ஸ்ரீ பெரிய திருமொழி-1-7-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

இவர் அவன் வாயையே பார்ப்பவர் -மாஸூ ச -சொல்வதையே -ஆகவே வாய் வர்ணனை இதில் –

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே-1-7-3-

ஓய்ந்த மா–அரக்கர்
உடைந்த குன்று–ஹிரண்யன் தோளும்
அழலால் தேய்ந்த வேயு–நரஸிம்ஹ கோப அக்னி

————————————————

வியாக்யானம் –
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று –
வடிவில் பெருமைக்கு தகுதியான பெரிய வாயையும் –
வாள் போலே இருந்துள்ள எயிறு என்னுதல் –
ஒளியை உடைத்தான எயிறு என்னுதல் –

ஓர் கோளரியாய் –
மிடுக்கை உடைய அத்விதீய நரசிம்ஹமாய் –

அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் –
அவுணன் உடைய ஆஸூர பிரக்ருதியானவனுடைய வாய்ந்த வாகமும் உண்டு
நரசிம்ஹத்துக்கு தகுதியாம் படி வளர்ந்த சரீரம்
அத்தை கூரிய உகிராலே வகிர்ந்த சர்வேச்வரனுடைய ஸ்தானம்-

ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் –
தளர்ந்து பசை அற்று நிலத்தின் சஞ்சாரத்தாலே
அந் நிலத்துக்கு அடைத்த திர்யக்குகளும் ஓய்ந்து இருக்கும் ஆயிற்று –
தொட்டாரோடே தோஷமாம்படி தீக் கதுவி யுடைந்த குன்றும் –

அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –
அதுக்கு மேலே தன்னிலே உண்டான அழலாலே தேய்ந்த மூங்கிலும் அல்லது இல்லாத
சிங்க வேள் குன்றமே –
தன்னிலே உண்டான நெருப்பாலே தேய்ந்த வேய்களும்

வண்டினம் முரலும் சோலையோ பாதியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
அது இது உது என்னலாவன வல்ல -5-10-2–என்னக் கடவது இறே –
பிறருக்கு குற்றமாய் தோற்றுமவையும்
உபாதேயமாக தோற்றுகை இறே
ஒரு விஷயத்தை உகக்கை யாகிறது –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading