ஸ்ரீ பெரிய திருமொழி-1-7-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே–1-7-2-

அலைத்த-சீற்றத்தால் நா அலையும்
மலைத்த -வேடர்களால் தகைக்கப் பட்ட
செல் -தீர்த்த யாத்ரை போருகிறவர்கள் உடைய
சாத்து -சமூஹம் ஆனது
தெழிப் பறாத–ஆரவாரம் மாறாத-

—————————-

வியாக்யானம் –

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய்-
சீற்றத்தாலே கடை வாய்களோடே நாக்கை ஒற்றிக் கொள்ளா நின்றுள்ள
பெரிய வாயையும் ஒளியை உடைதான எயிற்றையும் உடைய
அத்விதீயமான மிடுக்கை உடைத்தான
சிம்ஹமாய் –

(ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம்-19-22- வர்ணனை ஸூ கர் -நரஸிம்ஹ ரூபம்
மீமாம்சமானசய சமுதிதோ கிராதோ நரஸிம்ஹ ரூபஸ் தத் அலம் பயங்கம்-ப்ரதாப்த-சமிகர சண்ட லோசனம்-
ஸ்புரத் சதகேசர ஜ்ரும்பிதநனம்-கரள தம்ஸ்த்ரம்-கராவல கஞ்சலஸுரந்த ஜிஹ்வம் ப்ருகுதி முகோல்பணம்-
ஸ்தப்தோர்த்வ கர்ணம் -கிரி கந்தரத்புத வ்யதஸ்ய நாஸம் ஹனு பேத பிஷணம் த்வி ஸ்ப்ர்சத் கயம்
அதிர்ஹ பிவர கிரிவோரு வஷஸ்தலம் -அல்ப மத்யம் சந்திராம்சு கௌரைஸ் சுரிதம் தனுருஹைர் விஸ்வக் புஜங்கிக-
சதம் நகாயுதம் துரஸ்தம் சர்வ நிஜேதர யுத ப்ரவேக வித்ரவித-தைத்ய தனவம்-

ஹிரண்யன் -ஸ்ரீ நரஸிம்ஹ ரூபம் கண்டான் -பயங்கர ரூபம் -உருகும் தங்கம் போன்ற கண்கள் -ஒளி வீசும் பயங்கர முகம் –
பயங்கர பற்கள் -ஒளி வீசும் வாள் போன்ற நாக்கு -நீண்ட அசையாத காதுகள் -குகை போன்ற மூக்குத் த்வாரங்கள் –
பயங்கரமாக அசையும் தாடைகள் -ஆகாசம் வரை வளர்ந்த திரு மேனி -குறுகிய அடர்ந்த கழுத்து -அகன்ற மார்பகம் –
குறுகிய இடை -சந்த்ர கிரணங்கள் போலே வெளுத்த ரோமங்கள் -திவ்ய ஆயுதங்கள் கொண்டு நிரசித்த அசுரர் ராக்ஷசர்
கூட்டங்கள் போலே திரு உகிராலே நிரசிக்க வல்ல திரு உருவம் )

அவுணன் கொலைக் கையாளன் -நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம் –
நாட்டார்
பர ஹிம்சை பண்ணுவது தம் தாமுடைய பிரஜைகளின் உடைய ரஷணத்துக்காக இறே –
இவனுக்கு
அது போய் -பிரஜையை ஹிம்சிக்குமது பலித்தது ஆயிற்று –
பர ஹிம்சை பண்ணுகைக்கு தேவதைகள் பக்கலிலே வரம் பெற்று
அது தானே யாத்ரையாய் திரிகிற அஸூரனுடைய நெஞ்சை இடந்த
கூரிய திரு உகிரை உடையவன் வர்த்திக்கிற ஸ்தானம்-

மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் –
திரள் திரளாக தீர்த்த யாத்ரை போகா நிற்பர்களே –
அவர்களைப் பறிக்கைகாக
அங்கு உண்டான வேடர் வந்து மலைத்து மேல் விழுவர்கள் –
இவர்களும் அவர்களோடே எதிர்ப்பர்கள் –
எறிந்த பூசல் –
எறிதல்-இடுதல்
இட்ட பூசல் –
அவர்கள் இவர்களை சூறை கொள்ளுகிற பூசலிலே –
(அனுக்ரஹிக்க சொத்தை பறிப்பேன்-என்றான் அன்றோ -அப்பொழுது தானே வருவார்கள்)

வன் துடிவாய் கடுப்ப –
கேட்ட போதே முடியும்படியான த்வனியை
உடைத்தாய் இருக்கிற
துடியானது கடுப்ப –

சிலைக்கை  வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே –
கையில் வில்லை உடையராய் இருந்துள்ள வேடருடைய
ஆர்ப்பரவம் மாறாத தேசம் ஆயிற்று
அவர்கள் கையில் பயாவஹமான துடியோசையும் பறிக்கிற ஆர்ப்பரவுமேயாய்
செல்லா நிற்கும் ஆயிற்று –

உகந்து அருளின நிலங்களிலே உள்ளது ஆகையாலே
அவர்கள் கையில் துடி ஓசையோடு
அவர்களைப் பறிக்கிற த்வனியோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆயிற்று –

நரசிம்ஹத்தின் உடைய சீற்றத்தோடு -அங்கு உள்ளார் உடைய சீற்றத்தோடு –
அவர்கள் வ்யாபாரத்தோடு -வாசி அற்று இருக்கிறது ஆயிற்று -இவருக்கு

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading