குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா!
குரைக ழல்கை கூப்பு வார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டே னேலும்உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்னது ஆவிமேலதே.
பொ-ரை : ஒலிக்கின்ற திருவடிகளை நீட்டி உலகத்தை அளந்து கொண்ட அழகிய வாமனனே! ஒலிக்கின்ற திருவடிகளில் கைகூப்பி வணங்குகின்றவர்கள் அடையும்படி நின்ற மாயவனே! வாசனை பொருந்திய பூக்களையும் தண்ணீரையும் கொண்டு துதிக்கமாட்டேனேயாகிலும், வேதங்களால் புகழப்படுகின்ற உன்னுடைய சோதி மயமான திருமேனியானது என்னுடைய உயிரின் மேலதேயாம்.
வி-கு : ‘நீட்டிக்கொண்ட வாமனா! என்க. ‘ஏத்தமாட்டேனேலும், உன் திருவுருவம் என்னது ஆவி மேலது,’ என்க. விரை – வாசனை. ‘விரை’ என்னும் அடையை நீருக்கும் கூட்டுக. இப்பாசுரத்தில் முதல் அடியாலே, சேஷித்வ பிரதானமான பிரணவார்த்தமும், ‘குரைகழல்கள் கைகூப்புவார்கள்’ என்றதனால், நமஸ் சப்தார்த்தமும், ‘கூடநின்ற மாயனே’ என்றதனால், நாராயண சப்தார்த்தமும் சொல்லுகிறது என்பர் பெரியோர்.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே இருக்கிலும் என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.
குரை கழல்கள் நீட்டி – 2‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளேயாம்படி திருவடியை நிமிர்த்து. குரை – பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல். மண் கொண்ட கோலவாமனா – 3மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி. இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார். இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று. அஞ்சலி மாத்திரத்தாலே சாதிக்கப்படு பொருள் என்கிறார் மேல்: குரைகழல் கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே – ‘உன் திருவடிகளிலே கைகூப்பி வணங்கினவர்கள் உன்னைக் கூட நின்ற மாயனே’ என்னுதல். அன்றிக்கே, ‘கைகூப்புவார்கள் குரை கழல்கள் கூட நின்ற மாயனே’ என்று கொண்டு கூட்டி, ‘உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனே’ என்னுதல். திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது? 2இந்திரனுக்கு இராச்சியம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளில் அழகு கூறுபட்டதாதலின், ‘குரை கழல்கள்’ என்கிறார். ‘அவனுக்குச் சாதனமானது இவர்க்குச் 3சாத்தியம் ஆயிற்று,’ என்றபடி.
மாயனே – 4‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார். விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் – வாசனையையுடைத்தான பூவையும் நீரையும் கொண்டு 5‘எல்லாமாய் இருக்கிற பூமியைப் பனி போன்று குளிர்ந்திருக்கின்ற தண்ணீரால் நனைக்கட்டும்; பின்னர், மற்றவர்கள் எங்கும் பொரிகளாலும் மலர்களாலும் வாரி இரைக்கக் கடவர்கள்,’ என்கிறபடியே. வகுத்த அடிமை செய்யமாட்டிற்றிலனேயாகிலும். என்றது, ‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி நீ இருந்தால், அறிவுள்ள ஒருவன் மலர் முதலான
கருவிகளைக்கொண்டு அடிமை செய்கையன்றோ தக்கது? அப்படிச் செய்யப் பெற்றிலனேயாகிலும்’ என்றபடி.
உரை கொள் சோதித் திரு உருவம் – 1‘சக்கரவர்த்தி திருமகன் இராச்சியத்தை ஆளுகின்ற காலத்தில் மக்களுக்கு இராமன் இராமன் இராமன் என்று எல்லா வார்த்தைகளும் உண்டாயின; உலக முழுவதும் இராமன் சொரூபமே ஆயிற்று,’ என்பது போன்று, 2‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருக்கிற சோதி மயமான திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘பேச்சுக்கு அப்பாற்பட்ட திருமேனி’ என்னுதல். அன்றிக்கே, ‘மாற்றும் உரையும் அற்ற திருமேனி’ என்னுதல்; 3‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது,’ என்பது தமிழ் மறை அன்றோ? என்னது ஆவி மேலது – இப்படி வேறுபட்ட சிறப்பினையுடைய உன் திருமேனி என் உயிரின் மேலது. நித்தியசூரிகளுக்குப் போக்கியமான திருமேனிக்குத் தாரகம் முதலானவைகள் என் ஆத்துமா ஆவதே! 4‘கலியர் சோற்றின்மேல் மனம்’ என்னுமாறு போலே. 5‘இவர்தாம் ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்; நான் பரமாத்துமாவிற்கு இனியன்,’ என்று இருக்குமவர் அன்றோ?
உரைகொள்’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
முதற்பொருளில், உரையையுடைத்தாயிருக்கை. இரண்டாவது பொருளில்,
உரையை வென்றிருக்கை. மூன்றாவது பொருளிலும் உரையை வென்றிருக்கை
என்பதே பொருள்.
பிரேமமும் இல்லை செயலும் இல்லை இருந்தாலும் எனது சத்தையே உனக்கு ஜீவனம் ஆனதே
குரை கழலை நீட்டி மண் கொண்ட கோல வாமனன்
விரை வாசனை உள்ள பூ
உன்னுடைய தேஜஸ்
பூமிப் பரப்பு அடைய -விசாலமான திருவடி –
குரை ஓசையும் பரப்பும்
மண் கொண்டதும் -திருவிக்ரமன்
வாமன வேஷம் நெஞ்சிலே ஊறி இருக்க –
சுட்டக் காய்ச்சிய திரட்டுப் பால் போலே –
முன் கொண்ட -கோலம் -கொள்ள வேணும் நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம்
பண்டு -அதுவும் ஒரு காலம்
முன் -அதுவும் ஒரு காலமே –
கேசவாதி திரு விக்ரமன் சொல்லி வாமனன்
தம்மை அனுபவிக்க இந்த வடிவு கொண்டான் கோல வாமனன் –
அஞ்சலி ஒன்றே உபாயம்
உன்னை கை கூப்புவார்கள்
குரை கழலிலே கை கூப்புவார்கள் -கூட நிற்ப்பார்கள் –
அஞ்சலிக்கு சாதனமும் -விஷயம் பிராப்ய பிராபகம் -இரண்டும் குரை கழலே
இந்த்ரன் ராஜ்யம் ஆசை ஆழ்வாருக்கு திருவடி
அவனுக்கு சாதனம் இவருக்கு சாத்தியம்
மாயன் -ஆசார்யம் அஞ்சலிக்கு இவ்வளவே
இந்த அஞ்சலி கூட செய்யாமல்
புஷ்பாதி கொண்டு வகுத்த -பூவையும் தீரத்தையும் கொண்டு -அடிமை செய்ய பெற்றிலேன்
பூவோடும் நீரோடும் -பரத்வாஜ ஆஸ்ரமம் -பெருமாள் ராஜ்ஜியம் திரும்ப –
தெளித்து குளிர வைத்து -சத்ருகன ஆழ்வான் கைங்கர்யம் –
செய்யப் பெற்றேன் ஆகிலும்
உனது திரு உருவம் வார்த்தையாலே சொல்லப் படும்படி
வாய் புலற்றும்படியாய் இருக்குமே ஒழிய -உரை கொள்
வார்த்தையால் விபரிக்க முடியாதே
ராமோ ராஜ்ஜியம் பிரஜாபதி -ராம பூதம் ஜகத் பூதோ
எங்கும் ராம சப்தம் -அதுக்கு மேலே வார்த்தையால் வர்ணிக்க முடியாதே
பேச்சுக்கு நிலம் இன்றி
சுட்டு உரைத்த நன் பொன் -மூன்று விசேஷணம் சொல்லியும் -நின் திருமேனி ஒளி ஒவ்வாது –
எனது பிராணன் மேல்
சூரி போக்யமான சத்தை படி -என்னை இன்றி தரிக்காமல் –
சோற்றின் மேல் மனம் பசியன் போலே
ஆழ்வார் மேலே எம்பெருமான் இருக்க –
இவர் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று இருப்பாரே
கலயாமி -கலி பதினெட்டு அர்த்தம் -கலி பசி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply