தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–
அண்டக்குலத்துக்கு அதிபதி என்றே ஐஸ்வர்யார்த்திகள்
வண்டுகள் பாட -கயல்கள் பாய -நாட்டியம் ஆட -தாமரை மொட்டுக்கள் மலரும் -அலர்த்து-மலர்ந்து –
இவையே கச்சேரி பார்க்கும் பார்வையாளர்கள்
கீழே மூவர் ஆஸ்ரயிக்க-ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் -நித்ய சூரிகளும் -கேவல ப்ராஹ்மணரும் –
————————————————
வியாக்யானம் –
தொண்டாம் இனமும் –
வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –
இமையோரும்-
நித்ய சூரிகளும் –
துணை நூல் மார்பில் அந்தணரும் –
கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் –
(வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே-வித்யையால் பணிவு -ஒன்றை சொல்லி –
கேவல பிராமணரை வரவழைத்து கீதா பாஷ்யம் -தாத்பர்ய சந்திரிகை
பசு மாடு ஹஸ்தி
நாய் நாய் மாமிசம் உண்பவன் -இரட்டை இங்கு
பண்டிதர் சம தர்சனம் பண்ணுவார்கள் -ஸ்ரீ கீதை )
அண்டா வெமக்கே யருளாய் -இத்யாதி
தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்
என்று தனித் தனியே சொல்லா நின்று கொண்டு
சேருகிற கோயில் அருகு எல்லாம் –
வண்டார் -இத்யாதி
வண்டுகளால் மிடையப்பட்டு உள்ள
பொழிலால் உண்டான பழனம் உண்டு -நீர் நிலம்
அதினுடைய பர்யந்தங்களில் உண்டான வயலிலே நின்று
கயலாவது நீர் நிலங்களிலே வந்து பாய –
தன்டாமரைகள் முக மலர்த்தும்-
கூத்தாடுமவர்கள் அடி இட்டால்
ததஸ்த்ரராய் -சதஸ்ஸிலே- இருப்பார்
தம் முக விகாசத்தாலே கொண்டாடுமா போலே
தாமரைகள் முகம் மலர்த்தும் ஆயிற்று –
சாளக் கிராமம் அடை நெஞ்சே –
————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply