ஈடு : 1ஒரு நிலத்திலே ஒரு கூறு உவர்ந்து கிடக்க மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே, நித்திய விபூதியும் நித்தியசூரிகளும் பகவத் அனுபவமே பொழுது போக்காகச், சொல்லாநிற்க, இவ்வுலகமாகிற பாலை நிலத்தில் உள்ளார் சிற்றின்பங்களிலே ஈடுபாடுடையவர்களாய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறும் இழவுமாய்ப் பகவானிடத்தில் விருப்பு இல்லாதவர்களாய்த் துன்பப்படுகிற படியை நினைத்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து, சர்வேசுவரன் உளனாய் இருக்க நாம் இருந்து துன்பப்பட வேண்டுமோ?’ என்று, ‘தேவர் உள்ளீராய் இருக்க, இவர்கள் இப்படி நோவுபட விட்டிருக்கை போருமோ?’ 2இவர்களையும் திருத்தி நல்வழி போக்கவேண்டும்.’ என்று அவன் திருவடிகளிலே சரணம் புக, அவன் இவரை நோக்கி, ‘நம் குறையன்றுகாணும்; இவர்கள் அறிவில்லாத பொருள்களாயிருக்க நாம் நினைத்தபடி காரியங்கொள்ளுகிறோம் அல்லோமே? அறிவுடையராய பின்பு இவர்கள் பக்கலிலேயும் 3ருசி உண்டாக வேண்டுங்காணும்.
ருசி உண்டாகவேணுங்காணும்’ என்றது, ‘ருசி முன்னாகப் போகாமையாலே
வைதிக புத்திரர்கள் மீண்டார்களேயன்றோ? என்றபடி.
‘தாளாற் சகங்கொண்ட தாரரங் கா!பண்டு சாந்திபன்சொல்
கேளாக் கடல்புக்க சேயினை மீட்டதுங் கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தாரை மீட்டதும் மாறலவே
மீளாப் பதம்புக்க மைந்தரை நீயன்று மீட்டதற்கே?’
என்பது திருவரங்கத்துமாலை.
மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மைப் போன்று ஆவன எல்லாம் செய்து பார்த்தோம்; முடியாமையாலே கண்ணநீரோடேகாணும் கை வாங்கினோம்,’ என்ன,
‘இவர்களுக்கும் ருசி இல்லையேயானாலும் பேற்றுக்கு வேண்டுவது இச்சை மாத்திரமேயாயிற்று; ஆன பின்பு, இந்த இச்சையையும் தேவரீரே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை அன்றோ?’ 1என்று, ஸ்ரீ கிருஷ்ணன், துரியோதனாதியர்களை அழியச்செய்து, வெற்றி கொண்டு நிற்கச்செய்தே, துரியோதனாதியர்கள் பக்கல் உண்டான அன்பினாலே உதங்கன் வந்து, ‘உனக்குச் சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களிடத்தில் அன்புள்ளவனாய்த் துரியோதனாதியர்களை அழியச் செய்தாயே?’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்த விட்டுப் பார்த்தோம்; அவர்கள் ‘பந்துக்கள் வாழ்ந்தால் நாங்கள் வாழோம்!’ என்ற பின்பன்றோ நாம் அவர்களை அழியச்செய்தது?’ என்ன, ‘நீ எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனான பின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்தவிட்டுக் கொள்ளாது விட்டது என்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற்போலே, இவரும் நிர்ப்பந்திக்க, ‘சேதநரான பின்பு ருசி முன்பாகச் செய்ய வேண்டும் என்று இருந்தோம் இத்தனைகாணும்; அது கிடக்க, உமக்குக் குறை இல்லையே? உம்மைக் கொடுபோய் வைக்கப் புகுகிற தேசத்தைப் பாரீர்,’ என்று 2பரமபதத்தைக் காட்டிக் கொடுக்க-
‘பரமபதத்தைக் காட்டிக்கொடுக்க’ என்றது, மேல் திருவாய்மொழியிலேயுள்ள
‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர்
கண்டொழிந்தேன்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.
, கண்டு கிருதார்த்தரானார் மேல் திருவாய்மொழியிலே.
3பின்னையும் தம் செல்லாமையாலே, சர்வேசுவரன் கைவிட்ட இவ்வுலகத்தையும் திருத்தப் பார்க்கிறார். பின்னையும் – ஈசுவரன் கைவிட்ட பின்பும். ‘அருள் கொண்டாயிரம்
இன்தமிழ் பாடினான், அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்றும், ‘நின்
கண்வேட்கை எழுவிப்பனே’ என்றும் சொல்லுகையாலே ‘தம்
செல்லாமையாலே’ என்கிறார். ‘ஈசுவரன் கைவிட்டிருக்க, இவர் திருத்தினால்
திருந்துவர்களோ?’ என்னில், ‘உபரிசரவசுவினுடைய உபதேச சுத்தியாலே
பாதாளத்தையடைந்தவர்கள் திருந்தினாற்போன்று, மஹாபாகவதரான
இவருடைய கடாக்ஷ விசேஷத்தாலும் உபதேச சுத்தியாலும் திருந்துவார்கள்,’
என்க.
பிறப்பினைமுதல் திருவாய்மொழியிலே, தம்முடைய அனுபவத்திற்கு உறுப்பாக, அவன் காட்டிக்கொடுத்த பரத்துவத்தை அநுசந்தித்து, அதுதன்னை ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று சுருதிச் சாயையாலே விரித்து அருளிச்செய்தார், 2‘சுவானுபவந்தான் பிறர்க்கு உறுப்பாய் இருக்கையாலே, அறிவுடையராகில் இவ்வளவு அமையுமே அன்றோ?’ என்று பார்த்து. பின்னர் 3இதிகாச புராணக் கூற்றுகளாலே பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில். அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தம்மையே உத்தேசித்தே பகவானுடைய பரத்துவத்தை விளக்கி விரித்துப் பேசுவோம்’ என்று பார்த்து, அதற்கு உறுப்பாக, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான 4பரத்துவ சங்கையை அறுத்துக்கொண்டு, பகவானுடைய பரத்துவத்தை விளக்கி விரித்துப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.
அன்றிக்கே, முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்திலே பரத்துவத்தை அருளிச்செய்தார்; அது இவ்வுலக மக்களுக்கு எட்டாநிலமாய் இருந்தது. அதற்காக, அவதாரத்திலே _
பரத்துவத்தை அருளிச்செய்தார், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியில். அதுவும் பரத்துவத்திலே பரத்துவத்தை ஒத்ததாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்று இல்லை. இரண்டும் தேசத்தாலும் காலத்தாலும் கைகழிந்தன. அக்குறை ஒன்றும் இன்றிக்கே, 1‘பின்னானார் வணங்குஞ்சோதி’ என்கிறபடியே, பிற்பாடர்க்கும் இழக்க வேண்டாத அர்ச்சாவதாரத்திலே பரத்துவத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல்.
2எம்பார், ‘சிலர் எல்லா வேத சாஸ்திரங்களும் கைவரப் பெற்று வைத்து, ‘பரதத்துவம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவாள் உண்டோ? நமக்கு வணங்கத் தகுந்தவர் அல்லாதார் உளரோ?’ என்று கண்ட இடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறி நிற்க, எம்பெருமானார் தரிசனத்தில் எத்தனையேனும் கல்வி இல்லாத பெண்களும் மற்றைத் தெய்வங்களை அடுப்பிடு கல்லைப் போன்று நினைத்திருக்கிறது, இந்த ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழி உண்டாகையினாலே அன்றோ? என்று அருளிச்செய்வர்;எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை அடைந்தவர்கள் பிரமன் முதலாயினாருடைய குறைவற்ற செல்வத்தைத் துரும்புக்குச் சமமாக நினைப்பார்கள்,’ என்னக் கடவது அன்றோ?
2‘கார்த்தவீரியார்ஜூனன் என்பான் ஒருவன் தான் இராச்சிய பரிபாலனம் செய்கிற காலத்தில் யாரேனும் ஒருவர் பாபசிந்தனை பண்ணினார் உளராகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப் போந்தான் என்றால், இது பொருந்தக் கூடியதே,’ என்று இருப்பர்கள்; ஒரு அற்ப மனிதனுக்கு ‘இது கூடும்’ என்று இருக்கிறவர்கள், சர்வசத்தியாய் ‘சர்வாந்தர்யாமியாய் இருக்கிற சர்வேசுவரன் இப்படிப் பரந்து நின்று நோக்கும்,’ என்றால், மக்கள், ‘இது பொருத்தம் அற்றது’ என்று இருப்பர்கள். ‘ஜாதி, பொருள்கள்தோறும் நிறைந்து தங்கியிருக்கும்’ என்றால், ‘அசித் பதார்த்தத்திற்கு இது கூடும்’ என்று இருப்பர்கள்; ‘பரம சேதநனாய் இருப்பான் ஒருவன் பரந்து நிறைந்து தங்கியிருப்பான்,’ என்றால், ‘இது கூடாது’ என்று ஐயப்படாநிற்பார்கள்.
3இனி, ‘இவர் திருத்தப் பார்த்த வழிதான் யாது?’ என்னில், எல்லாரும் ஒரு சேர விரும்புவது சுகங்கள் உண்டாகவும், துக்கங்கள் இன்றிக்கே ஒழியவுமாய் இருக்கச் செய்தே, விரும்பிய சமயத்தில் விரும்பப்பட்ட சுகம் வரக் காணாமையாலும், விருப்பம் இல்லாத துக்கம் வரக் காண்கையாலும் ‘இவற்றை எல்லாம் நியமிக்கின்றவனாய் நின்று நுகர்விக்கிறான் ஒருவன் உளன்,’ என்று கொள்ள வேண்டி இருந்தது. 4‘அது என்? சுக துக்கங்களுக்குக் காரணமானபுண்ணிய பாவங்கள் நுகர்விக்கின்றன என்று கொண்டாலோ?’ என்னில், அந்நல்வினை தீவினைகளினுடைய தன்மையை ஆராய்ந்தவாறே, அவை, அறிவு அற்றனவாய் இருப்பன சில கிரியா விசேடங்கள் ஆகையாலே, 1அப்போதே நசிப்பனவாம்; 2இனி ஒரு மரத்தைச் செப்பன் இடுங்காலம் வந்தால், கருத்தாவை ஒழிய வாய்ச்சி முதலானவைகட்கு ஒரு செயல் கூடாதது போன்று, அந்தக் கிரியைகளுக்கும் ஒரு இறைவனை ஒழியப் பலத்தைக் கொடுக்கும் ஆற்றல் கூடாமையாலே ஒரு இறைவனைக் கொள்ளவேண்டி வரும்; 3இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கற்பித்து ‘அது அதிருஷ்டரூபேண நின்று பலத்தைக் கொடுக்கிறது’ என்பதனைக்காட்டிலும், ‘ஒரு பரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய தண்டனை உருவத்தாலும் திருவருள் உருவத்தாலும் இவை பலிக்கின்றன,’ என்று கூறுதல் 4நன்றே அன்றோ?இனி, ‘அந்தப் பரமசேதநன் ஆகிறான் யார்? அவனுடைய சொரூப சுபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவனுடைய செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில், 1அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும். அவற்றுள், 2பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள் இந்திரியத்தாலே காண முடியாத பொருளைக் காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆகமாட்டா; இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற 3வஞ்சகம் முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆகமாட்டா; இனி, 4பதினான்கு வகைப்பட்ட வித்தியைகளுள் முக்கியமானதாய், நித்தியமாய், புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய், 5சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.
‘மக்கள் நினைத்தபடி இன்ப துன்பங்கள் வாராமையாலே ஒரு சேதனன்
உளன்’ என்று அவன் செய்யும்படியை அனுமானத்தாலே சாதித்தார் மேல்.
‘அவனுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் முதலானவை இருக்கும்படி எங்ஙனே?’
என்ன, ‘பிரமாணங்கொண்டு அறிய வேண்டும்’ என்று பிரமாணத்தை
அறுதியிடுகிறார், ‘அவற்றைப் பிரமாணங்கொண்டு அறியவேணும்’ என்று
தொடங்கி.
2. பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம்,
சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும். அவற்றுள்,
மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை,
பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம். அவற்றையே, இங்குப்
‘பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள்’ என்று அருளிச்செய்கிறார்.
‘முதலான’ என்றதனால், அநுமானத்தைக் கொள்க. ‘ஆகமம்
முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.
3. ‘வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி
இவைகளை.
4. ‘பதினான்கு வகைப்பட்ட வித்தியைகள்’ என்றது, இருக்கு, யசுர், சாமம்,
அதர்வணம் என்னும் வேதங்களையும்; சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம்,
நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்;
நியாயம், மீமாம்சை, புராணம், தர்மசாத்திரம் என்னும் உபாங்கங்கள்
நான்கனையுமாம்.
5. ‘‘சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம்’ என்றது,
என்னை? வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உபப்பிருஹ்மணங்கள்
வேண்டுமோ?’ எனின், வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு, சர்வ
சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு
படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள்
மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘இதிஹாச புராணாப்யாம் வேதம்
ஸம்உபபிரும்ஹயேத்’, ‘பிபேதி அல்ப சுருதாத் வேதோமாமயம்
பிரதரிஷ்யதி’ என்கிறபடியே, மஹருஷிகள் வசனங்களாகிய
உபப்பிருஹ்மணங்கள் வேண்டும். ‘வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி
இதிகாச புராணங்களாலே’ என்பது, ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீ
சூக்தி. (ஸ்ரீவசன பூஷணம்)
சாத்துவிக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில், 2புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே சென்று இவ்விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்; 3அந்தப் பிரமனும் 4‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்; அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாலே படைக்கப்பட்டவனாய் அவனாலே ஞானத்தையடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும், 5‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்
முக்காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர், ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’ என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிறவிடத்திலே, ‘நான் முக்குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்; தமோகுணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு, சத்துவகுணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக்கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?
இனி, 1‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது; இராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்; சாத்துவிக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னாநின்றதே அன்றோ? ஆகையாலே, 2குணபேதங்களாலே புருஷபேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராணபேதம் கொள்ளலாய் இருந்தது. ஆகையாலே, ‘சாத்துவிக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டியிருந்தது. 3ஆதலால், சாத்துவிக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ளவேண்டி இருந்தது,’ என்க.
4அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையேயாகிலும்,
‘சாத்துவிக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதம்’ என்பது என்?
வேதம் புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே, முக்குணங்களால்
வருகின்ற தோஷம் இல்லையே அதற்கு?’ எனின், விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த வேதத்துக்கு’ என்று தொடங்கி. ‘மூன்று குணங்களையுமுடைய’ என்று
தொடங்கும் பொருளையுடைய சுலோகம், ‘ஸ்ரீ கீதை, 2 : 45. ‘இந்த உதரத்
தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமானவற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா,
பிள்ளை பேழ்கணியாமல் மண் தின்ன விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா
போலே, எவ்வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு
ஈடாகப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும்
ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் (13, 14. சூ.) இங்கு அநுசந்தேயங்கள்.
இரு வகைப்பட்ட உலகங்களோடு
கூடின சர்வேசுவரனை விளக்கிப் பேச வந்ததாகையாலே, ‘மூன்று குணங்களையுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’ என்கிறபடியே, முக்குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாகவுடையதாய் அவர்களுக்கு நலம் சொல்லப் போந்தது ஆகையாலே, அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும் வேதத்துக்கும்.
1அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், 2‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கையுடையவனுக்கு எவ்வளவு நீர் பிரயோஜனப்படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப்படுகின்றது,’ என்கிறபடியே, ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன்விடாய் தீருகைக்கு வேண்டுவது எடுத்துக்கொள்வானே அல்லது. ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையேயன்றோ அவனுக்கு? அப்படியே, முமுக்ஷூவானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அமிசத்தையன்றோ அறிய வேண்டுவது?
3இனி,அந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும், ‘உத்தரபாகம்’ என்றும்
இனி, பற்றத்தகுந்ததையும், விடத்தக்கவைகளையும் அறுதியிடுவது எது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’ என்று
தொடங்கி.
‘ஆதௌ வேதா: பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை:
நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம் உபரிபரிக்ஷீயதே பூர்வபாக:
ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த
– பகவானே! வேதங்களானவை முதலிலே (வேறொரு பிராமணத்தை
விரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன; மநு முதலான
ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ
உத்தர மீமாம்சைகளோடுங்கூடி (அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம்
செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன; (அந்த வேதத்தில்) கர்ம காண்டம்
எனப்படுகிற பூர்வபாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில் முடிகின்றது; பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத
பாகமானது, தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் ஆகிய இவற்றை
விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
முடிகின்றது; ‘எல்லா வேதங்களாலும் அறியக்கூடியவன் நானே,’ என்று
தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’ என்பது ஸ்ரீரங்க
ராஜஸ்தவம்.
இரண்டு வழிகளாலே பிரிவுண்ணக்
கடவதாய், அதில் பூர்வபாகமானது, ஆராதனத்தில் தன்மையைச் சொல்லியும், சுவர்க்கம் முதலான பேறுகளையும் அவற்றையடைதற்குரிய சாதனம் முதலானவற்றையும் சொல்லியும் அவற்றிலேநின்று பரக்குமதாய் இருக்கும்; இனி, உத்தர பாகமானது, சர்வேசுவரனுடைய சொரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும்.
1 ‘இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில்கட்கும் காரணமாய் இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத் தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன. ‘எங்ஙனே?’ என்னில், 2
‘எதனிடத்திலிருந்து இந்தப் பொருள்கள் உண்டாகின்றனவோ,
‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி
யத்பிரயந்தி அபிஸம்விசந்தி தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்பிரஹ்ம’
என்பது, தைத்திரீய. பிருகு. 1.
‘எல்லா வாக்கியங்களும் ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே,
இங்கு, ‘தத்விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர்மொழியை ‘ததேவ
விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே
தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள் போதரும்; அவ்வாறு போதரவே,
‘மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’ என்ற பொருளும்
கிடைக்குமேயன்றோ? அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப்
பொருள்கட்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக்கின்றனவோ, நாசத்தையடைந்து எதனிடத்தில் இலயப்படுகின்றனவோ, அதனைத் தியானம் பண்ணுவாயாக; அதுதான் பரம்பொருள்,’ என்று கொண்டு, மற்றைப் பொருள்கட்குத் தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத் தியானம்பண்ணத் தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது; 1‘காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக்கடவதன்றோ?
தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை, 2‘சோமபானம் செய்வதற்குரிய சுவேத கேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ என்று ‘சத்’ என்ற சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று, 3 ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே பிரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று பிரஹ்ம சப்தத்தாலே சொல்லி, அந்த பிரஹ்ம சப்தந்தானும் 4அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, 5‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ஆத்துமா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ என்று
‘காரணந்து த்யேய:’ என்பது, அதர்வசிகை.
2. ‘ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத்
ஏகமேவ அத்விதீயம்’
என்பது, சாந்தோக்யம்.
3. ‘பிரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத்’
என்பது, வாஜஸநேயம்.
4. ‘அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘பிரஹ்மம் என்ற சொல்,
வேதம் முதலிய பொருள்களைக் காட்டுமாகையாலே’ என்றபடி.
5. ‘ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத்’ என்பது, ஐதரேயம்.
ஆத்தும சப்தத்தாலே சொல்லி, 1அந்த ஆத்தும சப்தமும் பலவிடங்களிலும் ஒட்டிக்கொள்ளலாயிருக்கையாலே, 2‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது.
3‘ஆனால், பின்னர் 4சத்தும் இல்லை; அசத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும், 5‘சம்பு: ஆகாஸ மத்யே த்யேய:’ என்றும் காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத் தகுந்தவனாயுள்ள தன்மையையும் சிவன் முதலானவர்களுக்கு விதியாநின்றதே; அவை செய்வன என்?’ என்னில், அப்பெயர்களால் 6அவர்கள்
‘ஏகோ ஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா
நேஸாநோ நேமே த்யாவா பிருதிவீ ந நக்ஷத்ராணி’
என்பது, மஹோபநிடதம்.
ந சத் நச அசத் சிவ ஏவ கேவல:’
என்பது , ஸ்வேதாஸ்வதரம். ‘சத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின
சித்தினை. ‘அசத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின அசித்தினை.
5. ‘சம்பு : ஆகாச மத்யே த்யேய:’
என்பது, ஸ்வேதாஸ்வதரம்.
அவர்கள் உத்தேசியர்களாகச் சொல்லப்பட்டார்களேயாகிலும்’ என்றதனால,்
ஸ்வபக்ஷத்தால் அவர்கள் உத்தேசியராகச் சொல்லக்கூடாது என்கை.
‘யாங்ஙனம்?’ எனின், ‘நாராயணாத் பிரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ
ஜாயதே’, ‘த்ரயக்ஷ: சூல பாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும்,
‘நபிரஹ்மாநே ஸாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே
‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது. ‘சதபதத்திலே
அஷ்டமூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூதாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’
என்பது முதலாகத் தொடங்கப்படும் வாக்கியங்களால், நான்முகனால்
படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும்
முதலாயின சிவனுக்குச் சொல்லப்படுதலால், தியானிக்கப்படுதலும் கூடாது,’
என்றபடி. ‘ஆயின், ‘பிரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா: தே ஸர்வே
ஸம்பிரஸூயந்தே’ என்பதனால், விஷ்ணுவுக்கும் பிறப்புச்
சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’
முதலிய விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக, கர்மங்கட்குக்
கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காதவனாயும் தன்
இச்சையாலே அவதரிக்கின்ற சர்வேசுவரனுடைய அவதாரங்களைக்
குறிக்கின்றது. ‘தஸ்யதீரா: என்பது முதலான சுலோகங்கள் இங்கே
அநுசந்தேயங்கள். ‘சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள்
இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல்
வேண்டும்,’ என்க.
உத்தேசியர்களாகச் சொல்லப்பட்டார்களேயாகிலும், சுத்தி குணத்தையுடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அப்பெயர்களும் 1விசேடியமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும்.
2‘சம்பு சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறியது போன்று, நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு சிவன் முதலிய பெயர்களால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேடணமாக்கிக் கூறினாலோ?’ என்னில், 3சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அவற்றை இங்கே சேர்க்கலாம்; நாராயணன் என்னும் பெயர், காரண இடுகுறிப்பெயராகையாலே, வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது.
‘சுத்தி குணத்தையுடையவன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து
யாது?’ என்னில், ‘சிவன், சம்பு முதலிய பெயர்கள், வேறு பொருள்களிலும்
இரு வகை வழக்கிலும் வழங்கி வருகின்றன; ஆதலால், அப்பெயர்களை
இங்குச் சேர்க்கலாம். ‘நாராயணன்’ என்ற பெயர், வேறு பொருள்களுக்குப்
பெயராக வழங்காமையின், அதனை வேறு பொருளுக்குச் சேர்க்க
ஒண்ணாதே!’ என்பது. இப்பெயர், காரண இடுகுறிப் பெயர் என்க. ‘ஆயின்,
சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’
எனின், ‘அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண
காரண இடுகுறிப் பெயர்,’ என்க. இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர்.
‘மோ, பங்கஜம்’ என்னும் பெயர்களைப் போன்று கொள்க.
நன்று; 1சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே கொடுபோய்ச் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில், இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப்பெயர்கள், அவ்வப்பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது, அவற்றிற்கு உரிய நேர்ப்பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ?’ ‘யாங்ஙனம்?’ எனின், ‘இந்திரன் என்றால், இப்பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது, சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும், பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில் ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது, பிராணனாய் இருக்கின்ற சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும், ஆகாசம் என்னும் பெயர், ஐம்பெரும்பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது, அவனளவும் காட்டுகிறாப்போலேயும், சம்பு சிவன் முதலிய பெயர்களும், சர்வேசுவரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க. 2இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும், பிரகாரியான சர்வேசுவரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க.
‘நன்று; சம்பு சிவன் முதலிய பெயர்கள் காரணத்தை நோக்குமிடத்துப் பகவத்
பரம் ஆகலாம்; ‘உமாபதி’ என்பது போன்ற அசாதாரணமான பெயர்களில்
நிர்வாஹம் எப்படி?’ என்ன, ‘இனித்தான்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘பிரகாரவாசி சப்தங்கள்’ என்றது, ‘விசேஷணம்’
அல்லது,‘சரீரம்’ என்ற பொருளைக் காட்டுகின்ற சொற்கள் என்றபடி. பிரகாரி
-விசேடியம்: அல்லது, சரீரி. சிவன் முதலானோர் சர்வேசுவரனுக்குச் சரீரமாய்
உள்ளவர்கள் என்பதனை, ‘ஸபிரஹ்மா ஸசிவ:’ ‘ஸ: அந்தராத் அந்தரம்
பிராவிசத்’, ‘பிரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்’ என்ற வாக்கியங்களால் உணர்தல்
தகும்.
‘நன்று; இனி, 1 ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில், மேலே சர்வேசுவரனைப் புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி, அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது ‘புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததாமத்தனை. அங்ஙனங்கோடற்குக் காரணம் என்?’ என்னில், 2‘எந்தப் பரம்பொருளுக்கு ஒத்த தாயும் மிக்கதாயுமுள்ள பொருள் வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி வைத்து, 3 ‘அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்’ என்னும் போது அறிவில்லாதவனாகச் சொன்னவனாமத்தனை; 4முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை.
‘தத:’ என்ற சொல். மேலே கூறிய புருஷனைக் காட்டுகிறது என்றும்,
‘உத்தரதரம்’ என்றது, அவனுக்கு மேலேயுள்ள சிவனைக் காட்டுகிறது என்றும்
பிற மதத்தினர் பொருள் கூறுவர். ‘தத:’ என்பதற்கு ஹேது பரமாகவும்,
‘உத்தரதரம்’ என்பதற்கு, சர்வ உத்கிருஷ்ட புருஷ பரமாகவும் பொருள் கூற
வேண்டும் என்பது நமது சித்தாந்தம். என்றது, ‘அந்தக் காரணங்களால்,
புருஷோத்தமன்’ என்பதனைத் தெரிவித்தபடி என்றவாறு. தத: – ஆகையால்,
இதனையே அருளிச்செய்கிறார், ‘மேலே சர்வேசுவரனை’ என்று தொடங்கி.
‘புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி’ என்றது, ‘வேதாஹ
மேதம் புருஷம் மஹாந்தம்’ ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’ என்று
வருகின்ற மேல் வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.
2. ‘யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித்’ என்பது சுருதி வாக்கியம்.
3. ‘ததோயத் உத்தரதரம்’ என்று கூறும் வாக்கியத்திற்குப் பிறர் கூறும்
பொருளைத் திருவுள்ளம் பற்றி, ‘அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்
என்னும்போது’ என்று அருளிச்செய்கிறார்.
4. ‘முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை’ என்றது, ‘உஸ்மாத் பரம் நா
பரம் அஸ்தி கிஞ்சித்’ என்ற முன் வாக்கியத்தைப் ‘படிக்காத
அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.
நன்று; 1‘அந்தப் பகவானிடத்தில் உள்ளே இருக்கிற பொருள் உபாசிக்கத் தக்கது,’ என்கிறதோ?’ எனில், அது, வேறு பொருள் உபாசிக்கத் தக்கது என்கிறது அன்று; அந்தப் பகவானைப் போன்ற அவன் குணங்களும் தியானிக்கத் தக்கவை என்பதனைக் கூறியதாம்.
2இனித் தான், உலகத்திற்குக் காரணப் பொருளாய் இருந்து கொண்டு வணங்கத் தக்கதாய் இருப்பது, என்றும் ஒக்க இருக்கும் பொருளாக வேண்டுமே அன்றோ?’ 3அதில் சம்ஹார காலத்தில் ‘நாராயணனே இருந்தான்’ என்று நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவன் ஒருவனுமே உளன் என்று சொல்லி, ‘பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ?’ இனி, ‘மற்றைத் தேவர்களைக்காட்டிலும் அவர்களுக்கு ஓர் உயர்வு உளதோ?’ என்று ஐயப்படாமைக்கு ‘ஆகாயம் பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க, பிரமன் சிவன் என்னும் இவர்களையும் ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது. 4படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப்புனல்
தஸ்மிந்யத் அந்த: தத்உபரஸிதவ்யம்’ இங்கு, ‘அந்த:’ என்பதற்கு, ‘உள்ளே
இருக்கிற வேறொரு தத்துவம்’ என்று பிற மதத்தினர் பொருள் கூறுவர்.
‘உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது சித்தாந்தம்.
சாந்தோக்ய உபநிடதமும் இங்ஙனமே கூறாநிற்கும்; ‘தஹரோஸ்மிந் அந்த:
ஆகாஸ: தஸ்மிந்’ என்று தொடங்கி விரிவாகக் கூறிச் செல்லுதலை ஆண்டுக்
காணல் தகும்.
2. மற்றைத் தேவர்கட்கு அபரத்துவ பூர்வமாக எம்பெருமானுடைய
பரத்துவத்தைக் காட்டுவதற்கு மூன்று ஏதுக்களை அருளிச் செய்கிறார்,
‘இனித்தான்’ என்று தொடங்கி.
3. ‘ஏகோஹவை நாராயண ஆஸீத் நபிரஹ்மா
நேஸாநோ நேமேத்யாவா பிருதிவி ந நக்ஷத்ராணி.’
4. ‘பிரமனை அசேதனத்தோடு சேர்த்துச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘படைத்தலைக் கூறுமிடத்தும்’ என்று தொடங்கி.
திருவாய். 7. 5 : 4.
ஆக, இத்திருவாய்மொழியில் சொல்லுகிற பரத்துவ நிர்ணயத்துக்கு
உபயோகமான பிரமாண உபபத்திகளைத் தெரிவித்த பின்பு,
இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைத் தொகுத்து அருளிச்செய்கிறார்,
‘ஆக, இப்படிகளாலே’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற,
‘இலிங்கத் திட்ட புராணத் தீரும்,’ ‘விளம்பும் ஆறு சமயமும்’ என்ற
பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி ‘மற்றைத் தேவர்கள்பக்கல் உண்டான
பரத்துவ சங்கையையறுத்து’ என்றும், ‘நாயகன் அவனே’ என்றதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய்,
என்றும், ‘உலகோடு உயிர் படைத்தான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்’ என்றும், ‘வீடில் சீர்ப்புகழ்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கல்யாண குணங்கள்
எல்லாவற்றையுமுடையவனாய்’ என்றும், ‘கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது?’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘எல்லாப்பொருள்களையும்
காப்பாற்றுகின்றவனாய்’ என்றும், ‘மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும்
நின்ற வண்ணம் நிற்க’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லாப் பொருள்களுக்கும்
அந்தரியாமியாய்’ என்றும், ‘நாராயணன் அருளே’ என்றதனைக் கடாக்ஷித்து,
‘நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான’ என்றும்,
‘இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘தன்
பெருமைகள் எல்லாவற்றோடுங்கூட’ என்றும் அருளிச்செய்கிறார்.
பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்று ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?
‘ஆக, இப்படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை அறுத்து, எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய் எல்லாப்பொருள்களையும் படைக்கின்றவனாய்க் கல்யாணகுணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய் நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான சர்வேசுவரன் தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திருநகரியிலே வந்து அண்மையிலே இருப்பவன் ஆனான்; அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச்செய்கிறார்.
‘ஒன்றும் தேவும்’ என்ற இத்திருப்பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள்
சொல்லப்படுகிறது, ‘யாங்ஙனம்? எனின், முதல் இரண்டு திருப்பாசுரங்களாலே
காரணத்துவத்தையும், மூன்றாந்திருப்பாசுரத்தாலே இரட்சகத்துவத்தையும்,
நான்காந்திருப்பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும், ஐந்தாம்
பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும், ஆறாந்திருப்பாசுரத்தாலே
நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும், ஏழாந்திருப்பாசுரத்தில்
‘ஆடுபுட்கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற்சொன்ன
உபய விபூதி யோகத்தையும், எட்டாந்திருப்பாசுரத்தாலே நாராயண
சப்தந்தன்னையும், ஒன்பதாந்திருப்பாசுரத்தாலே அவன் அடியார்க்கு
அடிமைப்பட்டிருத்தலையும், பத்தாந்திருப்பாசுரத்தாலே கைங்கரியத்தையும்
அருளிச்செய்திருத்தலால்,’ என்க.
1ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக்குரு கூரதனுள்
நின்ற ஆதிப் பிரான்நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
பொ-ரை : ‘தேவர்களும் தேவர்கள் தங்கியிருக்கின்ற உலகங்களும் மக்கள் முதலான உயிர்களும் மஹத்து முதலான தத்துவங்களும் மற்றும் எல்லாப் பொருள்களும் ஒன்றும் இல்லாத அந்தக் காலத்தில் நான்கு முகங்களையுடைய பிரமனோடுகூடத் தேவர்களையும் அவர்கள் தங்கியிருக்கின்ற உலகங்களையும் மற்றை உயிர்க்கூட்டங்களையும் படைத்தவன்; மணிமாடங்கள் மலைகளைப்போன்று உயர்ந்து விளங்குகின்ற திருக்குருகூரில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வங்களைத் தேடுகின்றீர்களே!’ என்கிறார்.
வி-கு : ‘மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று’ என்று கூட்டுக. அன்றிக்கே, ஒன்றும் என்பதனைப் பெயரெச்சமாகக் கொண்டு தேவும் முதலான பொருள்கட்கு அடைமொழியாக்கலுமாம். ‘உயிர் படைத்தானாகிய ஆதிப்பிரான்’ என்க. நாடுதிர் – விரும்புகின்றீர்கள் எனலுமாம்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு : முதற்பாட்டில், 1‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்ற காரண வாக்கியப் பொருளை நினைந்து
கொண்டு, எல்லாப்பொருள்களையும் படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழியக் குழந்தை வளராதாப் போலே தன் சந்நிதி ஒழிய இவை வாழமாட்டா என்று பார்த்துத் திருநகரியிலே மிக எளியனாய் நிற்க, ‘வேறே அடையக்கூடிய பொருளும் ஒன்று உண்டு,’ என்று தேடித் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று – தேவசாதியும் அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களும், மனிதர்கள் முதலான உயிர்களும், அண்டத்திற்குக் காரணமான மகத்து முதலான தத்துவங்களும் இவை ஒன்றும் இல்லாத அன்று’ என்னலுமாம்; 1அங்ஙன் அன்றிக்கே, ‘காரியத்துக்குக் காரணத்திலே இலயமாகச் சொல்லுகையாலே, காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம். ‘சத்து ஒன்றே இருந்தது’ என்னக்கடவது அன்றோ? நான்முகன்தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – பிரமனோடுகூடத் தேவசாதியையும், அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் உயிர்களின் கூட்டத்தையும் படைத்தான்.
அன்றிக்கே, ‘பதினான்கு உலகங்களையும் படைத்த பிரமனோடு, அவனாலே படைக்கப்பட்டவர்களாய் நித்திய சிருஷ்டிக்குக் கடவரான 2பிரஜாபதிகள் பதின்ம
3சர்வேசுவரன்
‘பிரமன்’ என்னாது, ‘நான்முகன்’ என்கையாலே, ரசோக்தியாகச்
‘சர்வேசுவரன்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கு,
‘யத் தத் பத்மம் அபூத் அபூர்வம் தத்ர பிரஹ்மா வியஜாயத
பிரஹ்மணஸ் சாபி ஸம்புத: சிவ இதி அவதார்யதாம்
சிவாத் ஸ்கந்த: சம்பபூவ ஏதத்சிருஷ்டி சதுஷ்டயம்’
என்ற பகுதி நினைத்தல் தகும்.
நான்முகனைப் படைத்தான்; நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்: ஐம்முகன் அறுமுகனைப் படைத்தான்; ஆக இதுதான் பல முகமாயிற்றுக்காணும். 1நாட்டார் சிவனுக்கு உயர்வுகளைச் சொல்லி மயங்காநிற்கவும், இவர் அவன்பக்கல் ஒன்றும் காணாமையாலே, திருநாபிக்கமலத்தில் நேரே பிறந்து அதனாலே உண்டான ஏற்றத்தையுடையவனாகையாலே, பிரமனை (முதலாக) எடுத்துச் சொல்லி, சிவனைத் தேவகூட்டத்திலே சேர்த்துப் பேசுகிறார்.
2‘சம்ஹாரத்தில் மகத்து முதலானவைகள் அளவும் சொன்னார் படைப்பில் பிரமன் தொடக்கமாகச் சொன்னார்; இதற்குக் கருத்து என்?’ என்னில், மகத்து முதலான தத்துவங்களிலே பரத்துவ சங்கை பண்ணுவார் இலர்; அறிவில்லாத மக்களாய் இருப்பவர்கள் பிரமன் முதலாயினார் பக்கல் பரத்துவ சங்கை பண்ணுவார்கள்; அதற்காக அவ்விடமே பிடித்துக் கழிக்கிறார். ‘நன்று; நித்தியமான உயிர்களைப் ‘படைத்தான்’ என்றல் என்?’ எனின், போக மோக்ஷங்கள் விளைத்துக்கொள்ளுகைக்குக் 3கரணகளேபரங்களைக் கொடுத்தலைத் தெரிவித்தபடி.
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூரதனுள் நின்ற – இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கையன்றிக்கே, மலைகளைக் கொடுவந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய், மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியையுடைத்தான திருநகரியிலே நின்ற. 4 ‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும்
ஆசையால் பல நாள் குகனோடுகூட அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே, நாம் கொடுத்த கரணங்களைக்கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ? அன்றிக்கே, ‘நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்காதொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி. 1அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷபூதனானவன் நின்ற நிலை; இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை.
ஆதிப்பிரான் நிற்க – இப்படி உங்கள் பக்கல் ஆசையாலே திருநகரியிலே நித்தியவாசம் செய்கிற 2இவனை விட்டு மற்றைத் தெய்வம் நாடுதிரே – தேடித் திரியுமது ஒழியப் பற்றத் தகுந்தவர்கள் கிடையார். 3‘எவன், வசுதேவன் புத்திரனான ஸ்ரீ கிருஷ்ணனை விட்டு வேறு தேவனை வணங்குகிறானோ, அந்த மூடன், நீர் வேட்கையுடைய ஒருவன் புத்தியில்லாதவனாய்க் கங்கையின் கரையிலே கிணறு தோண்டுகின்றான் என்பவனோடு ஒப்பன்,’ என்கிறபடியே, ‘நீர் வேட்கையுடைய ஒருவன், கங்கை பெருகி ஓடாநிற்க அதிலே அள்ளிக் குடித்துத் தன் விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே, 4அடையத் தக்கவனுமாய் எளியனுமாய்
ஆதிப்பிரான்’ என்றதனை நோக்கி, ‘அடையத்தக்கவனுமாய்’ என்றும்,
‘திருக்குருகூரதனுள்’ என்றதனை நோக்கி, ‘எளியனுமாய்’ என்றும்,
‘யாதுமில்லா அன்று உயிர் படைத்தான்’ என்றதனை நோக்கி, ‘எளிதில்
ஆராதிக்கக் கூடியவனுமாய்’ என்றும், ‘நின்ற’ என்றதனை நோக்கி, ‘நல்ல
சுவபாவத்தையுடையனுமான’ என்றும் அருளிச்செய்கிறார். இதற்கு
மறுதலையாக ‘மற்றைத் தெய்வம் நாடுதிரே’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘அடையத்தகாதவராய்’ என்று தொடங்கி.
எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய் நல்நெறியையுடையவனுமான இவனை விட்டு, அடையத் தகாதவராய் அரியராய் அரிதில் ஆராதிக்கக் கூடியவராய்த் தீ நெறியையுடையராய், வருந்தி ஆராதித்தாலும் 1சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற 2திருவில்லாத்தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
. ‘நாட்டினான் தெய்வம் எங்கும், நல்லதோர் அருள்தன்னாலே
காட்டினான் திருவ ரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;
கேட்டிரே நம்பு மீர்காள்! கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே,’
திருமாலை, 10. சேட்டை – மூதேவி.
2. ‘கல்லா தவரிலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒருதெய்வம் யானிலேன் ;- பொல்லாத
தேவரைத் தேவரல் லாரைத் திருவில்லாத்
தேவரைத் தேறேன்மின் தேவு.’
நான்முகன் திருவந். 53.
சம்சாரம் இருந்து அகற்ற பிரார்த்தித்தார்
சம்சாரிகளை திருத்த முயன்றார் முடியவில்லை
அநர்த்தம் கண்டு இருக்க முடியவில்லை
கூட்டிக் கொள் என்கிறார்
பரத்வம் அறியாமல் இழந்து போகிறார்கள்
இதில் பரத்வத்தை உபதேசிக்கிறார்
பெரிய பிரவேசம்
பரத்வே பரத்வம் -உய ர் வற
விபத்திலே பரத்வம் -திண்ணம் வீடு
அரவது அரவணை மேல் -பரத்வம்
பரத்வம் அருளியவற்றில் இது மிக சிறந்த திருவாய்மொழி -அர்ச்சையில் பரத்வம் என்பதால்
ஓரே நிலத்தில் பாதி செழித்து பாதி தரிசாக இருக்க –
நித்ய சூரிகள் பகவத அனுபவமே யாத்ரையாக செல்லா நிற்க
இதர தேவதைகள் உண்டாக்கப்பட்டவர்கள்
இவன் ஒருவனே பரதவன் உபதேசிக்க பார்க்கிறார்
சங்கை தாமே எழுப்பிக் கொண்டு
சகல வேதாந்த ஞானம் இருந்தும் இதர தேவதைகள் உபதேசிக்கிறார்களே
நாராயணனே பர தேவதை சாஸ்திரம் நேராக சொல்லாமல் படிப்படியாக சொல்ல
காரணம் து தேயக
சம்பு கு தேயக
த்யானம் செய்ய காரணம்
ஏகம் சத் ஆத்மா பிரமம் -ஆறு விதமாக சொல்லி –
சங்கைக்கு சுலபமான பதில் ஆறும் ஒரே வஸ்து
நாராயண ஏக வஸ்து
அவனையே -சத் ஆத்மா சம்பு சிவா பிரஜாபதி போன்ற
காரண வாக்யங்களை ஒருங்க விட்டு வைத்தன
உபாஸ்யம் -ஜகத் காரணத்தை –
இமானி பூதானி ஜாயந்தே -தத் ப்ரஹ்ம
தாது ப்ரஹ்ம அது பிரம்மம்
அப்பொழுது தான் நன்றாக அறிந்து உபாசிக்க முடியும்
எவன் இடம் அனைத்தும் உண்டாகி காக்கப்பட்டு எவன் இடம் லயிக்கின்றவோ அது பிரமம்
அதை நன்றாக அறிந்து உபாசிக்க வேண்டும்
ப்ருகு வல்லி -தகப்பனார் இடம் -வருணன் -கேட்ட பிருகு பிள்ளை
வியாசர் பராசரர் இடம் கேட்டது போலே
ப்ருகு வருணன் இடம் உபதேசம் கேட்க –
பிரமத்தை அறிவியும் உபதேசம் செய்யும் கேட்க
இந்த வார்த்தை அருளி
அல்லாத தத்வங்கள் த்யானிக்க கூடாது
ஜகத் காரண வஸ்துவை மட்டுமே த்யானிக்க வேண்டும் என்னக் கடவது இ றே
அந்த ஏக வஸ்து சத் சப்தத்தால்
உத்தாரகர் இடம் ச்வேதகேது போய் கேட்க
முதலில் சத் இருக்க
அக்ரே சத் ஏவ சோமய குழந்தாய் -சௌம்யமானவானே
சாகாரத்திலே -சாகை -ஆத்மா வாக அக்ரே இருந்தது
அதுவும் பல இடங்களில் ஜீவாத்மா பரமாத்வா
ஏக மேவ பிரமம் சப்தத்தால் சொல்லி
இதுவும் பலவற்றை சொல்லுமே
ஏக நாராயண ஆஸீத் சொல்லி
ந சத் ந அசத் சிவன் மட்டும் இருந்தான்
சம்பு ஆகாசம் மத்தில் த்யானம் செய்
ருத்ரதிகளுக்கு காரணத்வமும் த்யாநிகக் தகுந்ததும் சொல்ல
அது அவர்களை உத்தேசித்து சொல் லிற்று ஆகிலும்
சாமாணாதி கரணம் -சரீரம் ஆத்மா பரமாத்மா -அனைத்தும் கேசவன் குறிக்குமே அந்தர்யாமி பவத்தாலே
தலை சுத்தி மூக்கை தொடாமல்
பிரம சூத்தரத்தில் -விளக்கி
ஜைமினி சொன்னதை வியாசர் காட்டி ஆர்ஜவம் காணலாமே
சாஷாத்ஆக அந்த சப்தங்கள் அவனை குறிக்கும்
அக்னி சரீரம் -ஜீவாத்மா பரமாத்மா
அகரம் நயதி இதி அக்னி முன்னாள் நடத்திக் கொண்டு போகும் பகவானை குறிக்கும்
இந்த்ரன் –
இதி ஐஸ்வர்யம் -பகவானைக் குறிக்கும்
சிவா -மங்களம் சம்பு
சிஷ்யன் வார்த்தை
நம்பிள்ளை சொன்னதை நஞ்சீயர் பல இடங்களில் காட்டி
அரக்கரால் ஆடு அழைப்பார் இல்லை
கத்துமாம் கத்தவும் ஆள் இல்லை
நம்பிள்ளை ஆடு வெற்றி
ஆடு புள் கொ டி வெற்றி புள் கொடி
அரக்கரில் வென்றோம் என்று சொல்வார் இல்லை தோற்றோம் என்றாராம்
சிவ-சுத்தி பத யோகம்
சம்பு -சுகம் கொடுப்பவன்
இவை எல்லாம் நாராயண சப்தம் குறிக்குமே
வழி ஒரு இடம் காட்டி -எல்லா இடங்களும் காட்டும் படி ஆகுமே
நாராயண சப்தமும் அவர்களைக் குறிக்க சொல்லுவார்களே
பாணினி சூத்திரம் -உண்டே
நார -அயன-இரண்டும் சேர்ந்து – நாராயண சப்தம் -ஒன்றையே குறிக்கும் யோக ரூடி
சூர்பணகை முறம் போன்ற நகம் உடையள் -ராவணன் தங்கை மட்டுமே குறிக்குமே
அணைத்து ராஷசிகளுக்கும் இப்படி நகம் இருந்தாலும்
ஸ்வேதா
புண்டரீகாட்ஷன் -தாமரைக் கண்ணன் -அரைக் கண்ணன்
கிருஷ்ணா பெயர் வைக்க
யோகம் காரணம் பெயர்
ரூடி -இடு குறி பெயர் மண் மரம் கல் மணல் போல்வன
யோக ரூடி பங்கஜம்
சேற்றில் இருந்து உண்டான
அல்லி மலர் குமுதம் மலர் புழு பூச்சி தாமரை உண்டாக
நார அயன யோக சப்தம் நாராயன என்றே வரும் –
அதுவே காரணத்தையும் இவன் ஒருவனையும் குறிக்க யோக ரூடி நாராயண
வியாகரண சாஸ்திரம் உண்டே
குணயோகத்தால் சிவா சம்பு இங்கே சேர்க்கலாம்
இது யோக ரூடி என்பதால் வேறு ஒன்றில் சேர்க்க மாட்டாதே
அப்பைய தீஷிதர்
ஸ்ரீ கண்ட பாஷ்யம் அருளி ராமானுஜர் பின் காலத்தில் எழுதி திருட்டு தனமாக ஸ்ரீ பாஷ்யம் போலே
நாராயண பரோ ஜ்யோதி நாராயண பர ப்ரஹ்ம சப்தம் உண்டே ஒன்றும் செய்ய முடியவில்லை
சுகம் தருபவன் சம்பு நாராயணன் சொல்லலாமே
பிராண ஆகாச சப்தம் அவன் வரைக்கும் போவது போலே
இந்த்ரன் -ஆக்கப் பட்டவன்
இதி பரம ஐஸ்வர்ய
பிராண பூதனான பகவானை குறிக்கும்
பிரகார வாசி சப்தங்கள் –
சரீரம் பிரகாரம்
ஆத்மா பிரகாரி
இவன் யார் சரீரம் தானே காட்டும்
அது போலே சிவ சம்பு சப்தங்கள்
உத்தரதரம் –
அதுக்கு மேலே சொன்னது
கீழே சர்வேஸ்வரனை சொல்லி
மிகவும் மேல் பட்டவனை –
நாட்டில் உள்ள புருஷன் போலே இல்லை புருஷோத்தமன் என்றே அர்த்தம்
மன்னு புகழ் கோசலை தன மணி வயிறு -தானான தன்மை தாலாட்டு
கௌசல்யை தன மணி வயிறு என்றதால் கௌசல்யை பாவம்
கௌசல்யை யான எனது வயிறு வியாக்யானம்
வாய்த்தவனே கண்ணனுக்கு மாணிக்கம் இடை கட்டி யசோதை சொன்ன சொல் பெரியாழ்வார்
உத்தரதரம் -அவனையே குறிக்க இந்த திருஷ்டாந்தம்
எஸ்மா பரம் ந அபரம் -இவனைக் காட்டிலும் மேம்பட்டவன் இல்லை
இதுக்கு மேல் உண்டு எனபது அக்னஞன் வார்த்தை
தஸ்மின் -யத் அந்தக – தத் உபாசிக்க வேண்டும் –
உள்ளுக்குள் ப்ரஹ்மம் உண்டு சொல்லி –
நாராயணன் பிரமத்துக்குள் ருத்ரன் உண்டு உபாசிக்க சொல்லி
அவனை விட மேம்பட்டவன் இல்லையே
உள்ளுக்குள் இருப்பவன் யார் அவனாக இருக்க முடியாதே
அவனுடைய கல்யாண குணங்கள் அவனுக்குள் உண்டே
32 வித்யைகள் உபாசனம் பண்ண சொல்லி –
அவனோபாதி அவன் குணங்களும் உபாசிக்க
நித்தியமான காரணம்
சம்ஹாரத்தில் சிவனும் இல்லையே
ஏ கோ கவை நாராயண ஆஸீத் -ந பிரம்மா ந சிவ -பூத பஞ்சகங்களும் இல்லை
சமமாக இவர்களையும் சொல்லி
இருந்தவன் நாராயணன் ஒருவனே என்பதால் இவன் ஒருவனே காரணம்
அவர்களை இல்லை என்பதால்
இல்லை என்ட்டதால் உத்கர்ஷம் உண்டோ
பிரதிவி நட்ஷத்ரங்களும் இல்லை உடனே சொல்லி
நான்முகனை பண்ணி சிருஷ்டியிலும் தாமாரை சொல்லி சமமாக சொல்லி
இப்படிகளால் இதர தேவாத பரத்வத்தை அறுத்து
சர்வ ஸ்மாத் பரண்
சர்வ ஸ்ரஷ்ட
சர்வ ரஷகன்
சர்வ அந்தர்யாமி
கண்ணுக்கு விஷயமாக சந்நிஹிதனாகி
முதல் பாட்டில் காரண வாக்கியம் அனுசந்தித்து கொண்டு
ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரன்
தாயார் குழந்தை கண்ணோட்டத்தில் வாழ
திருநகரி யில் சந்நிஹிதனாக
திரிகிரிகிறீர்களே ஷேபிக்கிறார்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் –யாதும் ஒன்றும் இல்லாத
அனைத்தும் ஒன்றிக் கிடந்த காலத்தில் என்னவுமாம்
மதிள்களால் சூழப் பட்ட
நிற்கிற நிலையிலே ஆதிப்பிரான் என்று உணரலாமே
தேவ ஜாதி
இருப்பிடமான உலகம்
-மற்றும் மகான் அகங்காரம் போல்வன
ஒன்றும் இல்லாத அன்று
காரணத்துக்கு கார்யம் லயம் என்பதால்
plastic மக்காமல் இருக்க -கூடாதே லயத்தில் கொண்டு விட முடியவில்லையே
காரண பூதரான தனது பக்கம் ஒன்றி விட்ட
சதேமேவ சத் ஒன்றே இருக்க
நான்முகன் படைத்தான்
அல்லாதார் கைமுதல் கண்டு ரஷிக்க –
ஒன்றுமே இல்லாதவனுக்கு ஈகை
வெறுமையே பச்சையாக கொண்டு ரஷிப்பவன் சர்வேஸ்வரன்
நான் முகன் தன்னோடு தேவ ஜாதி உலகம் சேதனன் வர்க்கம் சிருஷ்டித்து
பஞ்சமுகன் ருத்ரன்
ஷண்முகன் ஆறுமுகம்
இது தான் பஹூ முகமாக சிருஷ்டி
நாட்டார் ருத்ரனுக்கு உத்கர்ஷம் சொல்லி பிரமியா நிற்க
கமலத்து -இடைவெளி இன்றி அவனாலே படைக்கப் பட்டதால் நான்முகன் முதலில் சொல்லி
பின்பு ருத்ரனை சொல்லி
தேவர் சப்தத்தால் ருத்ரனை கூடிக் கொள்கிறார்
மற்றும் -மகத் வரை
அனைத்தையும்
அடக்கி மகாதிகளில் பரத்வம் பண்ணுவார் இல்லையே
முதலாவார் மூவரே பொய்கை ஆழ்வார்
நல் ல வேளை மூவர்
இரண்டு பெயரை கழித்தால் போதுமே
சது ர்தச புவனங்களில் உள்ள பதார்ர்தன்களை ஸ்ரஷ்டாவோடு போக ஸ்தானம் குடி மக்கள் வாசி அற படைத்தான்
போக மோஷங்களை பெற கரண களேபரங்கள் கொடுக்க
இப்படி சிருஷ்டித்தவன்
மணி மாடம் ஒக்கம் மிகு திரு நகரி
ஆசயா யதிவா ராமாக புநவா -சுமந்த்ரன் வருவாரா என்று நின்றது போலே
இங்கே இவன் காத்து இருக்கிறன் ஆசையினால் ஜீவாத்மாக்கள் தம் இடம் வர சொல்வார்களா என்று
விலக்காது ஒழிவார்களோ
ந ந்மேயம் சொல்லாமல்
வளைந்து கிட்டிக் கொண்டால் விலக்காமல்
காலம் எதிர்பார்த்தி
சேஷி பெற செஷபூதன் நின்றான் அங்கு
சேஷி நிற்கிறான் சேஷ பூதர்களை
ஆதிப்பிரான் இப்படி ஆசை உடன் நித்யவாசம் பண்ணும் இவரை விட்டு
விமுகர் புத்திரன் ஆனாலும் முகம் பார்க்குமா தாய் போலே
கும்பீடு கொள்வார்
மற்றைத் தெய்வம் நாடுகிறீர்கள்
நீர் நாடுகிறீர்கள்
தேடி தேடி திரியலாம் தேவதைகள் இல்லை
வாசுதேவன் அந்ய -தேவதை இல்லையே
கங்கை கரையில் தாகம் கொண்டவன் அத்தை விட்டு
கரையில் கடப்பாரை கொண்டு கிணறு தோண்டி நாக்கு நனைக்க
சுலபன் வேற
பெருகி வரும் நீர்
பாபங்களும் போகுமே
பிராப்தன் சுலபன் சுசீலன் இவனை விட்டு
ஆராதனை கஷ்டம் மட்டும் இல்லை மற்றவர் பலனும் கொடுக்க
சேட்டை தனதுய் மடி அகத்து செல்வ்சம் பார்ப்பது போலே
திருவில்லா தேவர் தேடி திரிகிறீர்களே
பேணிலும் வரம் தரா மிடுக்கு இல்லாத தேவர்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply