ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

திருமேனி அழகை கீழே அனுசந்தித்து -உன்னாலே உன்னை அடைய வேண்டும்
நாவினால் அடைந்தேன் -கீழே
பிரார்த்தனா மதி சரணாகதி –
வாயால் த்வயம் அனுசந்தானம் -சொல்வதற்கும் அவன் அனுக்ரஹம் வேணுமே -சரணம் சொல்ல நாக்கு
நிர்த்தரா -நா பிரண்டு நித்திரை-பெற்றான் கும்பகர்ணன்

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-9-

எந்தாய்–பரம உதாரன்-
நவ த்வார பட்டணம் -உள்ளே இருப்பதே ஆச்சர்யம் –
சரணமே சரணம் என்று இருந்தேன்-திருவடிகளே உபாயம் என்று இருந்தேன் –
இதுவே ரக்ஷகம் என்று அத்யவசித்து இருந்தேன்

தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே-ஸ்ரீ மந் நாராயண
நானுடைத் தவத்தால் -ஸித்தமான தவம் -அவனே -அவன் செய்த தவப்பயன் –
புண்ணியம் யாம் உடையோம் -தேடி வந்த புண்ணியம் அன்றோ –
திருவடி -சரணவ்
யடைந்தேன்-சரணம் ப்ரபத்யே
பூர்வ வாக்யார்த்தம் இது
பின் வாக்கியம் -அடுத்த திரு மொழி -அஹோபிலம் -பிரார்த்தனை –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோள் உடையான் – பாசுரம் –

————————————-

வியாக்யானம் –
ஊனிடைச் சுவர் வைத்து-
மாம்சத்தை இடை இடையே சுவராக வைத்து –
அன்றிக்கே
மாம்ச பிரசுரமான சரீரத்தை சுவராக வைத்து –

என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து –
எலும்பை தூணாக நாட்டி
ரோமத்தாலே மேய்ந்து –

ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை –
நவ த்வாரே புரே -என்று எங்கேனும் புக்கு எங்கேனும் புறப்படலாம்படி இறே
இச் சரீரம் தான் இருப்பது
ராஜ புத்திரன் ஒரு குடிலிலே ஒதுங்கினாற் போலே
நித்தியமாய் – ஞாந  ஆநந்த லஷணமாய் – ஏக ரூபமாய் இருக்கிற- ஆத்ம வஸ்து
கர்மத்தாலே ஞான சங்கோசத்தை பிறப்பிப்பதான சரீரத்திலே அகப்பட்டது ஆயிற்று –

பிரியும் போது –
அதிலே புகுகைக்கு ஒரு கர்மம் பண்ணி வைத்ததோபாதி
அத்தை விடுகைக்கு ஒரு கர்மம் பண்ணி வைக்குமே –

உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் –
அப்போதைக்கு உன் திருவடிகளே புகல் என்று அத்யவசித்தேன் –

நீர் இப்படி நினைத்து இருந்தது என்ன பற்றாசு கொண்டு தான் என்னில்

தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே –
புருஷகார பூதையான பிராட்டியோடே அணைந்தவன் ஆகையாலே
மறமான செயல் செய்ய மாட்டா என்னும் அத்தாலே –
புருஷகார பலத்தாலே -(ஆந்ரு சம்சயம் பரோ தர்மம் -ஸஹ தர்ம சரீவை )

திரை இத்யாதி –
ஸ்ரமஹரமான திருப்பாற் கடலிலே வந்து
கண் வளர்ந்து அருளினவனே –

மா நெடும் கடல்-
பரப்பிலும்
ஆழத்திலும் ஆயிற்று –

நானுடை இத்யாதி –
தம்முடைய வ்ருத்தி இருந்த படியை-அடைய- கீர்த்தித்தார் இறே  முன்பே –

தவத்தால் திருவடி யடைந்தேன்-
இனி நானுடைத்தவம் என்கிறது அவன் தன்னையே –
நான் பண்ணின தபஸ்சாலே திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –

(தபஸ்ஸாலே அவன் செய்து அருளின க்ருத்யங்களைப் பட்டியல் இடுகிறார் மேலே)

நைமி சாரணி யத்துள் எந்தாய் –
ஜகத் ஸ்ருஷ்டி பண்ணியும்
அவதரித்தும்
உகந்து அருளின நிலங்களில் வந்து
சந்நி ஹிதனாயும் இறே
ஸூஹ்ருதத்தை உத்பாதிப்பது

(கோரா மா தவம் செய்தனன் கோல் அறியேன் -அவன் தபஸ்ஸால் நம்மை சேர்த்துக் கொள்கிறான்
மலை மேல் நின்றும்-திருவேங்கடம் – நெருப்பில் நின்றும் -தேவாதி ராஜன் –
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்-கோயில் கபிஸ்தலங்கள் இத்யாதி கடல் கிடைக்கும் மாயன் )

————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading