திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

    பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

    வி-கு : அண்ணல் – பெருமையுடையவன். சிந்துபூ – வினைத்தொகை.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

    எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை – 2‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.‘அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து – நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ! கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

    அந்தம் இல் புகழ் – பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்; இங்கு, 2‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது. ஆக, 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு. கார் எழில் – குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது. அண்ணல் – வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தமிருப்பது.

    ‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் – எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.

ஏழ் தலைமுறைக்கு ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை
எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அடியார் அடியார்’
என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’
எனின், எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு
மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால் ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்
அடியார்’ திருவாய். 3. 7 : 10.

கைங்கர்யம் -அங்கே என்றானாம்
அவர்களும் இங்கே செய்ய
இங்கேயே கொடு பிரார்த்திக்கிறார்
வானவர் வானவர் கோனுடும்-விஷ்வக் சேனர்
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்
எடுத்து தொடுத்து சமர்ப்பிக்க
அனந்த்தான் பிள்ளை ஆண் பிள்ளை நீர் ஒருவரே
ஸ்திரீ –
பர்தாவுக்கு அருகில்
விட்டு பிரிய துணியாமல்
தமது ஸ்வரூபத்தையும் அழிய மாறி
பரதாழ்வான் போலே பிரிந்து அடிமை செய்தாரே
திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதே இங்கேயே சம்ஸ்காரம்
வருஷம் அவரே
விஸ்வசிது வருஷத்துக்கு மரியாதை இன்றும் -இரண்டு தடவை எழுந்து அருளி
குன்றம் -மலை தொழுதாலே மோஷம் இரண்டுதடவை சாதிக்கிறோம்
கோபித்து கொண்டு போக சொல்ல நீர் யார் கேட்ட ஐதிகம்
பரன் சென்று சேர் திருவேம்கடம் -வந்து சேர்ந்தவன்
தான் தோன்றியாக வந்தீர்
ஆசார்யன் சொல் படி வந்தோம்
இந்த பாசுர அனுபவம் அவர்  முன்பே பெற பெற்ற பாக்கியம்

பரி பூர்ண கைங்கர்யம் -சரீரம்
கழிந்து அர்சிஸ் ஆதி -கதிரவன் மண்டலத்தை கீண்டு புக்கு தேச விசேஷம்
அங்கெ பெறுவது
அங்கு உள்ளோரும்  வந்து அடிமை செய்வது இங்கே தானே
வானவர் நித்யர் வானவர் கோன்
சிந்து பூ மகிழும் உடல் உருகி பூ சீதா
இங்கே பூத்து சிந்தும் பூக்கள்
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணல் ஸ்வாமி
எந்தை எந்தை -அடியார் -அடியார் அடியோங்களே
இத்தலையில் ஆரம்பித்து அத்தலைக்கு போய் நிரூபிக்கும் படி
தாஸ தாஸ சரம அவதி
ஈசானாம் பரமம் மகேஸ்வரம்

அப்ராக்ருத புஷ்பங்களை கொண்டு -சுத்த சத்வ புஷ்பங்கள் கொண்டு
தங்களுக்கும் அவ்வருகு
கானமும் வானரமும் வேடும் உடை -திருவேம்கடம் -எளிமை
முகம் கொடுத்து நிற்கிறான்
சௌலப்யம் அனுபவித்து சிதிலராய் அடைவு கெ ட்டுசிந்தி
தூ மலர் தூவி
மேன்மை கண்டு அங்கு போய் அனன்யார்கர் ஆவது போல் நீர்மை கண்டு உருகி
சிந்து பூ மகிழும் மலரும்
கொம்பில் இருந்தது விட நிலத்தில் விழுந்ததும் மலர்ந்து
அந்தமில் புகழ் -ஸ்ரீ வைகுண்டத்தில் புகழ் அந்தம் உண்டு போலே
அப்ராக்ருத விக்ரகம் -நித்ய சூரிகள் -அங்கெ -கரணங்கள் சங்கோசம் இன்றி –
அனுபவ யோக்யனாக -கிட்டினார்க்கு மட்டுமே -இங்கே யாரும் அனபவிக்கலாமே

யாளி கோளரி -சர்வரும் அதிகாரி இங்கே –
வைப்பன் மணி விளக்காம் -கை நீட்டும் யானி
களிறு
பெருகும் மத வேழம்
தீப ஆரோபாதி திர்யக் கூட செய்யுமே -அந்தமில் புகழ் இவனுக்கே
சமஸ்த கல்யாண குணங்கள் கூடி -பிரகாசிக்கும் இங்கு தானே குணாத்மகன்
கார் எழில் கரிய திருமேனி -சியாமள திரு மேனி -குணம் இல்லாவிடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
இதுவும் வேண்டாம் பிராப்தி ஸ்வாமி -அண்ணல்

அவன் தான் எந்தை –முந்தை
ஆன பின்பு அவனுக்கு அடிமை செய்ய  முதல் பாட்டில் உள்ள வினைத் தொகை –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading