(இன்று தாறும்-இது காறும் -இன்று வரை
நெஞ்சைத் தூது விட்ட ஆழ்வார் அவனைப்போலவே
சீதாபிராட்டி இரண்டாம் பிரிவு போல் ஆனதே
முதல் பிரிவில் பெருமாள் துன்பம் பட்டார்
இரண்டாம் பிரிவில் அப்படி ஒன்றும் இல்லாமல் தரித்து இருந்தாரே
இதுவும் அவரைப் போலவே ஆனதே
அவர் ஆளை நமக்குள் வைக்கும் ஒற்றர் போல் அன்றோ இந்த நெஞ்சம்
அது தெரியாமல் நமது மட நெஞ்சம் என்று பிரமம் கொண்டுள்ளோம்
அப்படி நம்பி இருந்தால் -தூது விட்டால் -நெஞ்சு -திரும்பாதே -விடாதீர் என்று உபதேசிக்கிறார் –
போவதற்கு முன்பு இள நெஞ்சமாக இருந்து இப்பொழுது திடமான நெஞ்சு ஆனதே –
ஆழ்வாரைக் கை விடுவதில் உறுதியான நெஞ்சு
அருள் பெறுவார் அடியார் -10-6-
நெஞ்சே மருள் ஒழி என்பார் அதிலே
திருவாறன் விளைக்காக்கவோ பரமபதத்துக்கோ –
உடையவன் கூப்பிட திவ்ய தேச ப்ராவண்யத்தில் மயங்கி போகாமல் இருக்காதே -அங்கு )
அவதாரிகை –
வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே-
என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –
இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ –
அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி சஹகரித்திலையோ-
உன்னாலே அன்றோ நான் இது (பெரும் கேழலார் புண்டரீக கடாக்ஷம்) பெற்றது -என்று –
கொண்டாடினார் கீழ் –
கொண்டாடின அநந்தரம்
ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்-
பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து –
அது கை வராமையாலே கலங்கி –
இவர் படுகிற வியசநத்தை கண்டு –
திரு உள்ளம் -நான் இங்குற்றை செய்ய வேண்டுவது என் -என்ன –
அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய்
என் தசையை அறிவி -என்று
திரு உள்ளத்தை தூது விட்டார் –
அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –
பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை
ஆசைப்பட்டு –
ஸ்ரீ நரஸிம்ஹமான இடத்தே தூது விடுவான் என் என்னில் –
இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதர் அர்த்தம் என்கையாலே விடுகிறார் –
மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு-
அல்லேன் -என்னாதே
ஆபிமுக்யத்தை பண்ணி அதுக்கு (சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு )உடன் பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார் –
இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் –
இப்போது இன்னாதாகிறது என் –
அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் –
ஆசை கரை புரளும்படி –
அதுக்கு தானே கிருஷியைப் பண்ணி –
அவ்வாசைக்கு இரை இட்டு –
இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே –
அதுக்கு தானே-சஹகரியாதே –
தன்னைக் கொண்டு அகல நின்றது என் என்று -இன்னாதாகிறார் –
(அவன் வரவு தாழ்ந்த இந்த சமயத்தில்
அவன் நமது ஆர்த்தியை வளர்க்கப் பிரிய
‘இதுவும் அவனுடன் நின்று விட்டதே )
இது சஹகரிக்கை ஆவது என் என்னில் –
பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே-
ரஷ தர்மேண பலேந சைவ (கிஷ்கிந்தா)-என்கிறபடியே
ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-
(அஹம் சர்வம் கரிஷ்யாமி ஸஹ வைதேஹ்யா
என்று சொல்லி
பிரிந்த போது பண்ண வில்லையே )
அவனே உபாயம் என்கிறது –
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –
அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –
அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே –
ஒன்றாகச் சொல்லுகிறது அத்தனை இறே –
(அவன் ஸாஷாத் உபாயம்
இது நெஞ்சு பரம்பரையா உபாயம் ஆகுமே )
இத் தலையால் வரும் அவை தான் -எவை என்னில் –
பேற்றுக்கு சேதனன் தான் உளனாக வேணுமே –
தான் உளன் என்னா-
உபாயத்தில் அந்வயியான் இறே –
புருஷார்த்தத்தை அறிந்து –
ருசித்து –
சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –
(உபாயாந்தரங்களை எதிர்பார்க்க மாட்டான்
இருந்தாலும் அதிகாரி வேண்டுமே
உபாயாந்தரங்களை விடுவதும் நாம் தானே
ஆனுகூல்ய சங்கல்பமும் நாம் தானே பண்ண வேணுமே
பிரதி கூல்ய வர்ஜனமும் நாம் தானே பண்ண வேணுமே
திட அத்யவசாயத்துக்கும் நாம் வேண்டுமே )
ஈத்ருசங்கள் சில உண்டு இறே –
இத்தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்கச் செய்தேயும் –
கரண சரீரத்தில் (உபாயத்தில் )நிவேசியாதே –
சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்கக் கடவது –
அவனே உபாயமுமாய் –
அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே –
சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது –
ஈத்ருசங்களில் இல்லாமை இறே –
ஆக –
இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க –
அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே -46-
பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-
பதவுரை
மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூது போக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத் துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.
(நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே
கொடு திரும்பியே வருதல் இன்றியே வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே
பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து
தன்னையும் மறந்ததே –- ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –24–)
மட நெஞ்சம் -என்றும் -தமது -என்றும் –
நாட்டிலே இங்கனே இருப்பதொரு பிரமமுண்டு –
தந்தாம் நெஞ்சு தந்தாமுக்கு பவ்யமாய் இருக்கும் என்றும் –
இச் சேதனன் புருஷார்த்தத்தை சாதித்து கொள்ளுகைக்கு உறுப்பாக
சர்வேஸ்வரன் இவனோடே கையடைப்பாக்கி வைக்கையாலே –
இத்தை-தம்மது -என்றும் இருப்பர்கள்-இறே –
இச் சரீரத்தை கொடுத்தவோபாதி -சரீர ஏக தேசமான நெஞ்சையும் –
புருஷார்த்தத்தை அறிந்து –
ருசி பண்ணுகைக்காக-
கொடுத்து வைத்தான் -ஆன பின்பு –
இவனுக்கு -என்னது -என்கைக்கு தட்டில்லை இறே –
பவ்யராய் இருப்பார்க்கு –
எதிர்தலை நோவு படா நின்றால்-
ஒக்க நின்று -முகம் காட்டி -நீ பட்டது என் -நான் பட்டது என் –
என்ன வேணும் -இறே –
சேஷபூதன் சேஷிக்கு அதிசயத்தை பண்ண வேணும் –
அவை இரண்டும் இல்லையே இற்றே இதற்கு –
ஒரு கருமம்-இத்யாதி –
ஒரு பிரயோஜனத்தை குறித்து -நெஞ்சை ஏவுகையிலே துணிந்தவர்கள் –
அக் கார்யம் தன்னையே விட்டுப் பிடிக்க அமையும் -இது செய்வது என்கிறதன்று
அக் கார்யம் தன்னை விட்டுப் பிடிக்க அமையும் என்கிறது –
என்றான்-எதற்காக-விட தேடுகிறது என் -என்ன –
அப்பொன் பெயரோன் -இத்யாதி –
பவ்யமுமாய் –
சேஷமுமாய் இருக்கிற இது செய்து திரிகிற கார்யம் இது அன்றோ –
அப்பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ் விட –
கார்யம் கொள்ள ஒண்ணாத தோரிடத்திலே தான் விட்டேனோ –
நமக்கு கார்யம் செய்து உபகரித்து நிற்கிறவன் பக்கலில் அன்றோ விட்டது –
ஆஸ்ரிதரில் ஒருவருக்கு செய்தது -தமக்கு செய்ததாக இருக்கிறார் –
அப்பொன் பெயரோன் –
தன் வயிற்றிலே பிறந்த பிரஜை வாயாலே திருநாமத்தைச் சொல்ல –
அவனை சத்ருக்கள் செய்யுமத்தைச் செய்து நலியக் கோலின க்ரௌர்யத்தை நினைத்து –
அப்பொன் பெயரோன் -என்கிறார் –
பள்ளியில் ஓதி வந்த –
பள்ளி ஓதும் பருவத்திலே ஏதேனும் சொல்லிலும் கோதுகலாமாய் இறே இருப்பது –
தன் சிறுவன்-
ஆரேனும் பிள்ளைகள் சொல்லிலும் இனிதாய் இருக்கும் பருவத்திலே –
தன் வயிற்றில் பிறந்தவனும் -இறே
வாயில் ஓர் ஆயிர நாமம் ஒள்ளியவாகிப் போத –
சத்ருவைச் சொல்லிலும் – காலிலே விழ வேண்டும்படி வார்த்தையை ஆயிற்றுச் சொல்லிற்று –
அப்பருவத்தில்-
அவன் சொன்ன வார்த்தையாலே –
ஒன்றையே குவாலாக சொல்லுகிறார் –
ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி –
அசஹ்ய அபசாரம் ஆயிற்று –
நிருபாதிக பந்தம் உண்டாய் இருக்க -அவற்றையும் காற்கடை கொண்டு –
சத்ருக்கள் செய்யும் அத்தைச் செய்தான் –
பிள்ளையைச் சீறி –
திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக
இவனை -புத்திரன் அன்று -என்று-கை விட்டான் –
இவர் அவனோடு தமக்கு ஒரு சம்பந்தம் சொல்லுகிறார் –
தட நெஞ்சம்-
தேவதைகளுடைய வரத்தை ஊட்டியாக விட்டு –
திரு உகிருக்கு இரை போரும்படி வளர்த்த பெரிய மார்பை –
கீண்ட –
நரசிம்ஹனுடைய சீற்றத்தை கண்டவாறே அவன் சரீரம் உருகிற்று –
அநாயாசேன கிழித்து பொகட்டான்–
(பரியனாகி வந்த -வரம் கொடுத்து பருமனாக்கி வைத்த தேவதைகள்
பொன் பெயரோன் -கோப அக்னி பட்டு உருகிற்றே )
பிரானார் –
தகப்பன் பகையாக வந்து உதவின இவன்-
தான் அகல நிற்கையாலே வந்த ஆற்றாமைக்கும் ஆள் விட்டால் பொறுத்திரான் (பொறுக்க மாட்டான் ) இறே
அவன் தெளிவிக்கு உதவின அவன் கலக்கத்துக்கு உதவாமை இல்லை இறே –
அவனதும் பக்தியே ஆகிலும் –
மத்தஸ் சர்வ மகம் சர்வம் -என்கிற தெளிவோடே கூடி இருக்கும் இறே –
(இவரதோ கலங்கி மூவாறு மாசம் மோஹித்தவர் அன்றோ
இவரும் கடல் ஞாலம் செய்தேன யானே என்னும் என்றும் பின்பு
ஒவ்வொரு சமயம் தெளிவுடன் அநு காரம் செய்வார் )
தமதடிக் கீழ் விட –
அவன் திருவடிகளில் விட
போய் திட நெஞ்சமாய் –
போகிறபோது -இத் தலையில் ஆற்றாமை கண்டு
கண்ணும் கண்ண நீருமாய் -இத்தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ஸ்வாபத்தைப் பஜித்தது-
பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —
(அசோக வனம் முதல் பிரிவில் -தூங்காமல் -கடித்தது ஊறுவது தெரியாமல் இருந்தவர்
இரண்டாம் பிரிவில் தரித்து தெம்பாக இருந்தாரே )
அவன் தான் போகிற போதும் இவன் அகல நின்றால் தாழான் என்று இறே போக விட்டது –
அவன் ஸ்வபாவத்தை பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரகர் என்றதோடு சேர்த்தி என் என்னில் –
அவ் உபகாரத்தை பற்றிச் சொல்லிற்று அது –
இவ் ஆற்றாமையிலே முகம் காட்டாமையைப் பற்றிச் சொல்லிற்று இது –
எம்மை நீத்து –
என்னை அற சந்யசித்து
இன்று இத்யாதி –
நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத்தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றோம்-
தாத்பர்யம்
கீழ் உபதேசம் கேட்டு
சர்வேஸ்வரனை அனுபவிக்க
மானஸ அனுபவம் விஞ்சி
இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு
பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில் அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
நமக்கு உபகரணமாக கொடுவிக்கப்பட்ட கற்ப்பிக்கப்பட்ட இம் மனஸ்ஸூ நமக்கு அடங்கி உதவும் என்று கருதி
பார்ஸ்வத்தாருக்கு உபதேசிக்கிறார்
பலிஷ்ட சத்ருக்கள் அனைவரும் இவர் பெயர் மாத்ரம் கேட்டு-அதனாலே மாயும் ஸ்ரீ நரசிம்மன் –
பரம உபகாரகன் இடம் எனது நெஞ்சைத் தூது அனுப்பினேன்
உண்ணப்புக்கு வாயை மறப்பாரைப்போல அனுப்பிய என்னையும் என் காரியமும்
மறந்து சுகமே இருக்க
நீங்களும் மனஸ்ஸை அதே போல் அனுப்பி இழவாதே கொள்ளுங்கோள்
நீ எத்தனித்த கார்யம் மறக்கவே அமையும்
நினைக்கவும் மனம் வேண்டுமே
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply