கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் –5–
எலாம்- எல்லாம் / கண்டவா -கண்டவாறு என்றபடி –
கள்வனேன் ஆனேன் –
விறகு களவு கண்டவனில் காட்டில் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கு பாபம்
ப்ரசுரமாய் இருக்கும் –
சூத்ர தனத்தை அபஹரித்தவனில் காட்டில் ப்ராஹ்மண தனத்தை அபஹரித்தவனுக்கு
பாபம் விஞ்சி இருக்கும்
த்ரவ்யங்களில் தலையான ஆத்ம வஸ்துவை யாயிற்று அபஹரித்தது
சர்வேஸ்வரன் உடைமையை யாயிற்று என்னது என்று போந்தது –
(நம்பினேன் பிறர் நன் பொருள் -என்றவாறு)
படிறு செய்து இருப்பேன் –
மிடறு தின்றால் சொறிய ஒண்ணாதாற் போலே பஸ்யதோ ஹரனானேன்
நான் தேக ஆத்ம அபிமானம் பண்ணிப் போந்ததுவே அன்றிக்கே
ஈஸ்வர சேஷம் இவ்வாத்ம வஸ்து என்று இருப்பான் ஓர் ஆஸ்திகன் உண்டாகில்
தேகாத்ரிக்தமாய் இருப்பதொரு வஸ்து ஆவது என் -ஈஸ்வரன் ஆவது என் –
என்று காண காணப் பறித்தேன்-
கண்டவா திரிதந்தேனேலும் –
முன்னடி தோற்றாமையாலே கை வந்தபடி பரிமாறினேன் இத்தனை போக்கி
சாஸ்திரங்கள் ஆகாதது என்றத்தை அறிந்தும் மீண்டிலேன்
(கண்டவாறு திரிந்தது -கண்ணால் கண்ட சாம்சாரிக வழி
கேட்டவாறு -சாஸ்திரம்- வேதம்-ஸ்ரவணம்-மனனம் – அறிந்து செல்ல வில்லை)
ந்ருபசு -அல்லாதவற்றோடு பரிமாறுமத்தை ஜனனி பக்கலிலும் பரிமாறத் தேடும்-
(ஆளவந்தார் -அ ஸூபம் எல்லா வற்றுக்கும் நானே இருப்பிடம் -தப்பான ஆச்சாரம் –
அந்தம் இல்லாத -பிராயச்சித்தம் பண்ணிப் போக்கிக் கொள்ளாத படி)
தெள்ளியேன் ஆனேன்-
இப்படி இருக்கச் செய்தே சார அசார விவேகம் பண்ணி – – செய்யக் கடவது செய்து
அல்லாததை தவிர்ந்து போருவாரைப் போலே விவேகம் உடையேன் ஆனேன்-
செல் கதிக்கு அமைந்தேன் –
நித்ய சம்சாரி ஆகைக்கு உறுப்பானவற்றை செய்து போந்த நான் –
இனி இவன் சம்சாரத்துக்கு ஆள் ஆக மாட்டான் –
பரம பததுக்கு ஆளாகும் அத்தனை என்னும்படி சமைந்தேன் –
(இனி இவன்-இனியவன்-ப்ரஹ்மத்துக்கு இனியவனாக இருந்தால் சம்சாரத்துக்கு ஆளாக மாட்டோம் )
செல்லக் கடவ கதி பரமபதம் –அங்குத்தைக்கு ஆளாம்படி பூர்ணன் ஆனேன்
கண்டவா திரிந்தேன் என்றீர் தெள்ளியனானேன் -என்று அன்வ்யாஹத பாஷமாய் இருந்ததீ -என்ன-
சிக்கெனத் திருவருள் பெற்றேன் –
இனி மீளாதபடி அருளைப் பெற்றேன்
நீர் பெற்ற பேறு தான் என் என்ன
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் —
உள் எலும்பும் நரம்பும் அற உருகி –
அது தான் த்வநியில் தழு தழுப்பிலே தெரியும்படி ஆனேன்
(உற்ற நல் நோய் அன்றோ இது)
உடம்பெலாம் கண்ண நீர் சோர –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டா -(இவனைப் பார்ப்பதே தேகம் படைத்த பயன்
மாலா காரர் விதுரன் போல்வாரை இப்படி பார்ப்பதே அவனுக்கும் கடைமை)
உடம்பு அடங்க பஞ்ச ஸரமும் த்ரி சரமும் இட்டாற் போலே கண்ண நீர் வெள்ளம் இட்ட படி-
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் –
விஷய அனுபவம் பண்ணிக் களித்து இருக்கும் போதோடு
விஷய அனுபவம் பண்ணுகைக்கு அர்த்த ஆர்ஜனம் பண்ணும் போதோடு வாசி யற
எனக்கு திரு நாமம் சொல்லுகையே யாத்ரையாகப் பெற்றேன்
—————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply