திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி- மாரி மலை முழைஞ்சில் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

ஸ்ரீ ய பதியால் மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்
எம்பெருமான் கடாஷம் -ஒன்றே உஜ்ஜீவிக்க வழி –
அத்தை பிரார்த்தித்து -சிறுக சிறுக -பிரதம -மலர்வதையை ஆனந்த பட –
அங்கண் இரண்டும் கொண்டு நோக்க –
திங்கள் போலே குளிர்ந்தும் சூர்யன் போல பிரகாசமும்
ஆசார்யன் விஷயத்தில் -இரண்டு கண்ணால் பார்க்க சொன்னது -ஸ்வாபதேச அர்த்தம் –
வெளிக் கண் -இல்லை உள் கண்ணால் காணும் உணர்வு -நெஞ்சின் சககார்யம் இருந்தால்தான் பார்த்த விஷயம் படும் –
மனசு உபகாரம் செய்தால் தான் -மனப்பூர்வமாக கடாஷிக்க –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -உத்பத்தி புருஷ ஸூ கதி -சொல்லும் பொழுது
மனசில் இருந்து சந்தரன் -சந்தரமா மனசோ -ஜாயதா -கண்ணில் இருந்து சூர்யன் –
விசேஷ அர்த்தம் இப்படியும் கொள்ளலாம் –
சமாதானம் பண்ணி அருளினான் -வார்த்தையால் -சாபராதரன் போலே -தப்பு பண்ணி விட்டு துடிக்க விட்டேனே –
அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யம் கேட்டருள வேணும் –
எழுந்து நான்கு திருவடி நடந்து காட்ட வேணும் –
படுக்கை அறை வார்த்தை கூடாதே –
நடக்கும் பொழுது சிங்கம் போலே காம்பீரம் சிம்காசனம் வீற்று இருந்து
நாம் வந்த கார்யம் ஆராய்ந்து
சென்று நாம்  ஆ ஆ  ஆராய்ந்து அருளுவான் கீழே சொல்லி –
அத்தை இதில் பிரார்த்திக்கிறார்கள் சிம்க கதி வர்ணித்து
மழைக் காலத்தில் சிங்கம் எங்கும் போகாது
ஆண்டாள் யாகம் ஆராயாமல் சிங்கம் பற்றி மலை பர்வதம் குகைக்குள் புகுந்து –
யானை வந்தாலும் -வராமல் மன்னி பொருந்தி கிடந்தது கிடக்குமாம் –
மிருக ராஜா சீரிய சீர்மை பொருந்திய சிங்கம் -வனராஜா –
ந அபிஷேக -பட்டாபிஷேகம் செய்து ராஜாவாகவில்லை ந சம்ஸ்கார -பராக்ரமத்தால் ச்வமேவ மிருக ராஜா
அறிவுற்று -காலம் உணர்ந்து –
கண்ணை திறந்து பார்க்க தீ விழித்து
வேரி மயிர் போங்க வாசனை வேரி  மாறாத பூ மேல் இருப்பாள்
எப்பாடும் பேர்ந்து -குறுக்க நெடுக்க நடந்து
உதறி –
மூரி நிமிர்ந்து சோம்பல் முறித்து –
முழங்கி -கர்ஜனை கேட்டு -மிருகங்கள் விதிர் விதிர்க்க
புறப்பட்டு போதருமா போலே –
பூவைப் பூ வண்ணா -சிங்கம் போல் பயங்கரமாக இல்லை -சுகுமாரமான தன்மை நிறம் உடையவன் உன்னுடைய கோயில் இருந்து
போந்தருளி
சீரிய சிங்காசனம் வீற்று இருந்து ஆராய்ந்து அருள வேணும்
வர்ஷ காலம் ராஜாக்கள் படை வீட்டில் இருந்து
சன்யாசிகள் சாதுர் மாசம் அனுஷ்டிப்பது -மாதுகரம் பெற்று -நித்யம் நித்யம் போக வேணும் –
பக்குவமான அன்னம்பெற்று –
கிராம ஏக ராத்திரி -இருந்து –
மடாதிபதிகள் வேறு சாமான்ய தர்மம் கிடையாதே –
ஆவணி ஐப்பசி போகாமல் சாதூர் மாசம் ஒரே கிராமத்தில் தங்கி முறை போட்டு ஆதரிப்பார்கள் –
முடியும் பொழுது -அங்கெ தங்காமல் போக வேண்டும் –
கைங்கர்ய பிரதான மடாதிபதிகளுக்கு இந்த நிர்பந்தமில்லை –
பெருமாள் மால்யவானில் எழுந்து அருளி இருந்தது போல்
வருத்ததுடன் -இழந்த போகம் அனுபவிக்க சுக்ரீவன் இடம் அருளி –
மன்னி கிடந்தது உறங்கி –
திரு விருத்தம் -மழை காலம் வருவான் -பாசுரங்கள் நிறைய
விச்லேஷித்தால் கூடும் காலம்
கூடி இருந்தால் அனுபவிக்கும் காலம்
வல்லப தேவன் நகர சோதனை போகும் பொழுது –
காசி இலிருந்து வந்த பண்டிதன் -வார்த்தை சுபாஷிதம் சொல்ல –
பரத்ர ஹேதோ -மழைக் காலத்தில் வேண்டியதை
இரவில்  வேண்டியதை பகலில் தேடி
பால்யத்தில் வயசான காலத்தில் வேண்டியதை தேடி –
நாங்கள்  உன் வாசலில் நின்று வருந்த -நீயோ
மன்னி பொருந்தி மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமே –
குவடு போலே பொருந்தி மலையில் உள்ள பாறை போலே
வீசு வில் கொண்டு உண்டி வில் கொண்டு எழுப்பினாலும் எழுந்து இருக்காமல் மன்னி கிடந்தது
பேடை உடன் ஏக வஸ்துவாக பொருந்தி
நப்பின்னை கொங்கை போல் -மலர் மார்பா -ஆபரணம் போலே பொருந்தி கிடந்தது –
சம்சாரிகள் உறங்குவது தமோ குணம்
இவன் உறக்கம் -ஆற்றாரார் கூப்பிடுவதை கவனித்து யோக நித்தரை –
சீரிய சிங்கம் -உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் வீர ஸ்ரீ உடைய சிங்கம்
சீர்மை செல்வம் பெருமாள் -ஸ்ரீ மான் படுத்து கொண்டு இருக்கும் பொழுதும் -சீதை வார்த்தை –
அறிவுற்று பூ அலர்ந்தால் போலே-
காலத்தில் அலறும் -காலம் உணர்த்த உணர்ந்து –
ஆஸ்ரிதர் துக்கம் கண்டு உணர்கிறான் -கூக்குரல் கேட்டு -உணர்கிறான்
தீ விழித்து -பேடைக்கும் அருகில் நிற்க முடியாத பிரதம கடாஷம்
பிள்ளையை சீறி –அனல் விழி -பூம் கோதையாள்  வெருவ –
ஐச்வர்யமான தேஜஸ் -முன் யாரும் நிற்க நுடியாமல்
வேரி -பரிமளம் ஜாதி உசிதமான நாற்றம் சர்வ கந்த -சர்வேஸ்வரன் திரு மேனி போல்
எப்பாடும் பேர்ந்து -காரியப்படு இல்லாமையாலெ நாலு பக்கமும் பேர்ந்து உதறி -அவயவங்களை தனி தனியே
மூரி நிமிர்ந்து
முழங்கி -பூரணமாக பயந்து நடுங்க
பெண்காள் வந்தீரோ என்று சொல்ல வேண்டும் -நீ போதர வேண்டும் –
சிம்கமோ நமக்கு த்ருஷ்டந்தம் கேட்க
பூவை பூ வண்ணா
கம்பீரத்துக்கு சொன்னோம்
வடிவு அழகு நிறம் -பூவை பூ
காவி மலர் பாவியேன் மெல்லாவி -காண்தொறும் அவவை எல்லாம் பிரான் உரு
பூவையும் காயாவும் நீல மும் பூக்கின்ற -பூவை பூ வண்ணா –
கட்டுரையாய் -பெருமைக்கு தகுதி அன்று
அதுவாகாது –
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி –
பிராட்டி மங்களாசாசனம் பண்ண-சுமந்த்ரன் உடன் போகும் பொழுது –
சீதை வார்த்தை -பர்வத்தில் இருந்து வெளியில் வரும் கிரி குகை யி லிருந்து வருவது போலே –
சதுர்  கதி -நான்கு வித கதி –
கற்ப கதி -யாம்ய  கதி -தூமாதி கதி -அர்ச்சிராதி கதி –
கஜ சிம்க கதி வீரோ புலி எதிரு ரிஷப கதி –
ரிஷமம் வீரம் வீறு மிடுக்கு
மத்த கஜம் காம்பீரகோபம்
சிம்கம் -சாமார்த்தியம் -தேஜஸ்
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் நடை அழகில் காணலாம்
சர்ப கதி -உள்ளே ஏழும் பொழுது –
52 acre பெரிய ஸ்ரீ ரெங்கம் கோயில் -கற்ப கரகம் சின்னது –
திருவேம்கடம் விசாலமான கற்ப கரகம் பின்பு சென்று பிரதஷினம் அர்ச்சகர் செய்யலாம்
பாம்பு புற்று போல் ஸ்ரீ ரெங்கம் -சர்ப கதி
வெளியில் வரும் பொழுது சிம்க கதி
கஜ ரிஷப கதி பிரகாரங்களில்
நடை அழகு ஐ திக்யம் -வடக்கில் நின்றும் பாட வந்தவர்-நடை அழகை  சேவிக்க
திருப்புன்னை அடியில் -அரையர் ஸ்வாமி -பாகன் மத்த கஜம் ஏவுவது போலே-
பயணம் எடுத்து விட்டு காட்டி -நீர் நடந்து வந்த தூரத்துக்கு இது போருமோ கேட்டானாம்
ராஜா வந்து ஒரு வருஷம் தங்கி சேவித்தான் -விஜய ரெங்க  சொக்கநாதன் -முத்தங்கி மூலவருக்கு சமர்ப்பித்தவர் -வடக்கின் நின்று பாட வல்லான் -ஒருவன் -தொண்டை மண்டலம் -திவ்ய பிரபந்தம்
தொண்டை மண்டலம் சேவை காலம் பிரசித்தம் -அத்யாபக ஸ்வாமி –
நாதமுனி அரையர் -சேவை பண்ணி வைத்து -அருளிச் செயலின் பெருமை –
நாட்டிய போட்டி -அரையர்-நம்பெருமாள் -கானகம் படி உலாவி உலாவி -ஆடல் பாடல் மாறினார் –
இந்திர லோக அப்சரஸ்  மேனகை  திலோத்தமை அரம்பை உருப்பசி -நான்கு பெயரையும் சொல்லி –
அடியேன் அபிநயம் பிடிப்புது -புரட்டு வாதம் போலே -உணவு உண்பது போல் கை கால் ஆட்டி –
அந்த நடை அழகாய் சேவிக்க ஆசை
இங்கனே போந்து அருளி
படுக்கை அறை வார்த்தை இன்றி -குளிர வைக்க பேசுவார்கள் –
தேர் தட்டு வார்த்தை -கடல் கரை வார்த்தை -நீயே இல்லை செய்ய போகாத இடம் –
சிம்காசன வார்த்தையாக -தனி மண்டபத்தில் வார்த்தை
கோப்பு கட்டு கோப்பு சராசரங்கள் அடைய ரஷிக்கும் தொழிலாக -உபய விபூதி நிர்வாஹன் –
தர்ம ஞானாதிகள் -அதர்ம ஞானாதிகள் அறிந்த சிம்காசனம் –
இடத்துக்கு மகிமை -உண்டே –
சீரிய சிங்காசனம் -தீர்ப்பு முடிவு பொய்யே ஆகாது
கடல் கரை வார்த்தை விபீஷணுக்கு ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் போலே
திருத் தேர் தட்டில் -வார்த்தை ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் வார்த்தை போலே இருக்க வேண்டும்
பெண்களும் கிரிஷ்ணனும் சேர்ந்து சொல்லினும் அமோகமாக
ஏலாப் பொய்கள் உரைப்பான் -இருந்தாலும்
கண்ணனுக்கு சமமான ஸ்தானம் கொடுக்கும் சிங்காசனம்
மணல் மேட்டு விக்ரமாதித்தன் சிம்காசனம் -கதை -சொல்வது எல்லாம் தர்மமாக இருக்குமாம் –
ஒவ் ஒரு படியில் பொம்மை உண்டாம் -காவ்யம் –
இவனுக்கு கூட பொய் சொல்ல முடியாது கோப்புடைய சீரிய சிங்காசனம்
இருந்து -வீற்று இருக்கிற திருக் கோலம் காண
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -ஆழ்வார்
நின்ற வீற்று இருந்த சயன திருக் கோலம் அழகு
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -கிருஷ்ண அவதார அனுபவம் பூர்த்தி
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாரும் நினைப்பு அரியன
கடல்கரையில் சக்கரவர்த்தி திரு மகன் வில்லை வூன்றி நின்ற வாறு
விபீஷணன் வந்ததும் இருந்தவாறும்
சமுத்திர ராஜ சயனம் கிடந்தவாறு –
திரு மலையில் நின்றவாறு பரம பதத்தில் இருந்தவாறு
பபுளின்குடி கிடந்தது –
திரு ஊரகத்தில் நின்றவாறு -திருப்பாடகத்தில் இருந்தவாறு -திரு வெ க்காவில் கிடந்தவாறு
இத்தை கேட்ட எம்பெருமானார் –
கண்ணன் தொட்டில் சங்கிலி பிடித்து நின்றவாறு –
அது தரிக்க மாட்டாமல் இருந்தவாறு
அது தரிக்க மாட்டாமல் கிடந்தவாறு –
என்று அருளிச்  கண்ணன் விஷயமாக அனைத்தும் -விடாய் கெட்டு அனுபவிக்கும் படி வீற்று இருந்து
அநந்ய பிரயோஜனர் நாங்கள் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
வராதாவர்கள் வர தேவை இல்லாதவர்கள் வந்தால் –
ரிஷிகள் துக்கநிவ்ருதிக்கு தான் முற் படாமல் இருந்தது -வருந்தி -பெருமாள் –
பரம பதம் -திரு பாற் கடல் அயோதியை -தண்ட காரண்யம் வந்தும் ரிஷிகள் கொஞ்சம் நடந்தது பொறுக்காமல் –
என்னை அணுகி -நான் வந்து கேட்க இருக்க பதறி துடித்தானாம் -உன்னுடைய -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் –
அழைத்து செய்ய வேண்டுவது என் என்று கேட்க
இங்கனே சொல்ல ஒண்ணாது
ஒலக்கமாக பின்பு
நப்பின்னை பரிக்ரமம் சங்கம் இருப்பார் போல் வந்து தலை பெய்தோம் -நீங்கள் சொல்லலாமா
அழகர் கிடாம்பி ஆச்சான் வரத்தை -ஆளவந்தார் அகதி சரணாகதம் கிருபையால் ரஷித்து அருள் –
நம் ராமானுசனை உடையாய் இருந்து வைத்து அகதி சொல்லலாமா –
நப்பின்னை சம்பந்தம் உடையவர் சொல்ல கூடாது என்றானாம்
வந்த கார்யம் சிற்றம் சிறு காளைக்கு வைத்து
அவசரம் சமயத்தில் சொல்ல வேண்டும் –
ஆற்றாமை காட்டி பரத ஆழ்வான் -சித்ரா கூடத்தில் -சயனம் கூட்டி போய் –
ஒருவன் கண்ணீர் கண்டு இரங்கா விடிலும் அனைவர் ஆர்த்தியை காட்ட –
சமயம் சரியாத –
காரணம் தகப்பனார் நியமனம் முதலில் தள்ளி போட்டு பலன் -கொடுத்தான் -ஆராய்ந்து அருள் -எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் –
பத்து கோபிகள் எழுப்பி வாசல் காப்பான் நந்த கோபாலன் நப்பின்னை நம்மை எழுப்பி
கோர -எதிர் சூழல் புக்கு திரிந்தவனுக்கு -இவை எல்லாம் –
அவனை பெற இவ்வளவு கஷ்டமா திரு உள்ளத்தில்
சொன்ன படி நடக்க
பல்லாண்டு பாடுகிறார்கள் அடுத்து –
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே .சரணம்
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading