திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-3-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடிமுதலா
எண்ணில் பல்க லன்களும்; ஏலும் ஆடை யும்அஃதே;
நண்ணி மூவு லகும் நவிற்றும் கீர்த்தி யும்அஃதே;
கண்ணன் எம்பி ரான்எம்மான் கால சக்கரத் தானுக்கே.

    பொ-ரை : காலத்தை நடத்துகின்ற சக்கரத்தையுடையனான எம்மானும் எம்பிரானுமான கண்ணபிரானுக்கு, என்னுடைய உயிரானது

அவன் அணிந்துகொள்ளுகின்ற மாலையாய் இராநின்றது; அவன் தரித்திருக்கின்ற பொன் மயமான ஒளி பொருந்திய திருமுடி முதலான எண் இல்லாத பல வகையான ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாய் இராநின்றது; பொருந்திய பீதாம்பரமும் அந்த அன்பேயாகும்; மூவுலகத்தாரும் பொருந்திச் சொல்லுகின்ற கீர்த்தியும் அந்த அன்பேயாகும்.

    வி-கு : ‘எனது உயிர் கண்ணி; காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் அஃதே; ஏலும் ஆடையும் அஃதே; கீர்த்தியும் அஃதே’ என்க. கண்ணி – மாலை. கண்ணி என்பதற்குத் ‘தலையில் அணியும் மாலை’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். கலன் – ஆபரணம்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1தம்முடைய அன்பு முதலானவைகள் ஓர் ஒன்றே ஆபரணங்கள்  முதலான எல்லாப் பரிச்சதங்களும் ஆயிற்று அவனுக்கு என்கிறார்.

    எனது உயிர் கண்ணி – 2‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’ என்பார், ‘எனது உயிர் கண்ணி’ என்கிறார். அன்றிக்கே, 3‘மார்வத்து மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது; அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு மாலையாகக் கொண்டான்?’ என்பார், ‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம். கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் – விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம். ‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது ஏன்?’ என்னில், இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற இதனையே, தனக்குப் பல ஆபரணங்கள் சார்த்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே, அதனை நோக்கிச் சொல்லுகிறார். ஏலும் ஆடையும் அஃதே – திரு அரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்.

ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப் பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட, மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, ‘நாயன்தே! இவன் திருஅரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண்சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள, கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி, ‘இவனுக்காக ரஜகன், நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார். அன்றிக்கே, ‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, 2‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே, ‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம். இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ? 3‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்கிறபடியே, இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ? ‘இது கூடுமோ?’ என்று சந்தேகிக்க வேண்டா; இவை 4‘பொய்யில் பாடல்’ ஆகையாலே கூடும்.

    மூ உலகும் நண்ணி நவிற்றும் கீர்த்தியும் அஃதே – விசேடஜ்ஞர் அன்றிக்கே, மூன்று உலகத்துள்ளாரும் வந்து கிட்டிக் கடல் கிளர்ந்தாற்போலே துதிக்கிற கீர்த்தியும் அந்த அன்பேயாம். 5‘இவர் காதலித்த பின்னர் வேறு பொருள்களிலே நோக்குள்ளவர்களும் அப்பொருள்களில் நோக்கு இல்லாதவர்களாகி ஏத்தாநின்றார்கள்.’ என்றாயிற்றுவன் நினைத்திருக்கிறது. ஆக, 1‘ஓர் இனப்பொருள்கள் பலவாதலே அன்றி, வேற்றினப் பொருள்களும் பலவாகத் தொடங்கின’ என்பதனைத் தெரிவித்தவாறு. இக்காதலுக்குக் கைதொட்டுக் கிருஷி பண்ணினபடி சொல்லுகிறது மேல் : 2விருத்தவான்களைக் காட்டிக் காணும் விருத்திபரர் ஆக்கிற்று இவரை.

    கால சக்கரத்தான் எம்மான் எம்பிரான் கண்ணனுக்கு – கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எனக்கு வேறு ஒன்றிலே நெஞ்சு செல்லாதபடி செய்தலாகிய மஹோபகாரத்தைச்செய்து, 3‘கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்னும்படி செய்த என் ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு. பகலை இரவு ஆக்க வல்ல சக்கரமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார். கால சக்கரம் – ‘காலத்தை நடத்துகின்ற சக்கரம்’ என்றபடி. அன்றிக்கே, 4‘கலிகாலத்தில் பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் விஷ்ணுவாகிய சர்வேசுவரனைப் பூஜிக்கின்றார்கள் இல்லை,’ என்கிற காலத்திலும், இருள் தரு மா ஞாலத்திலும் இருளை ஓட்டி, 5அருளார் திருச்சக்கரமாய்த் திருக்கரத்திலே விளங்கிக்கொண்டிருப்பவன் ஆதலின், ‘காலத்திற்குக் கட்டுப்பட்டிருக்குந்தன்மையைப் போக்கும் சக்கரம்’ என்னுதல். சர்வேசுவரன் திருக்கரத்தைத் தான் பிரியாமல் இருத்தல் போலே, திருவடிகளைத் தாம் பிரியாதபடியான ருசியை உண்டாக்கக்கூடிய திருவாழி என்பதனைத் தெரிவித்தபடி. அவனுடைய திருக்கையிலே நின்ற அழகாலே மக்கள் சென்று காலிலே விழும்படி செய்யுமவன் என்பதாம்.        

பிரயோஜனத்தை விரும்புகிறவர்கள் துதிக்கிற கீர்த்தியை அநந்யப்
பிரயோஜனரான தம்முடைய காதல் என்னலாமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவர் காதலித்த பின்னர்’ என்று தொடங்கி. இங்கே
‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய, பேரும் தார்களுமே
பிதற்ற’ (திருவாய். 6. 7 : 2.) என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.

திருவிருத்தம், 33.

  ‘அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’

கண்ணி -உயிர் ஆக கொண்டே
எம்பிரான் கண்ணன் கால சக்கரத்தான்
ப்ரீதி -காதல் -கிரீடம் ஆபரணம்
வஸ்த்ரம் பொருத்தமான இதுவும் காதலே
கீர்த்தி யும் அதுவே பக்தியே
எனது உயிர் -நான் என்னது என்றது கிடீர் அவன் மாலையாகக் கொண்டான்
மார்வத்து மாலை -நங்கை பெரிய பிராட்டி
ஆபரணம் போலே பிராட்டி –
என்னையும் கொண்டானே
காதல் -வேட்கை அன்பு அவா பக்தியைக் காட்டும்
ச்ப்ருஹநீயமாய் பல வகைப் பட்ட திரு ஆபரணங்களும்
ஸ்நேகம் விஷயம் ஆனதை புகர் வந்ததே –
அதனால் –
ஆடையாகவும் கொண்டான் பீதாம்பரமும் காதல் –
ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் ஐதீகம் -எம்பெருமானார்
தனியாக துறை -ஆச்சார்யமாக செய்து வந்தான்
கைப்பிடித்துக் கொண்டு புக்கு -அனுஷ்டானம் எம்பெருமானார் –
நாயந்தே -திருக் கண் சாய்த்து அருள வேணும் -காட்டி அருள
கண்டு உகந்து அருளி –
ஜீயோ அருளப்பாடு
வண்ணான் அபராதம் பொறுத்தோம் -திரு உள்ளமாய் அருளினார்

ஐதிக நிர்வாஹங்கள் நமது வியாக்யானங்களில் தானே உண்டு –
பிரம சூத்திரம் -அந்தர்யாமி அர்த்தம் சொன்னேன் -ஜைமினி வேற மாதிரி சொன்னான் -வியாசர் அருளி
உபநிஷத் -ச்வேதகேது உத்தாரகர் -கதை சொல்லி நடந்த விஷயம் சொல்லும் சம்ப்ரதாயம்
கண்ணி -ஆபரணம் -பீதாம்பரம் அனைத்தும் இதுவே இவர் பக்தி
திருவாய் மொழி அடிமைக்கு அன்பு செய்வித்து அறியாக் காலத்திலேயே
பால்யே பிரவர்த்தி
சம்சயம் வேண்டாம்
கீர்த்தியும் இந்த காதல்
கடல் போன்ற -காதல் –
அந்ய பரராய் ஏத்தா நின்றார்கள் அனைவரும் -எம்பெருமான் நினைப்பால்
காதல் உண்டானது
எம்பெருமான் -கை கோத்து சக்கர அழகு
அனுஷ்டானம் செய்ய வ்ருதரைக் காட்டி
வ்ருத்தம் -வட்டம்
இரண்டு அர்த்தம்
காட்டி வ்ருதமான் ஆக்கி
கால சக்கரத்தான் -கையும் திருஆழி அழகைக் காட்டி
உண்டோ கண்கள் துஞ்சுதல்
கழிய மிக்கதோர் காதல்
கிடைக் காவிடிலும் தூக்கம் இல்லை
கிடைத்த பின்பும் ஆனந்தத்தால் தூக்கம் இல்லை
கால சக்கரம் பகலை இரவாக ஆக்கும்
நடத்தும் –
இருள் தருமா ஞாலத்தில் இருளை போக்கி
ருசி ஜனகமான
கால வசயத்தை போக்கி
மாயைப் போக்கி சக்கரத் தாழ்வான் –
திருகையில் தாம் பிரியாதபடி நம்மையும் ஆக்கி
அவன் கையிலே நின்று காலிலே விழும்படி பண்ணுகிறான்
அப்படிப்பட்டவனுக்கு
உயிர் -கண்ணி ஆபரணங்கள் -பீதாம்பரம் —கீர்த்தியும் ஆனதே
அளவிட முடியாத கீர்த்தி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply