கீழே -1-4-நரஸிம்ஹ விருத்தாந்தம் அருளிச் செய்து அடுத்து ஹர சாப விமோசனம் போலே இங்கும் –
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8-
சந்தார் தலை-மண்டை ஓட்டையில் துளைகள் நிரம்பி இருக்குமே –
பெரியோன்-பெருமை பாவித்து இருக்கும் ஹரன் –
சந்தார் பொழில் -சந்தன மரங்கள் நிறைந்த சோலை
வியாக்யானம் –
வெந்தார் என்பும் -சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு –
வெந்தவர்களுடைய எலும்பும்
அது சுட்ட சாம்பலும்
உடம்பிலே பூசி
கையிலே சந்துகள் ஆர்ந்து இருந்துள்ள தலையைக் கொண்டு –
எல்லா நரம்புகளும் வந்து கூடின இடத்திலே யிறே சேதித்தது –
தலை என்னாமல் சந்தார் என்பதால் -எல்லா நரம்புகளும் இத்யாதி -என்கிறார்
உலகு ஏழும் திரியும் பெரியோன் -தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன –
கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே
ஈஸ்வர அபிமாநியாய்
தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவன் சென்று –
என் ஸ்வாமீ – என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –
திரு மார்வில் இலங்கு அமுது நீர் தந்தான் –
விளங்கா நின்றுள்ள திரு மார்வில்
அம்ருத ரூபமான ஜலத்தைக் கொடுத்து (வேர்த்து -வேர்வை நிரம்பிய அழகு)
அவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-
சந்தார் பொழில்
சந்தனத்தாலே நிறைந்த பொழிலாலே சூழப் பட்ட
சாளக்கிராமம் அடை நெஞ்சே-
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply