மந்த்ரம் -மந்த்ரார்த்தங்கள் -சொல்லி
அனுஷ்டானம் -நைமிசாரண்யம் -பத்து இடங்களில் சரணாகதி -நம்மாழ்வார் ஐந்து இடங்களில் –
பிரவேசம்-
திரு உள்ளத்தைக் குறித்து –
உகந்து அருளின நிலங்களை ஆஸ்ரயி -என்று பல காலும்
சொல்லிக் கொண்டு போந்தார் கீழ் –
மந்திர மந்த்ரார்த்தங்களை லபித்தார் ஆழ்வார் கீழ் –
அதுவும் அப்படியே செய்வதாக ஒருப்பட்டது –
அநந்தரம்-
தாம் தம்முடைய நிகர்ஷத்தை அநு சந்தித்து
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் –
விஷய ப்ராவண்யத்தையும் –
ஆர்த்த விஷயத்தில் -ஐயோ -என்னாதே போந்த படியையும்
பர ஹிம்சையே யாத்திரையாகப் போந்த படியையும்-
இவற்றை அடைய முன்னிட்டு
ராவணோ நாம துர் வ்ருத்த ராக்ஷசோ ராக்ஷஸேஸ்வர –
(அவன் பாபங்களும் என் பாபங்களும் உடையவன்-)என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆகாசத்தில் நின்று
ஸ்வ நிகர்ஷத்தை சொல்லி சரணம் புக்காற் போலே
இவரும் தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து
திரு நைமி சாரண்யத்தில் நிற்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புகுகிறார் –
(தேனுடைக் கமலத்திரு பாசுரம் )
————————————–
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-
ஏணிலேன்-எண்ணாமல்-
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –
இது என்னுடைய பூர்வ வ்ருத்தம் இருந்தபடி -என்கிறார் –
விஹிதங்களை அனுஷ்டித்து சம தமாதி ஆத்ம குண பேதராய் இருப்பார் இறே -இதுக்கு அதிகாரிகள் –
அதில் நான் செய்து நின்ற நிலை இது என்கிறார் –
( பிரபத்தி சர்வாதிகாரம் அன்றோ –
பூர்வ விருத்தம் அனுசந்தித்து -அனுதாபம் பட்டு -விட்டேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணித் தான் வர வேண்டுமோ
முதலியாண்டான் கூரத்தாழ்வான் -சம்வாதம்
விட்டே பற்ற நீர் ஒருவரே அதிகாரி -அழகை அனுபவிக்க அனுபவிக்க விடுவோம்
பூர்வ விருத்தம் பிரபத்திக்கு விரோதி என்று அனுசந்தித்தார் அல்லர் இங்கு
சாதனாந்தரங்களுக்கு–போலே அன்றே பிரபன்னனுக்கு
உபாயாந்தரங்களுக்கு அதிகாரி இல்லை -யோக்யதை இல்லை -நீ ஒன்றே உபாயம் -அநந்ய கதி என்கிறார் இங்கு )
வியாக்யானம் –
வாணிலா முறுவல் –
ஒளியானது நிலவா நின்றுள்ள -வர்த்தியா நின்றுள்ள -முறுவல் என்னுதல் –
அன்றிக்கே –
ஒளியானது -இதுக்கு இலக்கானவர் உடைய நெஞ்சை விட்டு போகாதே
வர்த்தியா நின்றுள்ள முறுவல் -என்னுதல் –
சிறு நுதல் –
நுதல் -நெற்றி
அதுவும் சிறித்து இருக்கை
இல்லை யாகில் பும்ஸ்த்வம் வந்ததாக-கந்தியாய்- இருக்கும் இறே –
பெரும் தோள் –
போக்தாவின் அளவு அல்லாதபடி
போக்யதை கரை புரண்ட தோள் –
மாதரார் -இத்யாதி
ஒளி நிலவா நின்றுள்ள முறுவலையும்
அளவுபட்ட நுதலையும்
போக்யதா பிரகர்ஷத்தை உடைத்தான தோள்களையும் உடையரான ஸ்திரீகள் உடைய
சந்நிவேசத்து அழகை உடைத்தாய் இருக்கிற மாம்ச க்ரந்தியையே பிரயோஜனமாக ஆதரித்துக் கொடு போந்தேன்
(அவ்வருகில் அத்ருஷ்டமாய் வருவதும் இதுவே தான் என்று இருந்தேன் -பயனே -ஏவகாரம்)
பேதையேன் –
இன்று பிழை என்று கை விட வேண்டும்படியான இத்தை –
அநாதி காலம் ஆதரித்து போர வேண்டின ஹேது என் என்னே -பேதையேன் –
அறிவுகேடு எத்தை பண்ணாது தான்-
(விஷய ப்ரவணனாய் இருப்பவன் நீ விடு என்றால் விடான் அன்றோ
அவளே -வாத்யாயராய் -உவாத்து -விடுகைக்கும் -அனுபவம் இல்லாமல் -கழுத்தை பிடித்து தள்ளி
அனாத்மா குணத்தை அனுசந்தித்து கடுக்க விட்டு வந்தேன்
இன்று தப்பு என்று அறிந்தவற்றை அன்றோ ஆதரித்து போந்தேன் )
பிறவி -இத்யாதி –
இப்படி அறிவு கேடன் ஆகையாலே –
சம்ஸாரம் ஆகிறது அல்பம் -அஸ்தரம் -துக்காவஹம் -ஆனபின்பு
இத்தைத் தவிர்த்துக் கொள்ள வேணும் -என்னும்
மநோ ரதத்தை உடையேன் அன்றிக்கே இருந்தேன் –
ஏணிலேன் –
இத்தை தவிர்த்துக் கொள்ளுகைக்கு ஈடான
உயர்த்தியை உடையேன் அல்லேன் -என்னுதல் –
இருந்தேன் –
நன்று -என்று அநு சந்தித்துப் போந்த இத்தை தண்ணிது -என்று விட்டாரே –
அநந்தரம் –
உத்தேச்ய பூமியிலே போய்ப் புகப் பெற்றிலரே –
நடுவில் நிலையை யாயிற்று -இருந்தேன் -என்கிறது –
ஓடினேன் -என்ற இவர் இருக்கைக்கு அவகாசம் இல்லை –
கஸ்த்த ஏவ வ்யதிஷ்டத-என்னுமா போலே –
(விபீஷண ஆழ்வான் ஆகாசத்தில் பூமியில் கால் பாவாமல் இருந்தால் போலே
எதிர்பார்ப்புடன் -உள்ளம் பதைப்புடன் -இருந்தால் போலே )
எண்ணினேன் –
நாம் முன்பு செய்து போந்தது என் –
நாம் தாம் ஆர் –
இனி செய்து வர்த்திக அடுப்பது என் –
என்று ஆராயத் துடங்கினேன்
எண்ணி-
இப்படி அநு சந்தித்து –
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் –
தங்கள் பருவத்தாலே இதினுடைய தண்மை நெஞ்சில் படாதபடியாக
மறைத்து கொடு போருகிறவர்கள் உடைய கலவி
இடையாட்டத்தை இப்போது லஜ்ஜித்தேன் –
ஆண் பிள்ளைச் சோறாள்வியை ஸ்திரீ -(பெண் வேஷம் இட்ட ஸ்த்ரீ )என்று பின் தொடருமா போலே
இருப்பது ஓன்று இறே – சப்தாதி விஷயங்களிலே போக்யதா புத்தி பண்ணி பின் தொடருகை யாகிற விது –
வெளிச் செறிப்பு பிறந்த அநந்தரம்
லஜ்ஜித்து கை வாங்க வேண்டுமத்தை இறே
நெடுநாள் ஆதரித்துப் போந்தது –
வந்து உன் திருவடி யடைந்தேன் –
நெடுநாள் பிரயோஜனம் என்று ஆதரித்து
ஒரு நாளாக லஜ்ஜித்து
கை வாங்க வேண்டும்படி அன்றிக்கே
என்றும் ஒக்க பிரயோஜனமான திருவடிகளிலே
வந்து சரணம் புகுந்தேன் –
நைமி சாரணி யத்துள் எந்தாய் –
அவன் பக்கல் பிரயோஜனம் உள்ளன வாங்கி கை விடுமாகில்
இவனுக்கு அல்லாதாரில் வாசி இல்லை இறே –
அங்கன் இன்றிக்கே
நிருபாதிக பந்துவாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் –
வகுத்த ஸ்வாமியாய் –
இவன் தான் நெடு நாள் இழவை யநுசந்தித்து வெறுத்தால்
பிழை புகுந்தது ஆகில் அதுக்குப் பரிஹரிக்கைக்கு நான் இருந்தேன்
செய்யலாவது உண்டோ என்று எடுத்து
முகத்தை துடைத்து
குளிர முகம் தருமவனாய் இருந்தான் –
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply