரும்பியவையனைத்தையும் கொடுக்கின்றது” என்று, விரும்பினவற்றை எல்லாம் பெறுதற்குச் சாதனமாகத் தேசவாசத்தைச் சொல்லிற்று. 2“எல்லா ஆராதனங்களுக்குள்” என்று தொடங்கிப் “பாகவதர்களை ஆராதிக்கின்ற ஆராதனமானது மிகச் சிறந்தது என்று யாவராலும் கூறப் பட்டது” என்று முடிக்கையாலே, விரும்பியவை அனைத்தும் பாகவதர்களை ஆராதிக்கவே கிடைக்கும் என்று சொல்லிற்று. “பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”

என்பது காருடம்.

2. “ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”

என்பது, பிரமாணம்.

அப்படிச்சொன்ன செய்தற்கு அரியனவான 3உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே தியாச்சியமாகச் சொல்லப்பட்டன. 4ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த், தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே, 5“ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே, சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.“தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”

என்பது, தைத். உப.

6மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி சொரூபத்தையும் சொல்லி, சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.சரண்யன் சொரூபமாவது, 1நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது. 2அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். 3பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும். வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை. ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில் உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும். 4அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி, 5“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.
-என்கிறபடியே, நித்தியசூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன் முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க்கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே. 6விடாத சுபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக்காரணங்களான ஞானம் சக்தி முதலான எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

1அதிகாரி சொரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பியருசியும் சொரூபப்பிரகாசமும் என்கிற இவையேயன்றோ. 2திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத் துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே; 3இங்கும், “வைப்பன் மணி விளக்காம் மாமதியை மாலுக்கென்று, எப்பொழுதும் கைநீட்டும் யானையை” என்றும், “புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந் தருவி, உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன், விண்ட மலர்கொண்டு விறல்வேங் கடவனையே, கண்டு வணங்கும் களிறு” என்றும், வேறு இடத்திலே “புனத்தினைக் கிள்ளிப் புதுஅவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று, இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்” பெரியாழ்வார்
திருமொழி, 5. 3 : 3.-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்து வைத்தார்கள். 4இனி,அதைப் போலவாகிலும் இவற்றையும் நம்பவேண்டாவோ நமக்கு? 1இனி சரண்ய விஷயத்தில் செய்யப்படும் சரணாகதி பலத்தோடு கூடியிருக்கும் என்பது போன்று, ஆநுகூல்யம் முதலான குணங்களோடு கூடின அதிகாரி சரணம் புக்கால் பலத்தோடே கூடி இருக்கும் என்கிற அர்த்தத்தையும் சொல்லுகிறது. 2‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே தம்முடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, சர்வசுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா-3நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே. 4நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில், ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும், ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்; துணைவேண்டா. இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில், அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே. 5இவ்வுபாயம் ஆர்க்கு? என்றால், அதிகாரிக்கு என்கையாலே, அதிகாரிவேண்டப்படுகிறது; அதிகாரி வேண்டப்படுவது போன்று புருஷகாரமும் வேண்டப்படுவதாம்; 1எங்ஙனே? என்னில், இந்த அதிகாரி, முன்செய்த குற்றங்களையும் பார்த்து, அவனுடைய சுவாதந்திரியம் முற்றறிவுடைமை முதலியவைகளைப் பார்த்துப் பிற்காலிக்க, ‘அஞ்சாதே’ என்று புருஷகாரமானவள் சொல்ல வேண்டுகையாலே, 2அதிகாரி வேண்டப்படுவதுமாய்ப் புருஷகாரம் வேண்டப்படுவதுமாய் இருக்கும். அகலகில்லேன் இறையும் – 3ஒரு கணநேரமும் பிரிய ஆற்றலுடையவள் அல்லேன். 4இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில், மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய், உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர். மூன்றுவித சேதனர்கட்கும் தலைவி என்னுமதற்குப் பிரமாணம், 5“எல்லா ஆத்மாக்களுக்கும் ஈசுவரியாய் இருப்பவளை” என்னக் கடவதன்றோ. உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம், 6“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன், அவனுக்கு இவள் ஈசுவரி என்று சொல்லுகையாலே. “ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ சூக்தம்.

6. “பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.

ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும், ஈசுவரனைக் காதல்குணம் காரணமாக நியமிக்கும். தாயாந்தன்மை சொரூபத்தோடு கட்டுப்பட்டது; காதல் குணம் ஒவ்வொரு காலத்தில் உண்டாமது ஆகையாலே வந்தேறி ஆகாதோ? என்னில், ஆகாது. எங்ஙனே? என்னில், 1உபாதி நித்தியமாகையாலே அதுவும் நித்தியம். 2ஈசுவரன் படைத்தல் முதலாயினவற்றைச் செய்யும்போதும் இவள் நியமிக்கின்றவள் ஆவள்; ‘எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே, அவள் கடாக்ஷம் அடியாகப் புருவநெரிப்பிற்குட்பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும். அது என்? 3  “யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”

என்பது, ஸ்ரீஸ்தவம்.

3. “கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”

என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.

“சரீர இந்திரியங்களோடு சேர்ப்பதற்குக் கருணையுள்ள மனத்தையுடையவன்” என்கிறபடியே, தன் திருவருள் அடியாக அன்றோ படைப்பது என்னில்? அவற்றின் செல்லாமை பார்த்துப் படைக்கில் அன்றோ திருவருள் காரணமாவது; 4தன் செல்லாமையாலே அவள் கடாக்ஷிம் காரணமாகத் தன் சத்தை உண்டாக, அவள் பிரேரிக்க அருள் பிறந்து, அந்த அருள் காரணமாக அன்றோ அவன் படைப்பது. 5நியமிக்குமிடத்தில்அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”

என்பது, நீளாசூக்தம்.

“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”

என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.

6“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், 1“விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது. 2எங்ஙனே? என்னில், ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும், ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ, இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி. 3பிரிவிற்குக் காரணம் கர்மம் அன்றோ? கர்ம சம்பந்தம் இன்றிக்கே இருக்க, இவள் ‘அகலகில்லேன்’ என்னப் போமோ? என்னில், கர்மத்தைப் போன்று, அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள். நன்று; வைலக்ஷண்யம் போக்கியமாமத்தனை அன்றோ? அது மேலும் மேலும் அநுபவிக்கும் இச்சையை விளைக்குமே ஒழிய “இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன, விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே ‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று 4அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள். 5புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது, அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி. 1அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி, ‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள். தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே; இவள் சொல்ல அவன் அறியுமிடம் அவனுடைய ஞானத்துக்குக் குறைவு அன்றோ? என்னில், இவள் சொல்ல அறிந்திலனாகில் அவன் 2காதல் குணத்திற்குக் கொத்தையாமே. அன்றிக்கே, 3“தனக்கும் தன் தன்மை அறிவரியான்” திருவாய். 8. 4 : 6.என்றும் சொல்லாநின்றது அன்றோ என்னுதலுமாம். 4உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் அல்லவோ ஞானத்துக்கு விஷயம்; “ஞானமஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்” திருவாய். 3. 10 : 8.என்றதே அன்றோ. 5‘அகலகில்லேன் இறையும்’ என்றசொல்லும் சொல்ல மாட்டாத நிலை அன்றோ அவன் நிலை. 6அவன் வைலக்ஷண்யங் கண்ட இவளிலும் அவனுக்கு உண்டான ஏற்றம், பிரிந்திருக்கும் நிலையில் அவனுடைய சொற்களில் காணுமத்தனை அன்றோ. “ஒருமாதத்துக்கு மேல் பிழைத்திருக்கமாட்டேன்” என்றாள் இவள்;“மாஸாத் ஊர்த்வம்
ந ஜீவிஷ்யே” என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 10. பிராட்டி கூறியது.
“நஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா, சுந். 66 : 10. ஸ்ரீராமபிரான்
கூறியது,

“ஒருகணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” என்றான் அவன். 1பரதந்திராயிருப்பார்க்கு உடையவன்வருந்தனையும் பொறுக்கவேணு மன்றோ; ஸ்வதந்திரனுக்கு அது வேண்டாமே. 2இப்படி இரண்டு இடமும் விலக்ஷணமாயிருக்கிற இருவரையும் உத்தேசியமாகக் கொண்டிருக்கிற முமுக்ஷுக்களுக்கு ஒருகுறை உண்டோ? 3இவர்களைத் தனித் தனியே பற்றினார்க்கு ஸ்வரூபத்தின் அழிவே அன்றோ. ‘மிதுனமே உத்தேசியம்’ என்று இருப்பார்க்கு ஆத்ம உஜ்ஜீவனமன்றோ. இராவணாதிகள் பக்கல் இவ்வர்த்தம் காணவுமாம்.

அலர்மேல்மங்கை – மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும், எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். 4அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. 5அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது, 6ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதவாறு போலவும்,முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே, சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி. 1சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே, இனிமையின் மிகுதி அன்றோ. இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது. 2இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை. இவ்வளவால் என் சொல்லியவாறோ? எனின், ஸ்ரீ என்ற சொல்லின் பொருளும் மதுப்பின் பொருளும் சொல்லியபடி. 3ஸ்ரீ சப்தம், புருஷகாரம் வேண்டுகையாலே சொல்லிற்று; 4மதுப்பில் எப்பொழுதும் சேர்ந்திருப்பதற்குப் பிரயோஜனம் என்? என்னில், பற்றுகிற அடியார்கட்குக் காலம் பார்க்க்வேண்டாதபடி எப்பொழுதும் அண்மையில் இருத்தல் பயன்.

நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. 5உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும், “தத்துவங்கள் நரனிடமிருந்து உண்டாயின; ஆதலால், இவற்றை நாரங்கள் என்று அறிகிறார்கள்; அவையே அவனுக்கும் இருப்பிடம்; ஆதலால், அவன் நாராயணன் என்று சொல்லப்படுகிறான்” “நராத் ஜாதாநி தத்வாநி நாராணீதி ததோவிது:
தாந்யேவச அயநம் தஸ்ய தேந நாராயண: ஸ்மிருத:”

என்பது, பாத்மபுராணம்.

என்கிறபடியே,உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம். இங்ஙனமிருக்கச்செய்தே, நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும் அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்; அக் குணங்களுக்கு முறை அருளிச்செய்கிறார் இவர். அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில், வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில், இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே, இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால், உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று; ‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில், 1இதற்குப் பொருள், சத்தியத்திலே 2“எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று குணங்களோடு ஒரு சேர எடுத்து, 3“தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”

என்பது, கத்யம்.

3. “ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”

என்பது, கத்யம்.

இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.

உலகம் மூன்றுடையாய் – மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது. 4தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள். என்னை ஆள்வானே – இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர் ‘என்னை ஆள்வானே’ என்று கைங்கரிய தசைபோலே, 5உபகாரம் தோற்றச்சொல்லப் பெறுவரோ? என்னில்,புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்; பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில், உலகத்தைப்பார்த்துச் சொல்லுகிறார். என்றது, 2உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை, ‘கர்மம் முதலான உபாயங்கள் சொரூப விரோதிகள்’ என்று அறியும்தனையும் வர நிறுத்தி, பிராட்டி புருஷகாரமாகத் தானே உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி. இது சௌசீல்யமானபடி எங்ஙனே? என்னில், 3“சீலமென்பது, பெரியவனுக்குச் சிறியவர்களோடு கூட (உண்டான) நெருங்கிய கூட்டுறவு” என்கிறபடியே, தன் மேன்மையையும் இவர் சிறுமையையும் பாராமல் ஒரு நீராகக் கலந்தான் ஆகையாலே என்க.“சீலம்ஹி நாம மஹதோ மந்தை: ஸஹ
நீரந்த்ரேண ஸம்ஸ்லேஷ:”

‘நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது. 4“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும், 5“பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக ‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது. ‘நிகர் இல்’ என்பான் என்? என்னில், இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்; 6பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள்ஒப்பு அல்லர்; 1உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன். “உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி, “போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே. “ஜகத்வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”

என்பது, பிரம்ம சூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 17.

“போகமாத்ர ஸாம்யலிங்காத்ச”

என்பது, பிரம்மசூத்திரம் உத்தரமீமாம்சை, 4. 4 : 21.

பகவானுடைய அனுபவத்தில் மாத்திரம் சம்பந்தம் சொல்லுகையாலே. இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் 2“கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது, 3சௌலப்யமாவது, உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசி அறச் சர்வசுலபமான அர்ச்சக பராதீனத்வம்.

4புகல் ஒன்று இல்லா அடியேன் – “பிரபத்யே” என்கிற இடத்தில், தன்மை இடத்தால் வந்த அதிகாரி சொரூபத்தைச் சொல்லுகிறது. அநந்யகதித்வமும், சொரூபப் பிரகாசமான அநந்யார்ஹசேஷத்வமும் சொல்லுகிறது. 5‘புகல் ஒன்று இல்லா’ என்றும், ‘அடியேன்’ என்றும் இரண்டும் சொல்லவேணுமோ?என்னில், 1பிரகிருமி சம்பந்தத்தில் பாரமார்த்தியத்தாலேயும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞான வைபவத்தாலேயும் அருளிச்செய்கிறார். உன் அடிக் கீழ் – 2“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின், 3எளிதில் பற்றக்கூடியதாய், உலக விஷயங்களிலே அருசிமுன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி, பிறந்த உருசியையும் வளர்த்து, பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து, ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த்தொடர்புள்ளதுமாய், எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க. 4முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து, தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும், “நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும், “உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து – அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில், அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று. இதற்குப் பொருள், 1“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச்செய்தே “ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப்போன்று, திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது. புகுந்தேனே – பிரிந்துநிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர், ‘புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம்பாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து, ‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது. 2“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே. புகுந்தேன் – 3“பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று; அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.

1பாபாநாம் வா2 – பிராட்டியினுடைய அபயப்பிரதானம் இந்தச் சுலோகம். 3‘இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியோடு கூடியவரானார்’ என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய, 4பிராட்டியும் பிரீதியின் மிகுதியாலே விம்மல் பொருமலாய்ச் செயலற்றவளாயிருக்க, இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம்போலே 5“ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே, “கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”

என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-

பெரிய பிரியத்தை வந்து விண்ணப்பம்செய்த எனக்கு ஒரு மறுமாற்றம் சொல்லாமல் தேவரீர் எழுந்தருளியிருக்கிற இருப்பு என்தான்? என்று திருவடி விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் “உனக்கு ஒத்ததாகத் தரலாவது ஒன்று இல்லாமைகாண் நான் பேசாதிருந்தது” என்ன, இவனும் “இவ்வளவிலே நம் விருப்பத்தை விண்ணப்பம் செய்துகொள்ள வேணும்” என்று பார்த்து, “தேவரைச் சுற்றும் முற்றும் நலிந்த அரக்கியர்களாகிறார் கொடுமையுடையவர்களாய் அதற்குத் தக்க காரியங்களைச் செய்கிறவர்களாயிற்று; இராவணனுக்கு முன்னரே கொல்லப்பட வேண்டியவர்கள் இப் பெண்பிள்ளைகளாயிற்று; அவனும் இவர்களைப் போன்ற கேடன் அல்லன்; 6இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினாற்போலே இருக்கிறார்களித்தனையாயிற்று; இவர்களைப்பலவகையாக வருந்துவதற்கு எண்ணங்கொண்டுள்ளேன். 1“கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்” 2“சிந்நபிந்நம்” என்கிறபடியே,“முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”

என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.

2. “சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.

பெருமாள் திருச்சரங்கள் செய்தவை எல்லாம் நானே செய்ய எண்ணுகிறேன்; பகவானுக்கு அபசாரம் செய்தவர்களையும் பாகவதர்களுக்கு அபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் முறையிலே தண்டிப்பதற்குக் கோலாநின்றேன்; முன்பு வந்தபோது இடம் இல்லாமை விட்டுப்போனேன் இத்தனை, இப்போது எனக்கு எல்லாக் கைம்மாறுகளையும் பண்ணியருளிற்று 3ஆகலாம்; இவை இத்தனையும் திருவுள்ளமாகவேணும் என்தான்? என்ன, “பாபாநாம் வா” என்று அருளிச்செய்கிறாள்.

பாபாநாம் வா ஸுபாநாம் வா-4இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம். நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் 5அதுதானே அன்றோ உத்தேசியம்; 6“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்றுவந் தான் என் றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்றுவந் தானென் றுண்டோ புகலது கூறு கின்றான்
தொன்றுவந் தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ நாம் முகம் கொடுக்கவேண்டுவது. 2நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கைகொடுக்குமே; கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள். வதார்ஹாணாம் – தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம் தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக்கடவதோ? என்ன, ‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்படவேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம் உன்னைத்தொற்றிக் கிழித்துப் பொகடக்கடவதோ? என்கிறாள். 3“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும் “நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்னவார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள். பிலவங்கம-4பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள். அன்றிக்கே, 5வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை; யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை; காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது; அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல். அன்றிக்கே, 1நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல். அன்றிக்கே, 2அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்; நீ வானரசாதியாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல். 3‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் – 4இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது, 5உன்கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக்கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி. 6இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண். ஆர்யேண – 7இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும்

படியாவதே உனக்கு! ஆர்யேண – ஐந்திரவியாகரணபண்டிதன் என்கிறது பொய்யோ?1 அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராமகோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ. அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்லவல்லையாயிற்று. 2“நான் போந்த பின்பு அக்கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து. ந கஸ்சித் ந அபராத்யதி-3சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்! 4திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ? 5நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ! நான் தான் குற்றவாட்டி அல்லேனோ? நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்: அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்; தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப்படுத்திக்கொண்டு நானும் போந்தேன்; என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்; தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்கமாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி; இத்தனைநாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்? பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என்பக்கல் தன்றோ குற்றம்? இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று, பெருமாள் அருளிச்செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்! 1‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு நானும் அவர் வழிபோக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்; நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகுவாசல் உண்டோ?’ என்கிறாள்.

ஒன்பது பாட்டாலும் சரண்யன் ஸ்வரூபம் சொல்லி-இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லி சரணம் புகுகிறார்-

அடியேன் அரு வினையேன் -கீழே சொன்னது சரன்யதைக்கு உறுப்பாக
அது தன்னை பேற்றுக்கு உடலாக உறுப்பாக சொல்லி சரணம்
த்வயம்
ஸ்ரீ -அலர்மேல் மங்கை
மத்-அகலகில்லேன் இறையும்
நாராயண -நிகரில் புகழாய் தொடக்கமான குணங்கள்
சரணவ் சரணம் ப்ரபத்யே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
அடியேன் –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
பேற்றுக்கு உடலாக சொல்லி –
அஹம் அர்த்தம் -த்வயத்தில் இல்லை இங்கே அடியேன் வெளிப்படையாக அருளுகிறார்
அதிலும் ஏற்றம் இதுக்கு
த்வயம் விவரிக்கும் -இதற்க்கு விஸ்தரனமான வியாக்யானம்
திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –
தாமதித்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர் களுக்காவும்
அர்த்தம் விசேஷம் நெஞ்சில் பட மீண்டும் மீண்டும் அருளி –
அகலகில்லேன் -அகன்று இருந்து சொல்லுகிற பாசுரம் இல்லை
இருக்கும் பொழுதே -நித்ய சம்ச்லேஷத்தில் இருந்தும்
விஷய வை லஷண்யம் -பிராப்ய நிஷ்கரஷனம் தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பாசுர வியாக்யானதிலும்
எம்மா வீட்டிடிலும் இதே சொல்லி அருளி –
பிராட்டிக்கும் -இப்படியே -நித்ய அனுபவம் செய்பவர் பாசுரம்
நாட்டார் -கர்மாதீனமாக சொல்வது போலே இல்லை
விஷ்யாதீனமாக இது விளைவதால் –
அலர்- புஷ்பம்
மங்கை- பருவம்
எம்பெருமானையும் அகலகில்லேன் சொல்ல வைக்கும் போக்யதை உண்டே இவளுக்கும் –
பரிமளமே ஒரு வடிவு கொண்டது போலே இருக்கை
நித்ய யோகம் இத்தால் சொல்லுகிறது
பிராட்டி ஒரு பொழுதும் பிரிவது இல்லை
மது ப்ரத்யயம் -ஸ்ரீ மன்  நாராயணனன்
ஆஸ்ரயனத்துக்கு காலம் பார்க்க வேண்டாம் என்கிறது இத்தால்-
காலம் பார்த்து சரணம் புக வேண்டும்படியோ இருக்கிறது -எனக்கு என்கிறார் –
உப நயனம்
சம ஆஸ்ர்யணயம் கூட்டி  போகும் அவன் அருகில்
இத்தலை அபராதம் -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் –
பொறுப்பிக்குமவள் உண்டே -அஞ்ச வேண்டாம் -பிற்காலிக்க வேண்டாதபடி –
நடுவில் இவள் வேண்டுமோ -ஐதீகம் -பட்டர் –
இவள் சந்நிதியாலே காகம் தலைப்பெற்றது இல்லாமையாலே ராவணன் தலை போயிற்று –
பிள்ளை அழகிய மணவாள அரையருக்கு -த்வயம் அர்த்தம் உபதேசிக்க –
எல்லாரையும் போக சொல்லி -ஏகாந்தமாக அருள –
நஞ்சீயரும் எழுந்து இருந்து போக –
நம்மை இராய் என்று சொல்ல வில்லையே என்று வெறுத்து இருக்க –
சீயர் எங்குற்றார் தேடி அழைத்து -கூட வைத்து இருந்து
த்வயம் அருளிச் செய்ய –
பிராட்டி சம்பந்தத்தால் -செய்வது என்ன -சேஷி சேஷன் இருக்க
அது இருக்கிறபடி கேளீர்
ராவணனுக்கும் காகத்துக்கும் -பெருமாள் உடன் சம்பந்தம் ஒத்து இருக்க அனுஷ்டானமும் ஒத்து இருக்க
-பிராட்டி மட்டும் ஆசைப்பட்டு -ராவணன் சாபத்தால் கிட்ட ஒண்ணாதபடி ஓன்று இருக்க –
வேகவதி சாபம் கொடுத்து -நெருப்பில் குதித்து சொல்லிய வார்த்தை -உனது தலை வெடிக்கும்
-அவள் விருப்பம் இன்றி தீண்டினால் –
ஜனனி பக்கல் அபராதம் செய்தும் காகம் தப்பிற்று –
கையும் அபராதமுமாக இருக்க -அழகால் தீண்டி ரத்தம் ஒட்டி இருக்க
தலை கொண்டு தப்பினான் இ றே அவள் சன்னதியால் –
சூத்ரத்தால் பிள்ளை லோகாச்சார்யர் இத்தையே அருளி சாதிக்கிறார்-
போக்கற்று செயல் இழந்த நிலை ராவணனுக்கும் இருந்ததே
வெறும் கை வீரன் -சாபஞ்ச முமோஷ -இன்று போய் நாளை வா –
அங்கீகரிக்க பிராட்டி கூடி வா –
செயல் மாண்டு இருந்த நிலை கார்ய கரம் ஆகாதது பிராட்டி சந்நிதி இல்லையாமல்
மாதா பிரஜை இடம் வாத்சல்யம் போலே தகப்பனுக்கு இல்லையே
காணா கணிட்டு இருக்கை -பார்த்தும் பார்க்காமல் இருப்பாள்
கண்டும் கொள்ளாமல் போவதே கண்டுக்காமல் போகிறாய் என்கிறோம் –
பராக்கு காட்டி தலையை திருவடியிலே இட்டு பாத்ம புராண
பிராட்டி தானே சொன்ன வார்த்தை யாதலால் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை
கிருபையால் ரஷித்தாள்
கிருபா பரிய பாலயது
கிருபை உடைய என்னாலே நாம் அர்த்தம் கொள்ளலாம் –
உத்தர அர்த்தத்தில் அவனோடு ஒப்பு சொல்லி
ஸ்ரீ மதே நாராயண நம-தனிப்பதமாக ஸ்ரீ மதே சொல்லி அருளி –
பூர்வ ஸ்ரீ மன் நாராயண எம்பெருமானுக்கு விசேஷணம்-
மிதுனமே உத்தேச்யம் –
பூர்வ அர்த்தம் -ஒப்பு சொல்லாமல் புருஷகாரம் –
உபாயாத்வம் ஆகவும் கொள்ளலாம் தேசிகன் ரகச்யார்த்த சாரத்தில் அருளி –
recommandation செய்து கார்யம் கொண்ட பின்
mendaatory  பவர் அவனுக்கு மட்டுமே
நன்றி இருவருக்கும் தெரிவிப்பது  போலே
புருஷகாரம் -நீர்மையின் ஏற்றம் சொல்லி –
தொட்டாரை தொட்டு –
நம்மை கார்யத்தில் -ஏவுமவனை பெற்றால்
வார்த்தை கேளாதவன் ராவணன் மித்ரனாக -பாவனை உடன் போனாலும் போதும்
இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே
ராவணன் வேலைக்காரிகள் -துர்பலர்-கண்ணும் கண்ணீருமாக காண மாட்டேன் –
துர்பலை தன்னை சொல்லிக் கொண்டாள் பிராட்டி
ராஷசிகள் கண்ணீரை காணும் அளவு பலம் இல்லையே இவளுக்கு –
ராவணன் மாய்ந்த பின்பும்
பெருமாள் விஜயர் ஆனபின்பு
திருவடியும் வந்து சொல்ல பின்பு
இந்த துர்பலம் –
நிகரில் புகழாய் –
அனந்தர பதம் நாராயண -பத அர்த்தம் சொல்லுகிறது மேலே
தாமரையாள் சிதகு உரைக்குமேல் -குணாதிக்யம்-கைவிடாதவன் –
வாத்சல்யம் -தோஷத்தை போக்யமாக கொள்ளுபவன் தான் நிகரில் புகழ்-ஈடு இணை இல்லாத புகழ் இத்தால் தானே ஏற்படும் –
32 குணங்களில் -30 அறிந்து -சொன்னாலும் தெரியாது தனக்காகவும் தெரியாத மாப்பிள்ளை போலே இல்லை –
வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞான பலம் சக்தி தேஜஸ் வீர்யம் போன்ற பலவற்றில் இதுவே முதல்
நிர்குணன் என்றாலும் விட ஒண்ணாத பிராப்தி உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே -பிராப்தி கிரயம் செலுத்து கொடுக்க என்னை ஆளுபவனும் அவனே –
சௌசீல்யம் இத்தால் காட்டி
என்னை கூட ஆளுகிறான்
மோஷம் அளவும் கூட்டி -நடுவில் உள்ள கார்யங்களையும் செய்து அருளி –
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும்
சௌலப்யம் முடிந்த பதம் -திருவேங்கடத்தானே -அர்ச்சை என்பதால் –
ஞான சக்திகள் -அமரர்கள் விரும்பும் சக்தி
முனிக்  கணங்கள் விரும்பும் ஞானம் –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
ஆகிஞ்சன்யமும் அநந்ய  கதித்வமும்
உன் அடிக் கீழ் -சரணவ்
அமர்ந்து -நடுவே இடை வெளி இன்று -கொக்குவாயும் படு கண்ணியம் போலே –
திருவடி தொழ-இன்றும் பாக்கியம் -நம் ஆழ்வாருக்கு -வானமா மலையில் திரு மங்கை ஆழ்வாருக்கு உண்டு
புகுந்தேனே -அதிகாரி விசேஷணம் -இது சாதனம் இல்லையே
பற்றின பற்றுதலும் உபாயம் இல்லையே-
குள்ளம் சிகப்பு போலே அதிகாரி விசேஷணம்
அத்யவசாயம் உறுதிப்பாடு -உபாய பாவத்தில் அன்வயியாது
உபகார ஸ்ம்ருதி -நன்றி -ஸ்வரூபம்
ச்வீகாரம் சைதன்யன் என்பதால்
இவை எல்லாம் அதி காரி விசேஷணம்
பிரபத்யே -புகுந்தேனே -அதிகாரி விசேஷணம் –
பூர்வ அர்த்தத்தில் -இது வரை சொல்லி –
உபாய விஷயம் -பூர்வ வாக்கியம்
உபேயம்-உத்தர வாக்கியம்
பூர்வ வாக்யத்திலும் உபேய விஷய சூசகமாயும் இருக்கும்
அனுபவிப்பதும் அலர் மேல் மங்கை உரை மார்பன்
சேர்த்தியில் இ றே இவன் அடிமை செய்வது –
ப்ருங்க மக ரிஷி ருத்ரனை மட்டும் -பார்வதி இடை
வண்டு ரூபத்தில் -கோபித்து கொள்ள -அர்த்த  நாரீஸ்வத்வம்
ஏகாயனர்-தவி புஜனாக இருப்பார் என்பர் பரம பதத்திலும்
சேர்த்தியிலே அடிமை
சேர்த்தி தன்னையே உபாயமாக என்கிற வார்த்தை கொண்டு வடகலையார்
ஈட்டில் காண்பிக்கிறார்  நம்பிள்ளை என்பார்
மிதுனமே உத்தேச்யம் காஞ்சி ஸ்வாமி இதை காட்டி அருளி –
நானா தாயாரா பார்வை கேட்க இருவரும் வேண்டும் என்றல் என்ன அர்த்தம்
எப்படி எப்படி உதெச்யமொ அப்படி அப்படி உத்தேச்யம்
பூர்வ புருஷகாரம் சொல்லி
உத்தர அர்த்தத்தில் ஒக்க சொல்லி
அதனால் வெவ்வேற  ஆகாரம் –
நித்ய ப்ராப்யத்வம் சொல்லப் பட்டது -இத்தால் –
நித்ய அபூர்வமாய் இருக்கும்
நித்ய சம்ச்லேஷமாய் இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் சொல்லி -ஷணம் தோறும் -புதிதாக
இருப்பது போலே செர்த்தியும்நித்ய ப்ராப்யம் -ஷணம் தோறும் –
அனுபபித்து கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றும்
நிரந்தரமாக அனுபவிக்க தக்க விஷயம் –
இரண்டு தடவை பூர்த்தியாக கேட்டாராம் இந்த ஸ்வாமி –
அகலுகுகைக்கு சம்பாவனை இல்லாது
போக்யதை மிக்கு
அனன்யா அனபாயானி -என்றும் சோலா நிற்க செய்தே சொல்லும் வார்த்தை
இப்படி சொல்பவள் வடிவு அழகாலும் பருவத்தாலும் அவனே இந்த வார்த்தை சொல்லும்படி –
கர்ம நிபந்தனம் இல்லை
அவனே மேல் விழும் ஸ்வா பவன்
அவனாயாகையால் –
விஷயாதீனம் இவளுக்கு –
உறை மார்பா -இங்கனே பலிக்கக் கண்டோம் -மதுப் அர்த்தம்
அபராதம் -ஸ்வா தந்த்ர்யம் அனுசந்தித்து அஞ்சி கை வாங்க வேண்டாதபடி
சர்வஞ்ஞனையும் மறைக்கப் பண்ணுபவள் –
சந்நிதி அசந்நிதிக்கும் வாசி உண்டே
மாத்ரு சந்நிதியில் பிள்ளையை பிதாவால் அடிக்க முடியாதே
பிரம்மாஸ்திரம் துரத்தி போக்கே இவளை நோக்கி –
ப்ரஹ்மாச்த்ரதுக்கு கண் அழிவு -ஏற்படுத்தி குறை -ஒரு கண்ணை அழித்து
ந நமேயம் -சொல்லி ராவணன் –
தமேவ சரணம் கத சொல்லிய காகாசுரன்
இரண்டுமே அப்ரயோஜனம்
ஓடிய காகம் -மூன்று லோகமும் ஓடின படியால் அவனுக்கும் அதே நினைவு
தன்னுடைய க்ரஹம் போகப் பார்த்தான்
செயல் மாட்சியால் விழுந்தான்
ராவணனுக்கும் இப்படி ஆனாலும் இவள் சந்நிதி இன்றி கார்ய கரம் ஆகவில்லை-
நாட்டார் அகலகில்லேன் எனபது தமது பாபத்தால்
பிராட்டி அவன் வை லஷன்யத்தால்-சொல்லுகிறாள்
நித்ய யோகம் இத்தால் சொல்லிற்று ஆயிற்று -மது பிரத்யக அர்த்தம் –
ஸ்ரீ சப்தம் அலர் மேல் மங்கை –
சிதகு -கோள்- சொல்லி பிராட்டியே சிதகு உரைத்தாலும் அவள் இடம் மன்றாடும் குனாதிக்யம் வாத்சல்யம் நிகரில் புகழாய் –
செல்லரிக்காத பாசுரம் ஒன்றுக்கும் மணவாள மா  முனிகள் உரை அருளாமல் -ஆர்ஜவம் காட்டி அருளி
461 பாசுரங்கள் -44 பதிகம் –
வாய் கொள்ள மாட்டேன் -முதல் வரி கடைசி பத்துக்கும்
உரை அருளாமல் –
தன்னடியார் சிதகு உரைக்குமேல் இதுக்கும் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் உண்டு
நாவ காரியம் பாசுரதுக்கும் இப்படி
என்னடியார் அது செய்யார் -அந்த வார்த்தை கூட சொல்ல இஷ்டம் இன்றி அது இல்லை
பிராட்டி இந்த குற்றம் காட்டிக் கொடுத்தாலும் –
ப்ராமாதிக மாக செய்யும் பாபங்களை -நாம் உளோம் என்று அன்றோ நாம் செய்தது –
பிராட்டி சொல்வது -அவன் உறுதிப்பாட்டை அசைத்து பார்க்க சொன்னது –
குடல் துவக்கு உண்டே இருவருக்கும் –
ஸ்வாமித்வம் உண்டே
அயன சம்பந்தம் உண்டே –
அல்லேன் என்று கை விடும் பொழுதும் -உலகம்மூன்று உடையாய் -செங்கல் சீரை கட்டி வளைக்கலாம் படி
காஷாயம் உடுத்தி பிச்சை எடுக்க போனால்-அவத்யம் அவனுக்கு தானே -அப்படிப்பட்ட சம்பந்தம் உண்டே –
காலிலே விலங்கை தரித்து கார்யம் கொள்ளலாம்படி -உரிமை உண்டே சர்வேஸ்வரனுக்கு-
லோகம் எல்லாம் தனது இஷ்ட விநியோகம் கள்ளலாம்
என்னை ஆள்வானே
அடிமை தன்னை க்ரயம்-பிரயோஜனமாக ஆக்கிக் கொடுக்கை
அகல ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி
மயர்வற மதி நலம் அருளி தொடங்கி இது வரை வளர்த்து என்னை நிறுத்தி பொகட்டு போக  முடியுமா
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்
அமரரும் முனிவரும் இரண்டு கோஷ்டி
குண அனுபவ நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
மனன சீலர் முனிவர்
சென்றால் குடையாம் கைங்கர்ய
திருவேங்கடத்தானே முடிந்த குணம் சௌலப்யம்
இவை இத்தனையுமும் உண்டு இ றே இப்பததுக்கு -நாராயண
வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் –
சகல பல அபேஷித பல பரதன் -ஆஸ்ரித சௌகர்ய ஆபாத குணங்கள் –
நாரணாம் அயனம் -இவன் நாரங்கள் அனைத்தையும் கொண்ட மேன்மை
நாரங்களை தனக்கு அயனமாக கொண்ட நீர்மை வாத்சல்யம் காட்டி –
சதா சந்நிதி -பண்ணும் -திரு மலை -சௌலப்யம் -உபாயம் ஆகிற படி எங்கனே என்னில் –
மேன்மை உடையவனே
மாம் ஏகம் சாரத்திய வேஷத்தைக் காட்டி
உனக்கு கையாளாகா -தேருக்குகீழ் நீட்டின  திருவடிகள் சௌலப்ய வேஷம்
கிருஷ்ண அவதாரத்தில் அதுக்கு முன்பும் பின்பும் இல்லையே
திருவேங்கடமுடையான் நித்ய சந்நிதி செய்து
அங்கு தேவை இட்டு -என்னிடத்தில் ஆசை படுத்திய மனம் கொண்டு –
அதை விட வேங்கட கிருஷ்ணன் சௌலப்யம் அதிகம்
இனி தன்னுடைய படி சொல்லுகிறார்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
பிரபத்திக்கு ஆகிஞ்சன்யமும் ஸ்வரூபமும்
வாய் விட்டு சொல்ல வேண்டும் இ றே
அவன் சர்வஞ்ஞன் அறியானோ சொல்ல வேண்டுவது என் என்னில்
அவனுக்கு உபாயப பாவம் ஸ்வரூபம் போலே -உபாயமாக இருக்கிறான் ஞானம் ஏற்படும் பொழுது தான் கார்யகரம் ஆகும்

கங்கை நீரில் மீனுக்கு மோஷம் இல்லையே –
சேதனன் இசைவு காட்ட சொல்ல வேண்டும்
சர்வ முக்தி பிரசங்கம் வாராமல் இருக்க சோழ வேண்டும்
சொல்வது சாதனம் இல்லையே
அதனால் தான் சரம ஸ்லோகம் ரகச்யத்தில் சேர்த்து அருளி –
த்வயத்தில் பிரபத்யே தன்மை வினை முற்று -அஹம் அர்த்தம் –
இதில் சப்தமாக அடியேன் -சொல்லி
உன் அடிக் கீழ் -சரணவ் சப்தம்
குருஸ்வமாம் -பிராது சரணவ் கட்டியாக பிடித்து சொல்லியது போலே
அமர்ந்து படிந்து இருந்து
முமுஷுவை அஹம் சரணம் பிரபத்யே
அமர்ந்து நெருங்கி
அவனுக்கு ஒரு சஹ காரி வேண்டுகை –
தமது தலையில் ஒரு உபாயம் கிடக்கை
இன்றி விளம்பம் இன்றி
புகுந்தேனே –
போன அளவும் புகுந்து –
jump செய்து -கீழே போவது போலே –
கை கழிய சம்சாரத்தில் விலகிப் போந்து -போன எல்லை அளவும் இ றே புகுவது
முன்பும் அர்த்தத்தில் வேறு பாடு இல்லை
புகுரவில்லை பலிக்க விலை இதுவரை
சம்பந்தம் புதையல் போலே அமுங்கி இருக்க ஞானம் வந்ததும் கார்ய கரம் ஆகிறது
விபிரபத்தி போன அடுத்த ஷணம் அனுபவம்
புகுந்தேனே புகுந்ததாக அத்யவாசாயம்
மானச உத்தியோகம்
வர்த்தமானம் -பூத காலம் –
ஒரு தடவை செய்தால் போதும் -சக்ருதேவ –
முதலில் சொல்வது அத்யவசாயம்
நினைவு அப்புறம் ருசி காரயமாக வருவதால்
பிராப்யம் பிராப்தி வரும் வரை
சகல சாஸ்திரங்கள் கிழங்கு -அடி மூலம் -வ்யாபரித்து
இவர் பரிகரிக்கையால் வந்த ஏற்றமும் உண்டு
சரணம் அடைந்து வேறு பலன் கொள்ளாமல் -பலான்தரம் இன்றி
சாதனாந்தரம் பற்றி அவனை அடைந்து
இவனே பிராப்யம் பிராபகம் அட்டிஹ்யவசாயம் உண்டு இ றே ஆழ்வாருக்கு
வேறு வழியால் அவனைப் பற்றினால் வந்த குற்றம் என் என்னில்
சாத்யமுமாய் -செய்ய வேண்டும்
பல உண்டு
துச்சகமுமாய் கஷ்டம்
ஸ்வரூப விருதமுமாய்
இது -கர்ம ஞான பக்தி யோகங்கள் -வேறு அதிகாரிகளுக்கு –
கர்ம யோகம் ஆத்மா யாதாத்மிக ஞான -பலம் ஈடுபாடு இல்லாமல் -கர்த்ருத்வ சங்க த்யாகம்
நான் செய்தேன் -த்ரிவித த்யாகம்-
வடகலை சாத்விக த்யாகம் என்பர் –
பகவத் கைங்கர்ய ரூபம் நாம் implaiyed
பகவத் கைங்கர்ய ரூபமாக செய்யவே விரோதியான பாபம் ஷமித்து
-நிர்மலமாய் ஸ்வரூப பிரகாசம் ஞானம் பெற்று முற்றி –பிரேமம் கலந்து பக்தி யோகம் –
பர பக்தி பர ஞானம் பர ம  பக்தி பேற்றுடன் முடிக்கும்
த்வரை பர பக்தி
மானச அனுபவம்
பொலிந்து நின்ற ஞானம் தொடங்கி -ஆழ்வார்
சூழ் விசும்பு பர ஞானம் அடைந்து விட்டது போலே
முனியே நான்முகனே பரம பக்தி –
திரு நாமத்தை சுலபமாக விதித்து -தர்ம புத்ரனுக்கு -பீஷ்மர் -உயர்ந்த தர்மம் சொல்ல கேட்டதும்
ஏஷ சர்வ தர்மானாம் பரமோ தர்மம் கண்ணனைக் காட்டி -திரு நாமம்
சாதன அங்கம் திருநாமம் என்னில் -அங்கமாயும் உண்டு அங்கியாகவும் உண்டு
விரோதி நிவ்ருதியை -செய்து ஜன்ம சம்சாரம் விடுத்தது -இஷ்ட பிராப்தியையும் பண்ணிக் கொடுக்கும்
ஸுயம் சாதனம் தான் –
தேசோயம் சர்வ  அபிமத சாதனம் -திவ்ய தேச வாசமும் இப்படி பண்ணிக் கொடுக்குமே –
ததீயாராதனம் -தத் பகவான் -ததீயர் பகவத் பக்தர் –
அவர்களை ஆராதிப்பது ததீயாராதனம்
பிரபத்திக்கு உள்ளீடான இவை –
சாதனாந்தரம் அஹங்கார ஸ்பர்சம்  உண்டு த்யாஜ்யம்
பிரபத்தி ஒன்றாய் இருக்கும் -எதிர் தட்டு
சித்தமாய் -இருக்கும் -பண்ணி சாதிக்க வேண்டியது இல்லை
சூசகம்
பிராப்தம்
தனக்கு அவ்வருகு இன்றிக்கே மேன்மை உண்டே
இப்பாட்டால் -இத்தை சொல்லி அருளி
தபசில் உயர்ந்தது பிரபத்தி நியாசம் -சரணாகதி
சரண்யன் ஸ்வரூபம் நிரதிசய போக்கியம் -நாள் தோள் அமுதே
வகுத்த விஷயம்
விரோதி நிவர்தகம்
சர்வ சுலபன்
ருசி பிறந்த உடன் -தேசத்தால் தள்ளி பரத்வமும் வியூகமும்
காலத்தால் தள்ளி -அவதாரங்கள் -பிற்பாடருக்கு உதவாமல்
அதிலே தேங்கின மடுக்கள்
வானவர் வானவர் கோன் உடன் கானமும் வானரமும் வேடரும்
சர்வரும் ஆஸ்ரயிக்கும் படி சௌலப்யம் இங்கே தானே
அஜகத் ஸ்வா பம் விட்டுப் பிரிய முடியாத குணங்கள்
குணாஷ்டகம்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம்
ஞானம் பலம் தேஜஸ் வீர்யம்
பூர்த்தி இங்கே இன்டே
அர்ச்சைக்கு கெண்டைக் கோல் நாட்டிய மூல திவ்ய தேசம் இது
அநந்ய கதித்வம்
பிராப்ய  ருசி
ஸ்வரூப பிரயுக்தம் –
கஜேந்திர ஆழ்வான்-திர்யக் கூட சரண் அடைந்து
இங்கும் கூட யானைகள் வந்து இன்றும்
வைப்பன் மணி விளக்காய்  -கை நேதேட்டும் யானை
வாய் பூசி –கால் கழுவி மலர் கொண்டு -வேங்கடவனை கண்டு வணங்கும் களிறு –
புனத்தினை காட்டி இனக்குறவர் புதியது –
இனி அவ்வோ பாதியாகிலும் விஸ்வசிக்க வேண்டாவோ நாமும்-
மூன்றாவது தடவை வியாக்யானம் செய்து அருளுகிறார்
நிரபேஷமாய்-சாபேஷமாய்
ஆகார பேதம் –
ருசியை பிறப்பிக்கை தொடங்கி தானே செய்யும்
ருசி வளர்த்து
விரோதி போக்கி
பரமபதம் கூட்டிச் சென்று கைங்கர்யம் பெற்று
சாபேஷம் அதிகாரி வேண்டுமே
புருஷகார சாபேஷமும் உண்டே –
அதிகாரிக்கு தானே இந்த உபாயம்
பூர்வ அபதாரம் பார்த்து -பிற் காளிக்க வேண்டாதபடி –
அஞ்சாதே பிராட்டி புருஷகாரமாக சொல்ல வேண்டி
அகலகில்லேன் இறையும்
த்ரிவித சேதனருக்கும் நியாமினி உபய விபூதி நாதன் அவனையும் நியமித்து
ஈஸ்வரை சர்வ பூதானாம்
மாத்ருத்வ பிரயுக்தமாகவும்
ஈஸ்வரனை பிரனயத்வத்தல் வாலப்யம்
இவனுக்கு தாயாய் அவனுக்கு பத்னியாய் கண் அளவு அற்ற புருஷச்காரம்
வந்தேறி யா இவை இல்லை நித்யம்
மாத்ருத்வம் ஸ்வரூப பிரயுக்தம்
ஸ்ருஷ்டியாதி செய்யும் இடத்திலும் இவள் ப்ரீதிக்கைகாக செய்யுமவன்
தயையால் ஸ்ருஷ்டிக்கிறான்
செல்லாமை –
அவற்றின் செல்லாமை பார்த்து -கேட்க்காமலே  ஸ்ருஷ்டிக்கிறான்
கடாஷம் அடியாக சத்தை உண்டாகி அவள் பிரேரிக்க தயை உண்டாக அது அடியாக ஸ்ருஷ்டிக்கிறான்
தனது ஸ்வரூபம் குலையாமல் விஷ்ணு பத்தினியாக இருந்து கொண்டே நியமிக்கிறாள்
சேஷ பூதையாக இருந்தே
சேஷி -எம்பெருமான்
சேஷி பூதை
ஒளி மாணிக்கத்துக்கு சேஷமாக நின்று நிறம் கொடுக்குமா போலே
ரத்னத்துக்கு உடைமைப் பொருளாக இருந்தே
ஈஸ்வரன் ஸ்வா தந்த்ர்யம் குலையாதே பரதந்த்ரன் ஆனாப் போலே -பிராட்டி பாரதந்த்ர்யம் குலையாதே
அநந்ய சேஷமாக கொண்டே நிறம் கொடுக்கிறாள் பிராட்டி
பரிமளம் புஷ்பம் –
கர்மம் இல்லா விடிலும் அவன் வை லஷண்யம் அடியாக அகலகில்லேன் என்கிறாள்-

ஸ்ரீ யப்பதி யாய் -அவாப்த சமஸ்தா காமன்

 பிரபந்த தலைக்கட்ட

ஆர்த்த்தி அதிகார பூர்த்த்தி
பசி எடுத்து அன்னம் கொடுக்கும் அன்னை
முடிந்த அவா வளர ஆழ்வாரை துடிக்க வைத்தான்
தூது விட்டார்
மடல் எடுத்தும்
அனுகாரம் எடுத்தும்
சாதனம் இருக்குமோ -அவன் நினைத்தான்
அடி விடாமல் அருளிய பதிகம்

ஒழிவில் காலம் எல்லாம்

உலகம் உண்ட பெரு வாயா

இரண்டும் துவயம் சொல்ல வந்த பதிகம்

நாராயண சப்தம் நான்கு குணங்கள்

நாரங்களுக்கு-இருப்பிடாமாயும் ஆஸ்ராயமாயும் இருப்பவன்

தோஷம் போகியமாக கொண்ட வாத்சலியம் சுவாமித்வம்

திவ்யா ஸ்தானம் விட்டு வந்த சொவ்சீல்யம் சௌலப்பியம்

நிகரில் புகழாய் வாத்சலியம் காட்டும்

உலகம் மூண்திரு உடையாய் சுவாமித்வம்

என்னை ஆள்வானை -என் கண் பாசம் வைத்தான் –

சௌலப்யம்-இரவும் பகலும் சேவை சாதிக்கும் திருவேங்கடமுடையான்

இருட்டறையில் விளக்கு போலே மூல கிழங்கு

அர்ச்சாவதாரத்துக்கு கெண்டைக் கோல் நாட்டிய

விண்ணவர் கோன்-நீள் மதிள் அரங்கத்‌த்தம்மான் -வேங்கடத்த்தான் –

பிராட்டி புருஷகாரம் கிருபை பலிக்க -ஸ்வாதந்த்ரமிக்கவன் –

உபதேசம் செய்த இடம் -வானரம் -திருவடி ராவண வதம் முடிந்த அனந்தரம்-

பரிசு கொடுக்க முடியாமல் திகைத்து இருக்கும் நிலையிலும்

மிரட்டி அடித்த்து -தர்ஜனம் பர்ஜனம்-700 ராஷசிகள் -ஹீம்சிக்க

ராவணன் விட மிகவும் ஹீம்சித்தவர் –

பொங்கலு க்கு இஞ்சி திருத்துவது போலே –

கொல்லத் தக்கவர் மேலே கருணை காட்ட

தப்பு ப்ன்ணாதார் யாரும் இல்லையே

திருவடியை கூட பொறுப்பிக்க -வல்ல -எம்பெருமானை

பாப்பானாம் வா பிராட்டி அருளிச் செய்த சாராமா ஸ்லோகம்

ஸ்வாபமே க்ரூரம் இவர்கள் -ராவணன் விட –

பாம்பு படம் அடங்கி இருப்பது போலே இருக்க –

கையாலே குத்‌த்த்தியும் காலாலே துவைத்த்தும் சின்னம் பிண்னம் தத்த்தம் –

தரையாகும் படி செய்யும் அம்பு செய்யும் காரியம் செய்ய

பகவத் அபசாரம் பாகவாத அபசாரம் செய்து இவர்களை வதம் செய்ய

முன்பே செய்ய ஆசைப்பட்டான்

பாப்பானாம் வா சுபானாம் வா

நீர் நினைத்த படி பாப்பமோ நாம் நினைத்த படி புண்ணியம் செய்தவர்களோ –

உசாத் துணை யாக இருந்தார்களே புண்ணியம் செய்தார்கள்

ரஷித்த்தால் தான் கிருபையின் எல்லை நிலம் –

தோஷம் -மித்திர பாவேனே -ந த்வேஜியம்-கை விட மாட்டேன் -பெருமாள் அருளிச் செய்தது போல

அழுக்கு உடையவன் தானே குளிக்க வேண்டும்

பாபீகளை-கை முதல் இல்லாதவர் –

சாஸ்திரம் தண்டிக்க

விசேஷ சாஸ்திரம் சரணா கதி -செய்தவர் -ரஷீத் தே தீரணும்

கடல் கரையில் சொன்ன வார்த்தை கடல்ஓசை போலே ஆகலாமோ –

பிலவங்கமா-குரங்கு -கிளை தாவி செல்வதால் \வானரம்-நரன் போலே ரூபம் என்பதால்

உரக்ம் பணி பாம்புக்கு சப்தம் வெவேறு அர்த்த்தம் கொடுக்கும் –

ஐந்தர வியாக்கிரா பண்டிதன் –

இஷ்வாகு குலத்தில் பிறக்காமல்
ஹரி ஹரி என்றாள்
நான் பிரிந்த பின்பு பெருமாள் கோஷ்டியும் இப்படி ஆனதே என்ற கவலையும் வந்ததாம்
குற்றம் புரியாதார் யார்
பெருமாள் இளைய பெருமாள் மேல் குற்றம் செய்தவள் பிராட்டி
என்று பூர்வர் சொல்லார்
தான் பெருமாள் குற்றவாளி சொன்னது என் குற்றம்
நாயகன் சொன்ன கார்யம் செய்யும் உம்மைப் போலே இவர்களும்
நாயகன் சொன்ன கார்யம் செய்து இருக்க
இவர்களைத் தண்டிக்க வேண்டுமானால் உம்மை முற்பட தண்டிக வேண்டும்
பெருமாள் சீற்றம் குறைக்க நான் உண்டு
நானும் விட்டாலும் காக்க நீர் உண்டு என்று இருந்தேன்
விபீஷணனை சேர்த்து கொள்ள சொன்னீரே
நீரும் இங்கனே ஆனால் -வெட்கி ஷமிகக வேண்டிக் கொண்டான்-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading