பரமபதம் உறுதி -போகும் வரை அரசராக இங்கு –
ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-
இமையோர்-நாதன் -இந்திரனும் தேவர்களும்
ஒலி செய் மாலை-சப்த சந்தர்ப்பங்கள் -சொல்லும் பொருளும் நிறைந்த
விஷ்வக்சேனரும் என்றுமாம் –
உம்பரும் ஆகுவர் தாமே-நித்ய ஸூரி களும்
————————————————-
வியாக்யானம் –
ஏதம் இத்யாதி –
துக்கங்கள் வந்து கிட்டாதபடியை மநோரதித்து
அவனைத் தொழுது
உஜ்ஜீவிப்போம்
ஒருப்படுங்கோள் என்று தேவர்களோடே கூட
அவர்களுக்கு நிர்வாஹனான இந்த்ரன் வந்து ஆஸ்ரயிக்கிற
திரு நைமிசாரணியத்துள் வந்து
சந்நிஹிதன் ஆன ஸ்வாமியை ஹிருதயத்தில் வைத்து –
அன்றிக்கே –
நித்ய ஸூரிகளோடே
ஸ்ரீ சேநாபதி ஆழ்வார் வந்து ஆஸ்ரயிக்கிறது
என்னுதல்
(நாம் உங்களுக்கு -சம்சாரிகளுக்கு ஏதம் வந்து அணுகா வண்ணம் எண்ணி வந்தோம் – என்று)
காதலே மிகுத்த –
பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற
ஆழ்வார் அருளிச் செய்த
சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் –
இருந்தவனுக்கு ஒதுங்க நிழல் பண்ணிக் கொடுத்தபடி ஆயிற்று –
(சிந்தையுள் வைத்து -இருந்தவர் -நைமிசாரண்ய எந்தை -ஒதுங்க இடம் -வெப்பம் தவிர்த்து காதலே நிழல் அவனுக்கு
வா ஸூ தேவாய தருச் சாயா
கோவர்த்தனம் எடுத்து நிழல் கொடுத்தவன்
நம்மிடம் நிழல் தேட கொடுக்க வேண்டாமோ)
ஓத நீர் வையகம் ஆண்டு –
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாம் அது தானே
சித்தம் இறே
அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும்
நிர்வஹித்துப் பின்னை
நித்ய ஸூரிகள் பதத்தை பெறுவர்-
(அன்றிக்கே ஏக பரிகாரமாக பாகவத கைங்கர்யமே அமையும் -என்றுமாம்
பட்டர் -ஈஸ்வரன் ராஜா பாகவதர் சொத்தை கொள்ளை அடித்தும் பாகவத கைங்கர்யம் பண்ணலாமே –
ஸ்ரீ வைகுந்தம் வேண்டாமே என்று இதுவே பரம புருஷார்த்தம் ஆகுமே – )
—–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
வாணுதலார் பேணி இரந்தார்க்கு ஈயாமல் பிறர்க்குக்
கோணை செய் தீ நெறியால் சேர் பயனை –
நாணி நடுங்கி நைமிசாரண்யத்து எந்தையை மா முன்
அடைந்தான் சரண் நீலன் அங்கு –6-
மா முன் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
கோணை –தீங்கு–
—————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply