ஈடு : 1மேல் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, அதனை அடுத்த இத்திருவாய்மொழி, ‘தீர்ப்பாரையாம் இனி’யாய் இருப்பதே! எம்பார், மேல் திருவாய்மொழியையும் இத்திருவாய்மொழியையும் அருளிச் செய்து, ‘மோருள்ளதனையும் சோறேயோ? மேல் திருவாய்மொழியில் அப்படிக் கரை கடந்ததான பிரீதியோடே சென்றது; இத்திருவாய்மொழியில் இப்படி மயக்கத்தோடே தலைக்கட்டிற்று; இதற்கு இருந்து அடைவுசொல்லுவேனோ? இதற்கு அசங்கதிரேவசங்கதி,’ என்று அருளிச்செய்வாராம்.
2‘ஸ்ரீ பரதாழ்வான், ‘பெருமாளுடைய மகுடாபிஷேகத்திற்கு நம்மை அழைத்து வந்தது ஆகையால், அவரைத்
திருமுடி சூட்டி அடிமை செய்யக்கடவோம்,’ என்று பாரித்துக்கொண்டு வர, கைகேயி, ‘ராஜந் என்று உனக்கு முடி வாங்கி வைத்தேன்,’ என்ற போது அவன் துடித்தாற்போலே, இவரும் சரீரத்தின் தோஷத்தை நினைத்து, அஞ்சித் துடித்தாராயிற்று, 1‘பொய்ந்நின்ற ஞானத்’திலே; ‘நான் அவர் அடியேன் அன்றோ? அவர் என் சொல்லை மறுப்பரோ? இப்போதே மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்டுகிறேன்,’ என்று திருச்சித்திரகூடத்திலே கிட்டுமளவும் பிறந்த தரிப்புப்போலே ஆயிற்று திருவாசிரியத்தில் பிறந்த தரிப்பு; பின்பு, பதினான்கு ஆண்டு கூடி ஆசை வளர்ந்தாற்போலேயாயிற்று. திருவந்தாதியில் ஆசை பெருகினபடி; 2‘என் நெஞ்சினார்தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்’, 3‘முயற்சி சுமந்து எழுந்து’ என்று கூறலாம்படி அன்றோ ஆசை பெருகினபடி? மீண்டு எழுந்தருளித் திருமுடி சூட்டிக்கொண்ட பின்னர் அவன் எண்ணம் தலைக்கட்டினாற்போலே ஆயிற்றுத் திருவாய்மொழியில் இவரை அனுபவிப்பித்தபடி.
4மேல் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்ற திருவாய்மொழியில் பிறந்த கரை கடந்ததான பிரீதியானது மானச அனுபவ மாத்திரமாய்ப் புறக்கரணங்களால் அனுபவிக்க முடியாமையாலே, எத்தனையேனும் உயர ஏறியது தகர விழுகைக்குக் காரணம் ஆமாறுபோலே மோஹத்துக்கு உறுப்பாய்த் தலைக்கட்டிற்று.
இப்படி இருக்கிற தம் நிலையை, சர்வேசுவரனோடே கலந்து பிரிந்து நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி, தன் ஆற்றாமையாலே மோஹித்துக் கிடக்க, இவள் நிலையை நினைத்த உறவினர்களும் மோஹித்து, ‘இது வேறு தெய்வங்களாலே வந்ததோ!’ என்று வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையாரைக் கொண்டு புகுந்து பரிஹாரம் செய்யப் புக, இவள் தன்மை அறிந்த தோழியானவள், ‘‘நீங்கள் செய்வனவாக
நினைப்பவை இவள் நோவிற்குப் பரிஹாரம் அல்ல; அழிவிற்கே காரணமாமித்தனை; ஆன பின்பு, 1‘பகவானுடைய நாமங்களைச் சொல்லுவதாலும் பாகவத பாத தூளியாலும் பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிற அவள் பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்.
2இவர்தாம், ‘உம்மைப் பிரிந்தால் சீதை இல்லாதவள் ஆவாள்; அப்படியே, நானும் இல்லாதவன் ஆவேன்,’ என்றும், ‘அடியவனான என்னைத் தேவரீருக்குப் பின்னேயே சஞ்சரிக்கும்படி செய்தருள வேண்டும்,’ என்றும் சொல்லுகிறபடியே, பிரிவிலே தரியாமைக்கு இளையபெருமாளோடு ஒப்பர்; அவன் போகட்ட இடத்தே கிடக்கைக்கும் குண அநுசந்தானத்தாலே பிழைத்திருக்கைக்கும் ஸ்ரீபரதாழ்வானோடு ஒப்பர்; எத்தனையேனும் ஆற்றாமை கரை புரண்டாலும் ‘அத்தலையாலே பேறு,’ என்று இருக்கைக்குப் பிராட்டியோடு ஒப்பர்.
3‘உயர்வற உயர்நலம்’ என்ற திருவாய்மொழியிலும் பரத்துவமே அன்றோ பேசிற்று? ‘பத்துடை அடியவர்’ என்ற திருவாய்மொழியில் அவதார சௌலப்யத்தை அநுசந்தித்து மோஹித்தாரேயாயினும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விட வல்லராம்படி உணர்த்தியுடையவரானார்; ‘வீற்றிருந்தேழுலகு’ என்ற திருவாய்மொழியில் பரத்துவத்தைக் கூறிய பின்னர், இத்திருவாய்மொழியில் தாமும் மோஹித்துத் தம் நிலையை நினைந்த உறவினர்களும் மோஹித்து வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து கலக்கினாலும்
உணர்த்தி அறும்படி ஆயினார். 1பகவானைப் பெறுகின்ற காலத்தில் உணர்த்தியும், பெறாத காலத்தில் மோஹமுமாய்ச் சொல்லும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதொன்றாயிற்று.
2மற்றும், ஞாநாதிகராய்ப் பகவத் விஷயத்தில் கைவைத்தார்களாயிருக்குமவர்களிலும் ஸ்ரீவசிஷ்ட பகவான் புத்திரனுடைய பிரிவால் வந்தவாறே கடலிலே புகுவது, மலையிலே ஏறி விழுவது ஆனான்; ஸ்ரீவேதவியாசபகவானும் சாயாசுகனைக் கொண்டு உய்ந்தான்; ஆதலால், பகவத் விஷயத்தில் லாபாலாபமே பேறு இழவாய் இருக்கும் இது, இவ்வாழ்வார் ஒருவர்க்குமே உள்ளதாகும்.
3இப்படி இவள் மோஹித்துக் கிடக்க, இவளைக் கண்ட உறவின் முறையார் எல்லாரும் பிரமாத்திரத்தாலே கட்டுப்பட்டவர்களைப் போன்று மோஹித்து, செய்யத்தகும் காரியங்கள் இவை, செய்யத்தகாத காரியங்கள் இவை என அறுதியிடுவதற்கு ஆற்றல் இல்லாதவராய்க் கலங்கிக் கிடக்க, அங்குப்போலே உணர்ந்திருந்து நோக்குகைக்கு ஸ்ரீஜாம்பவான், மஹாராஜர், திருவடி போல்வாரும் இல்லையாயிற்று. 4‘அந்த நிலையோடு கூடிய ஸ்ரீ பரதாழ்வான் பக்கத்தில் இருந்த ஸ்ரீ சத்ருக்நாழ்வான்’ என்கிறபடியே,
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் அருகில் இருந்தார் என்னும் இதுவும் இல்லையாயிற்று. 1‘பெருமாள் காடேற எழுந்தருளினார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; இனி நீயே அன்றோ இராச்சியத்துக்குக் கடவாய்? உன்னைக் கொண்டன்றோ நாங்கள் வாழ இருக்கிறது?’ என்கிறார்கள் அல்லர்; ‘உன் முகத்தில் உறாவுதல் காணக்காண உன்னை இழக்கமாட்டார்; அவர் வரவு அணித்து என்றன்றோ நாங்கள் வாழ்கிறது?’ என்றார்களே அன்றோ? அப்படியே, இவளைக் கொண்டே வாழ இருக்கிறார்கள். ஆகையாலே, எல்லாம் ஒக்க இவள் நிலையைக் கண்டு கலங்கிக் கிடந்தார்கள்.
இங்ஙனங்கிடக்க, இவ்வளவிலே நாட்டிலே 2வேரறிவார் விறகறிவார் மந்திரமறிவார் மருந்தறிவார் அடங்கலும் வந்து புகுர, அவ்வளவிலே, வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார், ‘ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வீட்டினைத் தூஷிக்க நமக்கு நல்ல அளவு’ என்று வந்து புகுர, இவளுடைய உறவு முறையிலுள்ளார் கலங்கிக் கிடக்கையாலே, ‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘பரிஹாரம் இன்னது’ என்றும் அறியாதே, அவர்களிலே ஒருத்தி ஒரு கட்டுவிச்சியை ‘இவள் நோய் யாது? நோய்க்கு நிதானம் யாது?’ என்று கேட்டு. அவள் சொற்படியே, ‘ஆராதனத்துக்குரிய பொருள்கள், நிந்திக்கப்படுகின்ற கள் முதலானவைகள்; தெய்வம், மிகத் தாழ்ந்த தெய்வம்; சாஸ்திரம், வேதங்கட்குப் புறம்பான ஆகமங்கள்; ஆசாரியர்கள், பூசாரிகள்’ என்கிறபடியே, நிந்திக்கப்படுகின்ற பொருளை இவளைப் பாதுகாப்பதற்குப் பரிகரமாகக் கொண்டு, புன்சிறு தெய்வம் ஆவேசித்ததாகக் கொண்டு, வேறு தெய்வ சம்பந்தமுடையாரை ஆசாரியராகக் கொண்டு, இவள் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே, ‘இவள் பிழைக்குமாகில் யாதேனும் ஒரு வழியாலேயாகிலும்
நீக்கிப் பாதுகாத்தல் அமையும்,’ என்று வழியல்லா வழியிலே இழிந்தார்கள்; அப்படிக் கலங்கப் பண்ணுமே அன்றோ அன்பு? 1‘முதியவர்களும் இளையவர்களுமான பெண்கள் காலையிலும் மாலையிலும் கூடிக்கொண்டு, கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரானுடைய நன்மைக்காக எல்லாத் தேவர்களையும் வணங்குகிறார்கள்,’ என்கிறபடியே செய்தார்களே அன்றோ திருவயோத்தியிலுள்ளார்?
இதனைக் கண்ட உயிர்த்தோழியானவள், ‘இவர்கள் செய்கிற இவை, இவள் அகவாயில் கிடக்கிற உயிரையும் இழக்கப் பண்ணுமித்தனை; இனி, நாம் இத்தை அறிந்தோமாகச் சொல்லில், ‘உன் காவற்சோர்வாலே வந்ததன்றோ?’ என்று சொல்லுவார்கள்; நாம் கைவாங்கி இருந்தோமாகில், இவளை இழக்க வரும்; இனி, இதற்குப் போக்கடி என்?’ என்று விசாரித்து, ‘இவர்கள்தாமும் ‘இதுதான் யாதோ?’ என்று ஆராயாநின்றார்களேயன்றோ? அதைப்போன்று நாமும் ஆராய்வதிலே இழிந்து இவள் தன்மையைக் கொண்டு சொன்னோமாகச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, ‘நீங்கள் இவளுக்கு ஓடுகிற நோவும் அறிந்திலீர்கோள்; நிதானமும் அறிந்திலீர்கோள்; பரிஹாரமும் அறிந்திலீர்கோள்; நீங்கள் பரிஹாரமாகச் செய்கிறவை, கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப்போலே இவளை இழக்கைக்குக் காரணமாமித்தனை; ஆன பின்னர், இவற்றை விட்டு, இக்குடியிலே பழையதாகச் செய்துபோரும் பரிஹாரத்தைச் செய்யப் பாருங்கோள்; 3‘உலகேழுமுண்டான் சொன்மொழி மாலை
அம்தண் அம்துழாய் கொண்டு சூட்டுமினே,’ என்றும், ‘தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே,’ என்றுமே அன்றோ முன்பும் விதித்தது? 1அங்கு ‘நின்ற மண்ணாயினும்’ என்றாள்; இங்கு, ‘மாயன் தமர்அடி நீறு’ என்றாள்’ இதுவே அன்றோ அடிபடச் செய்து போந்த பரிஹாரம்? 2ஆயிட்டு, இவள் நோய் இது; நோய்க்கு நிதானமும் இது; இதற்குப் பரிஹாரமும், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய பாததூளியைச் சேர்ப்பிக்கையும்,’ என்று சொல்லி அவர்கள் செய்கிறவற்றை நீக்குவிக்கிறாளாய்ச் செல்லுகிறது.
3‘இதுதன்னில் ஓடுகிறது என்?’ என்னில், அறிவு அற்று இருக்கும் நிலையிலும் வேறு தேவதைகளுடைய சம்பந்தமும் அத்தேவதைகளுக்கு அடிமைப்பட்ட அடியார்களுடைய சம்பந்தமும் அவ்வப்பொருள்களினுடைய தன்மையால் பாதகமுமாய், பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுதலும் பாகவதர்களுடைய சேர்க்கையும் பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படி ஆழ்வார்க்கு வைஷ்ணவத்தின் தன்மை முறுகினபடி சொல்லுகிறது. 4‘இராவணன் மாயா சிரசைக் காட்டின போது பிராட்டியும் மற்றைப் பெண்களைப் போன்று சோகித்துக் கண்ணநீர் விழவிட்டாளாய் இருந்தது; 5இதற்கு அடி என்? இது கேட்ட போதே முடிய அன்றோ தக்கது?’ என்று சீயரைக் கேட்க, ‘அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ‘மெய்’ என்றே சோகித்தாள்; ஞானம் இன்றியிலே பிழைத்திருப்பதற்குக் காரணம் அவருடைய உளதாம் தன்மையாகையாலே உளளாயிருந்தாள்; இவ்வர்த்தம் மெய்யாகில் உளளாம் தன்மையும் இல்லையாம்,’ என்று அருளிச்செய்தார்.
‘மேல் திருவாய்மொழி’ என்று தொடங்குவது, வியாக்கியாதாவின் ஈடுபாடு.
அதாவது, ‘மேல் திருவாய்மொழி எல்லையில்லாத பிரீதியாய்,
இத்திருவாய்மொழி எல்லை இல்லாத துக்கமாயிருக்கிறதே!’ என்றபடி.
இதற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘எம்பார்’ என்று தொடங்கி.
‘மோருள்ளதனையும் சோறேயோ?’ என்றது, ஒருவன் நாழி அரிசியைக்
கொண்டுவந்து ஓர் அம்மையார் கையிலே ‘எனக்கு இதனைச் சமைத்து
இடவேண்டும்’ என்று கொடுக்க, அப்படியே அவரும் சமைத்து இலையைப்
படுத்திட, இவனும் அருகே ஒரு பாத்திரத்திலே மோரைக் கொண்டுவந்து
வைத்திருந்து மோரை வார்த்துக் கொண்டு, ‘அம்மையாரே! மோர் விஞ்சிற்று,
சோறு இடும்,‘ என்று ஒருகால் இருகால் இங்ஙனே சொல்லுகையாலே,
அம்மையார் அலுத்து, ‘நீ கொண்டுவந்த மோர் தொலையாததாயிருந்தது;
மோருள்ளதனையும் சோறு இடுவேனோ?’ என்றாராம். ‘இதற்குக் கருத்து
யாது?’ என்ன, ‘மேலெல்லாம் கலவிக்கும் பிரிவுக்கும் ஒருபடி சங்கதி
சொல்லிக் கொண்டு போந்தோம்; இதிலே வந்தவாறே மேடும்
பள்ளமுமாயிருந்தது; இது என்னாலே சொல்லலாயிருந்ததோ இதற்கு
அசங்கதிரேவ சங்கதி?’ என்று அருளிச்செய்வாராம் என்றபடி. அடைவு –
சம்பந்தம், அசங்கதிரேவ சங்கதி : – சங்கதியில்லாமையே சங்கதியாகச்
சொல்லுவது.
2. இந்தப் பிரீதி அப்ரீதிகள் தாம் திருவிருத்தம் தொடங்கி, ‘முனியே
நான்முகனே’ என்ற திருவாய்மொழி வரையிலும் தொடர்ந்து செல்லுகிறது
என்று திருவுள்ளம் பற்றி, நான்கு பிரபந்தங்களிலும் இவர்க்குண்டான நிலை
வேறுபாடுகள், ஸ்ரீபரதாழ்வானுடைய நிலைகளோடு போலியாயிருக்கின்றன
என்கிறார், ‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி. இங்கே, முதற்பத்து
அவதாரிகை, ‘திருமகள் கேள்வன் மூன்று’ காண்க.
மோர் இருக்கு சாதம் கேட்ட விருத்தாந்தம்
தீராத மோர் உண்டே
இருக்கும் வரை தான் சங்கதி சோழ முடியும் –
நிரவதிக ப்ரீதி அதில் –
இதில் துக்கம்
அசந்கிதே தான் சங்கதி
சங்கதி இல்லாதது தான் சங்கதி
சங்கதி -சேருவது
மானஸ அனுபவம் என்று அறிந்து -சோகிக்கிறார்
அசந்கிதி ரேவ சங்கதி காஞ்சி ஸ்வாமி அருளி –
நான்கு திரு பிரபந்தம் சங்கதி அருளி
மூன்றாவது ஸ்ரீ ய பதியில்
பரத ஆழ்வான் -ராஜன் முடி வாங்கி துடித்தது போலே
பொய் நின்ற ஞாலம் துடித்தார் ஆயிற்று
நான் அவன் அடியேன் அன்றோ என் சோலை மறுப்பாரோ
திரு சித்ரா கூடம் சென்ற தரிப்பு போலே திரு வாசிரியம்
14 ஆண்டு காத்து பெரிய திருவந்தாதி
என் நெஞ்சினார் -கிட்டினார்
மீண்டும் எழுந்து அருளி மநோ ரதம் தலைக் கட்டினது திருவாய்மொழி –
நிரவதிக ப்ரீதி -மானச அனுபவம்
பாஹ்ய கரண யோக்கியம் இன்றி இருக்க
துக்கம் ஏற்பட்டு
அளவு கடந்த துக்கம் –
உயர போவது போலே-அவ்வளவு துக்கம் அதிகம் தானே
மோகத்துக்கு உறுப்பாக தலைக் கட்டுகிறது
கலந்து பிரிந்த நாயகி மோகிக்க
உறவினர்களும் மோகித்து
இது தேவதாந்தர மூலம் வந்ததோ பரிக்ரகம் பண்ண புக
தோழி பிரகிருதி அறிந்தவள் -தேவதந்திர ஸ்பர்சம் இழக்க நேரிடும்
பிறன ஹானி உண்டாகுமே விநாசதுக்கு உடல் ஆகும்
இவர்தான் வ்யதிரேகத்தில் தரிக்காமல் இளைய பெருமாள் உடன் ஒப்பர்
நீரை விட்டு பிரிந்த மீனைப் போலே -ஆழ்வாரும் தரித்து இருக்க மாட்டார்
குருஷ்வ -பிரியாமல் இருக்கும்படி செய்து அருளும்
போந்த இடத்தே கிடக்கைக்கும் -குண அனுசந்தனத்தாலே ஜீவிக்கை -இரண்டாலும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பரத ஆழ்வானை ஒக்கும்
எத்தனை ஆற்றாமை வந்தாலும் அத்தலையே ரஷிக்கும் பிராட்டி உடன் ஒப்பர்
முதல் திருவாய்மொழி பரத்வம் பேசி
பத்துடை அடியவர் மோகித்து
தரித்து தூது விட்டார் அஞ்சிறை மட நாராய்
காசை பொன்னை மணியை இழந்த வருத்தம் ஒத்து இராதே
பரத்வம் -விபவம் -அனுபவித்து -அடியார் குழாம் சேர
இங்கே பரத்வம் அனுசந்தித்த பின்பு தானும் மோகித்து -சுற்றத்தாரும் மோகித்து
‘அப்படிப் பரிவாலே கலங்கின பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘முதியவர்களும்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா.
அயோத். 2 : 52. இங்கு,
‘ஏழைய ரனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளு மினையார்
வாழிய எனவவர் மனனுறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே.’
என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.
திருவேம்கடமுடையனை அனுபவித்து துக்கம் மிக்கு இங்கே
சுற்றத்தாரும் மோகித்து
இவர் ஒருவருக்கும் தான் உண்டு –
மற்ற ஆழ்வார்களையும் சேர்த்து
ரிஷிகளுக்கு கிடையாது ஆச்சர்ய ஹிருதயம் காட்டி அருளி
வசிஷ்டர் புத்திர சோகத்தால் கடலிலி புக்கு
வேத வியாசரும் -சுகர் போன்ற பொம்மை சாயா கொண்டு கட்டி அழுது –
பகவத் விஷயத்தில் லாப அலாபமே பேறும் இழவும் இவர் ஒருவருக்கே
நாக பாஷணம் அனைவரும் மோகிக்க
ஜாம்பவான் திருவடி -இருவரும் முழித்து இருந்து –
திருப்பல்லாண்டு வியாக்யானம் -பிரம்மாஸ்திரம் போட்ட பொழுது காட்டி –
சஞ்சீவி -மூலிகை – கொண்டு வர ஜாம்பவான் சொல்ல -பர்வதமே கொண்டு வந்தார் திருவடி
இங்கே உணர்ந்து இருந்து நோக்க யாரும் இல்லையே –
அனைவரும் கலங்கிக் கிடக்க –
சத்ருக்னனும் இடி விழுந்தது போலே நின்று இருந்தான் பரத ஆழ்வான் மோகித்து இருக்க –
உன்னை நம்பி நாங்கள் இருக்கிறோம் -ராஜ குலம் -மக்கள் சொல்லி –
உன்னை விட்டு யார் இருக்கிறார் அர்த்தம் இல்லை –
நீ இருந்தால் தான் சக்கரவர்த்தி திருமுகன் திரும்பி வருவான் அவர் வரவு அணித்து என்று ஜீவித்து இருக்கிறோம் என்ற அர்த்தம் –
எல்லாரும் ஒக்க -இவள் தசையைக் கண்டு -கலங்கிக் கிடக்க -மோகித்து கிடக்க இல்லை
தோழி பரிகரம் சொல்ல –
வாசுதேவ துர்லபம் -ஞானி தத்வ தர்சன -பணிந்து அறிய அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போலே
விரகு அறிவார் -ஔ ஷதம் அறிவார் வர
எத்தை தின்னால் பித்தம் போகும் கலங்கி இருந்த உற்றார்
பகவத் திருநாமம் சொல்லி பாகவத கூட்டம் அறியாமல்
கட்டுவிச்சி பார்த்து சொல்ல –
தேவதை வர
கள் இறைச்சி வைக்க கேட்க நீச தேவதைகள்
பிரமாணம் பாஹ்ய ஆகமங்கள் இவர்களுக்கு
சூத்திர தேவதை
தேசிகராக கொண்டு
இவர் பக்கல் உள்ள சிநேக அதிசயத்தாலே ஜீவிக ஏதேனும் ஓன்று
வழி அல்லா வழி போக வைக்கும் அன்பு
திரு அயோதியை உள்ளார் கலங்கி -சர்வான் தேவான் காலில் விழுந்தது போலே
இத்தை கண்ட உயிர் தோழி
சத்தையும் போகுமே தேவதாந்திர ஸ்பர்சம் பட்டால் –
செய்யாதீர் -தன்மை பார்த்தால் எம்பெருமான் செய்தது ஊகித்து சொல்வது போலே சொல்ல
அறிந்தவர் போலே சொன்னால் -காவல் சோர்வு என்பரே என்பதால் ஆராய்ந்து
தீர்ப்பாரை யாம்இனி எங்ஙனம்
நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால்இவ் வொண்ணுதல் உற்றநல்
நோய்இது தேறினோம்;
போர்ப்பாகு தான்செய்துஅன்று ஐவரை
வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்குஇவள் சிந்தை
துழாஅய்த் திசைக்கின்றதே.
பொ-ரை : ‘அன்னைமீர்! இந்நோயினைத் தீர்ப்பதற்குரியவர்களை இனிமேல் யாம் எங்ஙனே தேடுவோம்? ஓர்ப்பாலே, இந்தப் பிரகாசம் பொருந்திய நெற்றியையுடைய பெண்ணானவள் அடைந்த நல்ல நோயினது தன்மை இது என்று தெளிந்தோம்; போருக்குரிய காரியங்களையெல்லாம் தானே செய்து, அக்காலத்தில் பஞ்சபாண்டவர்களை வெல்லும்படி செய்த மாயப்போர்த் தேர்ப்பாகனார் விஷயத்தில் இவள் மனமானது கலங்கி மயங்குகின்றது,’ என்க.
வி-கு : ‘அன்னைமீர்! யாம் இனித் தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? ஓர்ப்பால் தேறினோம், இவ்வொண்ணுதல் உற்ற இது நல்நோய்; தேர்ப்பாகனாருக்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது,’ எனக் கூட்டுக. ஓர்ப்பு – ஆராய்ந்து உணர்தல். பாகு – பகுதி. மாயம் – வஞ்சனை. தேர்ப்பாகன் – பார்த்தசாரதி; கிருஷ்ணன். துழாஅய் – வினையெச்சம். இப்பத்துத் திருப்பாசுரங்களும் ‘வெறி விலக்கு’ என்னும் துறையின்பாற்படும்.
இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.
ஈடு : முதற்பாட்டு. 1தோழியானவள், இவள் நோய்க்கு நிதானத்தைச் சொல்லி, ‘நீங்கள் செய்கிறவை பரிகாரம் அல்ல,’ என்று விலக்குகிறாள்.
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் – இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்; ‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்; ‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்துகொண்டிருக்கும்போது ‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, ‘இவள் 1ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது? ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்; அன்றிக்கே, ‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயாநிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
யாம் – ‘அன்னைமீர்?’ என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, 2‘யாம்’ என்கிறாள்; இதனால், தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி. 3அன்றிக்கே, தாய்மார் மங்களாசாசனம் செய்து மீளா நிற்க, 4‘ஸ்ரீராமபிரானுடைய நண்பர் யாவரும் மனம் கலங்கிச் சோகம் என்னும் சுமையால் அழுத்தப்பட்டவர்களாய்ப் படுக்கையிலிருந்து அப்பொழுது எழுந்திருக்கவில்லை,’ என்று சொல்லப்படுகின்றவாறே அதுவும் மாட்டாதே கிடந்தார்களே அன்றோ தோழன்மார்? ஆகையாலே,
தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல். 1‘நோய் இன்னது என்று அறிந்த பின்பு’ என்பாள், ‘இனி’ என்கிறாள்; அன்றிக்கே, 2‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, ‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ 3‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது? 4‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’ என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.
5ஆக, தோழியானவள், ‘இனிப் பரிஹாரம் உண்டோ? எங்கே தேடக்கடவோம்?’ என்றவாறே, ‘இவள் கையது நம் காரியம். இவள் அறிந்தாளாக அடுக்கும்,’ என்று உறவினர் அனைவரும் இவள்மேலே ஒருமுகம் செய்து பார்த்தனர்; ‘இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்; நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து, ஓர்ப்பால் – ‘இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள். என்றது, ‘நீங்களும் ஆராயாநின்றீர்களே அன்றோ? உங்களைப் போன்று நானும் ஆராய்ந்து பார்த்தவிடத்தில் இங்ஙனே தோற்றிற்று,’ என்கிறாள் என்றபடி. இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; மனத்தினைப் புறத்தே செல்ல விடாது உட்பொருளை நோக்கச் செய்தால், மூவகைத் தத்துவங்களையும் அலகு அலகாகக் காணவல்லள் ஆயிற்று. இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – இத்தகைய சிறப்பினையுடைய நுதலையுடையவள்இம்முகத்தையுடையவளுக்கு வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ? 2‘கண்ணன், கோளிழை வாண்முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ என்கிறபடியே, அம்முகத்தால் வரவேண்டாவோ? 3இவள் நோய் என்றால் அவன் அடியாக வரவேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமாயிருக்குமோ? ஸ்ரீ ராமவிரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? 4இவளை இப்படிப் படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ? 5அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப் பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே 6முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி ஆயிற்று இருக்கிறது.
பரிஹாரம் இல்லாதபடி மறுபாடுருவக் கொண்டநோய் ஆதலின், ‘உற்ற நோய்’ என்கிறாள். இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா; 7‘கைக்கூலி கொடுத்துக்கொள்ள வேண்டும் நோய்,’ என்பாள், ‘நல்நோய்’ என்கிறாள். 8இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள்முயற்சி செய்வது? 1அப்படியிருக்க, இந்நோய் கொள்ளுகை அன்றிக்கே, பரிஹாரம் சொல்ல இருப்பதே நான்! ஞானம் பிறந்த பின்பு சரீரம் முடியும் வரையிலும் செல்லத் 2 தேகயாத்திரைக்கு உறுப்பாய், பின்பு தானே அழிவில்லாத பலமான நோய் அன்றோ இது? 3 இதர சாதனமாக நோக்குமிடத்துச் சாதனமாய், சாதன புத்தி கழிந்த அன்று தானே பலமாக இருக்குமே அன்றோ? 4‘சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே, அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று; இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது. 5‘என்னிடத்திலேயே வைக்கப்பட்ட பத்தியினாலே, உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் என்னுடைய சொரூபத்தை அடைவதற்கும் தகுந்தவனாய் இருக்கின்றேன்,’ என்கிறபடியே, இது உண்டானால், பின்னை அவன் கைப்பட்டானேயன்றோ? 6இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாய் இருக்குமாறுபோலே; இவர்கள் கோஷ்டியில் தெளிவு அரிதாய் ஆயிற்று இருப்பது; ஆதலின்,தேறினோம்’ என்கிறாள். 1‘இதர விஷயங்களிலே ஈடுபாடு ஆகாது’ என்கிற தெளிவே அன்றோ இருடிகளுக்கு உள்ளது? பகவானிடத்தில் ஈடுபட்ட காரணத்தால் வந்த கலக்கமே அன்றோ இது?
‘ஆகில், அது சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் : போர்ப் பாகு தான் செய்து – போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து; என்றது, ‘இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று, போர்க்களத்தில் வந்தவாறே, 2 ‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான அந்தக் கண்ணபிரான் தருமபுத்திரனுக்கு மந்திரியாயும் இரட்சகனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, அவர்கள் பறித்துக்கொண்ட பரிகரமெல்லாம் தானேயாய் நின்றானாயிற்று,’ என்றபடி. பாகு – நிர்வாஹகர் செய்யும் தொழில். 3அன்றிக்கே, ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் செய்து’ என்னுதல்; என்றது, ‘தனது ஆசன பலத்தாலே எல்லாவற்றையும் நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’ என்றபடி. ‘தான்’ என்று மேன்மை சொல்லிற்று. 4‘இவள் மோஹிக்கிறது அவனுடைய எளிமைக் குணத்துக்கே அன்றோ?’ என்றது, ‘எளியவனுடைய எளிமைக் குணத்துக்கு அகப்படுமவள் அன்று இவள்; அம்மேன்மையுடையவன் தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்?’ என்றபடி.
அன்று தான் செய்து ஐவரை வெல்வித்த – அவர்கள் நூற்றுவராய் தீயோர் அடைய அங்கே திரண்டு, இவர்கள் தாம் ஐவராய் வெறுவியராய் நின்ற அன்று, தான் கையும்
அணியும் வகுத்து, படை பொருத்தி, 1சாரதியாய் நின்று, குதிரைகள் இளைத்தவிடத்து வாருணாஸ்திரங்கள் விடலாமிடங்கள் காட்டி விடுவித்து, அங்கே குதிரைகளை விட்டு நீரூட்டிப் பூட்டி வென்றான்,’ என்னுமிடம். அருச்சுனன் மேலேயாக வேண்டும் செயல்கள் முழுதும் தானே செய்தானே அன்றோ? துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும் அரிதுகாணும் பாண்டவர்களை வெல்வித்தது; ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘துரியோதனன் முதலியோர்கள் செருக்குக் கொண்டவர்கள் ஆகையாலே தோற்பிக்கை அரிது; 2இவளைப் பெண்மைக்குரிய அபிமானத்தாலே தோற்பிக்கை அரிது; அப்படியே, 3‘ஏ கிருஷ்ண! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நாங்கள் விரும்பவில்லை; இராச்சியத்தினாலே என்ன பயன்? போகங்களினால் என்ன பயன்? உயிர் வாழ்ந்திருப்பதனால் என்ன பயன்?’ என்ற பாண்டவர்களை வெல்வித்தலும் அரிது என்றபடி. மாயம் போர் – ஆச்சரியமான போர்; அன்றிக்கே, ‘வஞ்சனையுடைய போர்’ என்னுதல். 4பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவை இத்தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது தொடக்கமானது அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.
தேர்ப்பாகனார்க்கு – அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச்செய்வது தன்னையாம்படி, 5உடம்புக்கு ஈடு இடாதே வெறுங்கையோடே தேர்த்தட்டிலே முன்னேநின்று சாரதி வேஷத்தோடே செய்த தொழிலைச் சொல்லுகிறது. என்றது, 1‘நீண்ட கைகளையுடைய தருமபுத்திரரே! நான் உமக்கு அடியவனாய் இருக்கிறேன்; ஏவிக் காரியங்கொள்ளல் ஆகாதோ?’ என்றமையைத் தெரிவித்தபடி. இவள் – 2அப்பாகிலே பிடிபட்ட இவள். 3‘தாழ்ந்த குணங்கள் இல்லாத அந்தப் பரம்பொருள் உம்முடைய சரீரத்தில் பரந்து இருக்கிறார்,’ என்கிறபடியே, சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது – இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ? சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்? மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய 4அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ? 5ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான். ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.
ராசக் கிரீடை -கோபிகள் அதிக சந்தோஷம் -மறைய அபரிமித துக்கம் அடைந்தது போலே –
மோஹமே நோய் தானே
கட்டுவிச்சிகள் வர –
சிறிய திருமடல் இதே போலே அவள் வைஷ்ணவ கட்டுவிச்சி
விதிர் விதிரா -ஆரானும் அல்ல அறிந்தேன் -என்று அருளி –
அவளே வந்தாள் -மூதரியும் அம்மனைமார் –
அது கேட்டு கட்டுவிச்சி வந்தேறி –
அங்கோர் கள்ளும் ஆடும் இவள் -தேவதாந்தர கட்டுவிச்சி –
காஞ்சி ஸ்வாமி -இரண்டு பேதம் உண்டு –
கண்டியூர் அரங்கம் -எங்கும் திரிந்து -இங்கே மீள்வேனை யார் –
வீதியார வருவாள் வைஷ்ணவ கட்டுவிச்சி
வெந்தார் -பெரியோன் குணம் பாடி எங்கும் திரிவேனை யார் இங்கு அழைத்தது
இப்படி பாடிக் கொண்டு திருவால் தேவதாந்தர கட்டுவிச்சி
பரிகாரம் செய்ய -ஸ்வாபம் அறிந்தவர்கள் -சத்தையா தாரகம் -மோகித்து கிடந்தாலும் –
சம்பந்தம் ஆத்மாவுக்கு தானே
ஐதீகம் -நம்பிள்ளை நஞ்சீயர் -பட்டர் நஞ்சீயர்
மாயா சிரஸ் காட்டி பிராணன் போக வில்லை –
பிராணன் தரித்து இருப்பதால் -தன்னடையே போகுமே இல்லை என்றால் –
ஆத்மா சம்பந்தம் -சத்தையா தாரகம் சத்தையா பாதகம் –
இழக்க நேரும் -தோழி சொல்ல
நேராக சொல்லாமல் ஒர்ப்பால் ஆராய்ந்து பார்த்து சொன்னது போலே சொல்லி
பத்து பாட்டிலும் இதே விஷயம் –
மூன்று திருவாய்மொழி தோழி பாசுரங்கள்
தாய் பாசுரம் –
தானாக பேசுவது -தலை மகள்
ஆசார்ய ஹிருதயம் –
சம்பந்தம் உபாயம் பலம்
-உணர்த்தி துணிவு பதற்றம் –
தோழி தாயார் மகள் பாசுரங்கள்
சம்பந்தத்தில் உணர்த்தி தோழி பாசுரம் -சம்பந்த ஞானம் இதில் சொல்வது போலே
நீங்கள் நினைத்தாலும் சத்தையா பாதகம்
மாநிடவருக்கு என்று பேச்சு படில் -எங்கேயோ பட்டாலும் சத்தையா பாதகம் –
இவள் காதில் விழா விடிலும் உடம்பு துடிக்கும்
உபாயத்தில் துணிவு தாயார் பாசுரம் -எம்பெருமானே உபாயம் –
பிரக்ருதிக்கு சேராது தேடித் போக கூடாது செய்த தலை நாற்று போலே இருக்க வேண்டும்
பலத்தில் பதற்றம் மகள் -பாசுரம் –
விஷய வை லஷண்யம் உடனே அடையாவிடில் தரித்து இருக்க முடியாமல் தேடி போனாள்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -பதிகம் போலே
ஸ்திரீ பராயம் அனைவரும்
மணிவல்லி பேச்சு வந்தேறி இல்லை
புருஷோத்தமன்
கர்மத்தால் ஆண் உடல்
ஒர்ப்பால் -ஆராய்ந்து -நேராக தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் –
உற்ற நோய் -தான்
போர் பாகு –தேர் பாகனார் -நடத்தின சாமர்த்தியம்
யுத்தம் பாகு செய்து நடத்தி –
துழாவி சிந்தை மோகித்து
மூன்று வியாக்யானம்
தீர்ப்பாரை எங்கனம் -நாடுதும் நீங்கள் செய்வது பரிஹாரம் இல்லை -ஸ்பஷ்டமாக இத்தை காட்டி முதல் அர்த்தம் –
-இரண்டாவது மோகித்து இருப்பது போலே அனைவரும் இருக்க -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கிக் கொண்டே இருப்பது
யார் பரிகாரம் செய்ய
மூன்றாவது -தான் இப்பொழுது ஆராய்ந்து இருக்க –
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யார் -நோயை தீர்ப்பவனே நோய் கொடுக்க –
நச்சு மா மருந்தே
நிர்வாணம் பெஷஷம் பிஷக்
மருந்தும் பொருளும் தானே
யாம் -இனி எங்கனம் நாடுதும் -தாய் தோழி வாசி இன்றி
தாய் மார் மங்களா சாசனம் பண்ணி நிற்க
தோழி யும் மோகித்து இருக்க
அதுவும் மாட்டாதே கிடந்தார்கள் –
சக்ரவர்த்தி திருமகன் காட்டுக்கு எழுந்து அருளின பொழுது கிடந்தார்கள்
தோழன் மாருக்கு ஏற்றம் சொல்கிறது
ஆயினும், தாய்மார்களைக்காட்டிலும் தோழிமார்கட்கு வேறுபாடு உண்டு
என்பதனைப் பிரமாணத்தோடு காட்டுகிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
‘யந்மங்களம் ஸூபர்ணஸ்ய’ என்ற சுலோகத்தை நோக்கித் ‘தாய்மார்
மங்களாசாசனம் பண்ணி மீளாநிற்க’ என்கிறார். தாய்மார் -கௌசல்யையார்
முதலானோர்.
இனி –வியாக்யானம் சொல் படி சங்கதி சொல்லி
பத உரை வேறு மாதிரி
கொள்வான் நான் -மாவலி -மூவடி
சப்தம் கேட்கிறதே திரும்ப –
மூவடி தா -சொல்லி -இப்படி சங்கதி காட்டி –
எங்கனம் நாடுதும்
சொல்லி
இவள் நம் -கார்யம் அன்னைமார் நினைக்க
இவள் அறிந்தவள் பார்க்க –
அன்னைமீர்
இனி நாம் முன்னே அறிந்தோம் ஆக சொல்லி –
காவல் சோர்வு
ஒர்ப்பால் ஓர்ந்து பார்க்கும் -இடத்தில் ஆராய்ந்து –
நீங்களும் ஆராயா நின்றீர்கள்
இவள் தான் ஒரு கூரத் ஆழ்வான் போலே ஒக்கும் காணும் –
உளன் எனில் உளன்
முனியே நான் முகனே இரண்டிலும் கூரத் ஆழ்வான் நிர்வாகம்
நஞ்சீயர் காட்டிய ஐதீகம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply