உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
பொ-ரை : உழலை கோத்தாற்போலே இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான கண்ணபிரானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இளமை தீரும்படி வல்லவர்கள் மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.
வி-கு :- உழலை – தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713. பேய்ச்சி – பூதனை.‘அவளை’ என்பது உருபு மயக்கம். ‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. உறழ்பொருவுமாம். ‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.
ஈடு :- முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் – 2உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான். கழல்கள் அவையே சரணாகக்கொண்ட குருகூர்ச் சடகோபன் – 3விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே, விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். பலியாவிட்டாலும் தம்மடிவிடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார். குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – 4திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், 5மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு, மரங்களும் இரங்கும் வகைஇங்கு; இனி, நாம் இரங்குகிற இது 1தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு; ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது. மழலை தீர வல்லார் – இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே, இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி. 2அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை. மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் – மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் 3காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில், “தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும்போது மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; 4‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம். 1இங்ஙன் அன்றாகில் வஞ்சனையுள்ளவர் வார்த்தையாமே அன்றோ. இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி இருப்பதும். ‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், 2முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி. உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. “தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆரா வமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிகத்-தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறுசீர் மாறன்எம் மான்.
கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.-என்பது, பெரியாழ்வார் திருமொழி.
“இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”-என்பது, திருவாய், 6, 5 : 9.
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போ
பேய்ச்சி -உயிர் உண்டான்
அடையும் விரோதி போக்கிக் கொள்ள வல்லவன்
உழலை -தடி போலே -திருவாசல் கதவு
எலும்பை உடையவள்
கழல்களையே -ஏவகாரம்
கொண்ட சடகோபன்
குழலை காட்டிலும் இனிமையான
மழலை தீர வல்லார் கொச்சை இன்றி ஸ்பஷ்டமாக சொல்ல வல்லார்
‘உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய’ என்றதற்குக்
கருத்து அகவாயில் மாத்திரமன்றிக்கே, வடிவிலும் ஒருபசை இல்லை-என்பதாம்
விஷம் கலந்த பாலைக் கொடுக்க
முலைப்பாலுக்கு சக்கரை சேர்த்தல் போலே இனிமையாக இருந்ததாம்
வேகமாக உறிஞ்சி
உயிர் சேர்ந்து வந்ததாம்
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் அவன் திருவடி ஒன்றே உபாயம்
சரணாக கொண்ட
அடி விடாத ஆழ்வார்
சேதன அசேதன விவாகம் அற -குழல் ஓசை –
மரத்தை போல் வழிய நெஞ்சம் இரும்பு போல் சொல்லாமல் திருமாலை
நெருப்பில் இளகும் இரும்பு
மரம் சாம்பல் தான் ஆகும்
ஆற்றாமை உடன் சொல்ல வல்லார் -இளமை இன்றி மழலை தீர சொல்ல வல்லார்
மானை போன்ற கண் உள்ளவர் -ஸ்திரீகள் -இருக்க -அனுபவ விஷயம் போலே
தூராக் குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பேன்
திருமங்கை ஆழ்வார் -நெஞ்சுக்குள் உள்ளதை அறிந்து
கோவிந்த சுவாமிக்கு அருளியது போலே திருவடியும் கொடுத்து போகத்தையும் கொடுத்து போலே எனக்கும் அருள் –
எனது நெஞ்சில் உள்ளவற்றையும் அறிந்து அருள் –
அவன் கருத்தை அறிந்து அருளியது போலே எனக்கும் ஆக வேண்டும் –
மெழுகு பொம்மை தழுவ
நிறைய அறிந்தும் தப்பே செய்து
விஷய ப்ராவண்யம்
இது கற்றார் மேல் விழுந்து
மின்னிடை மடவார்கள் மேல் விழுந்து அனுபவிப்பது போலே
உவமை உறுப்பு இன்றி முற்றுவமை
உபமானம் மட்டும் சொல்லி உபமேயம்
திருஷ்டாந்தம் தாவி வையம் கொண்ட தடம் தாமரைகளுக்கு
தாமரை போன்ற திருவடிகள் என்று அருளாமல்
திருப்பவளம் -பவளம் போன்ற அதரம்
முத்து பல் -முது போன்ற பல்
அது போலே முற்றுவமை
மா முனிகள்
ஆரா வமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே
ஆற்றாமை விஞ்சி அலமந்தான்
மாறன் எம்மான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply