திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-4-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நான்காந்திருவாய்மொழி – ‘மண்ணையிருந்து’

முன்னுரை

    1மேல் திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் பிச்சு ஏறினார்; 2இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரைகடந்த பிரீதியானது இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது; அந்த ரசத்தை அரையாறுபடுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன். 3ஆனாலும், பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ? ஆகையாலே 4ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக்கொண்டும், சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து

அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

    2‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்; ‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்; ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது, அதுதானும் மாட்டாது ஒழிவது, ‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது, ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே தேடுவதாய், அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது. இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவுபடுகின்றபடியையும் சொல்லிக் 3கைவாங்குமளவாக, அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

ஆற்றாமை மீதூர்ந்து’ என்னுமிதனை, பின்னே வருகின்ற ‘நோவுபட்டுச்
செல்லுகிறது’ என்றதனோடு கூட்டி முடிக்க. கிழிச்சீரை – பணப்பை.
‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’,
‘உருவுடைவண்ணங்கள்’, ‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று
வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. ‘அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று
வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து, ‘இவர்
பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக
நினைத்திருக்குமவராகையாலே, பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு
கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

மண்ணை இருந்து துழாவி,
‘வாமனன் மண்இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு
வைகுந்தம்’ என்றுகை காட்டும்;
கண்ணைஉண் ணீர்மல்க நின்று,
‘கடல்வண்ணன்’ என்னும்;அன் னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என்செய்கேன், பெய்வளை யீரே!

    பொ-ரை : அணிந்த வளையல்களையுடைய பெண்காள்! இருந்து
பூமியைத் துழாவி, ‘இது வாமனனுடைய பூமியாகும்,’ என்பாள்; ஆகாயத்தை நோக்கித் தொழுது, ‘அவன் எழுந்தருளியிருக்கின்ற பரமபதம்’ என்று கை காட்டுவாள்; கண்களில் நீர் பெருகும்படி நின்று ‘கடல் போன்ற நிறத்தையுடையவன்’ என்பாள்: ஐயோ! என்னுடைய பெண்ணைப் பெரிய மயக்கத்தை அடையச் செய்தவர்க்கு எதனைச் செய்வேன்?

    வி-கு : ‘என்னும், காட்டும், என்னும்’ என்பன, செய்யும் என் முற்றுகள். ‘கண்ணை’ என்பதில், ஐகாரம் அசைநிலை, உருபு மயக்கமாகக் கோடலும் அமையும். ‘அன்னே’ என்பது, அந்தோ என்னும் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல். ‘அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற் கடுத்தநாள் அரக்கர் வேந்தள். பின்னேயோ’ (கம்ப. உயுத். இராவணன் வதைப். 288.) என்றவிடத்தும் ‘அன்னே’ என்பது இப்பொருளதாதல் காணலாகும்.

    இத்திருவாய்மொழி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு : முதற்பாட்டு. 1வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் செய்தியைக் கூறுகின்ற தாயானவள், ‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சு ஏற்றினான்; நான் இதற்கு என் செய்வேன்?’ என்கிறாள்.

    மண்ணை இருந்து துழாவி – 2‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்குஉட்பட்ட பூமிப்பரப்பு அடைய இருந்து துழாவா நிற்கும். அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்? 3‘விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ? இருந்து – 4இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல்

கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.

    துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று இம்மண்ணை 1விடமாட்டாமையும் தோன்றுகிறது. விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். 2தாங்கள் தெளிந்திருந்தார்களாய் ‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே, அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல் : வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னாநின்றாள். 3‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்

பிரசித்தி? ‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது. 1‘அவன் இரந்து தனக்கு ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னாநின்றாள்; 2அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது போன்று கொடுக்க வேண்டாகாணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும். 3‘அவனது அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம் தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள், ‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின், இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்றதித்தனை போக்கி, மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

    விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுந்தம் என்று கைகாட்டும் – 4இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுமாறு போன்று, வேறு உலகத்தின் செயலும் இங்கே தோன்றாநின்றது. நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாய் இருக்குமாறு போன்று, அவர்களுக்கு 5‘அக்கரை, இக்கரை’

என்னும்படி இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த் தோன்றும். ஆர்ஷ்டிஷேணன் ஆஸ்ரமத்திலே நின்று பரமபதம் கண்டார்களே அன்றோ சிலர்? ‘என்னோடே கலந்து அகன்ற இடம் போலே பிரிவோடே கூடி இராமல் அவன் நித்தியவாசம் செய்யும் தேசம்’ என்பாள், ‘அவன் மேவும் வைகுந்தம் என்னும்’ என்கிறாள். ‘மேவும் வைகுந்தம்’ என்பதில் அவதாரத்திற்கு வேறுபாடும் தனக்கு இழக்க வேண்டாமையும் தோன்றும். அவன் ஒரே தன்மையனாய் இருக்கின்ற இருப்பை நினைத்து, அவ்விருப்பிலும் தாம் அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து, சொல்லப் புக்க வார்த்தையைத் தலைக்கட்டமாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டாநின்றாள் என்பாள், ‘கைகாட்டும்’ என்கிறாள். ‘பரமபதத்திலே நித்திய சூரிகள் எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்க, அவர்களைப் போன்ற சம்பந்தம் நமக்கும் உண்டாயிருக்க, நாம் இழப்போமே!’ என்று தளர்ந்து தொடங்கின வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டுகின்றிலள்’ என்றபடி. அன்றிக்கே, ‘பெயர் ஒற்றுமையாலும் மேலே உள்ள தன்மையாலும் இந்த ஆகாசத்தைப் பரமபதம் என்று தொழாநிற்கும்,’ என்னலுமாம்.

    கண்ணை உள் நீர் மல்க நின்று – ‘அவதாரம் போல அன்றிக்கே என்றும் ஒக்க அனுபவிக்கலாம்படி இருக்கிற பரமபதத்தில் இருப்பிலும், நான் இழப்பதே!’ என்று கண்ணீர் மல்காநின்றாள். கடல் வண்ணன் என்னும் – ஒரு கருங்கடல் வடிவு கொண்டு செவ்வே இருந்தாற்போலே அங்கு இருக்கும் இருப்பைச் சொல்லாநின்றாள்; அவ்வடிவினைக் காட்டிக்காணும் இவளை அவன் பிச்சு ஏற்றினான்; இவளும் தன்னைப் பிச்சு ஏற்றின படியே 1சொல்லாநின்றாள் என்றபடி. அன்னே – ‘அம்மே’ என்று துக்கத்தின் மிகுதியைக் காட்டுவதோர் இடைச்சொல். ‘மன்னே’ என்னலுமாம். என்பெண்ணை – 2‘யுவதியாயும் குமாரிணியாயும் இருப்பவள்’ என்றபடியே, கலவியிலும் உட்புகமாட்டாத பருவமாயிற்று இவளது. பெருமயல் செய்தார்க்கு – 1‘தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வியசனத்தளவும் அன்றுகாணும் இவளைப் படுத்தியது,’ என்பாள், ‘பெருமயல்’ என்கிறாள். அவனை ஒத்த பொருள்களைக் கண்டு கலங்கினாள் இவளே அன்றோ? என் செய்கேன் – 2இவள் ஆற்றாமை தீர அவனை வரச் செய்யவோ? ‘அவன் வருமளவும் கிரமத்திலே அடையலாம் என்று பார்த்து ஆறி இருக்க வேண்டுங்காண் என்று இவளைத் தரிப்பிக்கவோ? யாது செய்வேன்? பெய்வளையீரே! 3‘பெருவெள்ளத்திலே புறவடி நனையாமலே இருப்பாரைப் போன்று, இவ்வளவிலும் கையும் வளையுமாய் இருப்பதே நீங்கள்!’ என்பாள், ‘பெய்வளையீரே! என்கிறாள். அன்றிக்கே, ‘நீங்கள் வளை தொங்குகைக்குச் செய்த உபாயத்தைச் சொல்ல வல்லீர்களோ, நானும் கைமேல் செய்து பார்க்க!’ என்பாள், அங்ஙனம் விளிக்கின்றாள் என்னலுமாம்.

இப்படி அவன் சம்பந்தங்கொண்டு விரும்பினார் உளரோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘பண்டு’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. பால.
29 : 22 ; விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறியது.

  ‘தங்கள்நா யகரிற் றெய்வம் தவம்பிறி தில்என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றுங் கேளாய்:
எங்கள்நான் மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச்
செங்கண்மால் இருந்து மேனாள் செய்தவம் செய்த தன்றே.’

  என்ற கம்பராமாயணச் செய்யுள் இங்கு ஒருபுடை ஒப்பு நோக்கலாகும். (
பாலகா, வேள்வி.  16. )

3. பாரதம், ஆரணியபருவம். இது, வீமசேனனைப் பார்த்து அனுமான்
கூறியது. ‘இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்’
என்றதனானே ‘பெருமாள் சஞ்சரித்த இடத்தை விடமாட்டாமையால்,
இங்கேயே தங்கியிருக்கிறேன்,’ என்பது திருவடியின் உட்கோள்.
இச்சுலோகப்பொருளோடு,

  ‘அந்த வார்சிலை இராமனுக்கு அடிமையாய் என்றும்
சிந்தை யால்அவன் திருப்பதம் சிந்தைசெய் பவனும்
முந்தை யாகிய வாயுவுக்கு உற்பவித் தவனும்
இந்த வாழ்வுடை அனுமனே
என்றனன் இகலோன்.’

  என்ற செய்யுள்       ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

திண்சுட ராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில்
மண்கழ லில் சத்ய லோகம் சிரத்தில் மருத்துஉயிரில்
தண்கதிர் உள்ளத்தில் வான்உந்தி யில்செந் தரணிகண்ணில்
ஒண்கனல் இந்திரன் வாழ்முகப் போதில் உதித்தனரே’

  என்றார் திவ்வியகவியும்.

4. பூமிக்கு வாசனை இயற்கையாய் இருக்கவும், திருவடிகளினுடைய
சம்பந்தத்தால் வந்த வாசனை என்று இவளுக்கு நினைவு என்கிறார்
‘பூமியானது’ என்று தொடங்கும் இரண்டு வாக்கியத்தாலே,

  ‘விண்ணொலி தழுவும், காற்று மேவுறும் ஒலியு மூறும்,
நண்ணுமால் ஒலியும் ஊறும் நலந்திகழ் உருவும் செந்தீ,
தண்ணறல் ஒலியும் ஊறு முருவமுஞ் சுவையும் சாரும்,
மண்ணிதை நான்கி னோடு மணத்தையும் புணர்ந்து மன்னும்.’

  என்பது பாகவதம், சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயம்.

‘அக்கரை யென்னு மனத்தக் கடலுள் அழுந்திஉன் பேரருளால்
இக்கரையேறி இளைத்திருந் தேனைஅஞ் சேல்என்று கைகவியாய்’

  என்பது பெரியாழ்வார் திருமொழி.

      அக்கரை – சமுசாரம். இக்கரை – பரமபதம். ‘அப்படிக் கண்ட பேர்
உளரோ?’ என்ன, ‘ஆர்ஷ்டிஷேணன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ஆர்ஷ்டிஷேணன் என்பவர் ஒரு முனிவர். ‘சிலர்’
என்றது, தருமபுத்திரனை. தருமபுத்திரனுக்கு அம்முனிவர் தமது
ஆஸ்ரமத்திலிருந்து பரமபதம் காட்டினார் என்று சரிதம் கூறும்.

‘ஏற்றின படி’ என்றது, சிலேடை : ‘ஏற்றிய திருமேனி’ என்பதும், ‘ஏற்றிய
விதம்’ என்பதும் பொருள்.

பிரணீ யத்வம் முன்னம் அனுபவித்து ஹர்ஷர் ஆனார்
இதில் -அவன் இவரது ஆஸ்ரயம் அழியாமல் இருக்க தன்னை மறைக்க
துக்கம் அதிகம் ஆகி தனது நிலை மாறி தாயார் பாசுரமாக இதை அருளுகிறார்
பிரிவு -தனது ச்வாபத்தால் இப்படி செய்யாமல் விடாதே
போலி கண்டு -எல்லாம் அவன் சம்பந்தம் என்று சொல்லி துக்கித்து போகிறார்
நிரவதிக ப்ரீதி -கூடாதே என்று அவன் கொஞ்சம் பிரிய –
ராசக்ரீடை கோபிகள் விஷயம் போலே
ஆற்றாமை மிக்கு
ஆற்றாமை மீதூர்ந்து’ என்னுமிதனை, பின்னே வருகின்ற ‘நோவுபட்டுச்
செல்லுகிறது’ என்றதனோடு கூட்டி முடிக்க. கிழிச்சீரை – பணப்பை.
‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’,
‘உருவுடைவண்ணங்கள்’, ‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று
வரும் பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. ‘அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று
வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி. அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து, ‘இவர்
பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக
நினைத்திருக்குமவராகையாலே, பகவானைப் பிரியுமிடத்துப் பாகவதர்களோடு
கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.

கலவி -சேர்த்தி -நெகிழ நின்றான் -அதுவே துக்க ஹேதுவானதே
அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘

வைப்பாம் மருந்தாம்’-திருவாய்மொழி -1-7-2-  என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

கிழிச்  சீரை-பணப்பை பட்டு -முதலில் பட்டு சீனாவில் இருந்து வந்ததாம் –
வைப்பாம் சேம நிதி
மருந்தாம் –
இவருக்கு ஷேம நிதி தானே அவர்
சதுரச பதார்த்தம் -சம்பந்தித்த பதார்த்தங்கள் இரண்டையும் –
நோவு பட்டு பித்தாக -போக
ஆற்றில் குளித்த பிராமணன் சொம்பை மணலில் புதைத்து மண்ணில் அடையாளம் வைத்து
மற்றவரை ஏமாற்ற வேற இடங்களிலும் அடையாளம் வைக்க –
எல்லாம் தொண்டு பார்த்தது போலே
ஆரண்ய காண்டம் -60-35 பெருமாள் சீதை பிராட்டி பிரிந்து புலம்பினது போலே
கொசித் -காந்தா தேடின சக்கரவர்த்தி திருமகன் –
கொசித் -கொஞ்ச காலம்
வ்ருஷாந்தம் மைதிலி பார்த்தீர்களா
ஆணாறு பெண்ணாறு –
நதி
மேற்க்கே நோக்கிபோவது ஆனாரு
கிழக்கே போவது பெண்ணாறு
முல்லை
பெரியாறு மேற்கு நோக்கி
இவள் கைவாங்கும் அளவாக அவன் முகம் காட்டுவதாக
திருவாய்மொழி தலைக் கட்டுகிறது
கைவாங்குமளவாக’ என்றது, ‘என்செய்கேன் வல்வினையேனே’ என்று
பாசுரப்பகுதியைத் திருவுள்ளம் பற்றி. ‘அவன் வந்து முகங்காட்டித்
தேற்றுவிக்க’ என்றது, ‘வல்வினை தீர்க்குங் கண்ணனை’ என்று பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றி.
இப்படி ஆஸ்வசிப்பித்து

அன்னே -அம்மா ஐயோ
வினவ வந்தார்கள் இடம் -பெய் வளையீர் -தாயார் வரத்தை
மண்ணை இருந்து துழாவி –
திருவடியால் அளந்தான்
அவன் சம்பந்தம் கொண்டே இத்தை இவள் விரும்பு கிறாள்
பக்தி சித்தாஸ்ரமம் -விஸ்வாமித்ரர் -ஸ்ரீ வாமனன் எழுந்து அருளின தேசம்
மண்ணை முகர்ந்து கொண்டு பிறந்தேன் என்றார் –
அவன் பக்கல் ருசிஉடையார் செய்யும் கார்யம்
பிச்சேறினது போலே -இது ஸ்ரீ வாமனனது
மகாபலி இந்தரனது அன்று என்கிறாள்
இது -காட்டி -பிரத்யட்ஷம் சம்சயம் இல்லை
பூத காலமும் வர்த்தமான காலம் போலே தோற்ற
துக்கம்
இருந்து -ஸ்திதி இன்றி நோவு பட்டு இருக்க
துழாவி -விடமாட்டாமல்
விடாயன் சந்தனம் தடவி கொண்டே -தண்ணீர் இறைத்துக் கொண்டே இருப்பது போலே
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ -திரு நெடும் தாண்டகம் -5-

விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீ ராமனைப் பார்த்துக் கூறியது.

  ‘தங்கள்நா யகரிற் றெய்வம் தவம்பிறி தில்என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றுங் கேளாய்:
எங்கள்நான் மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச்
செங்கண்மால் இருந்து மேனாள் செய்தவம் செய்த தன்றே.’

  என்ற கம்பராமாயணச் செய்யுள்

பால காண்டம் -29-22
அடியிலே பிறந்த கந்தம் -உண்டே
ஆகாசம் குணம்
வாயு ஸ்பர்சம்
பிரித்வி கந்தம் இயற்க்கை உண்டே
சர்வ கந்த விஷய சம்பந்தம் அறிந்தவள் வாசனை
அவன் இரந்து தன்னது என்று ஆக்கிக் கொண்ட
வாமனன் மண் -அவனது இல்லை என்று சொல்லி மீட்க்க முடியாதே
பிரத்யட்ஷம் இது காட்டி
அது சொல்லாமல்
விண்ணைத் தொழுது
கழிந்த காலம் வர்த்தமான காலம் போலே
விண்ணும்
அக்கரை இக்கரை யானது போலே
அக்கரையில் அழுந்திக் கிடந்த என்னை
அக்கரை யென்னு மனத்தக் கடலுள் அழுந்திஉன் பேரருளால்
இக்கரையேறி இளைத்திருந் தேனைஅஞ் சேல்என்று கைகவியாய்’-பெரியாழ்வார் திருமொழி –
அக்கரை – சமுசாரம். இக்கரை – பரமபதம். ‘அப்படிக் கண்ட பேர்
உளரோ?’ என்ன, ‘ஆர்ஷ்டிஷேணன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ஆர்ஷ்டிஷேணன் என்பவர் ஒரு முனிவர். ‘சிலர்’
என்றது, தருமபுத்திரனை. தருமபுத்திரனுக்கு அம்முனிவர் தமது
ஆஸ்ரமத்திலிருந்து பரமபதம் காட்டினார் என்று சரிதம் கூறும்.

அவன் மேவும் வைகுந்தம்
கம் ஆகாசம்
மேலே உள்ளது
ஆகாசமே பரம பதம் என்று துளவ –
அவன் மேவும் -நித்ய வாஸம் -தம்மைப் போலே துக்கம் இன்றி –
கலந்து அகன்றது போலே இல்லாமல் –
அவதாரம் -தீர்த்தம் பிரசாதித்து இழக்க வேண்டாதபடி
கை காட்டும் –
ஏக ரூபமாய் இருக்கும் இருப்பை அனுசந்தித்து –
அனுபவிக்க பெறாமல் தளன்று
சொல்லப் புக்க வார்த்தை சொல்ல மாட்டாமல் கை காட்டும்
நித்யர் போலே பிராப்தி உண்டாய் இருக்க
என்றும் ஒக்க அனுபவிக்காமல் இழந்தேனே என்கிறாள்

கண்ண நீர் -கீழே பாய
விண்ணை சொல்லிய பராங்குச நாயகி வேற
தரிக்க முடியாமல் மோகிக்க
கண்ணீர் பெருக
கடல் வண்ணன் என்னும்
வடிவைக் காட்டி பிச்செற்றினான்
இவளும் தன்னை பிச்செற்றிய கடல் வடிவு கொண்டு செவ்வே வந்தது போலே
அன்னே
விஷாத அதிசய சூசக வார்த்தை
துக்க மிகுதி அசை நிலை
என் பெண்
யுவாகுமார
யுவதி குமாரிணி போலே
கூடவும் சக்தி இன்றி
பெரு மையல் செய்து –
பார்த்தாயா கேட்டார் பெருமாள்
இவள் அதிகம் கலங்கி
நான் என் செய்கேன்
வர விட சக்தன் இல்லை
க்ரமம் பார்த்து ஆறி இருக்க வேண்டும் சொல்லி இவளை தரிக்க வைக்க முடியாதே
பெய் வளை இடப்பட்ட வளை
கையும் வளையுமாக உள்ள
பிரலயத்திலும் கால் நனையாமல் இருப்பது போலே
துக்கம் பெண்ணுக்கு
வளை தங்கும் பரிகாரம் சொல்லுங்கோள்
வலை தொங்கும் பரிகாரம் -கைமேலே பலன் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply