நிகரில் மல்லரைச்செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?
பொ-ரை :- ஒப்பு இல்லாத மல்லர்களைக் கொன்றதும், பசுக்களை மேய்த்ததும், நீண்ட நெடிய கையையுடைய மலைபோன்ற பெரிய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றதும், இவற்றைப் போன்றவையும் பிற செயல்களுமான, பேரொளிப்பிழம்பின் மயமான திருமேனியையுடைய கண்ணபிரானது செயல்களை நினைந்து, புலம்பி என்றும் அநுபவிக்கும்படியாக நாள்கள் கழியப்பெற்றேன்; யான் இனி எதற்கு வருந்தவேண்டும்?
வி-கு :- போல்வனவும் பிறவுமான செய்கை என்க. நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் என்க. வைகப்பெற்றேன் – கழியப் பெற்றேன்.
ஈடு :- மூன்றாம் பாட்டு. 2கிருஷ்ணனுடைய செயல்களையே அநுபவித்துக்கொண்டு காலம் போக்கப்பெற்ற எனக்கு ‘இன்னது பெற்றிலேன்’ என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார்.
நிகர் இல் மல்லரைச் செற்றதும் – மிடுக்குக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் மல்லரைச் செற்றதும். 3பால் வெண்ணெய் இவற்றை உண்கையாலே மிருதுத் தன்மையராய் இருப்பார் இரண்டு பிள்ளைகள் அல்லரோ; மாமிச பக்ஷணங்களாலும் சஸ்திர அஸ்திர சிக்ஷைகளாலும் மலைகள்போலே திண்ணியவான தோள்களையுடைய மல்லரைப் பொடிபடுத்தினார்கள்; 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனைமானத்து வண்டல் உழ ஓர் எழுத்தின்
வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.
. 2இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ. 3“ஒவ்வாத போர் என்று கூறினர்” – “ந ஸமம் யுத்தம் இத்யாஹு:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 103 : 6.–
என்கிறபடியே எல்லாரும் அஞ்சும்படி அன்றோ அற்றைச் செயல். 4‘ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை’ பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-– தாமாகவே வந்து மேல்விழுந்தால் அன்றோ ‘முடியாது’ என்று வாங்கலாவது? கம்சனுக்குப் பரதந்திரர்களாய் வருகையாலே இங்குத் தோற்றார்களாகில் அவன் அங்கே தோள்களைக் கழிக்குமாயிற்று; ஆனபின்பு, ‘கோழைகளாய்க் கொலையுண்பதில் புகழோடே முடிய அமையும்’ என்று மேலிட்டார்கள். ‘சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன்’ – 5கூனி சாத்திவிட்ட சாந்து குறியழியாமலே காணும் அவர்களோடு போர்த் தொழில் செய்தது. 6மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச்செய்தே, சாத்தின சாந்து குறிஅழிந்தது இல்லை காணும். 1கூனி சாத்திவிட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ. இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ. 2இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள். இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே. ஏன்று எதிர்ந்து வருகையாவது, பொரக்கடவோம் என்று நெஞ்சிலே துணிந்து வருகை.
நிரை மேய்த்ததும் – முதற் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும். இரண்டாம் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்: க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்; ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான். 3அன்றிக்கே, பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருதபோதும் உள்ளது என்னலுமாம். நீள் நெடும் கைச் சிகரம் மா களிறு அட்டதும் – 4மல்லர்க்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாது கண்டீர் இதற்கு. தூரப்போய்த் தப்ப ஒண்ணாதபடி கையாலே வளைத்துக் கொள்ளவற்றாயிருத்தலின் ‘நீள் நெடும்கை’ என்கிறது. ‘நெடுங்கை’ என்னாநிற்கச் செய்தே ‘நீள் நெடுங்கை’ என்கிறதன்றோ, அதன் பெருமை இருக்கிறபடி. ஒரு கை தான் வேண்டுமோ? இது தன்னைக் காணவே அமையுமாதலின் ‘சிகர மா களிறு’ என்கிறது. 1“ஆனை மா மலை” –8. 4 : 1.-என்னக் கடவதன்றோ. மலைச் சிகரம் போலே யாயிற்றுப் பெருத்து இருக்கிறபடி. அட்டதும் – முடித்ததும். இவை போல்வனவும் பிறவும் – இவை தொடக்கமான கேசியைக் கொன்ற செயல் முதலானவைகளும். புகர் கொள் சோதி – குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளிபெற்ற தேஜஸ்ஸு. பிரான் – உபகாரகன். 2“வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்” “ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம்அத்யருணேக்ஷணம்
கஜயுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54
என்னும்படி இருக்குமன்றோ. யானையோடே பொருதாலும் இங்ஙனேயோ வேர்ப்பது? முலையாகிற மலையோடு பொருததோடு யானையாகிற மலையோடு பொருததோடு வாசி இல்லை காணும் இவனுக்கு.
தன் செய்கை நினைந்து புலம்பி – உபகாரம் செய்தலையே இயல்பாகவுடையவனுடைய செயல்களை நினைத்து, அது உள்ளடங்காமை புலம்பி. என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் – நாடோறும் அநுபவித்துக்கொண்டு, வைகலானது வைகப்பெற்றேன்-வைகல் வைகப்பெற்றேன்-காலமானது கழியப்பெற்றேன். 3வைகல்-கழிதல். அன்றிக்கே, அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்றுமாம். அப்போது, வைகுதலாவது – நெடுகுகை. எனக்கு என் இனி நோவதுவே – ‘காலம் நெடுகுவதுகுறுகுவது ஆகாத இடந்தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தியுண்டோ எனக்கு என்கிறார். 1அன்றிக்கே, அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல். 2இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ. உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.
கிருஷ்ண செஷ்டிதம் அனுபவித்து காலம் போக்க இனி எனக்கு நோவு ஒன்றும் இல்லையே
மிடுக்குக்கு சதுர்சம் இல்லாத மல்லரை
திரு மேனி -மிருத ஸ்வபாவம்
பசுக்கள் -கவ்ய சேவை பண்ணி –
ஆகார சுத்தி –
இனிப்பு -சாத்விகம்
காரம் ராஜசம்
கசப்பு புளிப்பு தாமசம்
கோபம் எதற்கு உப்பு புளி சாப்பிடுகிறேன்
தொட்டி பிரசாதம் கல் சட்டியில் மணவாள மா முனிகள் –
கீரை இருந்ததாம் ஒரு நாள் நினைவு கொஞ்சம் குறைய
நாய் எலும்பு கீழே இருந்ததாம்
அத்தை விட்டாராம்
அபத்திய பஷணங்கள்-உண்டு -சஸ்திரம் கொண்டு அடி கொண்ட சரீரம் இவர்களுக்கு
அஸ்தரம் மந்த்ரங்கள் உடன் கூடிய அம்பு
திண்ணிய தோளை உடைய மல்லர்
மல்லாண்ட திண் தோள் -வெண்ணெய் உண்டு -வஜ்ரம் சரீரம் இவர்களுக்கு
புழு குறித்தது எழுத்து ஆம் போலே –
ஏவிற்று செய்வான் -கம்சன் ஏவப்பட்ட -ஸ்வ தந்த்ரராய் வந்து மேலிட்டால் ஓடலாம்
கம்சனால் ஏவப்பட்ட கார்யம் -இங்கு தோற்றால் அங்கு தோள்கள் போகுமே –
பெரியாழ்வார் திருமொழி
எதிர்ந்து வந்த மல்லரை சாவ தகர்த்த
சாந்து அணி தோள் சதுரன் சாமர்த்திய சாலி
கூனி சாத்தின சாந்து குறி அழியாமல் -காணும் அவர்கள் உடன் வ்யாபரித்தது
அவ்வளவு சுலபமாக யுத்தம்
மதுரை பெண்கள் கண்களால் பார்த்து இலச்சினை பட
வேல் விழி- சேல் கயல் –
மல்லர்களால் அழிக்கப் பட்டாலும் இலச்சினை போனால் பெண்கள் வருந்துவார்கள்
அழித்து போனால் ஆகில் பெண்கள் கோஷ்டிக்கு ஆகாதவான் ஆவான்
ஏன்று எதிர்ந்து வந்தார்கள்
நிரை மேய்ந்ததும் -இரண்டாம் பிறவி செயல் இடைக்குலம் -நப்பின்னை திருக் கல்யாணம்
முதல் பிறவி -செயல் மல்லர்களை -ஷத்ரிய குல செயல்
இரண்டு தாயார் -இரண்டு மாதா
ருக்மிணி நப்பின்னை இருவரையும் கொள்ள
ஓன்று போன்ற செயல் இரண்டும் சரமம் இன்றி
மல்லர் இடம் தப்பினாலும் தப்ப ஒண்ணாத குவலயா பீடம்
நெடும் கை -நீள் நெடும் கை -ராஜ லஷணம் -ஆஜானு பாஹு
அட்டதும்
இவை தொடக்கமான கேசி போல்வன
புகர் கொள் சோதி விரோதி நிரசனம் செய்யப் பெற்றோம் என்பதால்
பிரான் –
மதுரா நகர ஸ்திரீகள் வயிற்றில் நெருப்பு கட்டி இருக்க
தன்னை ரட்ஷித்து கொடுத்தது மகா உபகாரம்
அபிமத விஷயம் அணைத்து கொள்ள செய்த கார்யம்
நினைந்து –
காலம் கழிய பெற்றேன் வைகல் =காலம் /நெடுக
நெடுகப் பெற்றேன்
இவருக்கு நோவு -அவனுக்கு வரும் நோவு
அது கழியப் பெற்றேன் -என்கிறார்
உயிர்க்கு வரும் நோவு உடலுக்கும் உண்டே-
வலி துன்பம் அர்த்தம் இல்லை வாயிற்று நோவு என்பர் திரு நாராயணபுரத்தில்
ஆழ்வார் துக்கிக்க எம்பெருமானும் துக்கிக்க
இவர் சந்தோஷிக்க அவனும் மகிழ
எம்பெருமான் விரோதி நிரசனம் துக்கம் போக இவருக்கும் போனதே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply