ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -205-216–அரும் பத விவரணத்துடன்–

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

——

இரு நூற்று ஐஞ்சாம் வார்த்தை
எம்பெருமானார் -திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ  பாதத்திலே நின்று நெடு நாளோடு கூட
ஸ்தோத்ரம் கேட்டருளி சாத்தினவாறே -இனி ஜ்ஞான கார்யத்தில் உமக்கு கர்த்தவ்யம் ஒன்றும் இல்லை -பெரிய நம்பிக்கு பிரியமாக கோயில் திருவாராதனம் நடத்தல் ஆகாதோ -என்று சரம ஸ்லோக அர்த்தத்தையும் அவ்வளவிலே அருளிச் செய்து -விடை கொடுத்து அருள –
இவரும் விடை கொண்டு -திருக் குளக் கரையிலே (திருப்பாற்கடல் என்னும் புஷ்கரணிக் கரையிலே)எழுந்து அருள -முதலியாண்டான் எம்பெருமானார் தாழ்த்த அருளினவாறே ஸ்ரீ பாதத்திலே கண்டு வர வேணும் என்று வர -ஓரடி முற்பட்டீர் இல்லையே –எனக்கு சரம ஸ்லோகம் அருளிச் செய்த உருகு பதத்தோடு எழுந்து அருளி  இருக்கிறார் -புக்கு தண்டனிட்டு வா –என்று அருளிச் செய்ய-ஆண்டானும் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டனிட்டு நிற்க-
ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே யிருந்தாய் -என்று விஷயீ கரித்து -சரம ஸ்லோக
அர்த்தத்தை அருளிச் செய்து -உனக்கு பரிஹரிக்க வேண்டுவது மூன்று படு குழி உண்டு –
அத்தைக் கேள் -என்ன -அருளிச் செய்யலாகாதோ -என்ன -வித்வான் -அபிஜாதன் -எம்பெருமானார் மருமகன் என்கிறவற்றை -எல்லாம் -உத்தேச்ய என்று இராதே –
எம்பெருமானார் திருவடிகளில் பண்ணின சம்பந்தமே உனக்கு உத்தாரக ஹேது -என்று இரு
என்று அருளிச் செய்ய-அத்யந்த ஹேயனாய் இருக்கிற என்னையும் தங்களோடு ஒரு கோவையிலே கோப்பதே -என்று கண்ணும் கண்ண நீருமாய் விடை கொண்டு எம்பெருமானார் ஸ்ரீ பாதத்து ஏறப் போந்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(இங்கு நம்பி சுருக்கமாக அருளிச் செய்து உடையவரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி அருளி இருக்க வேண்டும் -குரு பரம்பரா ப்ரபாவத்தில் ஆண்டானுக்கும் ஆழ்வானுக்கும் சரம ஸ்லோகார்த்தம் அருளிச் செய்வதால் இருப்பதற்கு பொருந்தும் -எம்பெருமானார் சம்பந்தமே உத்தாரகம் என்று நினைத்து இருக்கும் உங்கள் கோஷ்ட்டியில் அடியேனையும் சேர்த்து அருளினீரே என்று உகப்புடன் ஆண்டான் அருளிச் செய்கிறார் -)

————————————————————————————————

இரு நூற்று ஆறாம் வார்த்தை
எம்பெருமானார் -உந்து மத களிற்றன் என்கிற பாட்டை அனுசந்தித்துக் கொண்டு
திருக் கோட்டியூர் நம்பி திரு வாசலிலே -சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்கிற இடத்தை அனுசந்திக்கிற போது -நம்பி திரு மகளார் -தேவகிப் பிராட்டியார் -திருக் கதவைத் திறந்து கொண்டு புறப்பட -எம்பெருமானார் விழுந்து தெண்டன் இட்டு கிடக்க -நெரித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போக-
நம்பி -இது என் பெண்ணே -என்ன -என்னை எம்பெருமானார் தண்டன் இட்டார் -என்ன –
அதுக்கு பயப்பட வேணுமோ என்று அருளிச் செய்து -எம்பெருமானார் உள்ளே புக்கு அருளினவாறே –
இளையாழ்வீர் -இப்போது அனுசந்தானம் உந்து மத களிற்றனோ -என்று அருளிச் செய்தார்
என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(இங்கும் குரு பரம்பரா ப்ரபாவத்திலும் இவ்வாறு உள்ளதை மூவாயிரப்படி அரும்பதகாரர் பெரிய நம்பி -அத்துழாய் -என்று அருளிச் செய்கிறார்)

————————————————————————————————–

இரு நூற்று ஏழாம் வார்த்தை
நம்பி திருவழுதி வள நாடு தாசர் -ஓருரு கண்ணி நுண் சிறுத் தாம்பை அருளிச் செய்து –
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டினவாறே
ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் லீலா விபூதியில் இத்தை ஒருவன் ஸ்ரத்தை பண்ணி -அநுசந்திக்க -அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்கனே -என்று கேட்க -அது இருந்தபடி கேளீர்-கூரத் தாழ்வான் திரு மகனார் திரு வவதரித்த பின்பு இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்து காண் என்று அருளிச் செய்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(-நம்புவார்களுக்குப் பதி ஸ்ரீ வைகுண்டம் என்றும் அவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டமாகும் -இரண்டு நிர்வாஹங்கள் உண்டே-நம்புவார் பதி வைகுந்தமாகும் பட்டர் காலத்திலேயே பலித்தது என்று அறியலாம்)

—————————————————————————————————-

இரு நூற்று எட்டாம் வார்த்தை
ஆள வந்தார் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் வர்த்திக்கிறவர்கள் -ஒரு நாள் இருவரும் -ஆற்றுக்கு எழுந்து அருளி ஒருவர் புறப்பட்டு வர -ஆள வந்தார் அருளிச் செய்த வார்த்தை -அன்றிலினுடைய அவஸ்தை பிறந்த போது காண் ஆத்ம ஞானம் பிறந்தது ஆவது -என்று அருளிச் செய்தார் –

(ஆத்ம யதாத்ம்ய ஞானம் பிறந்தால் அன்றில் மிதுனம் போல் -ஸ அநவஸ்தான லக்ஷணம்-பாகவத விஸ்லேஷம் தரியாமல் இருப்பார்கள் அன்றோ -)

——————————————————————————————————

இரு நூற்று ஒன்பதாம் வார்த்தை

ஆளவந்தார் திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற போது -தெய்வ வாரி யாண்டானை
மடத்துக்கு வைத்து -திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற அளவிலே -சந்நிதியில் முதலிகளைப் பார்த்து -குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கோள் –என்று அருளிச் செய்து அருளி-திரு முகத்தைப் பார்த்து அருள -மாசமும் திவசமும் அன்று தானாய் இருந்த படியாலே-ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே என்று  போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க –

தெய்வ வாரி யாண்டானுக்கு ஆளவந்தாருடைய விஸ்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க – வைத்யர்கள் பலரும் பார்த்த இடத்தில் -விஷய ஸ்ப்ரூஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்று சொல்ல –

உமக்கு எந்த விஷயத்தில் ஸ்ப்ருஹை யாய் இருக்கிறது -என்று கேட்க -அடியேனுக்கு ஆளவந்தார் விஷயம் ஒழிய வேறேயும் ஒரு விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்ய

ஆகில் இவரை அங்கே கொண்டு போங்கள் என்று வைத்யர்கள் சொல்ல -இவரை கட்டணத்திலே கொண்டு போக -ஒருநாளைக்கு ஒரு நாள் திருமேனி பெருத்து நடக்க வல்லராய் வருகிற அளவிலே -ஆளவந்தாரும் திருவனந்தபுரம் சேவித்து
மீண்டு எழுந்து அருளா நிற்க -தெய்வ வாரி யாண்டானும் தெண்டம் சமர்ப்பித்து எழுந்து இருக்க மாட்டாமல் இருந்தபடியைக் கண்டு –

பெருமாள் ஸ்வ தந்த்ரருமாய் ஸூ ரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரதாழ்வான் வைத்த இடத்தில் இருந்தார் -நான் ஸ்வ தந்த்ரனும் அன்றிக்கே ஸூரனும் அன்றிக்கே இருக்கையாலே இறே நாம் வைத்த இடத்தில் இராதே நீர் வந்தது -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
 இத்தைக் கேட்டு தெய்வ வாரி யாண்டான் -நாம் வந்து ஸ்வரூப ஹாநி பட்டோம் -என்று சத்தை குலைந்து கிடக்க –
என்னை -ஸ்வ தந்த்ரனுமாக்கி ஸூ ரனுமாக்கி எழுந்து இருக்கிறோம் என்று கிடக்கிறாயோ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –

வைத்த இடத்தே இராதே வந்து ஸ்வரூப ஹாநி பட்டால் போலே –இதுவும் ஒரு ஸ்வரூப ஹாநியாய் ஆய்த்தோ -என்று பர பர என எழுந்து இருந்து நிற்க –
ஆளவந்தாரும் -இதொரு அதிகார  விசேஷம் இருந்தபடி  என் -என்று உகந்து -போர இளைத்தாயே -என்று கிருபை பண்ணி -திருவனந்தபுரத்து திருக் கோபுரம் தோன்றுகிறது –ஸ்ரீ பத்மநாபப் பெருமாளை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது -என்று ஸ்வ ஆசார்யரான ஆளவந்தார் திருவடிகளைக் காட்டி -கூட சேவித்துக் கொண்டு மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் –

(உலாவும் பெருமாள் ஆச்சார்யர் உரேனியும் பெருமாள் அவன் -எம்பெருமானார் ஆளவந்தார் சேவிக்க வந்து அரங்கனை செவிக்காமல் மீண்ட ஐதிக்யம் -இதுவன்றோ எழில் ஆலி என்றான் அவனும்)

—————————————————————————————————

இரு நூற்று பத்தாம் வார்த்தை

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன –

தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

—————————————————————————————————-

இரு நூற்று பதினோராம் வார்த்தை

பெரிய நம்பி திருமகளார் அத்துழாய் புக்ககத்திலே இரா நிற்க -ஒருநாள் தீர்த்தமாடத் துணை வர வேணும் -என்று மாமியாருக்கு அருளிச் செய்ய -உன் சீதன வெள்ளாட்டியை கொண்டு போ என்று தடுத்துச் சொல்ல -நம்பி பக்கல் வந்து-நம்பீ என்னை இப்படி சொன்னார் என்ன –
நாம் அறியோம் உங்கள் ஜீயருக்கு சொல்லும் -என்ன -இவளும் அங்கு சென்று விண்ணப்பம் செய்ய –
அருகே இருந்த முதலி யாண்டானைப் பார்த்து -உமக்கு இந்தாரும் அம்மா ஸ்ரீ தன வெள்ளாட்டி -என்று திரு உள்ளமாய் -இவரைக் கொண்டு போ -என்ன -ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடப் பண்ணு வித்து –இவருடைய புக்ககத்திலே நின்று -தாஸ வ்ருத்திகளை செய்யத் தொடங்கினார் -இவருடைய புக்ககத்தார் –
இது என் ஆண்டான் -என்ன -என்னை வர விட்ட உடையவரும் எங்கள் நாய்ச்சியாரும் சொன்னது செய்ய வேணுமே -என்ன -அவர்களும் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஏறப் போய் -நம்பீ முதலி யாண்டானை ஏற விட்டு இப்படி எங்களை நசிப்பிக்கிறது என் -என்ன -நாம் அறிந்தோமோ -எம்பெருமானாருக்கு சொல்லுங்கோள்-
என்ன -அங்கே  சென்று விண்ணப்பம் செய்ய – உடையவரும் -ஆண்டானை அத்துழாய்க்கு ஸ்ரீ தன அடிமையாகக் கொடுத்தோம் -அங்கு உங்களுக்கு நிற்க ப்ரியம் அன்று  ஆகில் இங்கே நின்று அடிமை செய்கிறது -என்று அருளிச் செய்து அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

—————————————————————————————————–

இரு நூற்று பன்னிரண்டாம் வார்த்தை

த்ரை லோக்யாள் -என்பாள் ஒரு ஸ்த்ரி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் வங்கி புரத்து ஆச்சி ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருக்கும் -அங்கே அனந்தாழ்வான் எழுந்து அருள -அவரை ஆறு மாசம் சேவித்து இருந்து-அவர் எழுந்து அருளினவாறே ஆச்சி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்றாள் -அவரித்தனை நாள் வந்திலையீ என்ன –
அனந்தாழ்வானை சேவித்து இருந்தேன் என்ன -அவர் நான் சொன்னதிலும் ஏற்றமாக சொல்லிற்று உண்டோ -என்ன –
உண்டு -உம்மை ஆஸ்ரயித்து -பதினாறாட்டை நாளுண்டு (பதினாறு வருட காலம்)-எம்பெருமானார் திருவடிகளைத் தஞ்சம் என்றீர் இத்தனை -அவர் ஆறு மாசத்திலே உம்முடைய திருவடிகளே  தஞ்சம் என்னும்படி பண்ணினார் – என்றாள் –

——————————————————————————————————–

இரு நூற்று பதிமூன்றாம் வார்த்தை

அப்பன்  என்பவர் -ஆழ்வான் உடைய அந்திம தசையிலே -ஸ்ரீ பாதத்திலே சேவிக்கப் பெற்றிலேன்-எனக்கு ஹிதாம்சம் அருளிச் செய்ய வேணும் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய – ஊரையும் ஸ்வாஸ்யத்தையும் விட்டு மேற்கு நோக்கி ஓரடி இட்ட போதே ஹிதாம்சம் அற்றது சொல்ல வேணுமோ என்று அருளிச் செய்தார் –

(இத்தால் ஸதாச்சார்யரை ஆஸ்ரயிக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்ட உடனே ஹிதாம்சம் கிட்டி விடும் -மற்ற செயல்கள் எல்லாமே காலஷேபத்துக்கே உறுப்பாகும் என்றவாறு)

——————————————————————————————————

இரு நூற்று பதினாலாம் வார்த்தை

முதலியாண்டான் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே மோஷம் -என்ன –
கூரத் ஆழ்வான் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -என்ன –
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -என்று
பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே -4-4-2-ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே ஆகவேணும் -என்ன –
ஆழ்வான் -அங்கன் அன்று -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப்பாட்டிலே நடக்கிற நமக்கு
எல்லாருக்கும் ஸ்வ அனுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -ஆக வேணும் என்று அருளிச் செய்தார் -ஆண்டானும் அப்படியாம் என்று மிகவும் ப்ரீதரானார் –

——————————————————————————————————–

இரு நூற்று பதினைந்தாம் வார்த்தை

ஈஸ்வரன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்யனை தஞ்சம் என்று இருப்பான் –
ஆசார்யன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்ய வைபவம் சொன்னவனை தஞ்சம் என்று இருப்பான் –

(பல கரணம் கருவி உபாயம் ஆச்சார்யன் -பல ப்ரதன் எம்பெருமான் -பொன்னுலகாளீரோ புவனம் முழுவதும் ஆளீரோ-ஆச்சார்யர் பலப்ரதன் -ஆச்சார்ய வைபவம் -குருவி காட்டும் மூலையில் இருவரும் வாழ்வோம்-ஆச்சார்யரைக் காட்டிக் கொடுத்த பாகவதர்கள் தஞ்சம் – உபாயம்)

——————


216-வார்த்தை
பிள்ளை பின்பு அழகிய ஜீயர் மடத்திலே ஒரு நாள்  எழுந்து அருளி இருக்க -எல்லாருக்கும் ஆழ்வாருடைய அவஸ்தை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருக்கும் நிலை –உண்டாய் பெற வேண்டி இரா நின்றது -ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிற நாங்கள் செய்வது என் -என்று விண்ணப்பம் செய்ய -இங்கு அந்த அவஸ்தை பிறந்தது இல்லை யாகிலும் சதாசார்ய விசேஷ கடாஷத்தாலே- ஸ்தூல சரீர விமோசநத்துக்கும்  கைங்கர்ய ப்ராப்திக்கும் நடுவே – அவ் வவஸ்தை பிறப்பித்து- எம்பெருமான் கார்யம் செய்யும் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் அருளிச் செய்வர்-

(ஸ்வீக்ருத சித்த சாதனர் இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்–சூரணை-100–இந்த பக்தியை போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆகையாலே பிராப்யமான கைங்கர்யத்தோபாதி இதுவும் நமக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி -சரீர வியோகசம அநந்தரம் பகவத் பிராப்தி பண்ணுவதற்கு முன்னே சித்திக்கும்)

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply