ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அத்தனையோ -இன்னும் ஏதேனும் செய்தது உண்டோ என்ன
இன்னம் செய்ததுக்கு சொல்கிறார் –
(ஸாஸ்த்ர விதிப்படிக் கைப்பிடித்த மனைவியையும் விட்டேன்
நம்பனான உன்னையும் விட்டேன் -என்னையே நம்பி வந்த மனைவியும் விட்டேன்)

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4-

நம்பனே -திரு நாமம் சாதிக்கிறார்
வம்பு -புதுமை -பரிமளம்
பிறர் பொருள் தாரம்-பிறர் தாரம் பிறர் பொருள்
தழு வென மொழிவதற்கு அஞ்சி-இப்படி சொல்லும் போது உள்ள கோபத்துக்கே அஞ்சி -இதுவே வெட்பமாக இருக்குமே

——————–

வியாக்யானம் –
வம்பார் இத்யாதி –
நித்ய பூரணமான குழலை உடையவள் என்னுதல்
பரிமளத்தை உடைத்தான குழலை -என்னுதல் –
அக்நி சாஷியாய் பிடித்த ஸ்திரீயை யாயிற்று த்யஜிப்பது –
விஷயாந்தரங்களிலே ப்ருஹையைப் பண்ணுமே –
அவற்றில் வந்தால் வம்புலாம் கூந்தலாகவும் வேண்டாம் ஆயிற்று
பிறர் தாம் இத்தனையே ஆயிற்று ஆதரிக்கைக்கு வேண்டுவது –
பர தார பர த்ரவ்யங்களை விரும்பினவர்கள் இறந்தால் –

நமன் இத்யாதி –
சர்வேஸ்வரன் தன்னோடு ஒக்க
சமமாக ஆராய்ந்து கேட்பான் ஒருவனாக விட்டவன் ஆயிற்று -யமன் ஆகிறான் –
(பாரபக்ஷம் பார்க்காமல் கைக்கொள்ளும் சர்வேஸ்வரன்
பாரபக்ஷம் பார்க்காமல் தண்டிப்பான் யமன்)
அவன் தான் தன்னோடு ஒப்பார் சிலரை யாயிற்று வர விட்டது –
அவர்கள் தாங்கள் ஒரு கைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவர்கள் ஆயிற்று –
பின்னை இவன் உடம்பு தன்னோடு எற்றுவர்கள்

அநந்தரம்
தங்கள் கை சலித்த வாறே பொகட்டு இட்டு வைப்பர்கள் –
இவர் இத்தனை பொழுது ஸ்திரீகளை ஒழிய இருக்க வல்லீரோ
அவளை அணைப்பியும் -என்பர்கள் –
இவனும் நம்மை நலிவது எல்லாம் நலிந்தார்கள் ஆகில் இனி அவளை
அழைக்கிறார்கள் இத்தனை யிறே -என்று குறு விழி கொண்டு கிடக்கும் –

எரி -இத்யாதி –
எரி எழா நிற்பதாய்
செம்பாலே செய்யப்பட
பாவையைப் பாவீ தழுவு என்பர்கள் ஆயிற்று –
கெடுவாய் அவர்கள் ஒழிச் சினம் இருந்தவர்கள் ஆகிலும்
அனுதாபம் பிறந்து
உகந்து அருளிற்று ஒரு திரு வாசலிலே ஒதுங்கினாய் ஆகில்
இன்று எங்களுக்கு கை சலியாது ஒழியல் ஆயிற்று –
என்பர்கள் ஆயிற்று –
(ஈசி போமின் என்று சொன்ன அன்றும் அனுதாபம் பிறக்காமல் இருந்தாய்
கிம் -கேசவா கிலேச நாசகா -கிளர் சோதியாய் சொல்லாமல் போனாயே )

மொழிவதற்கு அஞ்சி–இத்யாதி –
அவர்கள் பண்ணும் நலிவை பொறுக்கலாம் ஆகாதே
க்ரூரமான பேச்சாயிற்று பொறுக்கப் போகாதது

நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் –
ஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி
சரண்யனான நீ வந்து
சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நைமி சாரணி யத்துள் எந்தாய் –
இவன் விஷயங்களில் பிரவணன் ஆகிறது
கண்ணுக்கு இலக்காமை இறே
அவ்வோபாதி நம்மையும் கண்ணுக்கு இலக்காக்கவே
இவன் நம் பக்கலிலே ப்ரவணனாம் என்று
உன்னை கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு வந்து நின்றாய் –

நிஷேத விதியும் கிடக்கச் செய்தே
அப்ராப்தங்களிலே பிரவணன் ஆகிறது
அவை கண்ணுக்கு இலக்காகை சுட்டி இறே

விதி விஷயமுமாய் –
உத்தேச்யமுமான வஸ்து-
சந்நிஹிதம் ஆனால்
இவன் விரும்பானோ என்று உன்னை கண்ணுக்கு இலக்காக்கி வைத்தாய் –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading