பக்ஷிகளும் -தாராக்களும் -உஜ்ஜீவனம் அடைய நீங்களும் உஜ்ஜீவிக்க இந்த பதிகம் பிதற்றுங்கோள்
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-
தமிழ் மாலை-திராவிட சப்த தொகுப்பு-
———————————————–
வியாக்யானம் –
தாரா இத்யாதி –
தாராக்களாலே நிறைந்து இருந்துள்ள வயல் சூழ்ந்த
ஸ்ரீ சாளக் கிராமத்திலே
வந்து சந்நிஹிதனானார் -சர்வ ஸ்வாமியை கவி பாடிற்று –
(நா படைத்த பயன் ஸ்வாமியைப் பாடுவதே)
காரார்-இத்யாதி –
மேகங்களின் உடைய நிரந்தர சஞ்சாரத்தை உடைத்தான
(மேகம் -பரம பாகவதர்கள் -உதாரர்கள் நித்ய வாசம் செய்யும் திரு நகரி )
பர்யந்த்தத்தை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை
ஆரார் உலகத்தறிவுடையார் –
லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –
அமரர் நன்னாட்டரசு ஆள –
நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை
ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
பேர் ஆயிரமும் ஒதுமின்கள்
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –
அன்றி யிவையே பிதற்றுமினே —
அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-
திரு நாமம் சொல்லுங்கோல் இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி-
இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கலைப்பெருமான் அன்பர் பண்டம் கொண்டு உகப்பான்
அலைப்பான் நண்ணாரை அரன் தன் -தலை இடர்
நீக்குவான் சேர் சாளக்கிராமம் அடை என்று உரை செய்
வாக்கு இரு வினைக்கு வாள்–5-
கலைப்பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு /
இருவினை -மாளாத பெரிய -புண்ய பாபங்கள் என்றுமாம் –
—————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply