ஸ்ரீ பெரிய திருமொழி-1-4-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

வாலி வதத்துக்கு பின் ராவண வதம் -சங்கதி

இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-3-

இரு நிதிக் கிறைவனும்-சங்க நிதி பத்ம நிதி இரண்டும் கொண்ட ராவணன்-
விலங்கலில் உரிஞ்சி-மேருவில் தாக்கி
வெண் துகில் கொடி-த்வஜ ஸ்தம்பம் -வெண் கொடி பறந்தால் போலே கங்கை -தன் குறிப்பு ஏற்று அணி

வியாக்யானம் —

இலங்கையும் இத்யாதி –
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத படியாக
ஒருவராலும் அடர்க்கரிய சாமர்த்தியம் உடையனான
ஜெயேஷ்டனான வைஸ்ரவணனை வென்று- குபேரனை வென்று
சங்கநிதி பத்ம நிதிகளை உடையவனாய் இருக்கிற ராவணனும்
அவனுக்கு பலமான ராஷச ஜாதி யாகவும்
மண் உண்ணும்படியாக க்ரூர வியாபாரங்கள் பண்ணினவரான
இஷ்வாகூணாம் இயம் பூமி -என்னக் கடவது இறே-

கொழும் சுடர் இத்யாதி –
ஆதித்யனானவன் சுழல வாரா நின்றுள்ள மேருவிலே தாங்கி
மேல் நின்ற விசும்பிலே ஆகாசத்திலே வெளுத்த நிறத்தை உடைத்தான
கொடி ஆடையை விரித்தால் போலே
இது வந்து விழும் போதை நீர் தெளிவு இருக்கும் படி

வலம் தரு மணி நீர் –
வேகத்தாலே மிடுக்கை உடைத்தாய்
தெளிவை உடைத்தாய் இருக்கும் ஆயிற்று

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading