என்னது ஆவி மேலையாய்! ஏர்கொள் ஏழ்உ லகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ண மேநின்றாய் என்று உரைக்க வல்லனே?
பொ-ரை : ‘என் உயிர்மேல் காதல் கொண்டுள்ளவனே! அழகு பொருந்தியிருக்கின்ற ஏழ் உலகங்களிலும் பரந்து நிறைந்து எல்லாப் பொருள்களுமாகி நின்ற சோதி மயமான ஞானத்தையே வடிவாக உடையவனே! என்னுடைய உயிரும் உன்னுடையது; உன்னுடைய உயிரும் என்னுடையது; இன்ன தன்மையிலே நின்றாய் என்று உரைக்க வல்லனோ? வல்லவன் அல்லன்,’ என்றவாறு.
வி-கு : மேலையாய் – விளிப்பெயர்; எச்சமாகக் கோடலும் அமையும். அப்பொழுது மேலை ஆகித் துன்னி முற்றுமாகி நின்ற மூர்த்தி’ என இயையும். ‘வல்லனே’ என்றதில், ஏகாரம் எதிர்மறைப்பொருளது.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாதபடி பிறந்த கலவி, பேச்சுக்கு நிலம் அன்று,’ என்கிறார்.
என்னது ஆவி மேலையாய் – ‘என் ஆத்துமாவைப் பெற்று அதனால் வந்த 2பிரீதி பிரஹர்ஷத்தையுடையாய்’ என்னுதல். அன்றிக்கே. ‘என்னைப் பெற வேண்டும் என்னும் ஆசையை உடையாய்’ என்னுதல். மேலையாய் – எச்சம். அன்றிக்கே, ‘என்னது ஆவி மேலையாய்!’ என்பதனை விளிப்பெயர் என்னுதல். ஏர்கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய் – ‘இவரைப் பெற்ற பிரீதியாலே பரந்து நிறைந்து நிற்றலும் புதுக்கணித்தது என்கிறார்’ என்னுதல். அன்றிக்கே, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கல் உண்டான ஆசையாலே ஊரை வளைவாரைப்போலே, தம்மை அகப்படுத்துகைக்காகப் பரந்து நிறைந்து இருப்பவன் ஆனான் என்கிறார்’ ஆதல். இவரோடே வந்து கலந்த பின்பு உலகத்திற்குப் பிறந்த புதுக்கணிப்பைத் தெரிவிப்பார்,
‘ஏர்கொள் உலகம்’ என்கிறார். ‘உண்டி உடல் காட்டும்’ என்னுமாறு போலே, 1ஆத்துமா நிறைந்தவாறே சரீரமும் புதுக்கணிக்குமே அன்றோ? உலகத்தையே உருவமாக உடையவன் அன்றோ அவன்? சாதி, பொருள்கள்தோறும் மறைந்து இருத்தல் போன்று, இறைவனும் குறைவறப் பரந்து நிற்கின்றான் ஆதலின், ‘துன்னி முற்றுமாகி நின்ற’ என்கிறார். சோதியின் உருவமான ஞானத்தையே வடிவாகவுடையன் ஆதலின், ‘சோதி ஞான மூர்த்தியாய்’ என்கிறார்.
என்னது ஆவியும் உன்னது; உன்னது ஆவியும் என்னது – என்னுடைய ஆவி உன்னது; உன்னுடைய ஆவி என்னது. என் சொரூபம் நீ இட்ட வழக்கு; உன் சொரூபம் நான் இட்ட வழக்கு. இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்கையில் இருந்த முதலிகளிற்சிலர், 2‘இவ்வாத்துமாவின் சொரூபம் அவன் இட்ட வழக்கு என்பது கூடும்; அவன் சொரூபம் இவன் இட்ட வழக்காவது என்?’ என்று கேட்க, ‘இவன் தன்னை அவனுக்கு ஆக்குவான் என்ற அன்று கர்மம் தடைசெய்யவும் கூடும்; சர்வேசுவரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடைசெய்பவர் இலர்; ஆன பின்பு, அதுவே நிலை நிற்பது. மேலும், ‘இவன் சொரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ?’ என்று இதிலேகாணும் சந்தேகிக்க வேண்டுவது,’ என்று அருளிச்செய்தார். இன்னவண்ணமே நின்றாய் – இந்த வகையிலே நின்றாய். என்று உரைக்க வல்லனே – ‘இப்படிப்பட்ட உன்னுடைய காதல் குணத்தை என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாய் இருந்ததோ?’ என்கிறார்
ஒருவர் இன்றி ஒருவர் இல்லை
உன்னது என்னதாகி
இட்ட வழக்கு
எனது ஆவி மேலே –
சத்தை -அபிநிவேசம் உடைய எம்பெருமானுக்கு
நாராயணனே
எனது ஆவி மேல் வைத்து இருக்கிறவனே –
லோகங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறவனே
ஏர் கொள் அழகான உலகம் -வ்யாப்தி இருந்தாலும்
இவரை பெற்ற ப்ரீதியாலே -வ்யாப்தி புதுக் கணித்து –
ஒருவனைப் பிடிக்க நினைக்க அவன் பக்கல் உள்ள அபிநிவேசத்தாலே ஊரை வளைப்பது போலே
வியாபித்து -ஆழ்வாரைக் கொண்டான்
கலந்த பின்பும் ஜகத்தும் புதுக் கணிப்பு பிரகாசிக்க உலகு எம்பெருமானின் உடல் தானே
சந்தோஷ ம் வெளிப்பாடு சரீரம் மூலம் தானே தெரிய வரும்
உண்டி உடல் காட்டுமா போலே
பூரணன் ஆனது ஜகம் காட்டிற்று
துன்னி முற்றுமாகி நின்ற பரந்து குறை அற்று நின்று
அகில ஹேய பிரத்யநீக கல்யாணை ஏக சொல்வது போலே
சொல்லுவது போலே வியாப்தி பூர்ணம்
ஜாதி குணம் போலே பூர்ண வ்யாப்தி
சோதி தேஜஸ் ஸ்வரூபமான ஞானம் உடையவன்
உன்னது என்னதாகி
எனது ஸ்வரூபம் நீ இட்ட வழக்கு
உனது ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு
ஆளவந்தார் அருளி -முதலிகள் கேட்ட ஐதிகம்
அவன் ஸ்வரூபம் ஆழ்வார் இட்ட வழக்கு ஆவது என்ன
ஈஸ்வரன் -நிவாகரகர் இல்லை
நடத்துவது அவன் தானே
ஜீவாத்மா பரமாத்வா இட்ட வழக்கு -கரம் நிபந்தனை உண்டே தடுக்க ஆளில்லை
அது கூடும் இது கூடுமோ கேள்வி கேடு இருக்க வேண்டும் என்று அருளினார்
நிவாரகர் இல்லையே அவன் நடப்புக்கு
சாரதியாக ஆக்கிக் கொண்டானே
இதிலே தான் சங்கை கொள்ள வேண்டும் -அதிலே இல்லையே
இப்படிப் பட்ட உனது பிரணயித்வம் என்னால் பாசுரம் இட்டு சொல்ல முடியுமோ
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply