அவதாரிகை –
திருநாமம் யமவஸ்யதையை தவிர்த்து தரும் என்று இதனுடைய
பாவநத்வத்தையும்
ராஜ குல மஹாத்ம்யத்தையும் சொல்லுகிறது –
காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1-
பதவுரை
மூ உலகு –எல்லா வுலகங்களையும்
உண்டு –(ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த –(பிரளயம் நீங்கின பிறகு ) அவற்றை வெளிப்படுத்திய
முதல்வ –ஜகத் காரண பூதனே!
அரங்கமாநகரளானே!
நின் நாமம் கற்ற –உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான
ஆவலிப்புடைமை –செருக்கினாலே
புலனை –பஞ்சேந்திரியங்களையும்
காவலில் வைத்து –(வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து
கலி தன்னை– பாப ராசியை
கடக்க பாய்ந்து–வெகுதூரம் உதறித் தள்ளி
நாவலிட்டு–ஜய கோஷம் செய்து
நமன்தமர் தலைகள் மீதே– யம படர்களின் தலை மேல்
உழி தருகின்றோம்–அடி யிட்டுத் திரிகின்றோம்.
(கண்டாய்-முன்னிலை அசைச்சொல்)
வியாக்யானம் –
காவலில் புலனை வைத்து –
காவல் இல்லாதபடி இந்திரியங்களை வைத்து –
அதாகிறது –
மேல் சொல்லுகிற லாபங்களுக்கு அநுகூலமாக செய்தது ஒன்றும் இல்லை என்கையும் —
அவ்வளவே அன்றிக்கே –
நிருபசு –ஸ்தோத்ர ரத்னம் -58-மனித வடிவம் கொண்ட பசு -என்னும்படி
விஷய ப்ராவண்யங்களிலே நியதி இன்றிக்கே போந்தபடியும் –
விஹிதங்களை அனுஷ்டித்தல் –
நிஷித்தங்களை கை விடுதல் செய்யாதவன் என்கை –
இதுக்கு அடியாக கொண்டு இழிந்த ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் –
ராகாதி ப்ரநிர்ஜிதை என்று அஜிதேந்திரியர் ஆனவர்களுக்கும் பகவத் பிராப்தி உபாயம் ஏது என்று இறே கேட்டது –
ஆக இப்படி
சேதனன் தான் மூலையடியே திரிந்தாலும் அவன் தோஷங்களைப் போக்கி
மேல் சொல்லுகிற நன்மைகளைக் கொடுக்கும்படி யாய்த்து
திருநாமம் உடைய ப்ரபாபம் இருப்பது –
ஒருவன் விஷ தஷ்டன் ஆனால்
விஷ வித்யையில் குசலனாய் இருப்பான் ஒருவன் –
நீ சுகமே எண்ணெய் வார்க்கவுமாம் -குளிக்கவுமாம் -உறங்குவுமாம் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணவும் அமையும் –
நான் அழகிதாப் போக்கித் தருகிறேன் என்னும் இறே –
அப்படியே யாய்த்து சம்சார விஷ தஷ்டனைக் குறித்து திருநாம பிரபாவம் இருப்பது –
வைத்து –
என்கிற இது புத்தி பூர்வகமாக அநீதியிலே மூட்டிப் போந்தேன் என்கை –
காவல் இல்லாதபடி என்றால்
சப்தம் வசிக்குமோ என்னில் –
மீமாம்சகர் அபத்தத்தை நியமித்தாலும் அர்த்தத்தை முக்கியமாக கொள்ளுமா போலே –
இங்கும் அர்த்த கௌரவத்தாலே சப்தத்தை நியமித்து சொல்லுகிறோம் –
அங்கன் இன்றிக்கே –
காவலில் புலனை வைத்து என்னுமாம்
அந்த பஷத்தில் இது சாதன கோடியிலே புகக் கடவது –
அதாவது
இதர விஷயங்களிலே மண்டித் திரிந்த இந்திரியங்களை
திரு நாமத்தை அண்டை கொண்ட பலத்தால் சிறையிலே வைத்தபடி –
அராஜகமாய் கிடந்த காலம் குறும்பு செய்தாரை –
ராஜகீயம் ஆனவாறே
ராஜாவை அண்டை கொண்டு சிறையிலே வைக்குமா போலே –
அதவா
அப்ராப்த விஷயங்களில் மண்டித் திரிந்த இந்திரியங்களை
பிராப்த விஷயங்களிலே மூட்டினேன் -என்னவுமாம் –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்னும்படியான
விஷயம் ஆகையாலே –
அப்ராப்த விஷயங்களில் போகாதபடி தன் பக்கலில்
ஆக்கிக் கொள்ள வல்ல வயிர உருக்கான விஷயம் இறே
(காவல் -எம்பெருமான் என்று கொண்டு -அனைத்துக்கும் அவன் காவலாளன் என்பதால்
பகவத் விஷயத்திலே மீட்டு என்றுமாம்)
(முன்பு என்னைச் சிறையில் வைத்த இந்திரியங்களை இன்று நான் சிறையில் வைத்தேனென்கிறார்.)
(இராவணன் போர்க் களத்திலே இராமபிரானது அம்புகட்கு இலக்காகிப் பட்டுப் போனவாறே மந்தோதரி புலம்புகிறாள் –
“இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரி புவநம் த்வயா-ஸ்மரத்பிரிவ தத்வைரமத்ய தைரேவ நிர்ஜித; என்றாள்;
அதாவது-இராவணனே! நீ முன்பு இந்திரியங்களை யெல்லாம் வென்று அதனால் மூவுலகையும் வென்றாய்;)
(இந்திரியங்களை நிக்ரஹித்துக் கொடுந்தவம் புரிந்து வரம் பெற்றமையால் மூவுலகும் வென்றனனாதலால் இங்ஙன் கூறப்பட்டது.)
(அந்த இந்திரியங்கள் “இப்பாவி நம்மை இப்படி தலையெடுக்கவொட்டாமல் பண்ணிவிட்டானே;
ஆகட்டும் தக்க சமயம் பார்த்து இவனைத் தலையமுக்குவோம்” என்று
நெஞ்சில் பகை வைத்துக் கொண்டிருந்து இப்போது உனக்கு பிரதிக்ரியை செய்துவிட்டன எனறாள்.)
(இந்திரியங்களை அடக்காமல் அவற்றுக்குப் பரவசப்பட்டு ஸீதையைக் கவர்ந்ததனால் உனக்கு இக்கேடு விளைந்ததென்றபடி.)
கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து –
அஜிதேந்த்ரியத்வதுக்கு அடியான பாப ராசியை
வாசனையோடு போக்கி –
தன்னை -என்றது –
த்ருஷ்டத்தில் விஷய பிராவண்ய ஹேது –
அத்ருஷ்டத்தில் நரக ஹேது –
பகவத் வைமுக்ய ஹேது –
தேக ஆத்ம அபிமான ஹேது –
இன்னமும்
அநர்த்தங்களுக்கு அடியான கனத்தை நினைத்து
என்னை நியமித்து போந்தது தன்னையே –
நான் இப்போது நியமித்தேன் என்கை –
கடக்க -என்றது –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவன் என்னலாம்படி இருக்கை
அதாவது –
வந்து கழிந்தது -என்று தோற்றாதபடி இருக்கை
கலி -என்றது
கால பரமான போது க்ருத யுக புருஷர்களிலே ஒருவன் என்று
சொல்லலாம்படி இருக்கை –
திருவடி சமுத்திர தரணம் பண்ணினால் போலே இவர் பாப சமுத்ரத்தை
கடக்க வல்லவர் ஆனார்
நின் நாமம் கற்ற -என்ற
திருநாம வைபாவத்தாலே வந்த இத்தை
தன் தலையாக வந்ததாக சொல்லுவான் என் என்னில் –
திருநாமத்துக்கு உள்ளதொரு ஸ்வபாவம் ஆய்த்து இது –
இரா மடமூட்டுவாரைப் போலே முகம் தோற்றாமல் நின்று உபகரிக்கையாலே –
இவன் தானே செய்து கொண்டானாக அபிமாநிக்க லாம்படியாய் இருக்கும் –
இனி
பலம் தன்னது ஆகையாலே
பாய்ந்து -என்னத் தட்டில்லை
தாம் தேஹம் ஸ்ருஷ்டராய் இருக்கச் செய்தேயும்
இத்தைக் கடந்து என்னலாம்படி இறே
பெரிய பெருமாள் இவரை விஷயீ கரித்தது
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
பாப பலத்தை அனுபவிக்கும் யமனுடைய தலையிலும் –
அவன் மணாட்டி தலையிலும் –
அடியிட்டு சஞ்சரியா நின்றோம் –
நலிந்து போன யம படரை
ஒரு பேரை இட்டுத் துகைக்கிறார் காணும் —
நாவலோ நாவல் என்றும் –
அறையோவறை என்றும் –
தோற்றவர்கள் முன்னே ஜெயித்தவர்கள் சொல்லும் சொல்லு –
முன்பே யமாதிகள் பேர் கேட்க அஞ்சிக் கிடந்தவர் –
திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமன் வாசலிலே சென்று அறை கூவுகிறார் -இப்போது –
வாலி பேர் கேட்க அஞ்சி சுரமடைந்து கிடந்த மகாராஜர் –
பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தா த்வாரத்திலே சென்று அறை
கூவினாற் போலே –
அங்கு நாமி பலம் –
இங்கு நாம பலம் –
உழி தருகின்றோம் -என்றது
தம் மிடுக்கு தோற்ற நின்று நிர்ப்பய சஞ்சாரம் பண்ணுகிறபடி –
பாபத்துக்கு நீ எழுதி வைத்த பட்டோலையை கொண்டு வரவில்லை யாகில்
புறப்படாய் என்றாற் போலே இருக்கிறது ஆய்த்து –
உழி தருகின்றோம் –என்கிற
பஹு வசனத்தாலே
திருநாமம் ரசிக்க வாயிலே புறப்பட்டவாறே
இவர் சத சாதகமாய்ப் பனைத்த படி –
அதவா
இதன் இயலை அபயசித்து
இதில் அத்வேஷம் உடையாரையும் கூட்டிக் கொள்ளுகிறார் ஆய்த்து-
சமுத்ர லங்கனம் முதலாக இலங்கையில் உண்டான பராக்கிரமம் எல்லாம்
திருவடி தான் ஒருவனே செய்தானாய் இருக்க –
பிராட்டியைக் கண்ட ப்ரீதிக்கு போக்குவீடாக மதுவனம் அழிக்கிற பலத்திலே
எல்லா முதலிகளுக்கும் அந்வயம் உண்டானாப் போலே –
ஒருவனுக்கு ராஜகுல சம்பந்தமுண்டானால்
அவன் பந்துக்களும் அவனை என் என்றாரும் அடங்க வாழக் கடவது இறே –
அவ்வளவும் இல்லை யாகிறது அன்றே பகவத் சம்பந்தத்துக்கு
(“உழி தருகின்றேன்” என்று ஒருமையாகக் கூறாமல் பன்மையாகக் கூறியவித்தால்-
ஒரு புண்ணியசாலியின் ஸம்பந்தத்தாலே பல பாபிகளும் பேறு பெறுவர்களென்னும் சாஸ்த்ரார்த்தம் வெளியாம்;
அதாவது-நான் ஒருவன் நின்நாமம் கற்க அந்த ராஜகுல மாஹாத்மியத்தால்
என்னைச் சேர்ந்தவர்களும் நமன்றமர் தலைகள் மீது அடியிடும்படியானமை பாரீர் என்கை.)
உழி தருகின்றோம் -என்று
பலரையும் கூட்டிக் கொள்ளும் ஆகையாலே இவர்களுக்கு எல்லாம்
சஞ்சார ஸ்தலம் வேணும் என்று –
அவன் பரிகரத்தையும் கூட்டிக் கொள்ளுகிறார் –
லோகத்தில் பாபம் பண்ணினார் தத் பல அனுபவத்துக்கு அஞ்சி
யமன் பேரிடுவார்
அவனுடைய லேகேகன் பேரிடுவராய் –
யமம் தர்ப்பயாமி -சித்ரா குப்தம் தர்ப்பயாமி -என்று ஆராதியா நிற்க –
திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே அவர்கள்
தலையிலே அடி இடுகிறோம் என்கிறார் இறே இவர் –
தம்மை கீழ் நலிந்த யமாதிகளை இப்போது
ஒரு பேரை இட்டுத் துகைக்கிறார் காணும் –
இவர் தமக்கு விஜயமாக சொல்லுகிறார் இத்தனை போக்கி –
அவன் தான் தன் தலை கண்டது திருநாமம் கற்றார் திருவடிகளிலே வணங்க
என்று ஆய்த்து இருப்பது –
பிரணாமாம் யே அபி குர்வந்தி தேஷாம் அபி நமோ நம -என்னக் கடவது இறே
ஸ்வ புருஷ மிவீஷ்ய பாச ஹஸ்தம் ப்ரபுரஹ மன்யன் ருணாம் ந வைஷ்ணவானாம்–என்றது
கேவலம் தேக போஷண பரராய் இருப்பார்க்கு காண் நிர்வாஹகனாய் இருப்பது —
மற்றைப்படியே வைஷ்ணவர்கள் எனக்கு நிர்வஹகராய் காண் இருப்பர்- என்றபடி –
திறம்பேன்மின் கண்டீர் இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68–
இவர்களைக் கண்டால் அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி தாந்தராய்ப் போரும் கோள்-என்கிறான்
இப்படி தானும் பயப்பட்டு தம் படரையும் நியமித்துக் கொண்டு இறே யமன் இருப்பது
லோகமடங்க யமபட பீதராய் இருக்க –
நமன் தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்கைக்கு
வந்த தன் ஏற்றம் என் -என்ற பெரிய பெருமாள் திரு உள்ளமாக –
மூவுலகுண்டு உமிழ்ந்த முதல்வ -என்கிறார் –
ப்ராதேசிகனைப் பற்றினேன் ஆகில் அன்றோ அவனுக்கு அஞ்ச வேண்டுவது –
பிரளய ஆபத்திலே சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து –
அங்கிருந்து நெருக்கு ஒண்ணாதபடி வெளிநாடு காண புறப்பட்டு விட்ட
ஜகத் காரண பூதனானவனே –
பிரளய ஆபத்திலும் ஸ்ருஷ்டி வேளையிலும்
அந்த யமாதிகளோடு என்னோடு வாசி யற சர்வ நிர்வாஹகன் ஆனவன் அல்லையோ –
நம்மைப் பற்றி உமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து என்கிறீரோ -என்ன
உன் அருகு வந்திலன் –
நின் நாமம் கற்ற ஆவலிப்பு –
உன் திருநாமத்தை கற்ற பலம் -என்னுதல் –
கர்வம் என்னுதல்
நின்னாமம் -என்றது –
ஓராயிரமாய் உலகு ஏழும் அளிக்கும் பேர் அன்றோ -திருவாய்மொழி -9-3-1-
தேவரீரைப் போலேயோ திருநாமம் –
கட்டிப் பொன்னுக்கும் பணிப் பொன்னுக்கும் உள்ள வாசி போராதோ
தேவரீருக்கும் திருநாமத்துக்கும்
மறுவலிடும் பிரளய ஆபத்தில் அன்றோ தேவரீர் எடுத்தது –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்கும் போது தேவரீர் திருநாமம் வேண்டாவோ
நீளரவை சுற்றிக் கடைந்தான் பெயர் என்றே தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை -முதல் திருவந்தாதி -81-
மந்த்ரம் என்னாது ஒழிந்தது –
கால நியமம் என்ன –
அதிகாரி நியமம் என்ன -இவை தொடக்கமானவை வாராமைக்காக –
இடறினவன் அம்மே என்னும் போது ஒரு சடங்கு வேண்டாம் இறே
நஞ்ஜீயர் -அப்ரயதனாய்க் கொண்டு திரு நாமம் சொல்லலாமோ ஆகாதோ
என்று -பட்டரைக் கேட்க –
கங்கா ஸ்நானம் பண்ணப் போமவனுக்கு வுவர்க் குழியிலே தோய்ந்து போக வேணுமோ –
மேலுண்டான நன்மைகளைப் பண்ணிக் கொடுக்க வற்றானது –
கீழ் உள்ள அசுத்தியை போக்க மாட்டாதோ-என்று அருளிச் செய்தார் –
வாயாலே திருநாமம் சொல்லுகைக்கு ஆகாதார் இல்லை –
மாத்ரு காதுகனுக்கும் கை சலித்தால் அம்மே என்ன பிராப்தி உண்டே யாய் இறே இருப்பது
கற்ற-என்றது
ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே வந்ததாய் இருக்கை
பெரிய பெருமாள் சொல்லுவிக்க அநந்தரம் சொன்னவர் ஆய்த்து இவர் –
கற்ற -என்றது –
ஸார்த்தம் ஆக அன்றிக்கே
சப்த மாத்ரத்தை அப்யசிக்கை
ஆவலிப்புடைமை –
வைஸ்ரவணன் -என்னுமா போலே யாய்த்து
திருநாம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் கண்டாய் –
இவ்வர்த்தம் உபதேசிக்க வேண்டி இருந்ததோ –
என் வடிவிலே தெரியாதோ –
ரசாயன சேவை பண்ணினாரையும் மண் தின்றாரையும் வடிவிலே தெரியாதோ
நான் பண்டையவன் என்று தோற்றா நின்றதோ
மண் தின்ற உன் முகம் போலே இருந்ததோ என் முகமும்
அரங்க மா நகர் உளானே –
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று -திருநாமம் சொல்ல வல்லான் ஒருவனை
கிடைக் கவற்றோ என்னும் நசையாலே அன்றோ
சத்ய சங்கல்பர் ஆகையாலே தேவரீருடைய நினைவு சபலமாக பெற்றது இறே
மா நகர் –
ராஜா இன்ன மண்டபத்தே இருந்து நினைப்பிட்டான் என்றால் பின்னை அவன்
தன்னாலும் தவிர்க்க ஒண்ணாதாய் இருக்குமா போலே –
இங்கே இருந்து விஷயீ கரித்தது என்றால் இனி தேவராலும் தவிர்க்கப் போமோ –
மா நகர்
சம்சாரிகமான துர் வ்யவஹாரம் அறும் இடம்
முன்பு அநீதியிலே கை வளர்ந்து –
அ சதஸ்யனாய் –
நால்வர் இருந்த இடத்தில் சென்று ஏற மாட்டாதே இருந்தவன் –
தனக்கு-ஒரு ராஜகுல சம்பந்தம் உண்டானால்
சதஸ்ஸை மதியாதே சென்று ஏறுகையும் –
அவர்கள் சிரஸா வஹிக்கையுமாய இறே இருப்பது –
அப்படியே முன்பு
யமாதிகளுக்கு அஞ்சிக் கிடந்தது இடம் அறியாதே போந்தவர் –
இப்போது
திருநாம சம்பந்தத்தாலே யமாதிகள் தலையிலே அடி இட்டு
திரியும்படியான ராஜ குலத்தை சொல்லிற்று ஆய்த்து –
———–
இந்த பாசுரம் கொண்டு தேசிகன் யதிராஜ சப்ததியில்–41-
யதீஸ்வர சரஸ்வதீ ஸூ ரபித ஆசயா நாம் சதாம் வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலி நா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம் சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்
ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –
யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை என் இடது காலால் மிதிக்கிறேன் –
யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –
——————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply