(ஸ்வயம் வ்யக்த அஷ்ட ஷேத்ரங்கள்
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ முஷ்ணம்-ஸ்ரீ திரு வேங்கடம்-ஸ்ரீ தோத்தாத்ரி –
ஸ்ரீ பதரிகாச்ரமம் -ஸ்ரீ புஷ்கரம்- சாளக்கிராமம் -நைமிசாரண்யம் -இத்யாதி –
தேவ நாதன் -புண்டரீக வல்லி -ஹரி லஷ்மி -ப்ரஹ்ம வனம் -ஸ்ரீ ஹரி விமானம் -சக்ர புஷ்கரணி
நிமிஷம் -அசுரர் பலம் தொலைக்கப்பட்டதால்
ரிஷிகள் தவம் புரிய -மகிஷார க்ஷேத்ரம் -தெற்கே திரு மழிசை போலே -சக்கரம் உருண்டு நின்ற இடம் –
வெளிப்பகுதி நேமி -மேல் வட்டம் -நேமி நின்ற காடு –
நிமிஷம் -தர்ப்பை வகை என்றுமாம்
ஜீவ காருண்யம் புரியவே தீர்த்த வனம் ரூபம் -சக்ர தீர்த்தம் -தாமரை வடிவில் உள்ளே தடாகம்
வியாச பீடம்
ஸூதர்
ரோம ஹர்ஷணர்-பலராமன் -கோபித்து
திரு மகனார் -ஸூத பவ்ராணிகர்-அவர் சக்தி கொண்டு புராணம்
அஹி மஹி ராவணன் அழித்த திருவடி
சிந்தூர சேவை
கோமதி நதி
ராமன் யஜ்ஜ சாலையும் உண்டு-வட மேற்கு திசை அயோத்யைக்கு
வால்மீகி ஆஸ்ரமும் உண்டு இங்கு
சித்ர கூடம் வரும் வழியிலும் வால்மீகி ஆஸ்ரமம்
பிட்டூர் கான்பூர் அருகிலும் உண்டு குழந்தைகள் பிறந்த இடம் -இப்படி மூன்று இடங்களிலும்
வால்மீகி ஆஸ்ரமங்கள் உண்டு )
————–
திருவடிகளிலே புக்கு சரணம் புக்கவாறே
முன்பு தாம் செய்து போந்த படிகள் அடங்கலும் தோன்றிற்று
அத்தாலே போக்கினேன் பொழுதை வாளா -என்கிறார் –
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2-
அறத்தையே மறந்து-தர்ம ரூபியான உன்னை மறந்தேன் -கிருஷ்ணன் தர்மம் சனாதன -ராமோ விக்ரஹவான் தர்ம-
அலம் புரி-போதும் என்று சொல்லும் வரை -ஹலம்-என்றுமாம் -ரோமஹர்ஷனை கொய்த விருத்தாந்தம்
நலம் புரிந்து-பக்தி உடன் ராக பிராப்தி-
வியாக்யானம் –
சிலம்படி-
சிலம்பை உடைய அடியை ஆயிற்று –
யுருவில் –
அது தன்னிலே செம் பஞ்சையும் இட்டு வைப்பார்கள் ஆயிற்று
இவனைத் துவக்குகைகாக –
கரு நெடும் கண்ணார் திறத்தனாய்-
கறுத்து -பரப்பை உடைத்தாய் இருந்துள்ள கண்களாலே
நோக்குவார்கள் இத்தனை –
இவன் இதிலே துவக்குண்டு
காலிலே விழுந்து –
பின்னை அவர்கள் தங்களை விட்டு
அவர்களுடைய காதா கந்தம் உள்ள தேசத்திலே
அணா வாய்த்து திரியும் ஆயிற்று -(கால ஷேபம் இவர்கள் வாசனையால்)
அறத்தையே மறந்து –
ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே-
தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமானத்தையே யாயிற்று வருந்தி மறப்பது –
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கி-
கொண்டி திரியும் பசுப் போலே
இந்த்ரியங்கள் தான் விஷயங்களில் மண்டி யாயிற்று இருப்பது முதல் தன்னிலே –
அதுக்கு மேலே
விஷய சந்நிதி உள்ள இடத்திலே வர்த்தித்து
இந்த்ரியங்களுக்கு விஷயங்களிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து
அவை அவற்றில் மேல் விழுந்து புஜிக்கும் படி –
அத்தால் வந்த போகத்தைப் பெருக்கி –
போக்கினேன் பொழுதினை வாளா –
பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று ( மதிப்பு பெற்று )செல்லக் கடவ காலத்தை
வ்யர்த்தமே போக்கினேன்
அலம் புரி தடக்கை யாயனே –
இவன் கையில் உள்ளத்தை அபஹரிக்கை அன்றிகே
இவனுக்கு அமையும் என்னும்படி சர்வ ஸ்வத்தையும் கொடுக்குமவன் ஆயிற்று
அலம் என்னக் கொடுக்கும் தடக்கையை உடையவன் என்னுதல்
அலம் -என்றது -ஹலம் -என்றபடியாய்
கலப்பையைத் தரித்த திருக்கையை உடையவன் என்னுதல் –
மாயா –
இவன் ஒரு நாள் திருவடிகளில் விழுந்தால் பின்னை
இவனுடைய நெடு நாள் இழவு மறக்கும்படி
முகம் கொடுக்கும் படிக்கு அடியான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே –
வானவர்க்கு அரசனே –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீ யனாய் உள்ளவனே –
வானோர் நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன்-
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் இதுக்கு முன்பு ஒரு நாளும்
கண்டு அறியாதாப் போலே இருக்கிற ஸ்நேஹத்தை செய்து
ஆஸ்ரயியா நின்றுள்ள திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
(நவோ நவோ பவதி-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் அன்றோ )
நைமி சாரணி யத்துள் எந்தாய் –
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யனாய் கொண்டு
அவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கக் கடவ
நீ எனக்கு உன் திருவடிகளிலே வந்து சரணம் புகலாம் படி
சந்நிஹிதன் ஆகையாலே சரணம் புகுந்தேன் –
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply