உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் யாயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-
————————————————————-
வியாக்யானம் –
உறிகள் இத்யாதி –
மெய்யில் -சரீரத்தில் நரம்புகள் ஆனவை பால்யத்தில் மறைந்து கிடந்தவை-
சரீரம் பசை யற உலர்ந்த படியாலே-உறி போலே மேலே புடைக்கும் ஆயிற்று-
அதுக்கு உறுப்பாக
ஊன் தளர்ந்து –
மாம்சம் ஷயித்து
உள்ளம் எள்கி
அத்தாலே ஹ்ருதயம் ஈடுபட்டு
நெறியை இத்யாதி –
போக்கை நினைக்குமே
தூரப் போக நினைக்கிறான் ஆகையாலே வழியைப் பார்க்கும் –
நெடுகப் பார்த்த ஆயாசம் பொறாமை கண் சுழலும்
பின்பு அடி பேர்ந்திட மாட்டாதே நின்று நடுங்கும் ஆயிற்று-
அறிதியாகில் நெஞ்சம் –
ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே
அவன் பக்கலில் அன்பை உடையையாய்
சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி
பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –
வெறி இத்யாதி –
பரிமளத்தை வகுத்தாப் போலே இருக்கிற வண்டுகள்
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடுகிறன வாயிற்று –
————————————————————– .
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply