திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான்,
யான்எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை;
நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய்
நின்னை அறிந்துஅறிந்தே.

    பொ-ரை : ‘என்னுடைய சரீரத்தினுள்ளும் உயிருக்குள்ளும் அவையல்லாத இந்திரியங்களுக்குள்ளும் ஒன்றையும் விடாமல் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் அந்தராத்துமாவாய் நிற்கின்றவனே! உன்னை அறிந்திருந்தும், இனிமையான வடிவையுடைய உன்னைக் காணும்பொருட்டுப் பலகாலும் பார்த்து, யான் என் மனத்திற்குள்ளே ஆசைப்படாநின்றேன்; அறிவு இல்லாமையாலே,’ என்கிறார்.

    வி-கு : ‘நின்னை அறிந்து அறிந்து உன்னைக் காண்பான் நோக்கி நோக்கி எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன்; என்?’ எனில், ஞானம் இல்லாமையாலே,’ என முடிக்க. ‘நாள்தோறும் நின்றாய்’ என்க.

நாள்தோறும் – எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘என் பக்கலிலே எப்பொழுதும் உடனிருப்பவனாய் இருந்தே உன்னைக் காட்டாதொழிகிறது நீ நினையாமை என்று அறிந்து வைத்தே, காண ஆசைப்படாநின்றேன்; அதற்குக் காரணம், என் அறிவு கேடு,’ என்கிறார்.

    நோக்கி நோக்கி – அடுத்து அடுத்து அவன் வரும் திசையையே பார்ப்பார் ஆயிற்று. ‘இப்படிப்பார்ப்பது என்ன பிரயோசனத்துக்கு?’ என்னில், உன்னைக் காண்பான் – உன்னைக் காண வேண்டும் என்னும் நசையாலே. யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் – என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார், ‘எனது ஆவியுள்ளே’ என்கிறார். ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ? ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும் பொருளைக் காட்டாநின்றது. ‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில், ஞானம் இல்லை – இது இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற இது அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில், என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் – 2உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும், பெற இருக்கிற ஆத்துமாவிலும், இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய். 3கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.நின்னை அறிந்து அறிந்து – ‘இதன் 1பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது, நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது, தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது, ‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது, எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது; இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ? 2அன்றிக்கே, ‘நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவுபட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல்.

. இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘நாராயணனே’ என்றதனை நோக்கிச்
‘சம்பந்தமுடையனாவது’ என்றும், ‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,
‘முற்றறிவினனாவது’ என்றும், ‘துப்பனே’ என்றதனை நோக்கி,
‘ஆற்றலையுடையனாவது’ என்றும், ‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,
‘நீர்மையுடையனாவது’ என்றும், ‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை
நோக்கி, ‘உடனிருத்தலையுடையனாவது’ என்றும் அருளிச்செய்கிறார்.

உன்னை காட்ட வேண்டும் என்று நீ நினைக்க வேண்டுமே
அறிவு கேடு
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் –
உன்னை நன்கு அறிந்தும் –
நாக்கை நீட்டி சபல புத்தியால்
அடுத்து அடுத்து வரும் திகை நோக்கி
காண நசையால்
யான் -சபலத்தால் நாக்கு நீட்டி -வாயை வைப்பது நாக்கு நீட்டுவது
ஹிருதயத்தில் ஆசைபடுவதை
ஞானம் இன்றி அறிவு கேடன்
இவ்விஷயத்தை காண நீ தானே நினைக்க வேண்டும்
உன்னை பெருகைக்கு தடையான சரீரத்திலும் ஆத்மாவில்
கரணங்களிலும்
கிழிச் சீரையில் தனம் இருக்க புறங்கால் இட்டு தேட
நின்னை அறிந்து அறிந்து
அனைத்தையும் உடையவன்
ரஷணம் அவனே பிராப்தன் சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்பதை அறிந்து அறிந்து
கிருபை உடையவன் -சதா சன்னிதன் ஆக இருந்தும்
செய்ய நினையாமையே
நான் பிராப்தன் நீ அப்ராப்தன் இல்லை சோழ விலை
நான் சர்வஞ்ஞன் நீ அஞ்ஞான் இல்லை
நான் சர்வ சக்தி
நான் விபு
உடையவன் உடைமை
அறிந்து கொண்டு ஆறி இருக்காமல் அறிவு கேட்டால்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading