மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.
பொ-ரை : ‘மேகலையாலே குறைவில்லாத மெலிந்திருக்கின்ற அகன்ற அல்குலையுடைய இன்பத்திற்குத் தக்கவளான உஷையினது புகழையுடைய தந்தையாகிய, வெற்றி பொருந்திய பாணாசுரனுடைய தோள்களைத் துணித்து, ஆதிசேஷ சயனத்தின்மேலே தூங்குகின்றவனைப் போன்று உலகமெல்லாம் நன்மையிலே பொருந்தும்படி யோக நித்திரையைச் செய்கின்ற சர்வேசுவரன் விரும்பாத இந்தச் சரீரத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு : மேகலை – ஓர் ஆபரணம்; இடையிலே அணிந்து கொள்வது; ஏழு அல்லது, எட்டுக் கோவையால் ஆயது. அன்றிப் புடைவையுமாம். ‘குறையில்லாப் போகமகள்’ என்றும், ‘மெலிவுற்ற போகமகள்’ என்றும் தனித்தனியே கூட்டுக. ‘தந்தையாகிய வாணன்’ என்க. புகழையும் விறலையுமுடைய வாணன். ‘துணித்து யோகணைவான்’ எனக் கூட்டுக.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘அடியார்க்கு விரோதியான வாணனை அழியச்செய்து, எல்லாரும் உய்வு பெறும் வழியை எண்ணுமவன் விரும்பாத உடம்புகொண்டு காரியம் என்?’ என்கிறாள்.
மேகலையால் குறை இல்லா மகள் – 2‘உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும்போலேகாண்’ என்று அருளிச்செய்வராம் வங்கிப்புரத்து நம்பி. மெலிவுற்ற மகள் – மென்மைத்தன்மையுடையளாய் உள்ளவள். என்றது, ‘பிரிந்து தனியிருக்கப் பொறாதவள்’ என்றபடி. அகல் அல்குல் மகள் – அகன்ற அல்குலையுடையளாய் இருக்கை. போக மகள் – 3போகத்திற்குத் தக்கவளான பெண்பிள்ளை. புகழ்த்தந்தை – உஷைக்குத் தந்தையான வார்த்தைப்பாட்டால் உள்ள புகழையுடையவன். அன்றிக்கே, ‘சௌரியம் வீரியம் முதலியவைகளால் உள்ள பிரசித்தியையுடையவன்’ என்னுதல். விறல் வாணன் – மிடுக்கையுடைய வாணன். ஒரு தேவதையின் சந்நிதியிலே இருந்தால் சத்துவகுணம் தலையெடுத்து இருக்கக் கூடியதாய் இருக்குமே
அன்றோ எல்லோர்க்கும்? அவ்வளவிலும் 1யுத்த கண்டூதி மிக்கு, ‘எனக்கு எதிரியாய் இருப்பான் ஒருவனைக் காட்டவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ளும்படியான பெருமிடுக்கையுடையவனாதலின், ‘விறல் வாணன்’ என்கிறது. புயம் துணித்து – ‘இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்துவிட்டான். தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும், ‘உஷை தந்தை அற்றவள் ஆகவொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையைமாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது.
நாகமிசைத் துயில்வான்போல் – வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் 2போகத்தில் பொருந்திற்று. ‘‘துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் – ‘இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து, ‘உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக்கொண்டு யோக நித்திரை செய்யாநிற்பான். கவராத உடம்பினால் குறை இலம் – இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க, நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? 3அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது. அவனுக்கு உறுப்பாகவே அன்றோ 4இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?அவன்தான் தன் உடம்பு ‘பத்தர்களுக்காகவே’ என்று இருக்குமாறு போன்று இறைவனுக்காகக் கண்ட உடம்பாயிற்று இது.
ஆக, ‘மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’
என்ற அடைமொழிகளால், ‘ஒப்பனையழகாலும், ஆத்தும குணத்தாலும்,
பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.
உடம்பால் என்ன பயன்
உஷை மேகலையால் குறை இன்றி -இன்பம் தரும் போக மகள் -வாணன் புத்ரி
புஜம் அறுத்து
உலகு எல்லாம் ரஷிக்க யோகு செய்பவன்
புகழ் தந்தை உஷை தந்தை
விறல் மிடுக்கு கொண்ட வாணன்
புயம் துணிந்து கை விஞ்சினான் என்று கையை அறுத்தான்
தலையை அறுக்க கூடிய குற்றம் செய்தாலும் -உயிர் நிறுத்தி வைத்து
நாக மிசை -புயம் துணிந்து போகம் சுகம் பாம்பு துயில்வான் போலே
கரை சேர்க்க சிந்தை செய்து யோக நித்தரை செய்து இருக்கும்
அவனுக்காகா கண்ட உடம்பு
அவனுக்கு சரீரம்
அவனுக்கு உடல் என்பதால் இவள் விரும்புவது
தன்னுடைய உடம்பை அடியவருக்கு என்று நினைக்க
இ வரும் அவனுக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply