தகவுஉடை யவனே! என்னும் ;பின்னும்
மிகவிரும்பும்; பிரான்!என் னும்;எனது
அகஉயிர்க்கு அமுதே!என் னும்;உள்ளம்
உகஉருகி நின்று உள்உளே.
பொ-ரை : ‘மனமானது நிலை கெடும்படி நீர்ப்பண்டமாக உருகி நின்று, ‘மேலும் மேலும் மேலும் அருள் உடையவனே!’ என்கிறாள்; அதற்கு மேல், மிகுதியாக விரும்புகிறாள்; ‘எனக்கு உதவியினைச் செய்தவனே! என்கிறாள்; ‘என்னிடத்துள்ள ஆத்துமாவிற்கு அமுதே! என்கிறாள்.’
வி -கு : உள்உளே -மேலும் மேலும். ‘உள்ளே உள்ளே’ என்று உரைத்தலும் ஒன்று. ‘நின்று என்னும்’ என மாற்றுக.
ஈடு : ஆறாம் பாட்டு. இவள் துன்பத்தினைக் கண்ட திருத்தாய் 1‘அருள் அற்றவர்’ என்றாள்; இவள் அது பொறாமல்
‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.
தகவுடையவனே என்னும் – ஐயகோ! 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, ‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே!’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் – உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே! இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் – ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே!’ என்கிறாள். இறைவன், நித்தியமான ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக உருகி நின்று – வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது. உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, உள் உளே – 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக.
மோகித்து இருந்தாலும் -தகவு உடையவனே நிரூபகம் அதுவே கொண்டவனே
Leave a Reply