திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-3-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை
தந்த மாயப் பேய்உயிர்
மாய்த்த ஆய மாயனே!
வாஅ மனனே! மாதவா!

பூத்தண் மாலை கொண்டுஉன்னைப்
போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்
புனையும் கண்ணி எனதுயிரே
.

பொ-ரை : அழிப்பதற்கு நினைத்து உனது திருவாயிலே முலையை வைத்துப் பாலைக் கொடுத்த வஞ்சனை பொருந்திய பேய் மகளாகிய பூதனையினது உயிரை நீக்கிய ஆச்சரியமான செயல்களையுடைய ஆயனே! வாமனனே! திருமகள் கணவனே! குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக்கொண்டு உன்னை அவ்வக்காலத்தில் வணங்கிலேனேயாகிலும், உனது குளிர்ந்த அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு அணிகின்ற மாலை என்னுடைய உயிரேயாம்.

    வி-கு : ‘எண்ணித் தந்த பேய்’ என்க. ‘ஆய மாயனே’ என்பதனை ‘மாய ஆயனே’ எனப் பிரித்துக் கூட்டுக. ஆயன் – கிருஷ்ணன்.

    ஈடு : நாலாம் பாட்டு. 1‘பூதனை முதலானோரை அழிக்கின்ற காலத்தில் சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரங்களைச் செய்யப்பெற்றிலேனேயாகிலும், குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய மிருதுத்தன்மையையுடைய திருமேனிக்குச் சார்த்தும் மாலை என் உயிரேயாய்விடுவதே!’ என்கிறார்.

    மாய்த்தல் எண்ணி – 2‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார். 3‘சரீரியை நலிந்தால் சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ? உயிரிலே நலிந்தால் உறுப்புகள்தோறும் தனித்து நலிய வேண்டாவே அன்றோ? 4உலகங்கட்கெல்லாம்ஓர் உயிரே அன்றோ அவன்? 1‘நம்மைக் கொல்ல வருகின்றான்; சந்தேகம் இல்லை,’ என்றாரே அன்றோ மஹாராஜர்? ஆக, ‘அவள் கோலி வந்த படி அவசியம் சிலர் பரியவேண்டியதாக இருந்ததாதலின்’ ‘மாய்த்தல் எண்ணி’ என்கிறார் என்றபடி. வாய் முலை தந்த – 2அவன் திருப்பவளத்திலே நஞ்சினைக் கொடுத்தாற்போலே இருக்கையாலே ‘தந்த’ என்கிறார். அன்றிக்கே, ‘தருகையும் கொடுக்கையும் ஒரு பொருட்சொற்களாய், கொடுத்த என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது,’ என்னுதல். மாயப் பேய் – 3பிறவியால் வந்த அறிவு கேட்டுக்குமேலே, வஞ்சனையையுடையளாயும் வந்தாள்; என்றது, ‘பேயாய் வருகை அன்றிக்கே, தாயாயும் வந்தாள்,’ என்றபடி. 4‘தாயாய் வந்த பேய்’ என்றார் திருமங்கை மன்னன். உயிர் மாய்த்த – 5அவள் கோலி வந்ததனை அவள் தன்னோடே போக்கினபடி. மாய ஆயனே – ஆச்சரியமான ஆற்றலை

யுடைய ஆயனே! 1இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்; பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.

    வாமனனே – 2‘வெங்கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான், தன்கொங்கை வாய்வாய்த்தாள் சார்ந்து’ என்றும், 3‘பேய்ச்சிபால் உண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே’ என்றும் சொல்லப்படுகின்றபடியே அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு? அதுவும் இன்றிக்கே, 4இவனைப் பெற்றிட்டு வைத்துத் தாயும் தமப்பனும் தவத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்துவிட, அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இருந்த இடத்தே தானே போய்க்கிட்டும்படியாய் அன்றோ இருந்தது? என்றது, ‘தான் இருந்த இடத்தே அவர்கள் வந்து கிட்டினாற்போலே அன்றோ எதிரிகள் இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது? அது, மிகவும் வயிறு எரித்தலுக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ?’ என்றபடி. 5அதனையே அன்றோ, ‘சீராற் பிறந்து சிறப்பால்

வளராது, பேர்வாமன் ஆகாக்கால் பேராளா!’ என்று வயிறு பிடித்தார்கள்? மாதவா – 1‘தீ நாள் திருவுடையார்க்கு இல்’ என்கிறபடியே, இந்த அபாயங்களில் அவன் தப்பியது அவள் நெஞ்சோடேயிருந்து நோக்குகையாலே அன்றோ? ஓர் அபாயமும் இல்லையேயாகிலும், பெரிய பிராட்டியாரும் அவனுமான சேர்த்திக்கு மங்களாசாசனம் செய்கின்றவர்கள் தேட்டமாய் இருக்கிறது காணும். அன்புடையவர்கள் ‘வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,’ என்னா நின்றார்கள் அன்றோ? பூத்தண் மாலைகொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் – பூதனை முதலாயினோர் வந்து கிட்டின அவ்வக் காலத்திலே குளிர்த்தியையுடைத்தான பூ மாலையைக் கொண்டு குளிர்ந்த உபசாரத்தைச் செய்யப் பெற்றிலேனேயாகிலும். பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனது உயிரே – குளிர்ந்த மாலையால் அல்லது செல்லாதபடியாய் ஆதி ராஜ்ய சூசகமான உன்னுடைய திருமுடிக்கு விரும்பிச் சார்த்தும் மாலை, என் உயிர் – என் சத்தையாய்விட்டது.

இவனை – வாமனனை. ‘தாயும் தமப்பனும்’ என்றது, அதிதியையும் காசிப
முனிவரையும்.

  ‘காலநு னித்துஉணர் காசிபன் என்னும்
வாலறி வற்குஅதி திக்குஒரு மகவாய்
நீலநி றத்துநெ டுந்தகை வந்தோர்
ஆலமர் வித்தின் அருங்குறள் ஆனான்.’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.

உனது துக்கம் தீர்க்க ஒன்றும் செய்ய வில்லையே
சிஷ்யோ உபசாரம் செய்யப் பெற்றிலேன்
மாய்க்க வேண்டும் -முளை தந்த பூதனை மாய்த்த ஆய மாயனே மாதவா
வணங்கேன் ஏலும்
மாயப் பேய் -அவள் கோலி வந்த –
இன்னாரை மாய்க்க எண்ணி சொல்லாமல் ஜகம் முழுவதும் மாய்க்க வந்தாள்
கண்ணன் =உலகம் அனைவருக்கும் ஆத்மா
சரீரி நலிய சரீரம் தானே போகும்
உயிர் போனால் அவயவம் நலிய வேண்டாமே
மகாராஜர் -விபீஷண -நம்மை எல்லாம் கொல்ல வந்து இருக்கிறான் சொன்னது போலே
கண்ணனுக்கு ஆபத்து என்றால் உலகு அனைத்துக்கும் ஆபத்து
வாய் முலை தந்த
தனது வாயில் கொடுப்பது போலே தந்த
கொடுத்த சொல்லாமல்
தனக்கு வாயில் வைத்தது போலே இருந்ததாம் ஆழ்வாருக்கு
மாயப் பேய் -ஜன்மத்தால் மட்டும் அன்றி
கண்ணனை அழிக்க வந்த தாயாய் வந்த பேய்
உயிர் மாய்த்த -அவள் கோலி வந்ததை அவளுக்கு கொடுக்க
நித்யத்வம் கேட்க வந்த நித்ராத்வம் கேட்ட கும்பகர்ணன்
எறும்பி கடித்தால் சாகனும்
கடித உடனே சாகனும் -யார் சாகனும் கேட்கவில்லையே
ஆய மாயனே
பிள்ளை போலே உண்டான்
தாய் போலே கொடுத்தான்
ஸ்வரூப ஆவிர்பாவம்
சேஷத்வம் தானே வெளிப்படும்
பற்றின உடன் ஸ்வரூபம் வெளிப்படும்
பூதனை ஸ்வா பாவம் வந்ததே
வஸ்து ச்வாபத்தாலே முடிந்தது
வாமனனே -அடுத்து
சிஷ்யோ உபசாரம் யசோதை தாயாருண்டு
ஊட்டுவான் கொங்கை -மீட்டுப் பால் ஊட்டுவான்
ஆய்ச்சி முளை கொடுத்தாள்
இங்கு அதுவும் இன்றிக்கே
தபசுக்கு போன பெற்றோர்
தானே போய் யாசகம் இங்கே
எதிரிகள் உள்ள இடம் போனானே
பரிவுக்கு நான் இல்லையே
உண்டு உமிழ்ந்த பூமி -சொல்லு நீ -பெரிய திருவந்தாதி
சீரோடு பிறந்தான் சிறப்பொடு வளரவில்லை சக்கரவர்த்தி திருமகன்
திருமகன் கண்ணன் சீரோடு பிறக்க வில்லை சிறப்பொடு வளர்ந்தான்
ஸ்ரீ ஜெயந்தி பஷணம் பல உண்டே -ராமனுக்கு அவதாரத்திலே கொண்டாடி விட்டார்கள்
வாமனன் சீரோடும் பிறக்க வில்லை ரிஷி ஆஸ்ரமம் பிறந்தான்
சிறப்பொடு வளர வில்லை
பேர் வாமனன் -சின்னவன் –
உலகத்தில் உள்ள குள்ளர் திருவிக்ரமன் போலே இவன் உருவம் –
மாதவா -பிராட்டி உடன் சேர்ந்து
நெஞ்சோடு கடாஷிக்கையாலே அபாயம் தப்பினான்
நெஞ்சோடு பரி பூரணமாக
திருமார்பில் எழுந்து அருளி
அபாயம் இல்லையாயினும் சேரத்திக்கு மங்களா சாசனம்
பூ மாலை கொண்டு
சிஷ்ய உபாசாரம் பண்ண வில்லை
நெடு முடி -திருமுடி ஆதி ராஜ்ய சூசகம்
புனையும் கண்ணி எனது ஆத்மா உயிர் ஆக கொண்டாயே
பூம் த ண் மாலையாகக் கொண்டாயே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply