ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை–105/106/107/108/109/110/111/112/113/114/115/116/117/118/119/120/121–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

விஷய வைலக்ஷண்ய அதிசயத்தாலே -விஷயாந்தர அஜ்ஞானம் விளையக் கூடும் -ஆப்தரான சிஷ்டர்களுடைய  ஆசார அனுசந்தானத்தாலே -அவிஹித விஹித விஷய ஸ்பர்சத்தில் அச்சம் விளையவும் கூடும் –அநாதி காலம் ஆசைப் பட்டு மேல் விழுந்து போந்த விஷயங்களில் அருசி பிறக்கை  அகடிதம் இறே-அப்படிப்பட்ட அருசி தான் அவன் அருளாலே பிறக்கும் போதைக்கு அபேஷித அம்சத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம்
அபேஷிதமாய் இருக்கும் —

தோஷ தர்சனம் ஆவதுபோக்யதா புத்த்யா பரிஷ்வங்கிக்கிற யோஷி தேஹம்  மாம்ஸ அஸ்ருக் பூயவின் மூத்திரஸ்நாயும் அஜ்ஞ்ஞாச்தி சமுதாயமுமாய் சர்ம அவனத்தமாய் துர் கந்தியாய் இருக்கும் படியையும் – போகம் தான் அல்பமாய் -அஸ்திரமாய் -துக்க மிஸ்ரமாய் -அநர்த்த அவஹமாய் -இருக்கும் படியையும் -பிரத்யஷாதி பிரமாணங்களால் தர்சிக்கை –

————————————————–

ஆனால் அதுவோ பின்னை அருசி ஹேது என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

பிரதான ஹேது அன்று -என்றது -அதுவும் ஒரு ஹேது -முக்கிய ஹேது அன்று -என்றபடி –

——————————-

ஆனால் பிரதான ஹேது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

அப்ராப்தை ஆவது -பகவத்யேக போகமான  ஸ்வரூபத்துக்கு சேராததாய் இருக்கை–இத்தால்-அருள் அருசியை விளைக்கும் இடத்தில் -தோஷ தர்சனாதிகளை பண்ணுவித்து விளைப்பிக்கையால் -தோஷ தர்சனமும் -அப்ராப்தி தர்சனமும் -தத்வ வித்துகளுடைய அருசிக்கு கௌண முக்ய ஹேதுக்களாய்  இருக்கும் என்றது ஆய்த்து

————————————–

மால் பால் மனம் சுளிப்ப -இத்யாதி படியே பிராவண்ய விஷயமாக சொன்ன பகவத் விஷயத்தில் குணம் கண்டு இழிகிறவோபாதி-இதுவும் தோஷம் கண்டே விடுகிற தானாலோ-என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

பகவத் விஷயத்தில் இழிகிறதும்-குணம் கண்டு அன்று -ஸ்வரூப ப்ராப்தம் என்று-என்கிறார் (மால் பால் வியாமோஹ குணம் கண்டு அன்று -வகுத்த விஷயம் என்றபடி -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ )

——————————————

ஆகில் எத்தாலே -என்ன -ஸ்வரூப பிராப்தம் என்று -என்கிறார் –

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது –(சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

அதாவது பகவத் விஷயத்தை பற்றுகிறது -அத்தலையில் கல்யாண குணங்கள்
அடியாக அன்று -இவ் ஆத்மாவுக்கு வகுத்த விஷயம் -என்கையாலே –
இப்படி கொள்ளாத போது -என்றது -இதர விஷயங்களில் அருசிக்கு ஹேது அப்ராப்தை –
பகவத் விஷயத்தில் ருசிக்கு ஹேது பிராப்தை  என்று கொள்ளாதே-
தோஷ தர்சனத்தையும் -குண தர்சனத்தையும் இவற்றுக்கு ஹேதுவாக கொள்ளும் போது என்றபடி -குண ஹீனம் என்று நினைத்த தசையில் பகவத் விஷய பிரவ்ருத்தி யாவது –
பிரிவாற்றாமை கரை புரண்டு பெரு விடாய் பட்டு துடித்து அலமரா நிற்க சடக்கென வந்து
முகம் காட்டாமையாலே -குண ஹீனம் என்று சிந்தித்த தசையில் -பின்னையும் –
அவனை அல்லது அறியேன் -திருவாய் மொழி -5-3-5–என்று அவன் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகை-(காதலன் கடல் புரைய விளைந்ததால் )
தோஷ அனுசந்தான தசையில்  சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது –
மாதா பித்ராதிகளும் -பார்யா புத்ராதிகளும் -ஜ்ஞாதிகளும் -பந்துகளும் -க்ருக ஷேத்ராதிகளும் ஆக சப்தாதி போகங்களை அனுபவித்து இருக்கை யாகிற சம்சாரத்தின் துக்க பஹூளத்வாதி தோஷத்தை -பிரத்யஷாதிகளால் அறிந்து அனுசந்தியா நிற்கச் செய்தேயும் – அதிலே அபிநிவேசம் நடந்து செல்லுகை -இவை இரண்டும் கூடாது என்ற படி –
அன்றிக்கே
தோஷ அனுசந்தான தசையில்  சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது –
தத்வ வித்துக்களான மகரிஷிகள் தொடக்கமானவர் -சார அசார விவேக வத்தையா விஷய தோஷ அனுசந்தானம் உண்டாய் இருக்க செய்தே – சாஸ்திர விஹித தயா பிராப்தம் என்கிற புத்தியால் -பண்ணுகிற ப்ரஜோத் பாதநாதி ரூப சம்சாரத்தில் பிரவ்ருத்தி ஆகவுமாம்-(ஆதி பெற்ற குழந்தையைப் போஷித்தல் )

இப்படிக் கொள்ளாத போது இவை கூடாது என்று விரோதம் காட்டுகையாலே இப்படிக் கொள்ள வேணும் என்னும் இடம் ஸ்தாபிக்க பட்டது –

————————————————–

குண ஹீனம் என்று நினைத்த தசையில் -பகவத் விஷய பிரவ்ருத்தி எங்கே கண்டது என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

(கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-3-5-)

(வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-)

அதாவது –
கடியன் -என்று தொடங்கி -அறுவரு மேனி மாயத்தன்–திரு வாய் மொழி -5 -3 -5 -என்னும் அளவும் –
ஸ்வ கார்ய பரன் -(கடியன்)
பிறர் நோவு அறியாதவன் -(கொடியன்)
ஒருவருக்கும் எட்டாதவன் -(நெடிய மால்)
வஞ்சகன் -மாயத்தன்-(உலகம் கொண்ட அடியன்)
துர் ஞேய  ஸ்வபாவன்(அறிவரு மேனி மாயத்தன்)என்று அவன் குண ஹானியை சொல்லி -இப்படி இருந்தான் ஆகிலும் -அதி லோக குரூரமான என் நெஞ்சு அவனை அல்லாது அறியாதே இருக்கும் என்றும் – வேம்புக்கு இட்டு பிறந்த புழு அந்த வேம்பையே புஜிக்குமது ஒழிய கரும்பை கண்டாலும் விரும்பாது -அப்படியே –கடல் மல்லைக் கிடந்த கரும்பு -பெரிய திரு மொழி -7 -1 -4 –என்னும்படி-நிரதிசய போக்யனான நீ தானே வேம்பு போல் விரசன்  ஆனவன்றும் –த்வத் அனந்யார்க்க சேஷ பூதனான நான் -எனக்கு வகுத்த சேஷியான உன் திருவடிகளை ஒழிய ஆசைப் படன் என்றும் – மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -அருளிச் செய்யா நின்றார்கள் இறே —

(புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே–7-1-4-)

———————————————

குணைர் தாஸ்யம் உபாகதா -என்றாரும் இல்லையோ என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம்
இறே பிரதானம் —

குண கிருத தாஸ்யம் ஆவது -அவன் குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருக்கை-
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆவது -சேஷத்வைக நிருபணீயமான தன் ஸ்வரூபத்தை பார்த்து அடிமையாய் இருக்கை -ஸ்வரூபம் இப்படி இருந்தாலும் –குணாதிக விஷயம் ஆகையாலே -குண கிருத தாஸ்யமும் இவ் விஷயத்தில் அனுவர்தியா நிற்கும் –
ஆகையால் இறே சேஷத்வைக நிரூபகரான இளைய பெருமாள் தாம் அப்படி அருளி செய்ததும் ..ஆனாலும் குண கிருதமானது ஒவ்பாதிகம் ஆகையால் -அப்ரதானமாய் -மற்றையது நிருபாதிகம் ஆகையாலே பிரதானமாய் இருக்கும் -அத்தைப் பற்ற இறே -தத் பிரதான்ய பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது –

————————————————–

இவ் வர்த்தத்துக்கு சம்வாதமாக பிராட்டி வார்த்தயை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –

சூரணை -112-

அநஸூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது–

அதாவது அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் -பெருமாள் எழுந்து அருளி மகரிஷியையும் அனுவர்த்தித்திருந்த அநந்தரம்-தத் பத்னியான அநஸூயையை பிராட்டி சென்று அனுவர்த்திக்கிற அளவிலே அவள் பிராட்டியைப் பார்த்து -பந்து ஜனத்தையும் -அபிமானத்தையும் -ஐஸ்வரத்தையும்  -விட்டு பெருமாள் பின்னே காட்டிலே போந்த இது தைவ  யோகத்தாலே உமக்கு நன்றாக கூடிற்று -நகரஸ்தன் ஆகிலுமாம்-வனஸ்தன் ஆகிலுமாம் -நல்லவன் ஆகிலுமாம் -தீயவன் ஆகிலுமாம்-ஸ்திரீகளுக்கு தைவம் பர்த்தாவே கிடீர் –நீர் இப்படி எப்போதும் பெருமாள் விஷயமாக அனுகூலித்து போரும் -என்ன -பிராட்டி லஜ்ஜித்து கவிழ் தலை இட்டு இருந்து -எனக்கு பெருமாள் பக்கல் பாவ பந்தம் ஸ்வத உண்டாய் இருக்கச் செய்தே –அவர் தான் குணாதிகராக இருக்கையாலே -என்னுடைய பாவ பந்தத்தை குண நிபந்தமே என்று இருப்பர்கள் நாட்டார் -அவ் வாஸ்ரயத்தை குணங்களோடு வ்யதிரேகித்து காட்ட ஒண்ணாமையாலே-நான்  அவர் பக்கல் இருக்கும் இருப்பை அறிவிக்கப் பெருகிறிலேன்–அவர் குண ஹீநருமாய்-விரூபருமான அன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது -என்று அருளிச் செய்த வார்த்தை –

———————————————-

இப்படி ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யமே பிரதானம் -ஆகில் -சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அது ஒழிய -அநந்ய உபாயத்வாதிகள் குலையும்படி அவ் விஷயத்தை குறித்துப் பண்ணுகிற ஸ்வ பிரவ்ருத்தி சேருமோ என்கிற சங்கையை அனுவர்த்திகிறார் -பகவத் விஷய பிரவ்ருத்தி -இத்யாதியால் –

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

அத்தைப் பரிகரிக்கிறார் -அதக்கடி பிராவண்யம் -என்று தொடங்கி–பிராவண்யம் ஆவது அதி மாத்திர சிநேகம் –அந்த பிராவண்யத்துக்கு அடி விஷய வைலஷண்யம் அன்றோ என்ன  -அதுக்கடி சம்பந்தம் -என்கிறார் –
சம்பந்தம் ஆவது -சேஷ சேஷி பாவம் – அதுதான் குண கிருதமாய் வாராதோ என்ன –அது தான் ஒவ்பாதிகம் அன்று -சத்தா பிரயுக்தம் -என்றது – இவ் வாத்மாவினுடைய சத்தையே பிடித்து உள்ளது ஓன்று என்கை-

———————————————

இத்தால் கீழ் பண்ணின சங்கைக்கு பரிகாரம் ஆனது எது என்ன -அருளிச் செய்கிறார் -மேல் வாக்ய த்ரயத்தாலே –

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்கு வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

அந்த சத்தை பிராவண்ய கார்யமான-அனுபவம் இல்லாத போது குலையும் -என்றது –
அப்படி பட்ட சத்தை தான் ஸ்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக வருகிற பிராவண்ய கார்யமான பகவத் அனுபவம் இல்லாத போது ஷண காலும் நில்லாது -என்றபடி
அது குலையாமைக்கு வருமவை எல்லாம் அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் -என்றது – அந்த சத்தை அழியாமைக்கு உறுப்பாக வருகிற மடல் எடுக்கை -முதலான சகல பிரவ்ருத்திகளும் -பகவத் அனுபவம் ஒழிய தரிப்பு இல்லாமையாலே
தவிறிவோம் என்றாலும் -தவிரப் போகாதவையுமாய் –எல்லாம் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே ஸ்வரூப பிராப்தங்களாய் இருக்கும் என்றபடி –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் -என்று உக்தத்தை ஹேதுவாக்கிக் கொண்டு பிரக்ருத சங்கையை பரிகரித்து தலைக் கட்டுகிறார் – –

(1-புருஷகாரமாகப் பற்றி -2-இதில் உபாய உபய வைபவம் -3-மேலே உபாயாந்தர தோஷம் 
4-சித்த உபாயம் நிஷ்டை ஏற்றம் -5-பிரபன்ன தினசரியா -6-ஆச்சார்ய லக்ஷணம் -7-சிஷ்ய லக்ஷணம் -8-ஹரியுடைய நிர்ஹேதுக கிருபா -90கம்யமும் கதியும்-எல்லாம் வகுத்த இடம் ஆச்சார்யரே -என்றும்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்றும் -ஒன்பது பிரகணம்– இதில் இரண்டாவது முற்றிற்று -)

—————————————————-

இதர விஷய பரித்யாகதுக்கும் -பகவத் விஷய பரிக்ரஹத்துக்கும் பிரதான ஹேதுகள் இன்னது என்றார் கீழ் -இந்த பிரசங்கத்திலே –இதர உபாய பரித்யாகதுக்கு பிரதான ஹேது இன்னது என்கிறார் மேல் –

சூரணை -115-

பிரபகாந்தர பரி த்யாகதுக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

பிரபகாந்தரங்கள் ஆவன -பிரபத்தி உபாயத்தை ஒழிந்த உபாயங்கள் –
அஞ்ஞான அசக்திகள் என்றது -அவற்றை அறிக்கைக்கும் அனுஷ்டிகைக்கும் ஈடான ஞான சக்திகள் இல்லாமை -தத் த்யாகத்துக்கு பிரதான ஹேது அன்று என்றபடி –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது-என்றது-பகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற ஸ்வரூபத்துக்கு சேராது என்னும் அதுவே முக்கிய ஹேது என்றபடி –
இத்தால் அஞ்ஞானத்தால் பிரபன்னர் என்கிற இடத்தில் சொன்ன அஞ்ஞான அசக்திகள் முக்கிய ஹேது அன்று என்னும் இடம் சொல்லுகிறது -அஞ்ஞான அசக்திகள் அடியாகா விடில் -ஞான சக்திகள் உண்டாகில் பரிகிராஹ்யம் இறே – ஸ்வரூப விரோதம் என்று விட்டால் இறே மறுவல் இடாது ஒழிவது–

(அஞ்ஞான அசக்திகளோ ஞாநாதிக்யமோ பக்தி பாரவஸ்யமோ பிரதான ஹேதுக்கள் அல்ல -மூவருக்கும் பிரதான ஹேது ஸ்வரூப ப்ராப்தி ஒன்றே)

———————————————

இப்படி பிரபாகாந்தரத்தை விரோதி என்று தள்ளலாமோ-அதுவும் மோஷ உபாயமாய் அன்றோ போருகிறது -அது பின்னை  யாருக்கு உபாயம் என – அருளிச் செய்கிறார் –

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

அஞ்ஞருக்கு உபாயம் என்றது –ஸ்வ ரஷண ஸ்வ யத்ன கந்த அசஹமான ஸ்வரூபத்தை உள்ளபடி தர்சிப்பைக்கு ஈடான ஞானமில்லாதவர்களுக்கு உபாயமாய் இருக்கும் என்றபடி –

——————————————

ஆனால் ஞானிகளுக்கு இது எங்கனே என்ன -ஞானிகளுக்கு அபாயம் –என்கிறார் –

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம் -(நாஸகரம் அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு -அபிமத அலாபம் -விஸ்லேஷ ஜனகம்)

அதாவது ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் உடையவர்களுக்கு அபாயமாய் இருக்கும் என்கை –

——————————————————-

இவர்களுக்கு அபாயம் ஆவான் என் -என்ன-அபாயமாய் ஆயிற்று ஸ்வரூப நாசகம் ஆகையாலே -என்கிறார் –

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று
ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

ஸ்வரூபம் ஆவது அத்யந்த பாரதந்த்ர்யம் – இதுக்கு ஸ்வ யத்ன ரூபம் ஆன  அது நாசகம் இறே –

——————————————————

தத் உபாயத்வத்தை ஞாநினாம் அக்ரேசனரான-ஆழ்வார்  பாசுரத்தாலே தர்சிப்பிக்கிறார் –நெறி காட்டி-பெரிய திருவந்தாதி -6 -என்றுதொடங்கி –

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

அதாவது
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி உன் பக்கலின் நின்றும்
அகற்றப் பார்க்கிறாயோ -என்கையாலே –பிரபாகாந்தர உபாயத்வம் சித்தம் இறே என்கை —
நீக்குகை யாவது -பரதந்தரமான வஸ்துவை ஸ்வதந்திர க்ருத்யமான -உபாய அனுஷ்டானத்திலே மூட்டி தனக்கு அசல் ஆக்குகை இறே –

——————————————

இதனுடைய ஸ்வரூப நாசகத்வ பிரயுக்தமான தூஷண விசேஷங்களை அருளிச் செய்கிறார் -வர்த்ததே -இத்யாதி  -வாக்ய த்வயத்தால் –

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

அதாவது –
காலேஷ் வபிச சர்வேஷு  திஷூ சர்வாஸூ சாஸ்யுத சரீரேச கதவ் சாபி வர்த்ததே  மே மகத் பயம் -என்று உபாயாந்தர அனுஷ்டானதுக்கு யோக்யமான கால தேச தேக விஷயமாகவும் –
உபாயாந்தரங்கள் தன் விஷயமாகவும் எனக்கு மகா பயம் வர்த்தியா நின்றது-
என்கையாலும்-உபாயந்தர ஸ்ரவண அநந்தரம் அர்ஜுனனுக்கு சோகம் பிறக்க
ஸ்வரூப அநுரூப உபாயத்தை உபதேசித்து –மா ஸூச -என்று சோக அபநோதனம் பண்ணி அருளுகையாலும்-ஸ்வரூப விரோதியான ப்ரபாகாந்தரம்-ஞானிகளுக்கு பய ஜனகமாய் -சோக ஜனகமுமாயும் -இருக்கும் என்கை –

—————————————-

கீழ்ச் சொன்ன படி அர்த்தத்தை அங்கீகரியாத அளவில் விரோதம் காட்டுகிறார் -இப்படிக் கொள்ளாத போது-என்று தொடங்கி —

சூரணை -121-

இப்படிக் கொள்ளாத போது
ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயச் சித்தி விதி  கூடாது –

இப்படிக் கொள்ளாத போது-என்றது -ஸ்வரூப நாசகம் என்று கொள்ளாத போது என்றபடி —
ஏதத் பிரவ்ருத்தியில் பிராயச் சித்தி விதி  கூடாது –என்றது –
சக்ரு தேவவஹி சாஸ்த்ரார்த்த க்ருதோயம் தாரயேன் நரேம் உபாய அபாய  சம்யோகே(உபாயமாகத் தோற்றம் அளிக்கும் அபாயங்கள் )நிஷ்டையா  ஹீயதே அனையா அபய சம்ப்லவே (உபாயமாக ஸ்வீ கரித்து விட்டால்-தேசம் ப்ரக்ருதி என்பதால் சரணாகதனுக்கும் உபாயாந்தர ஸ்பர்சம் உண்டாகலாம்)சத்தே பிராய சித்தம்  சமாசரேத் பிராயசித்திரியம்  சாத்ரா யத் புனஸ்ரணம்  விரஜேத் உபயானாம் உபாயத்வ ஸ்வீகாரேப் ஏத தேவஹி -என்று பிரபன்னனாவனுக்கு  பிரமாதிகமாக உபாயாந்தர பிரவ்ருத்தி வந்த காலத்தில் -அபாய பிரவ்ருத்தியில் போலே -புன பிரபதன ரூப பிராயச்சித்தத்தை விதிக்கக் கூடாது என்கை —புன பிரதனம் ஆவது -பூர்வ பிரபதன ஸ்மரணம் -புன பிரயோகம் அன்று .

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading