ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -1-12–அரும் பத விவரணத்துடன்–


 

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

 ————————

முதல் வார்த்தை –

ஸ்வரூப உபாய புருஷார்த்தம் ஞானம் அவஸ்யதை
ஸ்ரீ வைஷ்ணவ சம்சார சாம்யமும் ஞான தாரதம்யமும்
அஞ்ஞான அந்யதா விபரீத ஞானம் நிரூபணம்
ஸ்ரீ வைஷ்ணவ சம்சாரி நிஷ்டை
அர்த்த பஞ்சக நிரூபணம்
அஹங்கார த்வயம் உப லக்ஷணம் இதில்

ஒருவனுக்கு அறிய வேண்டியது ஸ்வரூப  புருஷார்த்த உபாயங்கள் –
இது தான் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் சம்சாரிகளுக்கும் வேணும் .
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வ ஞான பிராபக ஞான ப்ராப்ய ஞானம் அடியாக வருவது ஓன்று –

(அரும்பத விவரணம் –
ஸ்வ ஞானம் –ஜீவாத்மாவாகிற தன்னைப் பற்றிய அறிவு
ப்ராபக ஞானம் -உபாயமான நிர்ஹேதுக கிருபையுடன் கூடிய எம்பெருமானைப் பற்றிய அறிவு
ப்ராப்ய ஞானம் –உபேயமான -அடையத் தக்கதான -உகப்போடு கூடிய எம்பெருமான் விஷயமான கைங்கர்யத்தைப் பற்றிய அறிவு)

(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி மூன்றாக இங்கு -விரோதி ஸ்வரூபம் உபாய ஸ்வரூபத்தில் சேரும் -பரமாத்மா ஸ்வரூபம் புருஷார்த்த ஸ்வரூபத்தில் சேரும்)

சம்சாரிகளுக்கு அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞானம் அடியாக வருவது ஓன்று –
சம்சாரிகள் ஸ்வ தேக ஆத்ம அபிமானமே ஸ்வரூபம் என்றும் –
தேகாந்திர அனுபவமே புருஷார்த்தம் என்றும் –
ஸ்வ  தேக வியாபாரமே  தத் சாதனம் என்றும் இருப்பவர்கள் –
இது இவர்கள் நிஷ்டை –

(அஞ்ஞானம் –அறிவு உண்டாகாமை அந்யதா ஞானம் -சங்கத்தை மஞ்சள் நிறமுள்ளதாக அறியுமிடத்தைப் போலே ஒரு பொருளின் தன்மையை -நிரூபித ஸ்வரூப விசேஷணத்தை வேறாக அறிகை-
விபரீத ஞானம் -சிப்பியை வெள்ளியாக அறியுமிடத்தைப் போலே ஒரு பொருளையே மற்ற ஒரு பொருளாக அறிகை -அதாவது ஒரு பொருளின் ஸ்வரூப நிரூபக தர்மத்தை வேறாக அறிகை –
ஸ்வ தேக ஆத்ம அபிமானமே ஸ்வரூபம் என்று இருக்கையாவது -ஸம்ஸாரிகளுக்கு ஸ்வரூப ஞானம் தேஹமே ஆத்மா என்று இருக்கை யாகிற அஞ்ஞானம் –
தேகாந்திர அனுபவமே புருஷார்த்தம் என்று இருக்கையாவது -ஸ்த்ரீ புருஷர்கள் பரஸ்பரம் மற்றவர்களுடைய தேஹத்தை அனுபவிப்பதே பெரும் பேறு என்று நினைத்து இருக்கை –
ஸ்வ  தேக வியாபாரமே  தத் சாதனம் என்று இருக்கையாவது -அவ்வின்பத்தைப் பெறுவதற்காகத் தாம் செய்யும் முயற்சிகளே அதற்க்கு சாதனம் என்று நினைத்து இருக்கை
நிஷ்டை -உறுதியான நிலை)

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்றும் –
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும் –
இப் புருஷார்த்த சித்திக்கு தத் சரணார விந்தமே உபாயம் என்று இருப்பார்கள் –
இது இவர்கள் நிஷ்டை –

(பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்றது -எம்பெருமானாக்கு அடிமைப்பட்டு இருக்கையே ஜீவாத்மாவுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றது எம்பெருமான் உகப்புக்காகக் கைங்கர்யம் செய்வதே ப்ராப்யம் – உபேயம் -ஸாத்யம் -என்று சொல்லப்படும் புருஷார்த்தம் -பேறு அல்லது பயன் –
தத் சரணார விந்தமே உபாயம் என்றது – எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையே முன் சொன்ன பேற்றுக்கு உபாயம் -வேறு எந்தச் சேதனரும் பல ப்ரதராகவோ -பல கரணமாகவோ -இருப்பவர் அல்லர் -கர்மம் ஞானம் பக்தி பிரபத்தி முதலான தன்னிடம் இருக்கும் எதுவும் பலகரணமான உபாயம் அன்று என்று கருத்து -)

ஸ்வ ஸ்வரூபம் அனந்யார்ஹம்
பர ஸ்வரூபம் -மிதுனம்
விரோதி ஸ்வரூபம் -அகங்காரம்(மமகாரத்துக்கும் இது உப லக்ஷணம்)
உபாய ஸ்வரூபம் -அவன் கிருபை
பல ஸ்வரூபம் -அவன் உகந்த அந்தரங்க வ்ருத்தி

(அனந்யார்ஹம்-ஸ்ரீ மன் நாராயணனுக்கே உரியதாய் இருக்கும்
பர ஸ்வரூபம் -கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளும் பிரதி சம்பந்தியான சேஷி ஸ்வரூபம்
மிதுனம் -பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து திவ்ய தம்பதிகள்
அஹங்காரம் -தானல்லாத தேஹத்தைத் தானாக நினைக்கை -தன்னல்லாத பொருள்களைத் தன்னுடையவையாக மயங்குகையாகிற மமகாரத்துக்கும் இது உப லக்ஷணம்
கிருபை -நிர்ஹேதுக கிருபை
அந்தரங்க விருத்தி –அத்தாணிச் சேவகம் எனப்படும் அந்தரங்க கைங்கர்யம் -குற்றேவல் -)

மிதுநோத்பன்ன ஜ்ஞான ஆனந்தம் -வடிவு -(ஸ்வரூபம்)
ப்ரீதி -சத்தை(தாரகம்)
போகத்தில் அந்வயம்
இது பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

(மிதுநோத்பன்ன ஜ்ஞான ஆனந்தம் -வடிவு -என்றது –பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியை அனுபவிப்பதாய் ஏற்பட்ட ஞானமும் -அதன் பரிணாமமான ஆனந்தமுமே ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
ப்ரீதி -சத்தை–என்றது -பிராட்டியுடன் கூடிய எம்பெருமானைப் பற்றிய அனுபவ கைங்கர்யங்களால் அவர்களுக்கு ஏற்படும் உகப்பே தாரகம்
போகத்தில் அந்வயம்-என்றது –ஜீவனுடைய கைங்கர்யத்தால் மிதுனத்துக்கு ஏற்படும் ஆனந்தத்தைக் கண்டு இவன் ஆனந்தப்படுவதன் மூலமும் இவனுக்கு மோக்ஷ போகத்திலே அந்வயம் ஏற்படுகிறது -போக்தா போக்யம் ப்ரேரிதா –அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே —)

—————————————————————–

இரண்டாம் வார்த்தை –

ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்கர்ஷம் -பிள்ளைக் கிணறு – உள் அர்த்தம் –
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்யம் -ஜீவாத்மாவின் ஆனந்தம் –

நம்பிள்ளை அருளிச் செய்து கோஷ்டி குலைந்த அளவிலே –
பின்பழகிய பெருமாள் ஜீயர் தெண்டன் இட்டு -இவ் வாத்மாவுக்கு ஸ்வரூப உபாய உபேயங்கள் எவை –
என்று விண்ணப்பம் செய்ய –
பிள்ளையும் -இச்சை -ஸ்வரூபம் –இரக்கம் -உபாயம் -இனிமை -உபேயம் -என்று அருளிச் செய்ய –
அப்படி அன்று நினைத்து இருப்பது -என்று விண்ணப்பம் செய்ய –
உமக்கு என்ன சில பிள்ளைக் கிணறு உண்டோ -நீர் எங்கனே நினைத்து இருப்பது -என்று அருளிச் செய்ய –

(இச்சை ஸ்வரூபம் -என்றது -எம்பெருமானுக்கு உகப்புக்கேயான கைங்கர்யத்தில் விருப்பமே ஜீவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம்–கீதையில் ஸ்ரத்தை-சாத்விக ராஜஸ தாமஸ-ஸ்ரத்தைகளை அருளிச் செய்துள்ளான்
இரக்கம் உபாயம் என்றது -எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ உபாயம்
இனிமை உபேயம் என்றது -ஜீவனைப் பெற்று எம்பெருமான் உகக்கும் போது அவனிடமுள்ள இனிமையே ஜீவாத்மாவுக்குப் புருஷார்த்தம்(இ த்ரயம்)
பிள்ளைக் கிணறு-என்றது – -கிணற்றுக்குள் கிணறு -அது போலே ஸ்வரூப உபாய உபேயங்களின் யதாத்ம்யம் -உள்ளீடான -வடித்ததெடுத்த தன்மை -சாரம் -இங்கு கூறப்படுகிறது-)

தேவரீர் அருளிச் செய்த படி நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்-
அவர்களுடைய அபிமானம் அடியேனுக்கு உபாயம்-
அவர்களுடைய முக மலர்த்தி அடியேனுக்கு உபேயம் –
என்று இருப்பேன் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளையும் பிரியப் பட்டார் –

(இ த்ரயம் -பகவத் விஷயத்தில் மட்டும் நில்லாமல் பாகவத ஆச்சார்ய பர்யந்தம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-அளியல் நம் பையல் -அம்மவோ கொடியவாறே —

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?–77-)

———————————————————————————————-

மூன்றாம் வார்த்தை–

சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வ பாவ த்ரயம்
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ரக்ஷணம்
சேக்ஷத்வாதி ரக்ஷண பலம்

சித்துக்கு மூன்று ஸ்வபாவம்
ஈஸ்வரனுக்கு மூன்று ஸ்வபாவம்
அசித்துக்கு மூன்று ஸ்வபாவம்

சித்துக்கு ஸ்வபாவம் -அனந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் 
ஈஸ்வரனுக்கு ஸ்வபாவம் –சர்வ சேஷித்வம் –சர்வ ரஷகத்வம் -பரம போக்யத்வம்
அசித்துக்கு ஸ்வபாவம் தன்னோடு சேர்ந்த சேதனனுக்கு அஹங்கார மமகார ஜநகம் ஆகையும்-ஸ்வ ரஷண பிரவ்ருத்தி ஜநகம் ஆகையும்-விஷய ப்ராவண்ய ஜநகம் ஆகையும் –(இம்மூன்றுமே ஸ்வரூப விரோதி உபாய விரோதி புருஷார்த்த விரோதிகள்)

(கடிமா மலர்ப்பாவையோடு ஷட் ஸாம்யம் -அனந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -ஸம்ஸ்லேஷத்தில் உகப்பு -சத்தை –விஸ்லேஷத்தில் தரியாமை- ததேக நிர்வாஹகத்வம் -உண்டே)

(சாலப்பல நாள் கோலத்திருமா மகளோடு உகந்து உயிர்கள் காப்பான்-)

அஹங்கார மமகாரம் கழிந்தவாறே இவன் அனந்யார்ஹன் ஆம் –
இவன் அனந்யார்ஹன் ஆனவாறே அவன் சர்வ சேஷியாம் –
ஸ்வ ரஷண பிரவ்ருத்தி கழிந்தவாறே -இவன் அநந்ய சரண்யன் ஆம் –
இவன் அநந்ய சரண்யன் ஆனவாறே -அவன் சர்வ ரஷகன் ஆம் –
விஷய பிராவண்யம் கழிந்தவாறே இவன் அநந்ய போக்யன் ஆம் –

இவன் அநந்ய போக்யன் ஆனவாறே -அவன் பரம போக்யன் ஆம்-(பூமாதிகரணம் -பரம போக்யத்வம்)

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் -அழுக்கு உடம்பும் -இம் மூன்றும் மாறி மாறி -அநாதியாக அசித் சம்சர்க்க ஆத்மாவுக்கு உண்டே—இம் மூன்றையும் போக்கவே பகவத் பாகவத ஆச்சார்ய அபிமானங்கள் -இவ்வாறு தத்வ த்ரயம் ஒவ்வொன்றுக்கும் மூன்று -ஆக -ஒன்பதுக்கும் உள்ள சம்பந்தம் அழகாக விளக்கி அருளுகிறார்-திருமந்த்ரார்த்த மூன்று பதங்களின் அர்த்தங்களையே இந்த ஒன்பதும் காட்டும்–ஓம் நம -நமோ நம -நாராயணாய நம -மூன்று விரோதிகளை கழித்து பரம புருஷார்த்தமான அனுபவ ஜெனித ப்ரீதிகாரிதா கைங்கர்யம் பெறுவோம்)

(சித்-அறிவைத் தர்மமாகக் கொண்ட சேதனத்வம்
ஈஸ்வரன் -பரம சேதனனான ஸ்ரீ மன் நாராயணன்
அசித் -அறிவற்ற அசேதன தத்வம்
அநந்யார்ஹ சேஷத்வம் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனுக்கே அடிமைப்பட்டு இருக்கை
அநந்ய சரணத்வம் -எம்பெருமான் ஒருவனையே உபாயமாகக் கொண்டிருக்கை –
அநந்ய போக்யத்வம் -எம்பெருமான் ஒருவனையே அனுபவிக்கத்தக்க -புருஷார்த்தமாகக் கொண்டிருக்கை –
ஸர்வ சேஷித்வம் -எல்லாப் பொருள்களையும் உடையவனாய் இருக்கை
ஸர்வ ரக்ஷகத்வம் -எல்லாப் பொருள்களையும் ரக்ஷிப்பவனாய் இருக்கை
பரம போக்யத்வம் -எல்லாச் சேதனருக்கும் அனுபவிக்கத் தகுந்த வஸ்துக்களில் மிகச் சிறந்தவனாய் இருக்கை
அஹங்கார மமகார ஜனகமாகை -ஆத்மவல்லாத தேஹத்தில் ஆத்மா என்கிற நினைவாகிற அஹங்காரத்தையும்-ஆத்மாவினுடையதல்லாத உற்றார் உறவினர் மாடு செல்வம் மனை முதலியவற்றில் ஆத்மாவினுடையது என்கிற நினைவாகிற மமகாரத்தையும் விளைப்பதாகிற மமகாரத்தையும் விளைப்பதாகிற ஸ்வரூப விரோதத்தைச் செய்கை
ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி ஜனகமாகை –-தன்னைத் தான் ரக்ஷித்திக் கொள்வதாகிற முயற்சிகளில் ஈடுபடுகையாகிற உபாய விரோதத்தைச் செய்கை
விஷய ப்ராவண்ய ஜனகமாகை –ஸப்தம் ஸ்பரிஸம் ரூபம் ரஸம் கந்தமாகிய ப்ராக்ருத விஷயங்களில் ஈடுபடுதலாகிற புருஷார்த்த விரோதத்தைச் செய்கை -)

——————–

நாலாம் வார்த்தை –

(சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ கதநம்
ஞாத்ரு -ஞான -ஞேய நிரூபணம்
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் வ்யாவர்த்தகம்)

பிரக்ருதியினுடைய –ஸ்வரூபம் ஜடம் –ஸ்வபாவம் -கொண்டது குணமாய் இருக்கும்
புருஷனது ஸ்வரூபம் -சேஷத்வம் -ஸ்வபாவம் -ஸ்வரூபத்துக்கு  அநுரூபமான வ்ருத்தி
ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் -ஸ்ரீய பதித்வம் -ஸ்வபாவம் -ரஷகத்வம் –

(ஜடம் –அஸ்வயம் பிரகாசம்-ஸ்வயம் ப்ரகாசம் அல்லாதது -அதாவது பிறிதொன்றாலேயே பிரகாசிப்பது-ப்ரத்யக் -தனக்குத் தோற்றும்-(தானே தோற்றுவது-ஸ்வயம் பிரகாசம் –அஜடம்) –பராக் பிறருக்குத் தோற்றும்
கொண்டது குணமாய் இருக்கும் -ப்ரக்ருதி கார்யமான தேஹம் -அந்த தேஹத்தில் வாழும் ஜீவனுடைய கர்மத்தைப் ஒட்டி ஸத்வ ரஜஸ் தமோ குணங்களிலும் அதனால் வரும் பிராகிருத குணங்களிலும் கொண்ட கணக்கற்ற வேறுபாடுகளை யுடையதாய் இருக்கும்
சேஷத்வம் -எம்பெருமானுக்கு தாஸ்யமாய் இருக்கை
வ்ருத்தி -கைங்கர்யம்)

(ஸ்ரீய பதித்வம் – -ரஷகத்வம்-சாலப்பல நாள் கோலத்திரு மகளோடு உகந்து உயிர்கள் காப்பான்)

ஆத்மாவினுடைய ஸ்வரூபம் -ஞாதாவாய் -ஞானமாய் -ஞேயமாய் -இருக்கும்
(அதாவது அறிபவன் -அறிவு -அறியத் தக்கது )(ஞாதா -அறிபவன்-ஞானம் -அறிவு-ஜேயம் -அறியத் தக்கது)

ஸ்வரூபம் ஞாதாவாய் -ஸ்வபாவம் ஞானமாய் -ஸ்வ விபூதி ஞேயமாய் இருக்கும் –
ஸ்வரூபம் ஞாதாவாய் -ஸ்வபாவம் ஞானமாய் -பரமாத்வாவுடன் ஜீவாத்மாவுடன் உள்ளவை ஞேயமாய் இருக்கும் –
ஸ்வரூபம் -அஹம் -என்று இருக்கும் -இதம் -என்ன மாட்டாது –
(அதாவது தனக்குத் தானே பிரகாசிக்கும் பிரத்யக்காய் இருக்கும் –பிறருக்கே பிரகாசிக்கும் பராக்காய் இராது)
அறிகிறது தன்னை ஆகையாலே -ஞேயமாய் இருக்கும் –
அறிகிறவன் தான் ஆகையால் ஞாதாவாய் இருக்கும்
அறிவு தான் ஆகையாலே ஞானமாயும் இருக்கும் –
அறிகிறவன் தான் ஆகையாலே ஞாதாவாம்

இது என்னுடைய ஸ்வபாவம் என்று தன் ஸ்வபாவத்தை அறியும் இடத்து
ஸ்வபாவம் தானே -இதம் என்கிற பரிகரம் ஆகையாலே –
ஸ்வபாவம் ஞானமுமாய் ஞேய முமாய் இருக்கும் –

(ஸ்வ விபூதி –ஆத்மாவின் உடைமையான தேஹமும் தேஹத்தைச் சேர்ந்த பொருள்களும்
அஹம் என்று இருக்கும்--தனக்குத் தானே பிரகாசிக்கும் ப்ரத்யக்காய் இருக்கும்
இதம் என்ன மாட்டாது -பிறருக்கே பிரகாசிக்கும் பராக்காய் இராது
ஸ்வபாவம் ஞானமுமாய் ஞேய முமாய் இருக்கும் – ஜீவாத்மாவினுடைய ஸ்வ பாவமான தர்ம பூத ஞானம் தானே பிரகாசிக்கும் ஞானமுமாய் ஜீவனால் அறியத்தக்கதாயும் -ஞேய முமாய் -இருக்கும் -)

(ஸ்வரூபம் ஞாதாவாய் -ஞானமுடையவன் -அறிவாளி –
ஸ்வபாவம் ஞானமாய்-ஞான மயம் தானே பிரகாசிக்கும் -ஸ்வயம் பிரகாசம் –
விஞ்ஞானம் ஹோமம் பண்ணுகிறது -நிறைய இருக்கும் பண்பால் ஞானம் என்றே சொல்கிறது ஞாதா என்றும் சொல்லாமல் –
ஞாதாவாக இருந்தால் தான் போக்த்ருத்வம் வரும்
அஹம் -ப்ரத்யக்த்வம் -ஆத்மாவைச் சொல்லி இதம் -பராக் விஷயம் -சரீரத்தைச் சொல்லும் –
ஸ்வ பாவம் -தர்மபூத ஞானம்-ஸ்வயம் பிரகாசம் -அசித் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் -இரண்டுமே அஜடம் -இவன் ப்ரத்யக் அது பராக்-)

—————

(சித் அசித் ஈஸ்வர லக்ஷணம் –
தத்வ விபாகம் –
நிர்குண ஸ குண ஜடம் –
த்ரிகுண ஏக குண -ஸ குணம்)

(அஜட த்வைவித்யம்
ப்ரத்யக் த்வைவித்யம்
பராக் த்வைவித்யம்)

ஐந்தாம் வார்த்தை –

அசித்துக்கு ஸ்வரூபம் சேஷத்வே சதி ஜடத்வம் (சதி– கூடிய )-ஸ்வபாவம் சதத பரிணா மித்வம் –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -ஞாத்ருத்வே சதி சேஷத்வம் -ஸ்வபாவம் -கைங்கர்யைக ரசத்வம் –
ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் ஞாத்ருத்வே சதி சேஷித்வம் -ஸ்வபாவம் -சர்வ ரஷகத்வம் –

தத்வம் தான் ஜடம் அஜடம் என்றும்  இரண்டு – (ஸ்வயம் பிரகாசம் என்றும் அஸ்வயம் பிரகாசம்)

ஜடம் தான் நிர் குணம் என்றும்(கால தத்வம் நிர்க்குணம்) ச குணம் என்றும் இரண்டு –
ச குணம் தான் த்ரி குணம் என்றும் ஏக குணம் என்றும் இரண்டு -(மிஸ்ர ஸத்வம் ஸூத்த ஸத்வம்-வைகுண்டம் ஸூத்த சத்வம் -அசித் -)
த்ரி குணம் தான் -பிரகிருதி பிராக்ருதம் என்றும் இரண்டு –

அஜடம்  தான் பிரத்யக் என்றும் பராக் என்றும் இரண்டு –
பிரத்யக் தான் ஆத்மா வென்றும் ஈஸ்வரன் என்றும் இரண்டு –
பராக்கு தான் ஞானம் என்றும் ஞேயம் என்றும் இரண்டு -(ஞானம்-தர்ம பூத ஞானமும் –ஞேயம்-நித்ய விபூதியும்–தர்மம் பூத ஞானம் தானே தோற்றும் தனக்குத் தோற்றாது -ஆகவே அஜடம் பராக்)

(அசித் -அறிவற்ற அசேதனப்பொருள்
சேஷத்வே சதி ஜடத்வம் -எம்பெருமானுக்கு உடைமையாய் இருந்து கொண்டு தானே பிரகாசியாத ஜடமாய் இருப்பது -சேஷத்வம் ஜீவனுக்கும் உண்டாகையாலே ஜடமாய் இருப்பதும் என்றும் கூறப்பட்டது
சதத பரிணா மித்வம்-எப்போதும் மாறுபாட்டை அடைந்து கொண்டே இருக்கை
ஞாத்ருத்வே சதி சேஷத்வம்-அறிபவனாய் இருந்து கொண்டே உடைமையாய் இருக்கை -அறிபவன் என்று மாத்திரம் சொன்னால் ஈஸ்வரனிடம் அதி வ்யாப்தி வரும் -உடைமையாய் இருப்பது என்று மாத்ரம் சொன்னால் அசித்தில் அதி வ்யாப்தி வரும் -ஆகையால் இரண்டுமே சேர்த்துச் சொல்லப்பட்டது
கைங்கர்யைக ரசத்வம் — எம்பெருமானுக்கு தொண்டு செய்வதையே இயல்பாகக் கொண்டவனாய் இருக்கை
ஞாத்ருத்வே சதி சேஷித்வம் -அறிபவனாய் இருந்து கொண்டு ஸ்வாமியாய் இருக்கை -அறிபவனாய் இருக்கை என்ற மாத்ரம் சொன்னால் ஜீவனிடம் அதி வ்யாப்தி வருமாகையாலே ஈஸ்வரனுக்கே உரியதான சேஷித்வமும் சொல்லப்பட்டது)

——————————————————————-

ஆறாம் வார்த்தை –

(ஸத்வாதி குண த்ரய த்வைவித்யம்
ஸத்வாதி குண கார்ய நிரூபணம்)

(பிரகாசம் பிரவிருத்தி நித்திரை மூன்றும் முக் குணங்களுடைய பிரதானம் -வெவ்வேறே நிலைகளில் இவற்றில் கலப்பால் ஏற்படும் அன்றோ-அனைத்தும் முக்குண கலப்பாகவே இருக்கும் -பிரதானமாக இருப்பதையும் அடுத்து மிக்கு உள்ளவற்றையும் சேர்த்து அருளிச் செய்கிறார் -மூன்றாவதும் கொஞ்சம் இருக்கும்)

சத்வம் ரஜஸ் தம்ஸ் ஸுக்கள் ஆகிற மூன்று குணங்களும் ஓர் ஒன்றும் மூன்று வகையாய் இருக்கும் –
தாமஸ தாமஸம் -தாமஸ ராஜஸம் -தாமஸ சாத்விகம்
ராஜஸ தாமஸம் -ராஜஸ ராஜஸம் -ராஜஸ சாத்விகம்
சாத்விக தாமஸம் -சாத்விக ராஜஸம் -சாத்விக சாத்விகம் -என்று

இதில் தாமஸ தாமஸம் -நித்ரையை பிரவர்த்திப்பிக்கும்
தாமஸ ராஜஸம் -சோகத்தை பிரவர்த்திப்பிக்கும்
தாமஸ சாத்விகம் -பர ஹிம்சையிலே பிரவர்த்திப்பிக்கும் –

ராஜஸ தாமஸம் -விஷயாந்தரங்களிலே மூட்டும்
ராஜஸ ராஜஸம் -காம்ய கர்மங்களிலே மூட்டும்

ராஜஸ சாத்விகம் -பகவத் ஸ்தோத்ரத்திலே பிரவர்த்திப்பிக்கும்
சாத்விக தாமஸம் -பகவத் மந்த்ரங்களில் பிரவர்த்திப்பிக்கும்
சாத்விக ராஜஸம் -பிரக்ருத்யாத்ம விவேகங்களிலே ப்ரவர்த்திப்பிக்கும்
சாத்விக சாத்விகம்-பகவத் சாஷாத்காரத்திலே பிரவர்த்திப்பிக்கும்

—————————————————————–

ஏழாம் வார்த்தை

(தத்வத்ரய ஸ்வரூப -ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித ஸ்வரூப விசேஷண வியாபார நிரூபணம்
திவ்ய தம்பதிகளுக்கு அத்யந்த ஸாம்யம்
திவ்ய தம்பதிகளுக்கு அந்யோன்ய அதிசய கரத்வ நிதாநம்
பிராட்டிக்கு அசாதாரண ஆகாரம்
பெருமானுக்கு அசாதாரண ஆகாரம்
ஜீவனுக்கு சேஷத்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
அசித் த்ரைவித்யாம் -தத் ஸ்வரூபாதி நிரூபணம்)

தத்வ த்ரயத்துக்கு –
ஸ்வரூபமும் -ஸ்வரூப நிரூபக தர்மமும் -நிரூபித ஸ்வரூப விசேஷணமும் -வியாபாரமும்
என்று நாலு பிரகாரமாய்  இருக்கும் -இதில்

(ஸ்வரூபம் -குணம் கிரியை முதலானவற்றுக்கு ஆஸ்ரயமாய் இருப்பது –ஸ்வம் ரூபம் ஸ்வரூபம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -கடத்துக்கு கடத்வம் -குடமாய் இருக்கும் தன்மை போலே ஸ்வரூபத்தை நிரூபித்துத் தரும் தன்மை
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -ஸ்வரூப நிரூபக தர்மத்தால் நிரூபிக்கப்பட்ட ஸ்வரூபத்திலுள்ள மற்ற தன்மைகள் –
வியாபாரம் -கிரியைகள் அல்லது செயல்கள் -)

ஈஸ்வர ஸ்வரூபம் -சத்யமாய் -ஞானமாய் -அனந்தமாய் -ஆனந்தமாய் -அமலமாய் இருக்கும் –ஸ்வரூப நிரூபக தர்மம் -(கீழ் சொன்னவற்றையே தன்மையாக அருளிச் செய்கிறார் -சத்யம் -சத்யத்வம் -சத்யமுடைய தன்மை)சத்யத்வம் —(விகாரம் அற்று இருக்கை -)ஞானத்வம் –(தானே பிரகாசிப்பதாய் இருக்கை)-அனந்தத்வம் -(தேச கால வஸ்து மூன்றாலும் அளவுபடாது இருக்கை-எல்லா தேசங்களிலும் எல்லாக் காலத்திலும் இருந்து எல்லா வஸ்துக்களுமே இவன் என்றும் சொல்லலாம்படி அனைத்துக்கும் அந்தர்யாமியாய் பிரகாரியாய் இருக்கை -எல்லாப் பொருள்களைக் காட்டிலும் சிறந்தவனாய் இருக்கை)) –ஆனந்தத்வம் (அனுகூல ஞாத்ருத்வம்)-அமலத்வம் -(அகில ஹேய ப்ரத்யநீகத்தவம்-துயர் அறு சுடரடி)ஆகிற இவை –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -ஞான சக்தியாதி சமஸ்த கல்யாண குணங்களும் -குணவத்  விசேஷணமுமாய் –(குணங்களைப் போலே விட்டு பிரியாமை )-குண பிரகாசமுமான திவ்ய மங்கள விக்ரகங்களும் —

(ஞான சக்த்யாதி ஆறு குணங்களும் -ஸ்வா தந்தர்யம் தலை எடுத்து மறைக்க முடியாத -ஸுலப்யாதிகள் தானே மறைக்கப்படும் -பிராட்டி புருஷகாரத்தால் ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து இவை தலை எடுக்கும் என்று அறிய வேண்டும்)

இப்படி நிரூபிதமான வஸ்து தம்பதியாய் இருக்கும் –இத் தம்பதிக்கு உபய விபூதியில் உள்ள சேதன அசேதனங்களும் சரீரதயா சேஷமாய் இருக்கும் -(-உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் –அந்தர்யாமி ப்ராஹ்மணம் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ந வேத –யஸ்ய ஆத்மா சரீரம் –ந வேத –இத்யாதி)(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்)
வ்யாபாரமாவது -தன்னுடைய ஆனந்தத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சகல
ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களும் -மோஷ பிரதத்வமும் –(வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -இன்புறும் இவ்விளையாட்டுடையவன்-லோகவைத் து லீலா கைவல்யம்-பக்தி உழவன்- ஷேம கிருஷி பலன்)
இப்படி சர்வதா சாமானாதிசயத்தை உடைத்தாய் இருந்துள்ள தம்பதிகளை அந்யோந்யம் அதிசயகரராக சொல்லுகைக்கு ஹேது ஸ்ரீயபதித்வம் -விஷ்ணு பத்நீத்வம் ஆகிய -இவற்றாலே –

எம்பெருமானைக் காட்டில் பிராட்டிக்கு அதிக வியாபாரம் -அதிகார சம்பந்தியும் -புருஷகாரத்வமும் –

எம்பெருமானுக்கு அதிக வியாபாரம் தண்ட தரத்வமும் -உபாயத்வமும் –

(சர்வதா சாமானாதிசயத்தை உடைத்தாய் இருந்துள்ள தம்பதி-ஞானம் ஆனந்தம் முதலானவற்றில் அத்யந்த ஸாம்யத்தையும்-ஜகத் காரணத்வம் மோக்ஷ ப்ரதாநம் முதலியவற்றில் சேர்ந்து அந்வயிக்கும் பெருமையையுமுடைய பெருமாளும் பெரிய பிராட்டிமாருமான திவ்ய தம்பதிகள் -அங்கீகாரம் பெற்று-இவள் உகப்புக்காக செய்வதால் -இருவருக்கும் அந்வயம்  உண்டே -இவளை புருஷகாரம் செய்விப்பதாக அவனே நியமனம்
அந்யோந்யம் அதிசயகரராக சொல்லுகைக்கு-ஒருவருக்குள்ள பெருமை மற்ற ஒருவராலே என்று சொல்லுகை
அதிகார சம்பத்தி-ஜீவனுக்கு எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் தகுதியை ஏற்படுத்துவது -மஹா விஸ்வாஸம் பிரதான அதிகாரம் -இந்த உறுதியைக் கொடுப்பவள் பிராட்டியே –
புருஷகாரத்வம் –எம்பெருமானுக்கு ஜீவனின் மேலுள்ள சீற்றத்தை ஆற்றி ஜீவன் விரும்பும் பலன்களை அளிக்கும்படி செய்கை
தண்ட தரத்வம் -ஜீவன் செய்த பாபங்களைக் கண்டு சீறி அவற்றுக்குத் தக்க தண்டனைகளை அளிப்பவனாய் இருக்கை -கோபம் என்பதையே அறியாத பிராட்டிக்கு இது பொருந்தாது ஆகையால் இது எம்பெருமானுக்கே அதிக வியாபாரமாகச் சொல்லப்பட்டது
உபாயத்வமும் -மோக்ஷ உபாயத்வமும் அனைவருக்கும் மோக்ஷத்தை அளிப்பவனாயும் பிரபன்னனுக்கு பல கரணமாகவும் இருப்பது பரப்ரஹ்மத்துக்கே உள்ள பெருமை -சிபாரிசு செய்யும் பிராட்டிக்கு பொருந்தாதாகையால் எம்பெருமானுக்கே அதிக வியாபாரம் எனப்பட்டது -)

சேதன ஸ்வரூபம் -சத்யமாய் -ஞானமாய் -ஆனந்தமாய் -அமலமாய் -அணுவாய் -இருக்கும் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -சத்யத்வம் -ஞானத்வம் -ஆனந்தத்வம் -அமலத்வம் -அணுத்வம் -ஆகிய இவை –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -சரீரவத் சேஷத்வமும் -அநந்த ஞாநாதி குணங்களும் –
வியாபாரம் -அநு பவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம்

(சரீரவத் சேஷத்வம் -பத்னி புத்திரர் வீடு நிலம் பணம் முதலானவை ஸ்வாமிக்கு வெறும் சேஷமாய் இருப்பது போல் அல்லாமல் -ஜீவனுக்கு அவன் சரீரம் போலே எம்பெருமானுக்கு அவனுடைய சரீரமான ஜீவ ஸ்வரூபமும் அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கும் என்று கருத்து-புருஷோத்தமனான நானே ஷேத்ரமும் ஷேத்ரஞ்ஞனும் -கீதை)

அசித் ஸ்வரூபம் மூன்று படி பட்டு இருக்கும் -அதாவது
அப்ராக்ருதம் -பிராக்ருதம் -காலம் -என்று -(ஸூத்த ஸத்வம் -மிஸ்ர ஸத்வம் -நிர்குணம் -ஆகிய மூன்றும்)

இதில் அப்ராக்ருத ஸ்வரூபம் ஞானம் -ஸ்வரூப நிரூபக தர்மம் ஞானத்வம் –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -சரீரத்வ சேஷத்வம் –
வியாபாரம் -இச்சா அனுகுண பரிணாமம் – 

(அங்கு அசித்தாக இருந்தாலும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் -)

பிராக்ருத ஸ்வரூபம் -ஜடம் -ஸ்வரூப நிரூபக தர்மம் -ஜடத்வம் –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -சரீரவத் சேஷத்வமும் -குண த்ரய வத்த்வமும் சதத பரிணாமித் வமும் –
வியாபாரம் பக்த சேதனனுக்கு -ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை மறைக்கை –

காலத்துக்கு ஸ்வரூபம் -விபுவாய் ஜடமாய் இருக்கும்
ஸ்வரூப நிரூபக தர்மம் -விபுத்வ ஜடத்வங்கள்
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -சரீரத்வ சேஷத்வமும் -கலாகாஷ்டா தியான -காலத்தின் அவயவங்கள் -பரிணாமும்
வியாபாரம் -சிருஷ்டியாதிகளுக்கு உபகரணமாய் இருக்கும் –

(காலம் -முக்குணங்கள் இல்லாத ஸத்வ ஸூன்யம்–விபு-பரமபதத்தில் காலம் உண்டு ஆனால் அங்கு பிரயோஜனப்படாது அங்கு பிரபு அல்ல-இத்தைக் கொண்டே பிரளயம் ஸ்ருஷ்ட்டி நடக்கும்)

(தேஜோ பதார்த்தம் -பூதோ த்ரவ்யம் – நெருப்பு ஜ்வாலை வெளிச்சம் -ஸூர்யன் -கிரணங்கள் -ப்ரகாஸம் -மூன்றா இரண்டா ஒன்றா–இருள் இருந்தது போயிற்று ஸூரியனிடம் இருள் இருக்காதே -கர்மா கர்த்தா கரணம் -இங்கு இருள் போக -அங்கு பிரகாசம் -இருள் இல்லாத பிரகாசம் -அறிந்தால் தானே தர்மி ஞானம் அறிய முடியும் -அஸ்தி என்றே இருக்கும் அங்கு -நடுவில் தடங்கலோ மேகம் மறைப்பதோ இல்லையே அங்கு -கிரணத்துக்கு குறைவு மறைவோ இருப்பது போல் அங்கு இல்லையே -தர்ம பூத ஞானத்தை விஷயங்களைக் கிரஹிக்கிறோம் -ஆகவே அது கருவி -தானே பிரகாசிக்கும் -தனக்குத் தோற்றாது -ஆத்மாவுக்கு விஷயங்களைக் காட்டும் – ஞான பிரசரண த்வாரம் மனஸ் இந்திரியங்கள் –
தர்மி ஞானமே ஆத்மாவே தான் -என்னை நான் அறிகிறேன் -மூன்றும் சொல்ல முடியாதே -தர்மி ஞானமான நான் தர்மி ஞானம் கருவியால் தர்மி ஞானத்தை அறிகிறேன் -நான் கடிகாரத்தை அறிகிறேன் வருமே -மூன்று இங்கு உண்டு – தர்மி ஞானம் நித்யம் குறையாது கூடாது – ஆத்மாவாகிற தர்மி ஞானம் என்றே சொல்ல வேண்டும் –ஆத்மாவினுடைய தர்மி ஞானம் சொல்ல முடியாது -ப்ரத்யக்த்வம் -பிறருக்கு பிரகாசிக்காது -வேறு ஒன்றையும் காட்டாது -தன்னையே காட்டும்-மூர்ச்சா -பிரளய தசையிலும் -ஸ்ரீ வைகுண்டத்தில் அஹம் புத்தி இருக்குமே -தாஸ்ய ஞானத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் -திருமாலே நானும் உனக்குப்பழ வடியே ன் –அடியேன் உள்ளான் –உடல் உள்ளான் உணர்ந்தேன் -அதுவும் அவனது இன்னருள் -தர்மி ஞானம் அஹம் என்றே க்ரஹிக்கும் -தர்ம பூத ஞானம் இதம் என்றே காட்டும்–)

———————————————————————

எட்டாம் வார்த்தை –

(ஆத்மாவினுடைய தர்மி தர்ம ஸ்வரூப நிரூபணம்
ப்ரத்யக்த்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
ப்ரத்யக்த்வம் தர்மி பாஸ்யம்
தர்ம பூத ஞான ஸ்வரூபாதி நிரூபணம்
தர்ம பூத ஞானம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
தர்ம தர்மி ஞானங்களுக்கு வாசி
ஞான ஞேயங்களுக்கு வாசி)

(தர்ம தர்மி ஞானங்களுக்கு ஸாதாரண ஆகாரம்
தர்ம தர்மி ஞானங்களுக்கு அஸாதாரண ஆகாரம்
ஞானத்வ ஸ்வயம் ப்ரகாச த்வயோ பேதம்
தர்ம பூத ஞானத்துக்கு விஷயித்வ நிரூபணம்
தர்மி ஞானத்துக்கு ப்ரத்யக்த்வ நிரூபணம்
தர்ம பூத ஞானம் ஞானாந்தர வேத்யமாம் போது ப்ரஸரண பேதம்
ஜீவன் ஸம்ஸரிக்க ஸ்வரூப யோக்யதை
ஜீவன் ஸம்ஸரிக்க ஸஹகாரி காரணம்
ஜீவன் ஸம்ஸரிக்க ப்ரதாந காரணம்
கைங்கர்யத்தைப் பெற யோயத்தை
கைங்கர்யத்தைப் பெற ஸஹகாரி காரணம்
கைங்கர்யத்தைப் பெற ப்ரதாந காரணம்)

ஆத்மாவினுடைய
தர்மித தர்மங்களின் ஸ்வரூபம் –
ஸ்வரூப நிரூபக தர்மமும் –
நிரூபித ஸ்வரூப விசேஷணமும் –
வியாபாரமும் –
லஷணமும் -த்ரவ்யத்வமுமாகிற -பிரகாரங்களை உடைத்தாய் இருக்கும் –

இதில் -ஸ்வரூபம் -சத்யமாய் -ஞானமாய் -ஆனந்தமாய் -அமலமாய் -இருக்கும் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -சத்யத்வம் -ஞானத்வம் -ஆனந்தத்வம் -அமலத்வம் -ஆகிற இவை –
நிரூபித ஸ்வரூப  விசேஷணம் -ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம் -அதாவது
தன்னைத் தானே அறிந்து கொண்டு இருக்கை –
அறிகிற கர்த்தாவும் தானேயாய் -அறிவிக்கிற ஞானமும் தானேயாய் – அறியப்படுகிற ஞேயமும் தானேயாய் இருக்கை –

இப்படி தன்னைத் தானே அறிந்து கொண்டு இருக்கும் அறிவு – அஹம் -என்று இருக்கும் -இதம்-என்று இராது –
இதம்-என்று இருக்கில் -அப்போது வ்யதிரிக்த விஷயத்தில் தர்சனம் உண்டாம் -அப்போது
ஞேய மாக தன்னை அறிய மாட்டான் –
அத்தாலே ஞேயம் ஆகிற அறிவும் இல்லையாம் –
ஞேயம் ஆகிற அறிவு இல்லாமையாலே -ஞாத்ருத்வம் இல்லையாம் -இவை இல்லாமையாலே
ஞான ஆஸ்ர்யத்வம் இல்லையாம் -ஞான ஆஸ்ர்யத்வம் இல்லாமையாலே ஞான ஹானி பிறக்கும் –
இப்படி ஆகையாலே தன்னைத் தானே அறிகிற அறிவு அஹம் அர்த்தத்துக்கு விஷயம் என்றது ஆய்த்து –

நிரூபித ஸ்வரூப விசேஷணம் -அநந்த ஞாநாதி  குணங்கள் –
வியாபாரம் -அபரிச்சின்னமான -ஸ்வரூப ஆநந்த அனுபவம் –
லஷணம் -அணுத்வம்
த்ரவ்யத்வம் -குணாநாம் ஆஸ்ரயத்வம் -(ஞானம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாய் இருக்கை)

தர்மத்துக்கு ஸ்வரூபம் -சத்தியமாய் -ஞானமாய் -அனந்தமாய் -ஆனந்தமாய் -அமலமாய் இருக்கும் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -சத்யத்வம் -ஞானத்வம் -அனந்ததவம் -ஆனந்தத்வம் -அமலத்வம் -ஆகிய இவை –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -பரஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் -பரஸ்மை விஷய பிரகாசகமுமாய் இருக்கை –
இத்தால் தன்னையும் -வ்யதிரிக்தங்களையும் அறியாது -என்றது ஆய்த்து –

(பரஸ்மை ஸ்வயம்-பிறருக்குத் தானே பிரகாசிக்கும் -தர்மி ஆகிய ஆத்மாவுக்கு மற்ற விஷயங்களைப் பிரகாசிக்கும் -இவ்வாறு மூன்று விஷயங்கள்)
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -கிரியா விசேஷங்கள் –
வியாபாரம் -ஆத்மாவுக்கு அவிச்சின்னமான ஆனந்தத்தை விளைக்கை –
லஷணம் -விபுத்வம் –
த்ரவ்யத்வம் -க்ரியா குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கை –
ஆக தர்மி -ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் இருக்கும் –
ஸ்வபாவம் -பரஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் -பரஸ்மை விஷய பிரகாசமுமாய் இருக்கும் –
அப்ராக்ருத அசித்து பரஸ்மை ஸ்வயம் பிரகாசம் –
பிராக்ருத அசித் விகாரமான கடபடாதிகள் அந்ய அதீன பிரகாசம் -அதாவது பரஸ்மை பர பிரகாச்யமாய் இருக்கும் -(அஸ்வயம் பராக் இரண்டுமே)
தர்மி ஸ்வரூபத்துக்கு ஸ்வபாவத்தில் வாசி ஸ்வஸ்மை ஆகையும் -(ஆத்மாவை ஒழிந்த வேறு)விஷய பிரகாசகத்வம் இல்லாமையும் –
ஸ்வபாவத்துக்கு  ஸ்வரூபத்தில் வாசி -ஸ்வஸ்மை ஆகையும் -விஷய பிரகாசத்வம் இல்லாமையும் –
ஸ்வபாவத்துக்கு ஸ்வரூபத்தில் வாசி -பரஸ்மையும் விஷய பிரகாசகத்வமும் –

(ஸ்வரூபத்துக்கு ஸ்வ பாவத்தில் வாசி -ஸ்வ பாவத்துக்கு ஸ்வரூபத்தில் வாசி – சேதன ஸ்வரூபம் தனக்குப் பிரகாசிப்பது -தர்ம பூத ஞானம் தனக்குப் பிரகாசியாமல் பிறருக்கே பிரகாசிப்பது -தர்மபூத ஞானம் தர்மியான சேதனனுக்கு விஷயங்களைப் பிரகாசிக்கச் செய்வதாய் இருக்கும் -தர்மி மாத்ரத்துக்கு விஷயங்களைப் பிரகாசிக்கச் செய்யும் பெருமையில்லை என்று கருத்து -)
கடாதிகளில் வாசி -ஸ்வஸ்மை ஸ்வயம் ஆகை –
கடாதிக்கு ஸ்வரூபத்தில் வாசி -பரஸ்மையும் -பர பிரகாசமும் –
ஸ்வபாவத்தில் வாசி -பர பிரகாசம் ஆகையும் -விஷய பிர காசகத்வம் இல்லாமையும் –
ஸ்வரூப அனுபவத்தில் ஸ்வரூபத்தில் உத்கர்ஷம்
ஸ்வ வ்யதிரிக்த அனுபவத்தில் ஸ்வபாவத்தில் உத்கர்ஷம் –

(தர்மி ஸ்வரூபத்துக்குச் சிறப்பு -தன்னைத்தானே அனுபவிக்கை -தர்ம பூத ஞானத்துக்குச் சிறப்பு மற்ற விஷயங்களையும் தர்மியை அனுபவிக்கச் செய்கை)

(இதுவரை ஆத்மாவினுடைய -தர்மியினுடையவும் தர்மபூத ஞானத்தினுடையவும் ஸ்வரூபமும் -ஸ்வரூப நிரூபக தர்மம் முதலான ஐந்து பிரகாரங்களை விளக்கப்பட்டன -இனி தர்ம பூத ஞான விஸிஷ்டமான தர்மியின் ஸ்வரூபமும் ஸ்வரூப நிரூபக தர்மம் முதலான ஐந்து பிரகாரங்களும் விளக்கப்படுகின்றன -)
தர்மி தர்மங்களினுடைய கூட்டரவில் -ஸ்வரூபம் விசேஷணமாய் இருக்கும் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -சேஷத்வம் –
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -சேஷத்வ லாபம் இத்தலைக்கு அன்றிக்கே அத்தலைக்கேயாய் இருக்கை –

(விஸிஷ்ட ஸ்வரூபம் எம்பெருமானுக்கு விசேஷணமாய் இருக்கும் -சேஷத்வத்தினால் ஏற்படும் லாபம் ஜீவாத்மாவுக்கு அல்லாமல் பரமாத்மாவுக்கே யாயிருக்கை)
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -கைங்கர்யைக ரசத்வம் –
வியாபாரம் -அவன் உகப்பு கண்டு தான் உகக்கை –
லஷணம் -அனந்யார்ஹத்வம் -அதாவது தத் பிரகாரம் என்று இருக்கை –
த்ரவ்யத்வம் -கைங்கர்யமாகிற குணத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கை –
ஞானத்வமும் ஸ்வயம் பிரகாசத்வமும் -தர்மி தர்மங்களுக்கு சாதாராணம் –
தர்மத்துக்கு விஷயித்வம் ஏற்றம் –(தன்னை ஒழிந்த விஷயங்களை க்ரஹிப்பதாய் இருக்கை தர்மியைக் காட்டிலும் சிறப்பு)
தர்மிக்கி பிரத்யக்த்வம் ஏற்றம் –
ஞானத்வமாவது -கச்யசித் பிரகாசத்வம் -அதாவது தன்னுடைய ஆகவுமாம் -பிறருடைய ஆகவுமாம்
வ்யவஹார அநு குண்யத்தை பண்ணுகை –

(ஏதாவது ஒன்றைப் பிரகாசிக்கச் செய்வது ஞானமாகும் -தர்மியாகிற ஞானம் தனக்குத் தன்னை பிரகாசிக்கச் செய்யும் -தர்ம பூத ஞானம் மற்ற பொருள்களை தர்மிக்குப் பிரகாசிக்கச் செய்யும் -இரண்டுமே தாம் பிரகாசிக்கச் செய்யும் பொருள்களை வியகரிக்கத் தக்கதாக -வழங்கத் தக்கதாக ஆகும் -இதுவே ஞான லக்ஷணம் என்று கருத்து-)

(பிரகாசிக்கும் -வியவஹார யோக்யதை ஏற்படுத்துதல் -தர்மபூத ஞானம் இத்தையே பண்ணிக் கொண்டு இருக்கிறது -இதம் க்ரஹிக்கும் -தர்மிஞ்ஞானம் அஹம் என்றும் தனக்குத்தானே பிறக்கைக்கும் -தர்ம பூத ஞானம் மூலமும் மற்ற விஷயங்களை பிரகாசிக்க ஆஸ்ரயமாய் இருக்கும் -இரண்டுமே ஸ்வயம் பிரகாசம் -ஞானாந்தர அவேத்யம் -மற்ற ஞானத்தை அறியப்பட வேண்டிய தேவை இல்லை -ஓன்று பராக் -மற்ற ஓன்று ப்ரத்யக் -மதுரகவி ஆழ்வார் அனுமானத்தால் ஆழ்வாருடைய தர்மபூத ஞானம் அறிந்தார் -ஆச்சார்யர் இடமும் தண்டம் சமர்ப்பித்து அறியாதது அறிவிக்க வேண்டிய சிஷ்யன் அவருக்கு ஞானம் இருப்பது என்று சிஷ்யன் அனுமானத்தால் அறியலாம் அன்றோ –ஆகவே அறியப்படாது என்றும் கொள்ளாமல் அறியப்படத்தேவை இல்லை என்றே கொள்ள வேண்டும் -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -வந்தால் கஷ்டப்பட்டு விட வேண்டாமே அன்றோ -இல்லையென்றால் தப்பில்லை என்ற மாத்திரமே -அது போல் இங்கும் -முக்த நித்யர்கள் சங்கல்ப ஞானத்தை கிரஹிப்பார்கள் -கண்கள் இல்லை என்று கொள்ள வேண்டாமே -இந்த வாசி உணர வேண்டும் —யானே என்னை அறியகிலாதே -பராக்கும் பிரத்யக்கும் இல்லாமல் -என்றவாறு)
தன்னை விஷயீ கரிப்பதொரு ஞானாந்தரத்தை அபேஷியாதே -தானே பிரகாசிக்கை ஸ்வயம் பிரகாசமாவது –
தர்மத்துக்கு விஷயித்வமாவது -தன்னை ஒழிந்த ஒன்றை காட்டுகை
தர்மிக்கு பிரத்யக்தவமாவது -ஸ்வஸ்மை பாசமாநத்வம் -அதாவது தனக்கே தோற்றுகை -அதாவது-
தன் பிரகாசத்துக்கு தானே பலியாய் இருக்கை என்றபடி (பலன் யாருக்கோ அவரே பலி)-ஏதேனும் ஒரு வஸ்துவுக்கு பலி என்கிற சாமான்யகாரத்தை -தன் பிரகாசத்துக்கு பலி என்று விசேஷித்தவாறே  பிரத்யக்தவமாம் –
தர்மத்துக்கு இவ் விசேஷம் இல்லாத சாமான்யமும் இத்தோடே வ்யாப்தமான சேதனத்வமும் இல்லை –
இத் தர்ம தர்மிகள் இரண்டும் ஸ்வயம் பிரகாசங்களாய் இருந்தாலும் -நித்யத்வாதி தர்ம விசேஷ விசிஷ்டங்கள் ஆகையாலே -ஞானந்தர வேத்யங்களாம் –

(தர்ம விஸிஷ்டமான ஆத்மா நித்யமாகையாலே தர்ம தர்மங்கள் ஸ்வயம் ப்ரகாஸமாய் இருந்த போதிலும் கால வேதத்தை இட்டுப் பல காலத்தில் ஏற்படும் பல ஞானங்களாலே இவை க்ரஹிக்கப்படலாம் என்று கருத்து -)
தர்ம பூத ஞானம் ஞானாந்தர வேத்யமாம் போது -பிரசரண பேதத்தாலே -ஞானாந்தர வ்யபதேசம்

சம்சரிக்கைக்கு ஸ்வரூப யோக்யதை பரதந்திர சேதனத்வம் –
சஹகாரி காரணம் -அநாதியான ஆஞ்ஞா அதி லங்கனமாகிற அபராதம்
பிரதான காரணம் -ஈஸ்வரனுடைய நிரந்குச ஸ்வா தந்த்ர்யம் –

பரம ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதை சேஷத்வே சதி சேதன த்வம் –
சஹகாரி காரணம் -பக்தி பிரபக்திகள் ஆகிற அநு கூல வ்ருத்திகள் –
பிரதான காரணம் -ஈஸ்வரனுடைய சஹஜ காருண்யம்-

(சேஷத்வத்துடன் சேர்ந்த சேதனத்தை யுடைய எல்லாச் சேதனருக்கும் பரம ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்குத் தகுதியுள்ளது – அவனுடனே அன்பு பூண்டு இருக்கையாகிற பக்தியும் -அவனையே உபாயமாகக் கொண்டிருக்கையாகிற ப்ரபத்தியுமாகிற அனுகூலமான மநோ விருத்திகள் சேதனர் கைங்கர்யத்தைப் பெறுவதற்குத் துணைக் காரணங்கள் ஆகின்றன – உண்மையில் இந்த பக்தி ப்ரபத்திகளும் எம்பெருமான் அருளாலேயே வந்தவை யாகையாலே ஸர்வேஸ்வரனுடைய நிர்ஹேதுக -இயல்பான -கருணையே சேதனன் கைங்கர்யத்தை பெறுவதற்கு முக்கிய காரணமாகும் -)

(ஸம்பந்த ஞானத்தில் உறைப்பாலே தரு துயரம் தடாயேல் -என்று அவனே துயர் தருகிறான் என்கிறார் -அகற்ற நீ வைத்தால் மாய வல் வினைகள் -ஆழ்வார்
இழவுக்கு அடி கர்மா -பேற்றுக்கு அடி அவன் கிருபை -யதார்த்தமாக பிள்ளை லோகாச்சார்யார் -பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காதே ஒழிந்தால் அவளே தள்ளினாள் என்னலாமே-கேவலம் மதீயையா தயா -என்றார் அன்றோ பெரியபெருமாளும்-)

———————————————————————————————

ஒன்பதாம் வார்த்தை –

(ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரங்கள்
கர்த்ருத்வ காரயித்ருத்வாதி நிரூபணம்
உதாஸீநத்வாதி நிரூபணம்
ஈஸ்வரனுடைய உதாஸீநத்வே மத பேதம்
அநுமந்த்ருத்வ நிரூபணம்)

சேதனன் ஒன்றை நினைக்கும் போது -ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரமான நினைவு கூடின போதாய்த்து நினைக்கலாவது -அவை எவை என்னில் –
கர்த்ருத்வம் -காரயித்ருத்வம் -உதாசீநத்வம் -அனுமந்த்ருத்வம் -சஹகாரித்வம் -பலப்ரதத்வம் -ஆகிற இவை –

1-கர்த்ருத்வம் ஆவது -தான் முதல் நினைக்கை-
2-காரயித்ருத்வமாவது -அந்நினைவு இவனை நினைப்பிக்கை –
3-உதாசீனத்வமாவது -நினைப்பிக்கும் இடத்தில் -இவன் கர்மம் அடியாக நினைப்பிக்கை –
4-அனுமந்த்ருத்வமாவது -இவன் நினைக்கும் இடத்தில் -விலக்க  வல்லனாய் இருக்கச் செய்தே -விலக்காது ஒழிகை
5-சஹகாரித்வமாவது -சேதனன் ஈஸ்வரனை ஒழிய ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஷமன் அன்றிக்கே இருக்கை
6-பல பிரதத்வமாவது -இவை இத்தனையும் இவன் பண்ணின கர்மத்தின் உடைய பலமாய் இருக்கை(ஈஸ்வர கிருஷி பலனே நம் பேற்றுக்கு ஹேது)

(உதாசீனத்வமாவது -நினைப்பிக்கும் இடத்தில் -இவன் கர்மம் அடியாக நினைப்பிக்கை- இது சில ஆச்சார்யர்களின் திரு உள்ளம் -வைஷம்ய நைர்க்ருண்யங்கள் -பக்ஷபாதமும் கருணையின்மையும் -தனக்கு ஏற்படாமல் இருக்காய் எம்பெருமான் சேதனனுடைய முதல் முயற்சியில் அவனுக்கு ஸ்வா தந்தர்யம் அளித்துத் தான் உதா சீனனாய் இருக்கிறான் என்பதை நடாதூர் அம்மாள் முதலான ஆச்சார்யர்களின் திரு உள்ளம் –ஆதா வீஸ்வர தத்தயைவ -என்று தொடங்கும் தத்வ சார ஸ்லோகமும் –பராயத்தாதி கரண-2-3-6- ஸ்ருத பிரகாசிகையும் காண்பது -அனுமந்த்ருத்வமாவது -இவன் நினைக்கும் இடத்தில் -விலக்க  வல்லனாய் இருக்கச் செய்தே -விலக்காது ஒழிகை-இரண்டாவது தொடங்கியுள்ள சேதன முயற்சிகளில் ஈஸ்வரனுக்கு அனுமந்த்ருத்வம் ஒத்துக் கொள்ளப் படுகிறது -இது ஸ்ருத பிரகாசர் திரு உள்ளம் -புண்ய கர்ம விஷயங்களில் இரண்டாவது தொடங்கியுள்ள முயற்சிகளில் அனுமந்த்ருத்வம் உள்ளது -பாப கர்ம விஷயங்களில் முதல் முயற்சியோடு மற்ற முயற்சிகளோடு வாசியற எம்பெருமான் உதா ஸீனனாகவே இருக்கிறான் என்பது வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு உள்ளம் -மா முனிகள் தத்வத்ரய வியாக்யானத்தில் இப்பஷத்தையே ஆதரிக்கிறார் -)

(செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4-)

ஆதா வீஸ்வர தத் தயைவ புருஷஸ் ஸ்வா தந்த்ரிய சக்தயா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரத்யத்நாந் யுத்பாதயந் வர்த்ததே தத்ர உபேஷ்ய
தத் அனுமத்ய விததத் தந் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததஸ் சர்வஸ்ய புமஸோ ஹரி (ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ தத்வ சாரத்தில் -46)
(ஆத்மாவுக்கு வழங்கப்படுவதான முதல் அனுமதி என்ற ஸூவதந்த்ரமாகிய சக்தி காரணமாக ஆத்மாவானவன் தானாகவே அந்த அந்த விஷயங்களில் செயல் ஆற்றுவதற்கான ஆசை மற்றும் முயற்சிகளை ஏற்படுத்துகிறான்
அவற்றில் செய்யக் கூடாதவற்றில் உதா சீனமும் -செய்யக்கூடியவற்றில் அனுமதியும் அளித்தபடி உள்ள ஈஸ்வரன் அதற்குத் தண்டனை அளித்தல் மற்றும் அனுக்ரஹம் புரிதல் ஆகியவற்றைச் செய்கிறான்-இதன் மூலம் அனைவருடைய கர்மபலனை ஸ்ரீ ஹரி அளித்தபடி உள்ளான் 

சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து என்று ஸ்ரீ தீப பிரகாசத்திலே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள்

ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

————————————————————————————————————–

பத்தாம் வார்த்தை –

(அஹங்கார மமதா ராக த்வேஷாதி ரூபணம்
பர்த்ரு நாஸத்தால் ஸர்வ நாஸம்)

திருமலையில் ஜீயர் அருளிச் செய்யும் வார்த்தை –
அஹங்காரம் ஆகிறது ஒரு சண்டாளன் –
மமதை யாகிறது -அச் சண்டாளனுக்கு பார்யை –
ராக த்வேஷங்கள் ஆகிறன -இவர்களுடைய பிரஜைகள் –

இவ் அஹங்காரம் ஒன்றையும் கொல்ல -இவை இத்தனையும் நசிக்கும் –
எங்கனே என்னில் –
பதி வ்ரதை ஆகையாலே -பார்யை அநு மரணம் பண்ணும் –
முலை கொடுப்பார் இல்லாமையாலே சிசுக்கள் நாக்கு வற்றி நசிக்கும் –

(அஹங்காரத்தை ஒட்டி மமதை வருகையாலே மமதையை அஹங்காரத்துக்குப் பரதந்த்ரையான பார்யை என்கிறார் -அஹங்கார மமதைகளால் ராக த்வேஷங்களாகிற பிராகிருத விஷயங்களில் விருப்பம் வெறுப்பும் உண்டாவதால் அவற்றைத் குழந்தைகள் என்கிறார் -)

——————————————————————-

பதினோராம் வார்த்தை –

(அஹங்காரம் ஸர்ப்பம் இத்யாதி ரூபணம்)

அஹங்காரம் ஆகிறது ஒரு சர்ப்பம்
மமதை யாகிறது அதனுடைய உடல் –
ராக த்வேஷங்கள் அதனுடைய பற்கள் –
இப் பற்களை முறிக்கத் தீரும் –

(ராக த்வேஷங்கள் அழிந்தால் அஹங்கார மமகாரங்களின் வீர்யம் அழிந்து விடும் என்றும் மற்ற ஒரு உருவகத்தால் அருளிச் செய்கிறார் -)

——————————————————————

பன்னிரண்டாம் வார்த்தை –

(அவித்யா நிரூபணம்
சதுர்வித தேஹ நிரூபணம்
பஞ்ச விஷய நிரூபணம்
ஈஸ்வரனுடைய கிருஷி பரம்பரை
ஸதாசார்ய ஸமாஸ்ரயண ஹேது ஷட்கம்
ஸ்வ ஸ்வரூப ஞான நிரூபணம்
அர்த்த பஞ்சக நிரூபணம்
ப்ராமண தர்மம் ரஹஸ்ய த்ரவ்யம்
ஆச்சார்ய கைங்கர்ய நிரூபணம்
அதிகாரி நிஷ்டாக்ரம கதநம்
ஸ்வ ஸ்வரூபாதி ஸீம நிரூபணம்)

சம்சாரி சேதனர் அவித்யை யோடே கூடி இருப்பர்கள் –
அவித்யை யாவது -அஹங்கார மமகாரங்கள் –
இத்தாலே -ராக த்வேஷங்கள் உண்டாம் –

(இச்சா ₂த்வேஷ ஸமுத்தே₂ந த்வந்த்வ மோஹேந பா₄ரத ।
ஸர்வபூ₄தாநி ஸம்மோஹம்-ஸர்க்கே₃ யாந்தி பரந்தப ॥-7-27-

பரத குலத்து உதித்தவனே -எதிரிகளை வாட்டுமவனே -உலகியல் விஷயங்களில் சிலவற்றைப் பற்றிய விருப்பத்தாலும் சிலவற்றைப் பற்றிய வெறுப்பாலும் உண்டாகும் ஸூகம் துக்கம் முதலான மயங்க வைக்கும் சுய நல உணர்வுகளாலே
எல்லா பக்த ஜீவர்களும் பிறக்கும் போதே பெரும் மயக்கத்தை அடைகின்றனர்

யேஷாம் து அ ந்தக₃தம் பாபம்–ஜநாநாம் புண்ய கர்மாணாம் ।–
தே த்வந்த்வ மோஹ நிர் முக்தா-ப₄ஜந்தே மாம் த்ருட₄ வ்ரதா: ॥-28-

புண்ணியச் செயல்களை மிகுதியாகச் செய்த எந்த ஜீவர்களுக்கு முன் ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட பாபம் முடிவை நெருங்குகின்றதோ -அவர்கள் -அவர்களது புண்ணியத்திற்கு ஏற்ப மயக்கும்-இரட்டைப் பயன்களில் இருந்து சிறிது சிறிதாக விடு பட்டவர்களாய் புண்ணியத்தின் மிகுதிக்கு ஏற்ப ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் பிராப்தி ஆகியவற்றைப் பெற வேண்டும் என்று உறுதியான சங்கல்பம் உடையவர்களாய் -அப்பலன்களைப் பெறுவதற்காக என்னைக் குறித்து பக்தி செய்கிறார்கள்)
இத்தாலே நாலு வகைப்பட்ட சரீரம் -தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர -உண்டாம் –
சரீரம் அடியாக ஐஞ்சு விஷயங்களிலும் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம்  கந்தம் -ருசி உண்டாம் –
அவ்  விஷயங்களை புஜிக்கைக்காக வழி கெட வர்த்திப்பார்கள் –
அதாவது-பொய் சொல்லியும்-களவு கண்டும் -பர ஹிம்சை பண்ணியும் -நீசரை சேவித்தும் போருகை –

இப்படி போருகிற சேதனனுக்கு
எம்பெருமானுடைய சௌஹார்த்த குணத்தாலே -நினைவு இன்றிக்கே இருக்க – ஒரு ஸூஹ்ருதம் விளையும் -அந்த ஸூஹ்ருத்தும் அடியாக இவனிலும் இவன் அனர்த்தத்துக்கு
நொந்து போருகிற எம்பெருமான் குளிர கடாஷித்து அருளும் -ஆக இத்தால் -அவன் பக்கல்
த்வேஷம் பண்ணத் தவிரும் -அத்தாலே அவன் திரு உள்ளம் உகக்கும் -அந்த உகப்பாலே
இவனுக்கு சத்யம் தலை -எடுக்கும் -அத்தாலே நமக்கு நன்மை வேணும் -என்று நினைத்து இருக்கும் -அத்தாலே சாத்விகரோடு சங்கதி உண்டாகும் -அத்தாலே சதாசார்யனை கிட்டும் –
(ஈஸ்வரஸ்ய ச சௌஹார்த்தம் -யத்ருச்சா ஸூஹ்ருதம் ததா -விஷ்ணோ கடாஷம்
அத்வேஷம் -ஆபிமுக்யம் ச சாத்விகை -சம்பாஷணம் ஷடே தாநி ஹ்யாச்சார்ய ப்ராப்தி ஹேதவ -என்னும் பிரமாணம் -)
அவன் தஞ்சமான அர்த்தங்களை உபதேசிக்கும் -அவை யாவன -1-காண்கின்ற உடம்பு ஒழிய வேறே ஒருவன் நான் என்கிறவன் -என்றும் -2-நான் தான் ஸ்வ தந்த்ரன் அன்று -பர தந்த்ரன் -என்றும் -3-பர தந்த்ரனாம் இடத்து -தேவதாந்த்ரங்களுக்கு பரதந்த்ரன் அன்று -எம்பெருமானுக்கே பரதந்த்ரன் என்றும் – 4-அதுக்கு எல்லை -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பரதந்த்ரன் ஆகை -என்றும் -5-இதுக்கு பலம் எம்பெருமான் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகை -என்றும் -6-அதுக்கு விரோதி அஹங்கார மமஹாரங்களும் –சரீர சம்பந்தமும் -என்றும் -7-அவை கழிகைக்கு உபாயம் அவன் திருவடிகளே என்றும் -8-இவை எல்லாம் அறிகைக்கு பிரமாணம் ரகஸ்ய த்ரயம் என்றும் -இவை –

அநந்தரம் இவ் அர்த்தங்களை உபதேசித்த ஆசார்யன் பக்கல் கிருதஞ்ஞனாய் -சாத்விகரோடே சங்கதி பண்ணும் -அநந்தரம் ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போரும் –

ஆச்சார்ய கைங்கர்யம் ஆவது அநிஷ்டம் தவிர்க்கையும் இஷ்டம் செய்கையும் –
அவை இரண்டிலும் வைத்துக் கொண்டு அநிஷ்டம் தவிர்கையே -பிரதானம் -அது என் என்னில் –இஷ்டம் செய்யாத போது உபேஷிக்கும் அளவே உள்ளது -அநிஷ்டம் தவிராத போது நேராக நிக்ரஹித்து கை விடும் -அவன் கை விட்ட வாறே ஈஸ்வரன் கை விடும்- -பின்னைத் துணையாவது பழைய கர்மங்களும் யம படரும் –

இவை இரண்டும்  (ஆச்சார்ய அநிஷ்டம் தவிர்க்கையும் இஷ்டம் செய்கையும் –மீன் கவர்ந்துண்ணத் தருவேன் -கலியன்)அறிவது சாஸ்திர முகத்தாலும் ஆசார்யன் நினைவாலும் -இது தான் பேற்றுக்கு சாதனமுமாய் -கைங்கர்யமுமாய் -ஸ்வரூபமுமாய் இருக்கும் -இவை சாதனம் என்று  கடவன் அல்லன்-ஆசார்யனுக்கு பிரியமாக பகவத் கைங்கர்யமும்-பாகவத கைங்கர்யமும் பண்ணிக் கொண்டு போரக் கடவன் -இப்படி இருக்கிற அதிகாரிக்கு பிராப்ய ஸித்தி உண்டாம் –

ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா -ததீய சேஷத்வம்
பர ஸ்வரூபத்துக்கு ஸீமா -அர்ச்சாவதாரம்
விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா -அஹங்கார மமஹாரங்கள்
உபாய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவத் கிருபை
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவந் முகோலாசம்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

(தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே -உனக்கே நாம் ஆட்ச்செய்வோம் -அனுபவ கைங்கர்யங்களும் எம்பெருமான் முகமலர்த்திக்கு உறுப்பாகவே விரும்பப்படுகின்றனவை யாகையாலே அவன் திருமுக மலர்த்தியே பிராப்யத்துக்கு எல்லை நிலம்)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply