திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!

    பொ-ரை : ‘ஒளி பொருந்திய மாணிக்கம் போன்ற வடிவையுடைய இறைவனை, நித்தியசூரிகளுடைய இருப்பு முதலானவைகட்கெல்லாம் காரணன் என்பேனோ! அவர்கட்குத் தெய்வம் என்பேனோ! அவர்கட்கு இன்பம் என்பேனோ! அவர்கட்கு இங்குக் கூறப்படாத மற்றைப் பொருள்கள் எல்லாமானவன் என்பேனோ! குற்றமில்லாத செல்வம் என்பேனோ! குற்றமில்லாத சுவர்க்க இன்பம் என்பேனோ குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ! யாது என்பேன்?’ என்கிறார்.

    வி-கு : இப்பாசுரம் வந்த சொல்லும் பொருளுமே பின்னும் வருதலின், சொற்பொருட்பின் வரும் நிலையணி. மோக்ஷம் – மோக்கம்; க்ஷகரத்துக்கு இரு ககரம் வந்தன; ‘பக்ஷம், பக்கம்’ என்பது போன்று.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1செல்வம் முதலான புருஷார்த்தங்கள் எல்லாம் தனக்கு விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியைப் பேசுகிறார்.

    மேல் ‘வானவர் ஆதி’ என்ற இடம் பிரமன் முதலானோர்கட்குக் காரணன் என்னுமிடம் சொல்லிற்று. இங்கு ‘வானவர் ஆதி’ என்பது, நித்தியசூரிகட்கு நிர்வாஹகனாய் அவர்கள் இருப்புக்குக் காரணனாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. ‘ஆயின், இரண்டு இடங்களிலும் சொல் ஒன்றாயிருக்க, வேறுபடுத்திப்பொருள் கூறக் காரணம் என்னை?’ எனின், 1பிரமன் முதலானோர்கட்கு அவர்கள் உற்பத்தியிலே உதவி செய்வானித்தனையே; அங்ஙனமன்றி, நித்திசூரிகளுக்கு ‘எல்லாம் கண்ணன்’ என்கிறபடியே, எல்லாம் தானேயாய் இருப்பான்; அவர்களும் ‘எல்லாம் வாசுதேவனே’ என்கிறபடியே, ‘எல்லாம் வாசுதேவனே’ என்று நினைத்திருப்பார்கள்; ஆதலால் என்க. வானவர் ஆதி என்கோ-நித்தியசூரிகள் சத்துக்குக் காரணமானவன் என்பேனோ! ‘சத்துக்குக் காரணமாகையாவது என்? அது நித்தியமாயன்றோ இருப்பது?’ எனின், அது நித்தியமாயினும் ஆக; அநித்தியமாயினும் ஆக; அதனுடைய நித்தியத்துவம்     (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்; அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். 2‘எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும், அப்போது ஒழியும்’ என்கிறபடியே, அவன் நெகிழ்ந்த அன்று பின்னை இல்லையேயாம்.

    வானவர் தெய்வம் என்கோ – அவர்களுக்கு ஆராதிக்கத் தக்கவன் என்பேனோ! வானவர் போகம் என்கோ – அவர்களுக்கு 3உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாமானவன் என்பேனோ! வானவர் முற்றும் என்கோ – அவர்களுக்குச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களும் என்பேனோ! ஊனம் இல் செல்வம் என்கோ – சில நாள் நின்று வற்றுமதன்றி, ஒரு நாளும் அழியாத செல்வம் என்பேனோ! ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – சில நாள் இருந்து பின்னை ‘த்வம்ஸ’ என்று தள்ளும்படியானது அன்றி ஒழிவில்லாத சுவர்க்க இன்பம் என்பேனோ! ‘ஆயின், ஊனமுடைய செல்வம் முதலியவைகளும் அவனுக்குச் செல்வமன்றோ? அங்ஙனம் இருக்க, ‘ஊனமில்’ என்று விசேடிப்பான்என்?’ எனின், 1‘உலகத்தில் மங்களம் பொருந்திய செல்வத்தையுடைய பொருள்கள் எவை உண்டோ, அவையெல்லாம் என் ஒளியின் ஒரு கூற்றிலிருந்து உண்டானதாக நீ அறிவாய்,’ என்று பகவானும் கூறினானன்றோ? ஊனம் இல் மோக்கம் என்கோ – குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ! ‘சரீரமான ஆத்தும அனுபவ மாத்திரத்தில் அன்றி, சரீரியளவும் செல்லும்படி அநுசந்திக்கையாலே, பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்’ என்பார், 2’ஊனமில் மோக்கம்’ என்கிறார். ஒளி மணி வண்ணனை – விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது; இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

அடுத்து புருஷார்த்தங்கள் அனைத்தும் இவனுக்கு அதீனம்

ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் இவை எல்லாம்
வானவர் ஆதி -கீழே பிரமாதி களுக்கு காரணம் சொல்லி
இங்கே வானவர் -நித்யர் நிர்வாஹகன் சத்தா ஹேதுவாக -இருப்புக்கு காரணமே
சப்தம் ஒன்றாக இருக்க -இரண்டு அர்த்தங்கள்
பிரமாதிகளுக்கு உத்பத்தியோடு சரி -அந்தராத்மாவாக சாஷியாக மட்டும்
-இவர்களுக்கு அனைத்துக்கும் -எலாம் கண்ணன் -தானேயாக இருக்கும்
வாசுதேவம் சர்வம் இவர்களும் நினைத்து இருப்பார்கள் –
சத்தா ஹேது ஆவது -எனபது -என் -நித்யர்கள் தானே -நித்யராக இருக்க காரணம்
எம்பெருமான் நித்ய இச்சை தான் -சங்கல்பம் தான் காரணம் –
இச்சை நெகிழ்ந்தால் அழியும் -ஆனால் நெகிழாது

எத் தேவர் வாலாட்டும்-அதிகாரம் செய்வதும் எவ்வாறு செய்கையும் –
அவ்வாறு ஒழியும் -நான்முகன் திருவந்தாதி -வானவர் தெய்வம் ஆச்ரயநீயன்
போகம் -உண்ணும் சோறு எல்லாம் -முத்தும் என்கோ -அனுத்தமான எல்லாம் –
சொல்லாமல் விட்டவை எல்லாம் அவனே
ஊனமில் செல்வம் -அழியாத செல்வமும் அவனே
ஸ்வர்க்கம் -ஒழிவில்லாத -புண்யம் கழிந்த பின் தள்ளுவார் அதில் –
ஊனமில் ஸ்வர்க்கம்
இவை எல்லாம் விபூதி தானே -எடுத்து கழிக்க -அதை விட உயர்ந்தது
ஊர்ஜிதம் ஸ்ரீ மத் எல்லாம் என்னது கீதை
ஊனமில் மோஷம் -பகவத் அனுபவம் -கைவல்யம் போலே அன்றிக்கே
நிரதிசய அனுபவம் பரம புருஷார்த்த லஷண மோஷம்
பிரகாரமான ஆத்ம அனுபவத்துடன் நிற்காமல் பிரகாரி அவனளவும் சென்று
ஒளி மணி வண்ணன் -ஸ்வா பாவம் நிறம் -திருமேனி அசாதரான விக்ரகம்
தனியான உள்ள –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply