திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-3-11–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உய்வுஉ பாயம் மற்றுஇன்மை
தேறி, கண்ணன் ஒண்கழல்மேல்
செய்ய தாம ரைப்பழனம்
தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே.

    பொ-ரை : செந்தாமரைமலர்கள் நிறைந்துள்ள வயல்களாற் சூழப்பட்ட தெற்குத்திசையிலேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர், நன்னெறி சேர்வதற்கு உரிய வழி வேறு இல்லாமை தெளிந்து, கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே சார்த்திய பொய் இல்லாத பாசுரங்கள் ஆயிரத்துள் இவை பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூலோகத்தில் பல காலம் தங்கியிருந்து இவ்வுலகத்தில் இருந்துகொண்டே பரமபதத்தையும் அரசாட்சி செய்வார்கள்.

    வி-கு : ‘குருகூர்ச்சடகோபன் உபாயம் மற்று இன்மை தேறிக் கண்ணன் கழல்கள்மேலே கூறிய இவை பத்தும் வல்லார்கள் வீற்றிருந்து மண்ணூடே விண்ணும் ஆள்வர்’ எனக் ‘கூறிய’ என்னும் வினையை வருவித்து முடிக்க. ‘தேறிக் கூறிய பத்து’ என்க. தென்னன் என்பதனைத் ‘தென் நல்’ எனப் பிரித்துக் குருகூர்க்கு அடையாக்குக. அன்றி, ‘தென்னன் சடகோபன்’ எனச் சடகோபர்க்கு அடையாக்கலுமாம். மன்னி – நிலைபெற்று.ஈடு : முடிவில், 1‘சர்வேசுவரனுடைய இரண்டு வகைப்பட்ட உலகங்களின் செல்வங்களும் திருவாய்மொழியைக் கற்றவர்கள் இட்ட வழக்கு,’ என்றார்.

    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி – இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து. கண்ணன் ஒண் கழல் மேல் – தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே. செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச்சடகோபன் – சிவந்த தாமரையையுடைய பழனங்களையுடைத்தாய்த் தெற்குத்திக்கிற்குச் சிறந்ததாயுள்ள திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த. அவனுடைய காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே 2‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.

    பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் – 3‘இந்தக் காவியத்தில் உம்முடைய வாக்கு ஒன்றேனும் பொய்யாக மாட்டாது,’ என்கிறபடியே, ‘பொய்யில்’ என்பதனைத் திருவாய்மொழி எல்லாவற்றுக்கும் அடைமொழியாகக் கொள்க. ‘பொய்யில்லாத ஆயிரம்’ என்ற போதே 4அவ்வோபாதி இப்பத்துப் பாசுரங்கட்கும் வருமே அன்றோ? அன்றிக்கே, ‘அவாப்த சமஸ்த காமனான சர்வேசுவரன் ஒரு நித்திய சமுசாரியோடே இப்படி விரும்பி வந்து கலந்து இவருடைய உயிர் முதலானவற்றையே தனக்கு உரிய இன்பப் பொருள்களாக இருந்தான் என்கிற காதல் குணத்தில் பொய் இன்றிக்கே இருக்கிற பத்து’ என்னுதல். வையம் மன்னி வீற்றிருந்து – பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து. மண்ணூடே
விண்ணும் ஆள்வர் – 1இங்கே இருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது, ‘அங்கே போனால் 2‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே, இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.

    ‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் 3‘நம்மைப் போலே வாய்புகு சோறாகப் பறிகொடாதே, பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே 4‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர். இளமையிலே பட்டரைப் பறிகொடுத்தவர் அன்றோ அவர்?           

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

கோவா ஈசன் குறைஎல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்துஅடையக் காட்டிக் கலந்தகுண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்ததுஇந்த மண்.         

வையம் மன்னி வீற்றிருந்து’ என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
‘நம்மைப்போலே’ என்று தொடங்கி. இந்த ஐதிஹ்யத்தால் நஞ்சீயருடைய
ஆசார்ய பிரதிபத்தி விளங்கும்.

  ‘தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதுதான்
இந்நாடு தன்னில் இருக்கும்நாள் – அந்நேர்
அறிந்துமதில் ஆசையின்றி ஆசா ரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்மனமே! பேசு.’

  என்பது உபதேசரத்தினமாலை, 64.

உபய விபூதியும் இட்ட வழக்கு ஆனதே -பலன் சொல்லி
விண்ணும் ஆள்வர் இங்கேயே இருந்து
உபாயம் வேற இல்லை
ப்ரீதி உள்ளவனை பேசுவதை ஒழிய தரிக்கை வழி இல்லை
கண்ணன் -இறுதியில் இழியும் துறை
பிரண இத்தவம் காட்டி
அனுசந்தானத்தாலே ஊரும்
பெருமாள் -அயோதியை
போலே திருநகரி முழுவதும்
பொய்யில் பாடல் -ஸ்ரீ -ராமாயணம் பிரம்மா வரம் -போலே
சர்வேஸ்வரன் அனுக்ரகம் பொய்யில் பாடல் கேட்க வேண்டுமா விசேஷணம்
இப்படி கலந்த -இந்த பத்தும்
பிரணயித்வ குணம் –
ஆயிரமும் பொய்யில்லாதவை என்றும் கொள்ளலாம்
சத்யம்

வையம் வீற்று இருந்து
எம்பெருமானார் போலே
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பெற்று
உபய விபூதியும் இட்ட வழக்கு ஆக்கி
சிட்டு சிறு முடி துண்டு காகிதம் கொடுத்து அனுப்பினாலும்
பரம பதம்
ஆழியான் தமர் ஆளவும் கொடுப்பான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

          

Leave a Reply