ஸ்ரீ பெரிய திருமொழி-1-7-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்ரீ நரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் -அழகியான் தானே அரி உருவம் தானே – -மாலோலன் –
ஆச்சார்ய புருஷர்கள் ஆராதன பெருமாள் இவனே -அழகிய ஸிம்ஹப் பெருமாள் –

————

பிரவேசம்-

ஒன்பது வாசல் தானுடை குரம்பை பிரியும் போது உந்தனடி சரணமே சரணம் என்று இருந்தேன்-என்றாரே –
நீர் இப்படி ஒரு தலையில் அத்யாவசாயமாக சொல்லுகிறது என் தான் –
இத் தலையில் செயலற்ற அளவிலே ப்ரஹ்லாதனுடைய
பிரதிஞ்ஞா சம காலத்திலே-
பிரதிஞ்ஞை பண்ணின இடத்திலே –
வந்து –
சந்நிதி பண்ணி –
அவனுடைய விரோதியைப் போக்கி உபகரித்திலோமோ –
(அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரான் )

அது தான் அக்காலம் ஒன்றிலுமேயாய்
பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும் இழக்க வேண்டாதபடி –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு-பூதத்தாழ்வார்- என்கிறபடியே
ஆஸ்ரயித்தார் எல்லாருக்குமாக  செய்த செயல் அன்றோ –
(கிருத யுகத்தில் இருந்து இங்கே -நீர் கலிகாலத்தில் வருவதை எதிர்பார்த்து அன்றோ இருந்தேன் )

ஆன பின்பு
உம்முடைய போல்வாருக்கு இழக்க ஒண்ணாத படி
சிங்க வேழ் குன்றிலே வந்து
நீர் கிட்டு அனுபவிக்குமதுவே குறையாக நாம் வந்து இருந்தோமே –
இப்படி இருக்க
ஒருதலை அத்யாவச்யமே யாகவே நீர் சொல்லுவான் என் -என்று
தான் சிங்க வேழ் குன்றிலே வந்து சந்நிதி பண்ணின படியைக் காட்டிக் கொடுக்க –

அங்கே
புருஷகார பூதையான பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை
அனுசந்தித்து ஹ்ருஷ்டராய் (அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையன்)
உத்தேச்யனாய் இருக்கிறவன் வந்து இருக்கிற தேசம் ஆகையாலே
அங்கு உள்ளது அடைய உத்தேச்யமாய்
சிலரால் வந்து அணுக ஒண்ணாத படி
ஸூரஷிதமாக எழுந்து அருளி இருக்கப் பெற்றது என்று
திரு உள்ளத்தோடு கூடிப் போய்
அனுபவிக்கையிலே ஒருப்படுகிறார்-
(அல்லியம் போதில் அரி உருவாகி அரியை அழித்த -பிறந்த க்ஷணத்தில் நிரசித்த —
பந்தனை தீரப் பல்லாண்டு பாடுமவர்கள் அன்றோ)

கீழ்த் திருமொழியில் ஆழ்வார் தம்முடைய பூர்வ வ்ருத்த அனுசந்தான முகேன
அந்ய உபாயத்தை முன்னிட்டு
ஒரு காலைப் போலே ஒன்பதின் காலும்
திருவடி யடைந்தேன் -என்று பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
ஆஸ்ரயித்த படியை அனுசந்தித்த ஈஸ்வரன் –

கோவிந்தேதி யதாக் க்ரந்தக் கிருஷ்ணா மாம் தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயா நாப சர்ப்பத்தி –
என்னும்படி இருப்பான் ஆகையாலே
இவரது அத்யாவசத்து அளவு சஹிக்க மாட்டாதே
உபமாந சேஷாணாம் சாதூநாம் -என்கிறபடி
இவருக்கு போலியான சிறுக்கனுக்கு உதவி
அவ்வடிவை எல்லாருக்கும் ஆக்கிக் கொண்டு இருந்த
சிங்க வேழ் குன்றத்தில் இருப்பைக் காட்ட கண்டு அனுபவிக்கிறார் என்று சங்கதி –

(உத்தர கண்ட அர்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை
தேனுடை கமலத்திரு
அல்லி மாதர் புல்க நின்ற
இரண்டும் ஸ்ரீ சம்பந்தம் த்வய பிரகாரம் படியே )

———————————————————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1

———-

வியாக்யானம் –
அம் கண் மா ஞாலம் அஞ்ச –
அழகிதான இடத்தை உடைத்தாய் இருந்துள்ள பூமியானது அஞ்ச –
நரசிம்ஹம் ஆயிற்று தான் ஜகத் ரஷணத்துக்காக விறே –
அங்கனே இருக்கச் செய்தேயும்
இதினுடைய விளைவு அறியாமையாலே ஜகத்தாக நடுங்கிற்று ஆயிற்று –
இது எவ்வளவாய் தலைக் கட்டுகிறதோ என்று இருந்தது ஆயிற்று-

அங்கு –
அவன் பிரதிஞ்ஞை பண்ணின அவ்விடம் தன்னிலே

ஓர் ஆள் அரியாய் –
இதுக்கு முன்பு ஓர் இடத்திலும் கண்டு அறியாத
நரசிம்ஹமாய் –

அவுணன் பொங்க –
ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யன் கிளர்ந்தான் ஆயிற்று
நரசிம்ஹத்தை கண்ட காட்சியிலே –
இதுக்கு முன்பு ஒருவன் -நான் எதிரி -என்று தோன்றக் கண்டு அறியானே
இவனுடைய தோற்ற அளவிலே கிளர்ந்தான் ஆயிற்று

அவனுடைய சரீரத்தை கூரிய திரு உகிராலே இரு பிளவாம்படி பண்ணின –
சில அசித் பதார்த்தங்களை வகிர் செய்யுமா போல் ஆயிற்று -போழ்ந்த படி –

போழ்ந்த புனிதன் இடம் –
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளில் வந்தால் ப்ரஹ்மாதிகளை ஏவித் தான் கடக்க இருக்கும்-
அங்கன் அன்றியே தானே கை தொட்டு வ்யாபரிக்கையால் பிறந்த சுத்தியை சொல்லுகிறது-
அவன் அப்படி பின்பு உள்ளாருக்கும் உதவுகைகாக வர்த்திக்கிற ஸ்தானம் –

பைம் கண் -இத்யாதி –
ஹிரண்யனைக் கண்ட நரசிம்ஹத்துக்கு சீற்றம் மாறாதாப் போலே
ஆனைகளைக் கண்ட சிம்ஹங்களும் சீற்றம் மாறாதே இருக்கும் படி –
பைம் கண் –
ஜாதி உசிதமான பசுமையை உடைத்தாய் இருக்கும் ஆயிற்று –

கொம்பு கொண்டு –
ஆனையினுடைய மஸ்தகத்தை கிழித்து-
அதினுடைய கொம்பைப் பறித்து-
பகவத் பக்தியாலே திருவடிகளிலே இட்டு-
ஆஸ்ரயியா நிற்கும் ஆயிற்று சிம்ஹங்கள் ஆனவை
யதன்ந புருஷோ பவதி -இறே-( வசிஷ்டர் கௌசல்யா தேவியை சமாதானம் இத்தால் )

செங்கணாளி  பைங்கணானை கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் இட்டு இறைஞ்சும் –
செங்கணாளி-
இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும்
பகவத் பக்தி ஒருபடிப்பட்டு செல்லும் ஆயிற்று
சீற்றம் விக்ருதியாய்
பகவத் பக்தி பிரக்ருதியாய்–இருக்குமாயிற்று

(அகடி கடநா சமர்த்யன் போலே இந்த ஸிம்ஹங்களும்
விக்ருதி -மாறுபாடு
பிரகிருதி -இயற்கை
வலி மிக்க சீயம் ராமானுஜர் போலே – பரவாதிகளுக்கு –அரங்கன் என்னும் மயிலே பெருகும் –
குறையல் பிரான் அடிக் கீழ் அன்பன் ராமானுஜன் -பக்தி இயற்க்கை -கோபம் -வந்தேறி )

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading