திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-3-6–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கால சக்க ரத்தொடு
வெண்சங் கம்கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டுஉமிழ்ந்த
நாரா யணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான்அழைத்தால்
ஒன்றும் வாரா யாகிலும்,
கோல மாம்என் சென்னிக்குஉன்
கமல மன்ன குரைகழலே.

    பொ-ரை : ‘பகைவர்களுக்கு முடிவு காலத்தைச் செய்கின்ற சக்கரத்தையும் வெண்மையையுடைய சங்கினையும் திருக்கைகளிலே ஏந்தினவனே! பூமி முழுதினையும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்பதாகக் கூப்பிட்டு நான் அழைத்தால், சிறிதும் வாராமல் இருந்தாயேயாகிலும், உனது தாமரை மலர் போன்ற ஒலிக்கின்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாம்.

    வி-கு : ‘உன் கமலம் அன்ன குரைகழல் என் சென்னிக்குக் கோலமாம்,’ என்க. கோலம் – அழகு. ஒன்றும் – சிறிதும். எண்ணுப் பொருளுமாம்.

ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இப்படிக் காதலை உடையையாய் இருந்துள்ள நீ என்னைக் கிட்டாதே ஒழிந்தாயேயாகிலும், உன் திருவடிகளே எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘உனக்கு நான் உதவப்பெற்றிலேனாகிலும், என் உயிர் முதலானவைகள் உனக்குத் தாரகம் முதலானவைகள் ஆனாற்போலே, நீ வாராயாகிலும் உன் திருவடிகள் எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘அவனுடைய காதலைச் சொல்லாநிற்க, நடுவே தம்முடைய காதலைச் சொல்லுவான் என்?’ என்னில், இருவர் கூடிக் கலவாநின்றால் பிறக்கும் ரசங்களும் இருவருக்கும் உண்டாய் இருக்குமேயன்றோ? அவற்றுள், மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின் மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.

    கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் – 2இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியிருக்கிற அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே, திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார், ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த – பிரளய ஆபத்திலே வரையாமல் திருவயிற்றிலே வைத்துக் காத்து, அப்பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்படவிட்டு, இப்படி 3வரையாமல்

காப்பாற்றுகின்ற. என்றது, ‘இவற்றை ஆபரணமாகக் கொண்டு அலங்கரித்து, உலகம் நோவுபடத் தான் அலங்காரம் அழியாதே இருக்கை. அன்றிக்கே, ஆபத்திற்குத் துணைவனாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.

    நாராயணனே – 1இப்படி வரையாமல் பாதுகாக்கவும் ‘இவன் நம்மைப் பாதுகாத்தான்’ என்று கைம்மாறு தேடி நெஞ்சாறல் படவும் வேண்டாதபடி சம்பந்தம் இருக்கிறபடி, 2‘தாய் நம்மை வயிற்றிலே பாதுகாத்தாள்; நாம் இவளுக்கு என் செய்வோம்?’ என்று நெஞ்சாறல்படுவார் இலரே அன்றோ? அதற்கு அடி, சம்பந்தம்; அப்படியே அன்றோ அவனும்? 3‘தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டவன்’ என்பதே அன்றோ ஆறு அங்கம் கூற அவதரித்த ஆலிநாடர் திருவாக்கு?

    என்று என்று – கையும் ஆழ்வார்களுமான அழகையும் காலத்திற்குத் தகுதியாக ஆபத்தில் துணையாயினமையையும், 4இவை இல்லாவிடிலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் சொல்லி. ‘என்று என்று’ என்னும் அடுக்கு, தனித்தனியே ஆழங்காற்பட்டமையைத் தெரிவிக்கிறது. ஓலம் இட்டு நான் அழைத்தால் – 5வலி இழந்தவனான நான் கூப்பிட்டு அழைத்தக்கால். ‘ஓலமிட்டு’ என்றதனால் பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து வரவேண்டும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகின்றமை போதரும். ஒன்றும்வாராயாகிலும் – 1‘உபப்பிலாவியம் என்ற நகரத்திலிருந்து வந்தவரான ஸ்ரீ கிருஷ்ணன் குசஸ்தலம் என்கிற இடத்தில் தங்கியிருக்கிறார்; அவர் காலையில் இங்கு வருவார்,’ என்கிறபடியே, அங்குநின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று வருகைக்குக் காரணம் இல்லையேயாகிலும். 2அன்றிக்கே, ‘கிருஷ்ணனுடைய திருப்பெயரை நினைவு ஊட்டுகின்ற திருச்சின்னத்தின் ஓசையானது குளிர்ந்திருக்கும்’ என்னக்கடவதன்றோ? என் சென்னிக்குக் கோலமாம். – 3‘ஸ்ரீராமபிரானுடைய திருவடிகள் என் தலையினால் தாங்குகின்றவரையில் எனக்குச் சாந்தி உண்டாக மாட்டாது’ என்று இருக்கின்ற என் தலைக்குக் கோலமாம். உன் கமலம் அன்ன – ‘செவ்விப்பூச் சூட வேண்டும்’ என்று ஆசைப்படுவாரைப் போலே. குரைகழல் – குரை என்று பரப்பாய், அதனாலே இனிமையின் மிகுதியைச் சொல்லிற்றாதல்; அன்றிக்கே, ஆபரணங்களின் ஒலியைச் சொல்லிற்றாதல். “வாராயாகிலும் கோலமாம்’ என்பான் என்?’ என்னில், ‘வாராது ஒழியக்கூடாது; கூடாதது கூடிலும் என் நினைவு இது,’ என்கிறார். 4என்னை அடியிலே இப்படி ஆக்கினாயே!’ என்பது கருத்து. அடிவிடில் ‘நின்னலால் இலேன்காண்’ என்பாரே!

‘உமக்கு இப்படி ருசியைப் பிறப்பித்தார் யார்?’ என்ன, ‘என்னை அடியிலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘அடியிலே’ என்றது,
சிலேடை : ‘திருவடிகளிலே’ என்பதும், ‘ஆதிகாலத்திலே’ என்பதும்
பொருளாம். ஆகையாலே, சத்தாபிரயுக்தம் என்கிறார், ‘அடி விடில்’ என்று
தொடங்கி. ‘நின்னலால் இலேன்காண்’ என்ற இது, திருவாய்மொழி, 2.3:7.

தமக்கு அவன் மேல் உள்ள ப்ரீதி யைச் சொல்கிறார்
அவனுக்கு தமது மேல் உள்ள ப்ரீதி இவற்றை உண்டாக்கினது என்கிறார் –

ப்ரீதி கொண்டு -என்னைக் கிட்டாதே -இருந்தாயே ஆகிலும் –
உனது சத்தையே எனக்கு தாரகம் –
தமக்கு அவன் இடம் உள்ள ப்ரீதியை இதில் அறிவிக்கிறார் –
சிஷ்யோ உபசாரம் -எனது சத்தை உனக்கு தாரகம் -போலே –
நீ ஒன்றும் வாராயே ஆகிலும் –
அவனுடைய ப்ரீதி சொல்லி வந்த ஆழ்வார்
அதிசயம் தம்மையும் பிரநீயத்வம் ஆக்கி வைக்க –
ஆனந்தம் இரு தலைக்கும் தானே –
உன்னைத் தவிர வேற தாரகாதிகள் இல்லை என்கிறார் –
கால சக்கரத்தோடு -வெண்மையான சங்கை ஏந்தியவனே
நாராயணனே ஓலமிட்டு அழைத்தாலும் வாராய் ஆகிலும்
உனது திருவடியே எதிர்பார்த்து இருப்பேன்
ஆழ்வார் கூப்பிட்ட பாசுரம் –
கால சக்கரம் -யமன் விரோதி நிரதசன
ச்யாமளமான திருமேனிக்கு பரபாகமான வெண்மை
வெறும் புறத்தில் ஆலத்தி கழிக்கும்படி
பூ ஏந்தினது  போலே இருப்பவனே

புஷ்பம் போலே அனாயாசமாக ஏந்திக் கொண்டு
பாஞ்ச ஜன்யம் வெளுப்பு -கால சக்கரம் -விசேஷணம்
ஞாலம் உண்டு உமிழ்ந்து ஆபத்சகனாய் இருக்கும் –
அலங்கரித்து -இருந்தாலும் ஒப்பனை அழியாதே விபூதி அழியும் பொழுது –
வரையறை இன்றி அனைவரையும் திரு வயிற்றில் வைத்து ரஷித்து பின்பு வெளி நாடு காண உமிழ்ந்து
நாராயணம் பிராப்தி உண்டே
ரஷிப்பதே ஆகாரம்
நீ யும் என்னை அன்றி இலையே –
நாரணன் ஆக நாரம் வேண்டுமே –
மா தா -என்னை ரஷித்தாய் -சொல்லும் பிரஜை இல்லையே
பிராப்தி சம்பந்தம் உண்டே –
எவ் உயிர் க்கும் தாய் இருக்கும் வண்ணமே வயிற்றில் ரஷித்து –
என்று என்று மீம்சை –
கையும் ஆழவார்களுமான  அழகையும் –
கால ஆபத்சகத்வம்
அழகும் ரஷணனும் இல்லாதாகையாலும் பிராப்தி
அழைத்தாலும் –
ஒன்றும் வாராய் ஆகிலும் –
குசத்ச்தலம் வந்து கொண்டு இருக்கிறான் செய்தியும் வரவில்லை
நாதச்ய சீதலச்ய தொனி –
எனது சென்னிக்கு உனது -குரை கழல் -கமலம் அன்ன செவ்விப்பூ சூட ஆசைப்பட
சிரசா தாரயிஷ்யாமி -பரதன் –
அழகான போக்யதம் -தொனி ஒலிக்கும் கழல் –
கோலம் -ஆகும்
வாராயாகிலும் கோலம்
கூடாதது கூடிலும் –
அடியிலே இப்படி ஆக்கினாய்
துயரறு  சுடர் அடி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply