விஷ்ணோ கார்யம் சமுதிச்ய தேக த்யாகோ யதா க்ருத ததா வைகுண்ட மாசாத்ய முக்தோ பவதி மானவே -என்று ஆக்நேய புராணத்திலும் –
தேவ கார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் யா பரித்யஜேத் சாயாதி விஷ்ணு சாயுஜ்யமபி பாதக க்ருன் நர –என்று வாயவ்யத்திலும் –
ரங்கநாதம் சமாஸ்ரித்ய தேஹ த்யாகம் கரோதிய தஸ்ய வம்சே ம்ருதாஸ் சர்வே கச்சந் த்யாத் யந்திகம் லயம் -என்று (ஆத்யந்த்திக லயம் மோக்ஷம்)வாம நீயத்திலும் – சொல்லுகையாலும் -விசேஷித்து ஆஸ்வமேதிக பர்வதத்தில் -வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரத்தில் பஞ்சம அத்யாயத்திலே –அக்னி பிரவேசம் யச்சாபி குருதே மத் கதாத் மனா ச யாத் யக்னி ப்ரகா சேன வ்ரஜென் யானென மத் க்ருஹம் –என்று பகவான் தானே அருளிச் செய்கையாலும் -இப்படி மோஷ சாதனமாக சொல்லப் படுகிற -பகவத் தர்தமானே ஸ்வ தேக தியாகம் -அநந்ய சாதனான இவனுக்கு த்யாஜ்யம் அன்றோ – பிரபன்னரராய் இருக்கிற பிள்ளை திரு நறையூர் அரையர் இத்தை அனுஷ்டிப்பான் என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை-86-
இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யாஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –
அதாவது-
இதம் குர்யாத் -என்று ஒரு விதி பிரயுக்தமாய் வருமது இறே – பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இவனுக்கு கை விடல் ஆகாது-அங்கன் இன்றிக்கே தன் விரஹத்தால் ஆற்ற போகாதபடி போக்யமுமாய் பிராப்தமுமான விஷயத்தில் ராக பிரயுக்தமாய் வருமது வருந்தியும் கை விடப் போகாது இறே –என்கை–
————————————————————————-
வைதவம் வரும் அளவில் ஸூத்யஜமாய் -ராக ப்ராப்தமாய் வரும் அளவில் -துஸ் த்யஜமாவான் என் என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -87
உபாயத்வ அநு சந்தானம் நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் –
உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது –
வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றது
ராக பிராப்தமாய் வரும் தசையில் –இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று -தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே –
வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –
————————————————-
இப்படி ஒரு சாதன புத்த்யா அன்றிக்கே -தத் விஷய ப்ராவண்ய அதிசயத்தாலே –
ஸ்வ தேகத்தை விடும்படியான நிலை விளையக் கூடுமோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை-88-
அப்ராப்த விஷயங்களிலே சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பரவணனுக்கு சொல்ல வேண்டா இறே –
அதாவது -ஸ்வரூப பிராப்தம் அல்லாத தேக விஷயங்களிலே பிரவணன் ஆனவன் –
தன்னை அழிய மாறி யாகிலும் -அவ் விஷயத்தை லபிக்க வேணும் என்று –
ஸ்வ தேக த்யாகத்தில் பிரவர்தியா நின்றால்-ஸ்வரூப பிரப்தமான விலக்ஷண விஷயத்தில் பிரவணன் ஆனவனுக்கு -அவ் விஷயத்தை பற்றி அழிய மாறுகை யாகிற இது கூடுமோ என்னும் இடம் கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-
ஒரு வேச்யை அளவில் ஒருவன் அதி சக்தனாய்க் கொண்டு போருமவனாய் -அவளுக்கு வியாதி கனக்க வந்த அளவிலே -இவள் ஆறி எழுந்தவாறே நான் என் தலையை அரிந்து தருகிறேன் -என்று ஒரு தேவதைக்கு பிரார்த்தித்து -பின்பு தலையை அரிந்து -கொடுப்பது செய்தான் என்று பிரசித்தம் இறே –
——————————————————-
உபாய உபேய அதிகாரங்களுக்கு உடலாக மற்றும் சொன்ன அனுஷ்டானங்கள் போல் அன்றிக்கே – உபாய தயா சாஸ்திர சித்தம் ஆகையாலே -அநந்ய சாதனனுக்கு அந் அனுஷ்டானமான இந்த தேக த்யாகம் ராக ப்ராப்தம் ஆகையாலே -துஸ்த்யஜமாய் இருந்ததே ஆகிலும் -உபாய கோடியிலே-அன்வயித்தது அன்றி -நில்லாதே -என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -89-
அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய கோடியில் அன்வயியாது ––
அதாவது –
அனுஷ்டானமாக சொன்ன ஸ்வ சக்தி த்யாகாதிகளும் -ப்ரேமாதி களும் –
உபாய உபேய அதிகார அந்தர்பூதம் ஆகையாலே -உபாய கோடியிலே அன்வயிதாப் போலே –
அந் அனுஷ்டானமாக சொன்ன –ஸ்வ தேக த்யாகமும் -உபாய புத்தியா அனுஷ்டிதம் அன்றிக்கே –
ராக பிராப்தம் ஆகையாலே உபாய கோடியில் அன்வயியாது -உபேய அதிகாரத்தில் அந்தர் பாவிக்கும் அத்தனை -என்கை –
உபாயதயா சாஸ்திர சித்தமே ஆகிலும் உபாய புத்த்யா அனுஷ்டிதம் ஆனதுக்கு இறே
உபாயத்வம் உள்ளது –அங்கன் அன்றாகில் -பிரபன்னனான அவன் உபாய புத்தி அற உபேய புத்த்யா பண்ணுகிற புண்ய தேச வாசாதிகளும்-(ஆதி சப்தம் -நித்ய கைங்கர்யங்கள் ) உபாய கோடியிலே அன்வயிக்க வேணும் இறே -(என்ன எண்ணத்துடன் செய்தான் என்பதே பார்க்கக் வேண்டும் -சாஸ்திரம் விதித்து இருந்தாலும் உபாய புத்தி இல்லாமல் உபேய புத்தியால் அனுஷ்ட்டித்தால் இது தவறு இல்லையே )
————————————————-
அன்றிக்கே -இப் பிரவ்ருத்தி தான் -உபாய கோடியிலே அன்வயித்தது ஆகிலும் –
அநந்ய உபாயத்வத்துக்கு குலைதல் வரும் இத்தனை இறே -அது பிரேம பரவசருக்கு
அவத்யம் அன்று என்கைக்காக-பிரேம பரவசர் பிரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் –
சூரணை -90-
அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே –
அநந்ய உபாயத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
திருந்தவே தோற்கின்றேன் –
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் –
குதிரியாய் மடலூர்த்தும் -குஸ்தித ஸ்திரீயாய் நேர் வழியாக போகாமல் –
ஓதி நாமம் –
ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –
உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
(சாத்தியம் கைப்பட்ட பின்பும் சாதனம் கை விடாமல் இன்றும் மடலை அஞ்சலி ஹஸ்தங்களுக்குள் வைத்து சேவை சாதிக்கிறார் -உபாயாந்தரம் என்ற நினைவால் இல்லையே )
என்று –நோன்பு நோற்கை-மடல் எடுக்கை -முதலான வியாபாரங்களில் இழிகை-
அநந்ய உபேயத்வம் குலையும் படியானபிரவ்ருத்தி யாவது –
அத் தலைக்கு அதிசயத்தை விளைகையே புருஷார்த்தம் என்று இருக்கை தவிர்ந்து –
நமக்கே நலமாதலில் -என்றும்
தூ மலர் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
(பர கத அதிசயம் இல்லாமல் ) தனக்கு அதிசயம் தேட தொடங்குகை –
அநந்ய தைவத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதேன் –
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் -என்று காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி ஆராதிக்கை –
காணா நின்றோம் இறே -என்றது -பிராப்ய வஸ்துவின் ப்ராவண்ய அதிசயத்தாலே-
பேரளவு உடையவர்கள் பக்கலில் உண்டாக காணா நின்றோம் இறே என்கை –
முன்பு சொன்ன பிரவ்ருத்திக்கு உபாய கோட்ய அன்வயம் வஸ்துகதையா வரும் என்று
கொள்ளுகிற மாதரம் இறே -அங்கன் இன்றிகே நேரே உபாய புத்த்யா அனுஷ்டிதமானவை இறே இவை –
ஆகையால் பிரேம பரவசருக்கு இது அவத்யம் அன்று என்று கருத்து –
—————————————————–
இத்தனையும் கலக்கத்தாலே வந்தவை இறே -அஞ்ஞானம் மூலமாய் வருமவை ஒன்றும் ஆதரணீயம் அன்றே என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -91-
ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–
ஞான விபாகம் ஆவது -ஞானம் கனிந்த நலம் -என்கிறபடியே ஜ்ஞானத்தின் உடைய பரிபாக ரூபையான பக்தி –அதன் கார்யமான அஞ்ஞானம் ஆவது –அந்த பக்தி அதிசயத்தாலே வரும் ப்ராப்த அப்ராப்த விவேக அபாவம் -அத்தாலே வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் -அடிக் கழஞ்சு பெறும் -என்றது -அதி ச்லாக்யங்களாய் இருக்கும் என்றபடி –
கர்ம நிபந்தனமான அஞ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்கள் என்று கருத்து
——————————————–
ஆனாலும் இவ்வதிபிரவ்ருத்தி -இத் தலையில் பிரவ்ருத்தியில் ஒன்றையும் சஹியாத சித்த உபாயத்தின் கார்ய கரத்வத்துக்கு பிரதி பந்தகம் ஆகாதோ என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -92-
உபாய பலமாய்
உபேய அந்தர் பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –
உபாய பலம் -என்றது சித்த உபாயம் ஆனவன் பண்ணின கிருஷி பலம் என்றபடி –
மயர்வற மதி நலம் அருளினன் —பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்றும்- ஏவம் பூத பிரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனும் அவனே இறே – ஆகையால் பக்தி பாரவச்ய நிபந்தனமான இப் பிரவ்ருத்தியை -உபாய பலம் -என்கிறது –
உபேய அந்தர் பூதமாய் இருக்குமது -என்றது –பிராப்ய தசையில் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு -இத் தலைபடுகிற அலமாப்பு எல்லாம் -நம்மை ஆசைப்பட்டு இப்படி படப் பெறுவதே என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பு ஆகையாலே –
மடல் எடுக்கை தொடக்கமான இந்த பிரவ்ருத்திகள் அவன் முக மலர்திக்காக பண்ணும்
கைங்கர்யத்தோ பாதியாக கொண்டு உபேயத்தில் அந்தர் பூதமாய் இருக்கும் என்கை –
உபாய பிரதி பந்தம் ஆகாது -என்றது-ஏவம் பூதமானது -உபாயத்தின் உடைய கார்ய
கரத்வதுக்கு விலக்காகாது-என்றபடி-
——————————————-
இப்படி மடல் எடுக்கை முதலானவை சித்த உபாய பிரதி பந்தகம் ஆகாது என்னும் இடம் சொல்லி – அவை தனக்கு சித்த உபாய சாம்யத்தை விவஷித்து அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —
சாத்ய வஸ்துவே சாதனம் ஆகையாலே -சாத்தியத்துக்கு சமானம் என்றும் –
பல விளம்பத்தை சஹியாதே சீக்கிரமாக கார்யம் செய்து கொடுக்கும் என்று இறே –
இதர சாதனங்களில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்தியத்தில் பிராவண்யம் அடியாக இறே இந்த சாதக பரிக்ரகம் தன்னில் இழிகிறது –
அவை இரண்டும் இவற்றுக்கு உண்டு என்று கருத்து -எங்கனே என்னில் -மடல் எடுக்கை முதலான பிரவ்ருத்திகள் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே -கைங்கர்ய ரூப சாத்தியத்துக்கு சமானங்களாய் இருக்கை யாலும் – மடலூர்தல்-நோன்பு நோற்க்குதல்-செய்வன் என்று துணிந்த போதே – சர்வேஸ்வரன் த்வரிதது கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி பண்ணிக் கொடுக்கையாலே –பல விளம்ப அசஹங்களாய் இருக்கையாலும் –சித்த சாதனம் போலே இதர சாதனங்களில் காட்டிலும் ஏற்றத்தை உடையதாய் – சாத்ய ப்ராவண்யம் அடியாக இவற்றில் இழிகிற ஆகாரமும் ஒத்து
இருக்கையாலே -இத்தால்-சித்த உபாயத்தை ஒழியவும் இது தானே கார்யம் செய்யவற்று ஆகையாலே தத் பிரதிபந்தகம் என்னும் தூஷணம் இல்லை என்று கருத்து –
அன்றிக்கே -(பாவானத்வ மாத்திரம் இல்லாமல் போக்யமாயும் இருக்குமே இவை )
உபாய பிரதி பந்தகம் ஆகாது -என்றத்தை இன்னமும் முக பேதத்தால் உபபாதிக்கிறார் –
சாத்ய -இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே -அதாவது -பால் மருந்தாம் போலே
சாத்ய வஸ்து தானே சாதன ஆகையாலே-சாரச்யத்தில் சாத்யத்தோடு ஒத்து இருக்கும் என்றும் – சாத்தியத்தை பிராபிக்கும் அளவில் கால விளம்பத்தை பொறாது கடுக பிராபித்து விடும் என்றும் அன்றே சாதனாந்தரத்தில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம்-
இப்போது இது சொல்லுகிறது-இவ் ஆகார த்வயமும் சாத்ய ப்ராவண்ய ஹேதுவாம் என்று தோற்றுகைக்காக-இப்படி ஆகையாலே – தன் அடியாக விளைந்து -க்ஷண கால விளம்பம் பொறாமல் துடிக்கும் படி முறுகடி இடுகிற சாத்ய ப்ராவண்யம் அடியாக இறே மடல் எடுக்கை முதலான இஸ் சாதனத்தில் இழிகிறது என்கை –
ஆகையால் ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு செய்கிற இப் பிரவ்ருத்திகள் உபாயம் மேல் விழுந்து கார்யம் செய்கைக்கு உடலாம் இத்தனை அல்லது-தத் பிரதி பந்தகம் ஆகாது என்று கருத்து –
ஆக
இவனுக்கு வைதமாய் வருமது இறே த்யஜிக்க லாவது -சூரணை – 86-என்று தொடக்கி –
இவ்வளவு வர -பிள்ளை திரு நறையூர் அரையர் பிரவ்ருத்தி வ்யாஜத்தாலே –
பகவத் பிரபன்னனாய் இருந்தானே ஆகிலும் -உபேய பரன் ஆனவனுக்கு
தத் விஷய ப்ராவண்யத்தால் வரும் ஸ்வ தேக த்யாகம் துஸ் த்யஜம் –
உபாய புத்தா அனுஷ்டிதம் அல்லாமையாலே -அது தான் உபாய கோடியில் அன்வயியாது –
வஸ்துகத்யா அன்வயித்தது ஆகிலும் பிரேம பரவஸ்ருக்கு தோஷாயவன்று-
புத்தி பூர்வகமாக வனன்ய உபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள்
தெளிய கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே–இவை தான் அஞ்ஞான மூலமே ஆகிலும் பிரேம கார்யமான அஞ்ஞாநத்தாலே வந்தவை ஆகையாலே -அதி ஸ்லாக்யங்கள் –
சித்தோ உபய பிரதி பந்தகம் ஆகாது -அவ்வளவு அன்றிக்கே அத்தோடு ஒக்க
சொல்லலாம் படி அன்றோ இவற்றின் பெருமை என்று சொல்லுகையாலே
உபேய அதிகாரத்தில் -தன்னைப் பேணாமை -என்று சொன்ன இது -அநந்ய
சாதனத்வத்துக்கு சேருமோ என்னும் அதி சங்கா பரிஹாரம் பண்ணப் பட்டது –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply