திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நாதனை ஞாலமும் வானமும்
ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து
எந்தை பிரான்தன்னைப்
பாதம் பணியவல் லாரைப்
பணியு மவர்கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறுஎம்மை
ஆளுடை யார்களே.

பொ-ரை : ‘தலைவனும், பூமியும் தெய்வ உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட சக்கரத்தையுடைய எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனு
மான எம்பெருமானுடைய பாதங்களை வணங்குகின்ற அடியார்களை வணங்குகின்ற அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம் எம்மை அடிமை கொண்டவர்கள் ஆவார்கள்,’ என்கிறார்.

வி-கு : ஞாலம், வானம் என்பன, ஆகுபெயர்கள். துழாய்ப் போது – துழாய் மலர். எம் தந்தை – எந்தை.

ஈடு : 1‘தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றிருக்குமவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடியார்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

நாதனை – ஒரு காரணம் பற்றாமலே தலைவனாய் உள்ளவனை. ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனை – தோளும் தோள்மாலையுமான அழகைக் கண்டால் திருத்திரை நீக்கின பின்னர்போலே, நித்தியசூரிகளோடு நித்திய சமுசாரிகளோடு வாசி அறப் புகழாநிற்பர்கள். திருமேனியின் பரிசத்தால் நறு நாற்றத்தை உடைத்தாய்ச் செவ்வி பெற்றிருக்கின்ற திருத்துழாய்ப் பூவை உடையவன் ஆதலின், ‘நறுந்துழாய்ப் போதன்’ என்கிறார். 2’தத்தமது கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்றிருக்கும் பெண்கள், முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலகர்கள், வாய்விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள், உறுப்புகளின் சத்தி குறைந்த முதியோர்கள் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஏத்தும்படி ஆயிற்றுப் பெருமாள் அழகு,’ என்றார் ஸ்ரீ வால்மீகி பகவான். பொன் நெடுஞ்சக்கரத்து எந்தை பிரான்தன்னை – பொன் போன்று அழகியதாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும் தனக்கு அவ்வருகு இன்றியே இருப்பதாய், இனிமையாலே அளவு இறந்து இருப்பதான திருவாழியை உடையனாய், அவ்வழியாலே என்னை எழுதிக்கொண்ட உபகாரகனை. ‘ஆயின், பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’ எனின், இராஜகுமாரர்களுக்குப் 3பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று, இவரும் ‘ஆழிப்பிரான்’ என்பது, ‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை அனுபவிக்கிறார்.பாதம் பணிய வல்லாரை – இவ்வழகைக் கண்டு இதிலே அசூயை பண்ணாதே, இதிலே தோற்றுத் திருவடிகளிலே விழ வல்லவர்களை. ‘இறைவன் விஷயத்திலே அசூயை பண்ணுவர்களோ?’ எனின், விஷயத்தைப் பாராதே அன்றோ அசூயை பண்ணுகிறது? சர்வேசுவரனும் 1‘அசூயை இல்லாத உன்பொருட்டுச் செவ்வையாய்ச் சொல்லுகிறேன்.’ என்றும், 2‘யாவன் ஒருவன் என்னை நிந்திக்கிறானோ, அவனுக்குச் சொல்லத் தக்கது அன்று,’ என்றும் அருளிச்செய்தான் அன்றோ? ‘ஆயின், இறைவனிடத்தில் அசூயை இல்லாமல் இருப்பது அருமையோ?’ எனின், முன்புள்ளார் அநுஷ்டிக்கையாலே நமக்கு எளிதான இத்தனை அல்லது, புறம்புள்ளார் பக்கலிலே அன்றோ இதன் அருமை தெரிவது? வல்லாரைப் பணியுமவர் கண்டீர் – ஈசுவரன் பக்கல் உட்பட அசூயை பண்ணாநின்றால் அடியார் பக்கல் சொல்ல வேண்டுமோ? இறைவன் பக்கல் அவனுடைய பெருமையாலே வணங்கவுமாம்; 3’நான் ஒருவருக்கும் உரியன் அல்லேன்,’ என்று இருக்கவுமாம்; சோறு தண்ணீர் முதலியவற்றாலே தரிக்கிற இவர்கள் பக்கல் பணிய மனம் பொருந்தாதே அன்றோ? தோன்றுகிற உருவத்தைப் போகட்டு அடியராய் இருக்கின்ற தன்மையையே பார்த்து விரும்பும்போது அதற்குத் தக்க 4அளவு உடையவனாக வேண்டும்; ஆதலின், ‘வல்லாரைப் பணியுமவர் கண்டீர்’ என்கிறார்.

‘ஆயின், அவதரித்துச் சுலபராய் இருக்கிறவர்களைத் தோன்றுகின்ற வடிவத்தை நோக்கி வெறுக்கக் கூடுமோ?’ எனின் சௌலப்யந்தானே நறுகு முறுகு என்று முடிந்து போகைக்கு உடலாயிற்று அன்றோ சிசுபாலன் முதலியோர்கட்கு? 5‘பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டால் ஆயிற்று; அங்கே கேள்,’என்ன, ‘அவரைத் தண்டன் இடவேண்டுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேண்டுமாகில் செய்கிறாய்,’ என்று என்னை அழைத்து, ‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்,’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே, எனக்குத் தண்டன் இடப்புக, நான் ஒட்டாதொழிய, சீயர்பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் வணங்குவதற்கு இசையும்படி அருளிச் செய்ய வேண்டும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து, அவன் வணக்கத்தை நான் ஏற்றுக்கொள்ளச் செய்தான்,’ என்று 1அருளிச்செய்வர்.

ஓதும் பிறப்பிடைதோறு – ‘சாஸ்திரங்களிலே தாழ்வாகச் சொல்லப்படுகிற பிறவிகளில் அவகாசந்தோறும்’ என்னுதல்; அன்றியே, 2‘பிறந்தான், செத்தான்’ என்கிற சொல்லளவேயான பிறவிகளும் அமையும்; இது பெறில் என்னுதல். எம்மை ஆள் உடையார்களே – 3‘அடியார்கள் குழாங்கள்’ என்றும், 4‘அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’ என்றும் ஒரு தேச விசேடத்திலே அடிமை செய்வது இவர்களுக்கே அன்றோ? அதனை இங்கே கொள்ளக் கூடியவர்கள் இவர்கள். 5‘திருமகள் கேள்வன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்குஉள்ளது? மயர்வு அற மதிநலம் அருளி விசேஷ கடாக்ஷம் பெற்ற எம்போல்வார்க்குத் தலைவர்கள் இவர்களே என்பார், ‘எம்மை ஆளுடையார்கள்’ என்கிறார்.

‘ஆயின், பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் மாத்திரம் போதியதாமோ? பிறவி முதலியன பார்க்கவேண்டாவோ?’ என்ன, இங்குள்ளவை பார்க்க வேண்டாதபடி அன்றோ பகவானுடைய ஈடும் எடுப்பும் இல்லாத பெருமை இருப்பது? மேலும், 1‘முற்காலத்தில் கெட்ட ஆசாரமுள்ளவனும், உண்ணத் தகாதனவற்றை உண்டவனும், செய்ந்நன்றி மறந்தவனும், வைதிக மரியாதையை இல்லை என்றவனும் ஆகிய இவர்கள், விசுவாசத்தோடு ஆதிதேவனான ஸ்ரீமந் நாராயணனைச் சரணமாக அடைந்தார்களாகில், இவர்களைப் பரம புருஷனுடைய மஹிமையால் தோஷம் அற்றவர்களாக அறிவாய்,’ என்கிறபடியே, யாதேனும் தண்மை உடையவனாயினும், அவனை அடைந்தானாகில், அவ்வாறு அடைந்தவனைக் குற்றம் அற்றவனாக நினைக்கவேண்டும் என்று அன்றோ இதிகாசம் கூறுகின்றது? ‘ஆயின், குற்றம் கிடக்கச் செய்தே குற்றம் அற்றவனாக நினைக்க வேண்டுகிறது என்?’ என்னில், ‘பரமபுருஷனுடைய பிரபாவத்தாலே.’ ஆன பின்பு, இவனைக் குறைய நினைக்கையாவது, ‘இவனைச் சுத்தன் ஆக்குதற்குத் தக்கதான சத்தி இறைவனுக்கு இல்லை,’ என்று பகவானுடைய பிரபாவத்தைக் குறைய நினைத்தலாம் அன்றோ?

2வீரப்பிள்ளையும், பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்தில் விருப்பம் உள்ளாராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்பு உண்டாய்த் தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க, இவர்களைப் பார்த்துப் ‘பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ, ஒரு ஸ்ரீவைஷ்ணவனும் ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப்போனார்கள்.

ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்னடிமை அல்லாமை யுண்டோ?’

என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும். (கம்பரா. ஆரணி

நாதனை
ஞாலம் -வானம் ஏத்தும்
நறும் துழாய் போது -திருத் துழாய் மாலை அணிந்து
சக்கரம் ஏந்தும்
பாகவதர் அடியாரே நாதன் என்கிறார்
நாதன் -நிருபாதிக சேஷி –
தோளும் தோள் மாலையும் சாத்திய அழகை கண்டால் –
திருத்திரை எடுத்த அநந்தரம் –
நித்ய சூரிகள் -நித்ய சம்சாரிகள் வாசி யற -ஞாலம் வானம் -இரண்டிலும் உள்ளோரும்
ஏக காலத்தில் ஸ்தோத்ரம் செய்வது போலே –
ஸ்திரீ பால யுவ வ்ருத்தாநாம் -அனைவரும் பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணினது போலே -ஸ்திரீகள் -தம் தாம் கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்று இருப்பவர்களும்
வார்த்தை சொன்னால் தங்கள் அடக்கம் அழியும் என்று இருப்பாரும்
பாலர் -வார்த்தை சொல்ல அறியாத பருவம்
அழகு ஈடுபடுத்த
யுவா வாய் விட்டு சொல்லாத
விருத்தர் -கரண -வாய் சொல்ல முடியாவிடிலும் –
வாய் விட்டு ஏத்தும் படியான அழகு
திருமேனி ஸ்பர்சத்தால் -மணம் கொண்ட திருத்துழாய் -இயற்க்கை வாசத்துக்கு மேல்
பொன் போலே பார்க்க தூண்டும்
அழகு ஆபரணம் மிடுக்கு தனக்கு அவ்வருகு இன்றி நெடும்
எந்தை பிரான் -இத்தால் என்னை எழுதிக் கொண்டவனை
நல்ல போக்தாக்கள் பிடி தோறும் நெய் வேண்டுமா போலே அடி தோறும் திருவாழி அழகை
ஆழ்வார் அனுபவிக்கிறார் –

கையும் திருஆழி சேர்த்தி பாசுரம் தோறும் அனுபவிக்கிறார்
பாதம் -பணிய வல்லார் -அழகை பார்த்து அசூயை பண்ணாதே தோற்று பணியுமவர்கள் –
விஷயம் பாராமல் அசூயை பண்ணுவார்களே –
எம்பெருமான் அழகை கண்டு அசூயை -கூட பண்ணுவார்களா
சரம ஸ்லோகம் -அசூயை இல்லாதவர் இடம் சொல்லு கீதையில் அருளிச் செய்து –
முன்புள்ளார் அனுஷ்டிகையாலே -பாகவத சேஷத்வம் நாமும் செய்து
புறம்புள்ளார் இதன் அருமை அறிவார்கள் –
கண்ணி நுண் சிறு தாம்பு -வியாக்யானம் சப்தாதி விஷயம் தாழ்வு
அறிந்து பகவத் விஷய ஈடுபாடு
இதில் என்ன தோஷம் காட்டி பாகவத விஷயம் செல்வோம்
சஜாதீய புத்தி வேற வரும் –
எளிதாக போயிற்று நமக்கு -முன்புள்ளார் அனுஷ்டிக்கையாலே
ஆசார்யர்கள் செய்து காட்டி -ஈச்வரத்வம் பெருமை -உணர்ந்து
நான் வணங்க மாட்டேன் ந நமேயம் ராவணன் வார்த்தை –
அன்ன பாநாதிகளாலே தரிக்கும் பாகவதர்கள் பக்கல் பணிய மனசு வாராதே
தோற்றுகிற ஆகாரம் பொகட்டு ததீய ஆகாரம் உணர்ந்து -வல்லரைப் பணியுமவர்
ரொம்ப அருமை -சௌலப்யம் தானே நறுகு முருகு -சிசுபாலாதிகள் வைய காரணம் ஆனதே
அநாதர வாய் போகுமே –
காஞ்சி ஸ்வாமிகள் காஞ்சியில் -உபன்யாசம் -கேட் க நாலே பேர் –
நல்தவத்தவர் கொண்டாடும் –
திருமழிசை ஆழ்வார் -மா முனிகள் அருளிச் செய்தது –
சௌலப்யம் அநாதாரம் -அதிபர்ஷயம் ஏற்பட்டு –
பிள்ளையாத்தான் -போர நல்லான் -திருவாய்மொழி கேட்ட ஐதீகம்
சிறியாத்தான் அனுஷ்டான சீலர் –
நஞ்சீயர் நம்பிள்ளை இடம் –
தண்டன் இட வேண்டுமே என்ன-
வயசோ குலமோ என்று –
வேணுமாகில் செய்கிறார் -என்னை அழைத்து
இவனுக்கு பாங்கான படி சொல்லி -நம்பிள்ளை வார்த்தை
பாதம் பணியும் அவரை பணியும் -வல்லார் வரை கேட்டவாறே –
மிகவும் அனுவர்திகப் புக -நான் ஒட்டாது ஒழிய –
செவிகாமல் கால செபம்
ஜீயர் பாடே சென்று இவ்வர்த்தம் அறியாமல் அப்படி சொன்னேன்
சொல்லி சம்பாதிக்க
ஜீயரை இட்டு நிர்பந்தித்து –
போர  நல்லான் பிள்ளையாத்தான் -கூட இப்படி –
ஓதும் பிறப்பு -பிறந்தான் செத்தான் -நடுவில் என்ன கிழித்தான் -உபயோகம் இல்லாத சம்சார ஜன்மம்
பாகவத பணியும் வாய்ப்பு கிட்டினால்
சாஸ்த்ரங்களில் நிஷித்த ஜன்மம்
எம்மை ஆளப் பெறுவார்கள்
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ அடியார் உடன் இருப்பதே
உத்தேச்யம் –
இங்கேயே பெற பெற்ற பாக்யசாலிகள்
எம்மை -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
பொது நின்ற பொன் அம கழல் அவனது
பாகவதர் உசத்தி-இதனால்மணவாள மா முனிகள் -நாய்கள் சண்டை போடாதை சொல்லி
அசூயை கொள்ளக் கூடாதே
கலசாமல் இருக்க கூடாதே –
பாதம் பணிய வல்லாரை பணிய வல்லார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply