ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-
அதிகாரி நிஷ்டா க்ரமம்–80-307
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்[படி பிரித்து அனுபவம் –
———————————
அனந்தரம் அதிகாரி சோதனம் பண்ணுகிறது -உபாயம் உபேயார்த்தம் ஆகையாலும் –
உபேயத்தில் உகப்பு என்றும் –பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம் -என்றும் – உபேய அதிகாரமும் கீழ் பிரசக்தம் ஆகையாலும் – த்வய நிஷ்டன் ஆன அதிகாரிக்கு -உபயமும் -அபேஷிதம் ஆகையாலும் -உபாய உபேய அதிகாரங்களில் இச் சேதனன் இன்னபடி இருக்க வேணும் என்னும் அத்தை தத் தந் நிஷ்டரை நிதர்சனம் ஆக்கி கொண்டு அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வயத்தாலே –
சூரணை -80-
உபாயத்துக்கு-பிராட்டியையும் திரௌபதியையும்-திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-இளைய பெருமாளையும் -பெரிய உடையாரையும் -பிள்ளை திரு நறையூர் அரையரையும்- சிந்தயந்தியையும் – போலே இருக்க வேணும் —
உபாயத்துக்கு -என்றது -உபாயத்துக்கு அதிகாரி யாம்போது என்ற படி–உபாய அதிகாரிக்கு -என்னவுமாம் –
அப்படியே உபேயத்துக்கு -என்றதுவும் –
உபாயத்தில் -என்ற பாடம் ஆன போது-உபய விஷயத்தில் -என்ற படி-
இப்படி மற்றையதுவும் –
(நிரபேஷ சித்த உபாயத்துக்கு கார்ய கரணத்தில் ஸஹ காரமும்-ஸ்வரூபம் பிரகாசிக்க உபகாரமும் வேண்டாம் –பெற்றுக் கொள்ள –அதிகாரியாம் போது -அத்யாஹாரம் –)
———————————————————–
அவர்களைப் போலே இருக்க வேணும் என்றதின் கருத்தை தர்சிப்பிக்கைகாக
அவர்கள் தங்கள் படிகளை அடைவே அருளிச் செய்கிறார் மேல் –
அதில் பிராட்டி உடையவும் -திரௌபதி உடையவும் படிகளை அருளிச் செய்கைக்கு உடலாக பிரதமத்தில் உபயருக்கும் வாசியை அருளிச் செய்கிறார் –
சூரணை -81-
பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –
அதாவது –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்த பிராட்டிக்கும் –
ரஷமாம் –என்ற திரௌபதிக்கும் தம்மில் வாசி –
சீதோ பவ -என்று நெருப்பை நீர் ஆக்கினால் போலே -தக்தோ பவ -என்று விரோதி வர்க்கத்தை பஸ்மம் ஆக்கி தன்னை ரஷித்துக் கொள்ள வல்ல சக்தி உண்டாகையும் –
ஸ்வ யத்னத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கிக் கொள்ளப் பார்த்தாலும்-(இச்சை இருந்தாலும் ) நோக்கிக் கொள்கைக்கு ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் என்கை-
————————————
ஏவம் பூதர் ஆனவர்கள் செய்தவை தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -82-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –
ஸ்வ சக்தி விடுகை யாவது -நாயகரான பெருமாள் ரஷிக்கும் அத்தனை அல்லது நம்முடைய சக்தியால் நம்மை ரஷித்து கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு நாசகம் என்று -ஸ்வ சக்தியை கொண்டு கார்யம் கொள்ளாது ஒழிகை –
அசந்தேசாத் து ராமஸ்ய தபசஸ் ச அனுபாலநாத் ந த்வாம் குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹா தேஜஸா என்றாள் இறே–(ராமன் இடம் அப்படி செய்தி வர வில்லை -தபஸ் கைக் கொண்டவள் –பாரதந்தர்யம் ஆகிய தபஸ் உண்டே இவளுக்கு -12-வித தபஸ் -நியாசம் மிக உயர்ந்தது நாராயண உபநிஷத் சொல்லும்- -ஸூ சம்பந்த தியாக விஸிஷ்ட பர சம்பந்தம் விசுவாசித்து இருப்பதே நியாசம் –ஸூ ரக்ஷண அனர்ஹத்வ ரூப -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -தானே பாரதந்தர்யம் –தேஜஸால் எரிக்க முடியும் -ஆனாலும் செய்ய வில்லை -இந்த இரண்டு காரணங்களால் -யாக தீக்ஷையால் விஸ்வாமித்திரர் தம் சக்தியைக் காட்டவில்லை யாக சம்ரக்ஷணத்தில் )
லஜ்ஜையை விடுகையாவது -துச்சாசனன் சபாமத்யே துகிலை உரிக்கிற அளவில் –
லஜ்ஜா விஷ்டையாய் கொண்டு -தானொரு தலை இடுக்குகை அன்றிக்கே -இரண்டு கையும் விடுகை -பேர் அளவு உடையாள் (நிரதிசய ஞானம் உடைய –ராமன் இளைய பெருமாள் திரு உள்ளம் அறிந்தவள்-கங்கை போல் கலங்காதவள் )ஆகையாலே- பிராட்டிக்கு -பெருமாளே ரஷகர் -என்று விஸ்வசித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம் -அத்தனை அளவு இன்றிகே இருக்க செய்தே – மகா ஆபத்து தசையிலே– -இவ்வளவிலே கிருஷ்ணனே ரஷகன் -என்று மகா விசுவாசம் பண்ணி -மகா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இறே அரிது –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் -அதாவது – ஸ்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வ வியாபாரங்களை விட்டான் – ஒரு சேவகனுடைய நாயை -ஒரு சேவகன் அடிக்க -அவன் அது பொறாமல் -அடித்தவனோடே எதிர்த்து பொருது -அவனையும் கொன்று -தானும் குத்தி கொள்வதாக- இருக்கிற படியைக் கண்டு -ஒரு சூத்திர சேதனன் தந் அபிமானத்தில் ஒதுங்கினது என்னும் இவ்வளவுக்காக தன்னை அழிய மாறின படி கண்டால்-பரம சேதனன் அபிமானத்தில் ஒதுங்கினால் அவன் என் படுமோ என்று -ஸ்வ ரக்ஷண வியாபாரங்களை விட்டு அந்த நாயோபாதி யாகத் தம்மை அனுசந்தித்துக் கொண்டு அப்போதே வந்து திரு கண்ண மங்கையில் பத்தராவி திரு வாசலில் கைப் புடையிலே புகுந்து கண் வளர்ந்தார் என்று பிரசித்தம் இறே-
———————————————————————–
இனி உபேய அதிகாரிகளில் பிரதானரான -இளைய பெருமாள் படியை விஸ்தரேண அருளிச் செய்கிறார் –
சூரணை-83-
பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றைப் பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் கொற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –
அதாவது –
பசியராய் இருப்பவர் -தங்கள் பசியின் கனத்தாலே -இதுக்கு
முன்பு ஆக்கின சோறும் -இப்போது ஆக்குகிற சோறும் -எல்லாம் நாமே உண்ண வேணும்
என்று மனோ ரதிக்குமா போலே -பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தரான இளைய பெருமாள் -படை வீட்டில் நின்றும் புறப்படுவதற்கு முன்பே கூடப் போவதாக உத்யோகிக்கிற படியைக் கொண்டு -நீர் நில்லும் -என்று நிர்பந்தித்து அருள –குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் நேக வித்யதே க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்பதே -என்றும் –
கங்கை கடந்து ஏறின அன்று மீள விடுகைக்கு உறுப்பாக அவர் அநேகம் அருளிச் செய்ய-
ந ச சீதா த்வயா ஹீனா ந சாஹமபி ராகவ -முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோ த்ருத்ருதவ் -என்றும் சொல்லுகையாலே – பிரியில் தாம் உளராக மாட்டாமையை முன்னிட்டு -குருஷ்வ மாம் -என்று அனந்தரத்தில்-
தனுராதாய சகுணம் கனிதர பிடகாதர அக்ரதாஸ் தே கமிஷ்யாமி பந்தா நமனு தர்ஸயன் ஆஹாரிஷ்யாமி தே நித்யம் மூலாநிச பலாநிச வந்யாணி யாநி சாத்யணி ஸ்வ ஆகாராணி தபஸ்வினாம் -என்கையாலே-ஸ்வ சேஷ அநு குணமாக -அடிமை செய்ய வேணும் -என்றும்
தத் அனந்தரத்திலே-பவாம்ஸ்து சஹா வைதேஹ்யா கிரிசா அனு ஸூரம்ஸ்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் ச ச -என்கையாலே –
அது தன்னிலும் இன்ன இன்னடிமை என்றுஒரு நியதி இன்றியே எல்லா அடிமையும் செய்ய வேணும் -பஞ்சவடியில் எழுந்து அருளின போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு -பிரதேசத்தைப் பார்த்து -பர்ண சாலையை சமையும் என்ன-
ஏவ முக்தஸ் து ராமேண லஷ்மணஸ் சம்யதாஞ்சலி சீதா சமஷம் காகுத்ஸ்மிதம் வசதமபிரவீத் -என்று நம் தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை வைத்த போதே -பெருமாள் நம்மை கை விட்டார் என்று விக்ருதராய் -பிராட்டி முன்னிலையாக கையும் அஞ்சலியுமாக நின்று –
பரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேச க்ரியதாமிதி மாம் வத-என்கையாலே அடிமை செய்யும் அளவில் -ஸ்வாதந்த்ர்யம் ஆகிற தோஷம் கலசாதபடி -உசித கைங்கர்யங்களிலே ஏவிக் கொள்ள வேணும் என்று -பிரார்த்தித்தார் -என்கை –
படை வீட்டில் -இத்யாதி -திருப் படை வீட்டில் எழுந்து அருளி வந்து புகுந்து திரு அபிஷேகம்
பண்ணி அருளின போது -தம்மோடு கூட அடிமை செய்கைக்கு ஒருவரும் இல்லாத ஒரு
தனிக் காட்டில் -தாமே அடிமை செய்து -கைங்கர்ய அபிநிவேசத்தை பெருக்குகையாலே –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினவன் ஒப்பூண் உண்ண மாட்டாதவன் போலே –
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமானவர்களோடு ஒக்க தாமும் ஒரு அடிமை செய்து நிற்க மாட்டாதே –திரு வெண் கொற்றக் கொடியை எடுக்கை -திரு வெண் சாமரம் பரிமாறுகை –
ஆகிய இரண்டு அடிமையை -ஏக காலத்தில் செய்தார் -என்கை -இந்த விருத்தாந்தம் தான் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை –சத்ர சாமர பாணிஸ் து லஷ்மண அனு ஜகாமாகா–அயோ -16 என்கிறது ஸ்ரீ ராமாயணம் அன்றோ என்னில் -காட்டுக்கு எழுந்து அருளுவதற்கு முன்னே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து -தம்முடைய திவ்ய அந்தபுரத்தில் நின்றும் புறப்பட்டு -சக்கரவர்த்தி திரு மாளிகையை நோக்கித் திரு தேரில் ஏறி பெருமாள் எழுந்து அருளின போது -இளைய பெருமாள் செய்த விருத்தாந்தமாக திரு அயோத்யா காண்டத்தில் சொல்லப் பட்டது ஆகையாலே -இவ்விடத்துக்கு அது சேராது –
ஆனால் இவர் என் கொண்டு இப்படி அருளிச் செய்தார் என்னில் –பாத்ம புராணம் பிரக்ரியையாலே அருளிச் செய்தார் –
அத தஸ்மின் தினே புண்யே சுப லக்னே சுன்விதே ராகவஸ்ய அபிஷேகார்த்தம் மங்களம் சக்ரிரே ஜனா -என்று தொடங்கி பரக்க சொல்லிக் கொண்டு வந்து –மந்திர பூத ஜலைஸ் சுத்தைர் முநயஸ் சம்ஸ்ரித வ்ரதா- ஜபந்தோ வைஷ்ணவான் ஸூக்தான் சதுர் வேத மயான் ஸூபான் அபிஷேகம் ஸூபஞ்ச்சக்று காகுஸ்தம் ஜகதாம் பதிம் தஸ்மின் ஸூபதமே லக்னே தேவ துந்துபயோ திவி நிநேது புஷ்ப வர்ஷாணி வவர்ஷூச்ச சமந்ததா திவ்யாம்பரைர் பூஷணைச் ச திவ்யகாந்த் தானுலே பனை புஷ்பைர் நானா விதர் திவ்யர் தேவ்யா சஹா ரகூத்வஹா – அலங்க்ருதஸூ ச சுசுபே முநிபிர் வேதபாரகை சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் லஷ்மணஸ் ததா பராஸ்வே பரத சத்ருனவ் தாளவ்ருந்தம் விவேஜது
தர்ப்பணம் ப்ரதவ் ஸ்ரீ மான் ராஷசேந்தரோ விபீஷண ததார பூர்ண கலசம் ஸூக்ரீவோ வானரேஸ்வர ஜாம்பவாம்ஸ் ச மகாதேஜோ புஷ்பமாலாம் மநோ ஹரம்
வாலி புத்ரஸ்து தாம்பூலம் ச கர்ப்பூரம் ததவ் பிரியாத் ஹனுமான் தீபிகாம் திவ்யம் ஸூஷேணஸ்து த்வஜம் சுபம் பரிவார்யா மகாத்மானாம் மந்த்ரினஸ் சமுபாசிரே –என்று
பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாம் அத்யாத்தில்-சொல்லப் பட்டது இறே-சத்ரஞ் ச சாமரம் திவ்யம் த்ருதவான் -என்றது தோற்ற இறே –திரு வெண் கொற்றக் குடையும் திரு வெண் சாமரத்தையும் தரித்து -என்று அருளிச் செய்தது –
(ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டம் சத்ருக்கனன் பிடித்ததாக சொல்லி —
சத்ர- எடுத்துக் கை நீட்டிக் கொடுப்பதாக -உள்ளது -த்ருதவான்-இல்லையே -)
—————————————
சூரணை -84
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள் –
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை பெரிய உடையார் –என்று ஆய்த்து நம் முதலிகள் அருளிச் செய்தது –
இவர் தாம் -பஞ்சவடியில் பெருமாள் எழுந்து அருளி -தம்மை அங்கீகரித்து –
இஹா வத்ச்யாமி சௌமித்ரே சார்த்த மேதென பஷிணா-என்றவன்று தொடங்கி
திருவடிகளுக்கு மிக்கவும் பரிவராய் -பெருமாள் எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஆஸ்ரமத்துக்கு ஆசன்னமாக வர்த்தியா நிற்கச் செய்தே -அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியைப் பிரித்துக் கொண்டு போக- அப்போது பிராட்டி இவரை ஒரு வ்ருஷத்தின் மேல் கண்டு -என்னை இவன் இப்படி அபஹரித்து போகா நின்றான் -என்று இவர் பேரைச் சொல்லி கூப்பிட -உறங்குகிறவர் இந்த ஆர்த்த த்வனியைக் கேட்டு உணர்ந்து -ராவணன் கொண்டு போகிற படியைக் கண்டு -உனக்கு இது தகாது காண்-என்று தர்ம உபதேசம் பண்ணின அளவில் அவன் கேளாமையால்-நம் பிராணனோடே இது கண்டு இருக்கக் கடவோம் அல்லோம் -யுத்தம் பண்ணி மீட்குதல் -இல்லையாகில் முடிதல் செய்யக் கடவோம் -என்று அத்யவசித்து -அதி பல பராக்ரம் ஆகையாலே அவனோடே மகா யுத்தத்தைப் பண்ணி -அவன் கையாலே அடி பட்டு -விழுந்து தந் திரு மேனியை விட்டார் -இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ குடும்பமாக -திரு நாராயண புரத்தில் வேத நாராயண பெருமாளை சேவிக்க சென்று புகுந்த அளவில் -பர சமயிகள் அந்த கோவிலிலே அக்னி பிரஷேபத்தைப் பண்ணி உள்ளு நின்றார்கள் எல்லாரும் புறப்பட்டு ஓடி போகச் செய்தே -அந்த எம்பெருமான் திரு மேனிக்கு அழிவு வருகிற படியைக் கண்டு சகிக்க மாட்டாதே பிரேமாதிசயத்தாலே -தாமும் ஒக்க முடிவதாக அத்யவசித்து இவர் நிற்க்கையாலே –
பிள்ளைகளும் இவரை விட்டுப் போகோம் என்று நிற்க -அவர்களும் தாமும் கூடுவதுக்கு உள்ளே நின்று திரு மேனியை விட்டார் என்று பிரசித்தம் இறே –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று -அதாவது –
காசித் ஆவச தஸ்யாந்தே ஸ்தித்வ த்ருஷ்ட்வா பஹிர் குரும் தன் மயத்வேன கோவிந்தம் தத்யவ் மீலித லோசன தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததாதத ப்ராப்தி
மகா துக்க விலீ நாசேஷ பாதகா – சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருஸ் ஸ்வா சதயா முக்திம் கதாநயா கோப கன்யகா-என்கிறபடியே
திரு குரவை யினன்று -திரு குழலோசை கேட்டு -ஸ்ரீ பிருந்தாவனம் ஏறப் போவதாக புறப்பட்ட அளவிலே -குரு தர்சனத்தால் போக மாட்டாமல் நின்று -கிருஷ்ணனை த்யானம் பண்ணி -தத் கத சித்தை யாகையாலே வந்த நிர்மல சுகத்தாலும் -தத் அபிராப்தி நிபந்தனமான நிரவதிக துக்கத்தாலும் –ப்ரஷீண அசேஷ புண்ய பாபையாய்-
தத் ஸ்மரணம் செல்லா நிற்க -தத் பிராப்த்ய அலாப க்லேசத்தால் தரிக்க மாட்டாமல்
மூச்சு அடங்குகையாலே -இவளுக்கு தான் உபேஷிக்க வேண்டாதபடி தேஹம் தன்னடையே விட்டுக் கொண்டு நின்றது -என்கை –
———————————————
ஆக -இப்படி நிதர்சன பூதர் படிகளைச் சொல்லி -இனி இவர்களைப் போலே இருக்க வேணும் என்றதின் கருத்தை அருளிச் செய்கிறார் –
சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னைப் பேணாமையும்
தரியாமையும்
வேணும் —
அதாவது –
உபாயத்துக்கு அதிகாரி யாம் போது –தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக் கொள்கைக்கு உறுப்பான சக்தியும் -தான் பரிகிரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகள் ஆனவற்றை விடும் அளவில்-நாட்டார் சிரிக்கும் அதுக்கு கூசும் லஜ்ஜையும் – தந் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ யத்னமும் கை விட வேணும் —
உபேயத்துக்கு-அதிகாரி ஆகும் போது-சேஷியை பிரியாது நின்று -எல்லா அடிமையும் அவன் ஏவின படி செய்ய வேணும் என்ற பிரேமமும் -அத் தலைக்கு ஒரு தீங்கு வரில் அது கண்டு ஆற்ற மாட்டாமல் தந் உடம்பை உபேஷிக்கையும் -தத் விக்ரஹ அனுபவ அலாபத்தில் தரித்து இருக்க மாட்டாமல் மூச்சு அடங்கும்படி யாகவும் வேணும் என்றபடி –
ஆகையாலே அவர்களைப் போலே இருக்கை யாவது -இவ் வதிகாரங்களை உடையார் ஆகி-என்று கருத்து –
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply