தத் விஷய ப்ரஸ்னத்தை அநு வதிக்கிறார்-
சூரணை -353-
ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-
பரகதமாய் தோற்றுகிற அது -ஸ்வ தோஷமான படி எங்கனே என்னில்-என்றபடி –
——————————————
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
சூரணை -354-
ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –
அதாவது –
காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு சந்திர த்விதாதிகள் தோற்றுமா போலே –
நிர் தோஷமான விஷயங்களில் -தோஷம் தோன்றும்படியான -துர் வாசன துஷ்ட சித்தை யாகிற ஸ்வ தோஷத்தாலும் –
புத்ராதிகள் தோஷம் பித்ராதிகள் தாமாம் போலே அவர்களுக்கு உண்டான தோஷம்
தன்னதாம் படி அவர்களோடு தனக்கு உண்டான பந்த விசேஷத்தாலும் -என்கை –
ஸ்வ தோஷத்தாலும் -என்கிற இது அத் தலையில் தோஷ அபாவத்தை பற்றிச் சொல்லுகிறது
மற்றையது தோஷ வத்தையை அங்கீ கரித்துக் கொண்டு சொல்லுகிறது –
———————————–
ஸ்வ தோஷத்தாலே என்னலாவது-தோஷம் தான் உண்டானால் அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –
சூரணை-355-
ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –
அதாவது-
சந்திர த்வித்வ தர்சன ஹேதுவான சஷூர் தோஷம் இல்லாத போது சந்திர ஏகத்வமே தோற்றுமா போலே –
தோஷ தர்சன ஹேதுவான ஸ்வ சித்த தோஷம் இல்லாதபோது பகவத் பாகவத விஷயங்களில் குண பிரதிபத்தியே நடக்கும் என்கை-அது நடவாமையால் தோஷம் உண்டு என்று கொள்ள வேண்டும் என்று கருத்து –
————————————–
நடந்தது இல்லையாகில் வரும் தோஷம் என்-என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -356-
நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —
அதாவது –
குண பிரதிபத்தி நடவாது ஒழிந்தால் -தோஷ பிரதிபத்தி இறே நடப்பது –
அந்த தோஷ ஜ்ஞானம் தானே -இவனுக்கு பகவத நிக்ரஹ ஹேதுவான தோஷமாம் –
இதடியாக வேறு ஒரு தோஷம் உண்டாம் என்ன வேண்டாம் -என்கை –
இத்தால் இது அவஸ்யம் பரிஹர நீயம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
————————————–
இது தான் எல்லாம் சொல்ல வேண்டுவது -இது தனக்கு அவகாசம் இவனுக்கு
உண்டானால் இறே என்கிறார் மேல் –
சூரணை -357-
இது தனக்கு அவசரம் இல்லை –
அதாவது -பகவத் பாகவத தோஷ சிந்தனம் ஆகிற இது -தனக்கு அவசரம் தான்
முதலிலே இல்லை -என்கை –
———————————
அது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -358-
ஸ்வ தோஷத்துக்கும் பகவத் பாகவத குணங்களுமே காலம் போருகையாலே-
அதாவது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை –
அமர்யாதா ஷூத்திர -வித்வேஷ மாந மத ராக வி லோப மோஹாத் யஜ்ஞான பூமி –
அதிக்ராமந் நா ஜ்ஞாந் தவ விதி நிஷேதேஷு பவதேப்யபி த்ருஹ்யந் வாக்த் தீ க்ருதி பிரவி பக்தாய சததம் அஜாநந் ஜாநந் வாப வத சஹாநீ யாக சிரத –
ஸ்ரீ ரெங்கேஸ த்வத் குணா நாமி வாஸ்மத் தோஷானாங்க பார த்ருஸ்வாய தோஹம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -அனவதிகமான தன்னுடைய தோஷ அனுசந்தானத்துக்கும் –
அந்த தோஷத்தைப் பாராமல் அங்கீகரித்து அருளின பகவானுடையவும் –
வேதம் வல்லார்களைக் கொண்டும் -என்றும் –
போத யந்த பரஸ்பரம் -என்றும் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ-என்றும் சொல்லுகிறபடியே –
புருஷகார உசாத் துணையும் -ப்ராப்யருமான பாகவதர்கள் உடையவும் –
சமஸ்த கல்யாண குணாம் ருதோததி-
அசங்க்யேய கல்யாண குண கணவ்க மகார்ணவ்-
எதா ரத்னாநி ஜல தேர அசங்க்யேயாநி புத்ரக ததா குணாஹ்ய நந்தஸ்ய அசங்க்யேயா மகாத்மன-
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குணான் பத்ம புவோப்ய கம்யான்-என்றும் சொல்லுகிறபடியே-அசங்க்யேமாய் இருந்துள்ள குண அனுசந்தானங்களுக்குமே காலம் போந்து மற்று ஒன்றுக்கு அவகாசம் இல்லாமையாலே -என்கை –
இவற்றுக்கே காலம் போருகையாலே -என்கையாலே –
ஸ்வ குண ஸ்மரணத்துக்கு அவகாசம் இல்லை என்னும் இடம் அர்த்தாத் சித்தம் இறே –
—————————————-
ஆக –
மனசுக்கு தீமையாவது -350-என்று துடங்கி -இவ்வளவும்
பகவத் பாகவத தோஷ ஸ்மரணம் ஆகாது என்னும் இடமும் -அவர்களுடைய நைர் தோஷமும் -351
தோஷம் உண்டு என்று நினைக்கில் -அது தத் தோஷம் அன்று -ஸ்வ தோஷம் -352-என்றும் –
அது ஸ்வ தோஷம் ஆகைக்கு நிதானங்களும் -353-354
ஸ்வ தோஷ பாவ சங்கைக்கு உத்தரமும் -355-
தோஷ பிரதிபத்தி நடக்கில் -அது தான் இவனுக்கு மகா தோஷம் -356-என்றும் –
ஸ்வ தோஷ பகவத் பாகவத குண அனுசந்தானத்துக்கே காலம் போருகையால் இது தனக்கு இவனுக்கு அவசரம் இல்லை -357-358–என்றும் அருளிச் செய்தார் கீழ்
இப்படி தனக்கு உத்தேஸ்யமான -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாமலும் –
நினைத்தான் ஆகிலும் அது தன்னுடைய தோஷமாக நினைத்து இருக்க வேணும் என்று அருளிச் செய்த பிரசங்கத்திலே -சம்சாரிகள் தோஷ விஷய அனுசந்தானமும் -இன்னபடியாக வேணும் என்கிறார் -மேல் –
சூரணை -359-
சம்சாரிகள் தோஷம் ஸ்வ தோஷம் என்று நினைக்கக் கடவன் –
அதாவது-
சம்சாரிகளுக்கு உண்டான பகவத் வைமுக்யம்- அநாத்மந் யாத்மா புத்தி- யஸ்வேஸ் ஸ்வ புத்தி -முதலான தோஷம் கண்டால் -அந்த தோஷங்களை இட்டு அவர்களை இகழ்ந்து இவர்களுக்கும் நமக்கும் பணி என்று இராதே –
அவர்களுடைய தோஷம் தன்னுடைய தோஷம் என்று அனுசந்திக்கக் கடவன் -என்கை-
—————————————
அதுக்கு ஹேது என் -என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -360-
அதுக்கு ஹேது பந்த ஞானம் –
அதாவது –
தனக்கு சேஷிகளான-பகவத் பாகவதர்கள் தோஷம் ஸ்வ தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது அவர்களோடு தனக்கு உண்டான சம்பந்த ஞானம் ஆனாப் போலே –
சம்சாரிகளுடைய தோஷத்தை தன்னுடைய தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது – நாராயணத்வ பிரயுக்தமான சம்பந்த ஞானம் என்கை –
எல்லோர்க்கும் ஈஸ்வரனோடு சம்பந்தம் ஒத்து இருக்கையாலே அவ்வழியாலே தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உண்டு ஆகையாலே –
தனக்கு அவர்ஜ நீயரான பிரகிருதி பந்துக்களுக்கு வந்த தோஷம் தனக்கு வந்ததாக நினைத்து இருக்குமோ பாதி சம்சாரிகளுக்கு உண்டான தோஷம்
தன்னுடைய தோஷம் என்றே நினைக்கக் குறை இல்லை -இறே –
————————————
இது தான் வேண்டுவது -அவர்கள் தோஷம் தான் -இவனுக்குத் தோன்றில் இறே –
அது தான் முதலில் இவனுக்குத் தோன்றாது என்கிறார் மேல் –
சூரணை -361-
இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –
அதாவது –
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -(2-6-1-)என்று பரம பதத்தில் நித்ய ஸூரிகள் பரிந்து பரிசர்யை பண்ண இருக்கும் பெருமை உடையனாய் வைத்து திருக் கடல் மல்லையிலே வந்து தங்களை பெறுகைக்காக தரைக் கிடை கிடக்கிற நீர்மையை உடையவனை இது ஒரு நீர்மை இருக்கும் படி என் என்று அந் நீர்மையிலே தோற்று அனவரதம் அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க அவனிடை ஆட்டம் கொண்டு கார்யம் அற்று கேவல தேக போஷாணாதி பரராய் இருக்கிற சம்சாரிகளை க்ஷண காலமும் நினையோம் -என்கையாலே
சம்சாரிகள் தோஷம் தான் இவ் அதிகாரிக்கு தோன்றாது -என்கை –
திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்த இது ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லார்க்கும் ஒக்கும் இறே
——————————————–
தோன்றாது -என்னப் போமோ –
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
கொண்ட பெண்டிர் -இத்யாதியாலே ஆழ்வாருக்கு உள்பட்ட சம்சாரிகள் குற்றம்
தோன்றிற்று இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -362-
தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –
அதாவது –
சம்சாரிகள் தோஷம் தோன்றுவது -அந்த தோஷங்களின் நின்றும்
அவர்களை நிவர்திப்பிக்கைக்காக -என்கை –
சொன்னால் விரோதம் -முதலான வற்றால் ஆழ்வாரும் அதில் திரு உள்ளம் வைத்தது –
அசேவ்ய சேவ்யாதிகளின் நின்றும் அவர்களை நிவர்திப்பிக்கைகாக இறே –
அது எல்லார்க்கும் ஒக்கும் என்று கருத்து –
——————————————
ஆக இவ் வதிகாரி சம்சாரிகள் தோஷம் கண்டால் அனுசந்திக்கும் பிரகாரமும் –
தத் தோஷம் தான் இவனுக்கு தோன்றாது என்னும் இடமும் –
தோன்றுவது இன்னதுக்காக என்றும் அருளிச் செய்தார் கீழ் –
இப்படி காதா சித்தமாக தோன்றும் சம்சாரிகள் தோஷங்களை ஸ்வ தோஷமாக நினைத்தும்
தன் நிவர்தகனாயும் போரும் அளவன்றிகே -ஸ்வ விஷயத்திலே குற்றங்களைச் செய்தால்
இவன் இருக்க வடுக்கும் படி அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -363-
பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்கக் கடவன் அல்லன் –
அதாவது
ஏகாஷீ-ஏக கர்ணி -முதலான ஏழு நூறு ராஷசிகள் -ஏக திவசம் போலே பத்து மாசம் தர்ஜன பர்த்ஸ்னம் பண்ண இருந்த பிராட்டி -இவர்கள் அப்படி செய்த குற்றத்தை –
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கும் -அறிவியாதாப் போலே -தன் விஷயமாக பிறர் செய்த குற்றங்களை -பகவத் விஷயத்தில் ஆதல் –
பாகவத விஷயத்தில் ஆதல் -மறந்தும் விண்ணப்பம் செய்யக் கடவன் அல்லன் -என்கை –
————————————–
இது கிம் புனர் நியாய சித்த மாம்படி -ஈஸ்வரன் படியை அருளிச் செய்கிறார் –
சூரணை -364-
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —
அதாவது-
எதிர் சூழல் புக்கு -என்கிறபடியே -தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி -சம்சாரி சேதனரைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுவதாக வந்து அவதரித்து –
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-அவர்கள் அப்படி அனுகூலராய் தோன்றாது ஒழிந்தாலும்-இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்-நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே -என்று அது தானே போக்யமாக இருப்பர்-
அதுக்கு மேல் அவர்கள் வைமுக்யம் பண்ணினார்கள் என்று
அவர்கள் குற்றத்தை -தனி இருப்பிலே பிராட்டிக்கும் அருளிச் செய்யார் -என்கிற –
சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டில் சேதனர் செய்த குற்றங்களை -தன் திரு உள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு பிராப்தனான சர்வேஸ்வரனும்
உள் பட தன் திருப் பவளம் திறந்து அருளிச் செய்யாதே -தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் -அறிய வல்ல சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்று
சொல்லா நின்றது இறே -என்கை –
இத்தால் அவன் உட்பட இப்படி மறையா நின்றால்- இவனுக்குப் பின்னை சொல்ல வேணுமோ -என்றபடி –
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே
இவர்களை சூழ்ந்து அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
(தோன்றா விடுகை -ஆபி முக்யம் பண்ணா விடுகை)இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –வை முக்யம் பண்ணினார் என்று தனி இருப்பிலே பிராட்டிக்கு வாய் திறவார்-பிரஜைகள் குற்றம் செய்யத் தாய்க்கு இறே சொல்லுவது அவளுக்குச் சொல்லார்-
————————————-
இப்படி உத்தேஸ்ய விஷயங்களில் அறிவியாது இருக்கும் மாத்ரம் போராது –
குற்றம் செய்தவர்கள் விஷயமாக -ஷம தயாதிகளும்-நடக்க வேணும் என்கிறார் -மேல் –
சூரணை -365-
குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிகப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதியும்
நடக்க வேணும் –
1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால் செய்யலாவது ஓன்று இல்லை இறே –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியைப் பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே -இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் தனக்கு பிரதி கூலங்களாகவும் நினைத்து இருக்கையாலே தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல் தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல் செய்தால் உகக்குமா போலே அவர்கள் அளவில் பிறக்கும் ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும் -நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான செறுப்புக்களைச் (நிர்வேதங்களை)செய்தும் -இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும் க்ருதக்ஜ்ஜை –
நடக்க வேணும் -என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே
இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-
ஆக
இப் பிரகணத்தால்-ஹித உபதேச சமயத்தில் -விபிரதி பத்தி விசேஷங்களும் -308-ஆரம்பித்து-
தத் ரஹிதமாக உபதேசிக்க வேணும் என்னும் இடமும் –
உபதேச சாஷாத் பலமும் -311-
உபதேஷ்டாவின் ஆசார்யத்வமும் சித்திக்கும் வழிகளும் –
வி பிரதிபத்தி யுடன் உபதேசிக்கில் உபயர்க்கும் ஸ்வரூப சித்தி இல்லாமையும் -312-
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313-
சாஷாத் ஆச்சர்யத்வம் இன்ன மந்த்ரத்தை உபதேசித்தவனுக்கு என்றும்-315- – சொல்லுகையாலே – சதாசார்யா லஷணத்தையும் -308-320-
தத் அநந்தரம்-
சச் சிஷ்ய லஷணத்தையும் –321-
தத் உபயருடைய பரிமாற்றங்களையும் –
சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் -தீ மனம் கெடுத்தாய் -இத்யாதிப் படியே
யாவச் சரீர பாதம் உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் -எனும் அத்தையும் –
மனசுக்கு தீமை என்னது என்னும் இடத்தையும் –
அதில் உபபாத நீயாம்சத்தின் உபபாதநத்தையும்(விளக்க வேண்டியவற்றை விளக்கியும் )
தத் பிரசங்கத்திலே-
மற்றும் இவனுக்கு அபேஷிதமான அர்த்த விசேஷங்களையும் -பிரதிபாதிக்கையாலே –
கீழ்ச் சொல்லி வந்த த்வய நிஷ்டனான அதிகாரிக்கு –
தத் உபதேஷ்டாவான ஆச்சார்ய விஷயத்தில் உண்டாக வேணும் பிரதி பத்திய அனுவர்தன பிரகாரங்களும் சொல்லப் பட்டது –
ஆறு பிரகரணங்களில் நான்காவதான-சதாசார்ய அனுவர்தன பிரகரணம் -முற்றிற்று –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருக் மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply