காலம் வீணானது அளவும் அல்ல -த்ரவ்ய ஆர்ஜனத்துக்கு செய்தவற்றையும் சொல்கிறார் –
போக்கினே பொழுதை வாளா -என்றார்
சிலவற்றை செய்து இறே போது போக்குவது-
செய்தபடி தான் எங்கனே என்ன-
அது தன்னைச் சொல்கிறார்
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
——————————————-
வியாக்யானம் –
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து-
பகல் எல்லாம் சூது பொருது தோற்றவன்
குறைவறக் கொடுக்கக் கண்டவாறே
இவன் பக்கலிலே கனக்க உண்டாகை இறே இவன் தருகிறது -என்று
ராத்ரியிலே களவு காண அத்யவசிப்பது இவன் க்ருஹத்திலே யாயிற்று
ஆக காணவும் கொண்டு காணாதபடியும் கொள்ளும் ஆயிற்று
இவை தான் நிஷித்த அனுஷ்டானம் ஆகையாலே இவை தன்னைச் சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே
ஆஸ்திக்யம் உடையானாய் இருப்பான் ஒருவன்
கெடுவாய் ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டு காண் -என்றால்
நாஸ்திக்யத்தாலே பஸ்யதோ ஹரனாய் –
ஈஸ்வரன் ஆகிறவன் யார் -என்றும்
ஆத்ம அபஹாரம் பண்ணியும் ஆயிற்றுப் போந்தது –
(சூது வியர்த்த வாதம்
களவு -ஆத்ம அபஹாரம்-என்றவாறு )
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து-
இப்படி த்ரவ்யார்ஜனம் பண்ணினால் அது கொண்டு கொள்ளும் கார்யத்தை சொல்லுகிறது –
விரி குழலாரில் பட்டு (திருமாலை) -என்கிறபடியே
மயிர் பேணாதே இருக்கில் அதிலே ஈடுபடுபவர்
மயிர் சுழன்று முடித்து இருக்கில் அதிலே ஈடுபடுபவர்
( சுரி குழல்–விரி குழல் )-ஏதேனுமாக அவர்கள் இருந்த படியே அமையும் ஆயிற்று இவர் ஈடுபடுகைக்கு
என்னையும் உன் செய்கை நைவிக்கும் -என்னுமா போலே –
( இங்கிதம் –தாவகம் -கூரத்தாழ்வான் )
கண்டவா திரிந்த –
ந்ரு பசு -என்னுமா போலே –
கண்ணுக்கு தோற்றின விஷயங்களில்
இவை சாஸ்திரங்கள் நிஷேதித்த விடம் என்று மீண்டு அறிவது இல்லை
தோற்றின படி மூலை யடியே திரிந்த இத்தனை –
தொண்டனேன் –
தொண்டன் ஆகிறான் பரதந்த்ரன்
அது அப்ராப்த விஷயங்களில் ஆன போது
அபகர்ஷ ஹேதுவாக கடவது –
ப்ராப்த விஷயங்களில் ஆன போது
உத்கர்ஷ ஹேதுவாக சொல்லக் கடவது –
நமன் தமர் -இத்யாதி –
இப்படி முறை கெட வர்த்திக்கையாலே யம படர் பண்ணும் வேதனையை
அனுசந்தித்து அஞ்சி –
சர்வ அவயவங்களும் ஒடுங்கி
சரீரம் தான் எடுத்து எடுத்து அறையத் துடங்கும் –
வேலை இத்யாதி –
பிரயோஜனாந்த பரர்க்காக கடலை நெருங்க கடைந்து
அபேஷித சம்விதானம் பண்ணும்படி அன்றோ
இவ் வாத்மாவோடு தேவரீர் உடைய சம்பந்தம் –
வந்து இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு
அவர்கள் உடைய கூக்குரல் கேட்க்கைகாக அங்கே
திருப்பாற் கடலிலே சாய்ந்தாற் போலே
எனக்கு வந்து சரணம் புகலாம் படி
இங்கே வந்து சந்நிதி பண்ணி அருளிற்று –
(நிருபாதிக ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -நாதன் )
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply