ஸ்ரீ வசன பூஷணம்- சூர்ணிகை –5/6..-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

முதல் பிரகரணம்-புருஷகார வைபவம்

முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே -வேத தத் அர்த்த தத் உப ப்ரும்ஹணங்களை
சாகல்யேன உபாதானம் பண்ணி -அந்த வேதத்தினுடைய பாக விபாக தத் உப ப்ரும்ஹண
விபாகங்களையும் பண்ணினாரே ஆகிலும் -சேதனருடைய உஜ்ஜீவனத்துக்கு அபேஷித அர்த்தங்களை அருளிச் செய்ய இழிந்தவர் ஆகையாலும் -அது தான் பூர்வ பாக வேத்யம் அன்றிக்கே -உத்தர பாக வேத்யம் ஆகையாலும் -பூர்வ பாகத்தில் முமுஷுவுக்கு ஞாதவ்ய அம்சம் உள்ளதும் -உத்தர பாக அர்த்தங்களான ஸ்வரூப  உபாய புருஷார்த்த பிரதிபாதன ஸ்தலங்களிலே -தத் தத் அனுகுண த்யாஜ்யுபாதேய கதன முகேன ஞாபிகலாய் இருக்கையாலும் -உத்தர பாக அர்த்த நிர்ணயத்திலே – ப்ரவர்த்தராய் -அது தன்னிலும் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவத் உபாசானாதிகளையும் பரக்க நின்று பிரதிபாதிக்கிற இடங்களில் -சார அசார விவேக பூர்வகமாக தாத்பர்யங்களை சங்க்ரகித்து –
சம்சய விபர்யாயம்  அற சேதனருக்க்கு பிரபத்தி விஷயமாம் படி அருளிச் செய்து செல்லுகிறார் மேல் –
அதில் பிரதமத்திலே உத்தர பாக உப ப்ரும்ஹண த்வயத்தில் பிரபலமாக சொன்ன இதிகாசங்களில் வைத்து கொண்டு ஸ்ரீ ராமாயணத்தினுடைய பிராபல்யத்தை பிரகாசிப்பியா நின்று கொண்டு தத் பிரதிபாத்ய விசேஷத்தை அருளி செய்கிறார் –
சூரணை -5
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –

ஸ்ரீ ராமாயணத்துக்கு இதிஹாச ஸ்ரேஷ்டத்வமாவதுவால்மீகயே மகர்ஷயே சந்தி தேச
ஆசனம் தத பிராமணா சமனுஜ்ஞாதஸ் சோப்யு பாவிசத சனே-என்று சகல லோக பிதா மஹானான பிரஹ்மாவாலே சம்பாவிதனான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரநீயதம் ஆகையாலும் –ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்று -பிரஹ்மா அநுக்ரகிக்கையாலே இதில் சொன்ன அர்த்தங்களை எல்லாம் மெய்யாக கடவதாகையாலும் –தாவத் ராமாயண கதா லோகேஷூ பிரசர்ஷயதி -என்று சகல லோக பரிக்ரகம் உண்டாகையாலும் -இதிஹாசாந்தரங்களைப் பற்ற பிரபல பிரமாணமாய் இருக்கை-

இது தன்னை நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தத்தவ த்ரய பிரபந்தத்தில் பிரமாண அதிகாரத்திலே அருளிச் செய்தார் இறே–இன்னமும் வேத வேத்யே பரே பும்சி-இத்யாதிப் படியே சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் சம்சாரி சேதன ரஷன அர்த்தமாக இதர சஜாதீயனாக வந்து அவதரித்தால் போலே -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான வேதமும் -தத் அவதார குண சேஷ்டித பிரதிபாதன முகேன-தத் ஆஸ்ரயண ருசியை சம்சாரிகளுக்கு உண்டாக்கி ரஷிக்கைகாக ஸ்ரீ ராமாயண ரூபேண அவதரித்தது என்று சொல்லப் படுகையாலும் -இதனுடைய ஏற்றம் சம்ப்ரதிபந்தம் –
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளிச் செய்தது – அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக -தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான் சிறை இருந்தது தயா பரவசையாய் இறே –பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே – இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே – நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளிச் செய்தது – அவருடைய திவ்ய ஸூக்தி இறே இவர் இப்படி அருளிச் செய்கைக்கு மூலம் –சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே –ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது -கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –சீதோ பவ –என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளிச் செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது  என்னும் இடம் –காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –ஸ்ரீ மத் ராமாயண  மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர்

அநந்தரம் மகாபாரத பிரதிபாத்யத்தை அருளி செய்கிறார் –மகா பாரதத்தால் என்று தொடங்கி -க்ருஷ்ணத் வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும் கோக்யந்தோ புவி மைத்ரேய மகாபாரத க்ருத் பவேத் ஏவம் விதம் பாரதந்து  ப்ரோக்தம்  யேன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபி மகா முனி –என்று பகவத் ஆவேச அவதாரமாய்-சஹோவாச வியாச பாராசர்ய-என்று ஆப்த தமனாக பிரசித்தமாய் இருந்துள்ள -ஸ்ரீ வேத வியாச பகவானாலே –வேதான் அத்யாபயாமாச ,அகா பாரத பஞ்சமாத் -என்கிறபடி –
பஞ்சம வேதமாய் -பரணீ தமாய் -அநேக புராண பிரசச்தமாய் இருந்துள்ள மகா பாரதமும் ஸ்ரீ ராமாயணத்தோ பாதி பிரபல பிரமாணம் -இதுவும் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தாமே அருளிச் செய்தார் –

பெரிய பட்டரும் ஸ்ரீ சஹஸ்ரநாம பாஷ்ய உத்போதகத்தில் ஸ்ரீ இராமாயண வந் மகா பாரதம்  சரணம் –என்று அருளிச் செய்தார் இறே-சர்வேஸ்வரன் -என்னாதே -தூது போனவன் -என்றது அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரத்தை பிரகாசிப்பிக்கைக்காக –தேவதேவனானவன் தன் பெருமையையும் -செய்கிற தொழிலின் தண்மையையும் -பாராதே பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்தது–ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாய் இறே -இது தான் இவனுடைய ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதாக நீர்மைக்கு
உடலாய் இருந்துள்ள வாத்சல்யாதிகளுக்கு எல்லாம் பிரகாசமாய் இருப்பது ஓன்று இறே
இந்த குண ஆதிக்யத்திலே ஈடு பட்டு இறே –இன்னார் தூது என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்றும்-குடை மன்னர் இடை நடந்த தூதா –பெரிய திரு மொழி -6-2-9–என்றும் –
திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தது  அந்த திவ்ய ஸூக்தி இறே இவர் இப்படி அருளிச் செய்கைக்கு மூலம் -பேசிற்றே பேசுகை இறே இவர்களுக்கு எற்றம் –
தூது போனது தண்மை ஆவது -கர்ம வஸ்யதை அடியாக வரிலே இறே —ஐச்சமாக ஆஸ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சி எல்லாம் ஏற்றத்துக்கு உடலாய் இறே இருப்பது -ஸ உச்ரேயான் பவதி ஜாயமான -என்று பரார்தமாக பிறக்கையாலே நிறம் பெரும் யென்று ஸ்ருதி சொன்ன இது பரார்தமாக தன் இச்சையிலே செய்யும் அவை எல்லாம் இவனுக்கு தேஜஸ் கரம் என்னும் அதுக்கு உப லஷணம் இறே –இவன் செய்த தூத்யத்தை மாந்த்ய ஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலை யானவர்கள் இத்தனை -அறிவில் தலை நின்றவர்கள் -எத்திறம் -என்று மோகிக்கும் படி இறே இருப்பது -இப்படி இருந்துள்ள
இந் நீர்மையின் ஏற்றத்தை -வெளி இடுகைக்காக ஆய்த்து இவர் -தூது போனவன் -என்று அருளிச் செய்தது -மகா பாரதம் எல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தாத் பர்யம் ஆகையாலே இறே மகாபாரத கதை சொல்ல தொடங்குகிறவன் -நாராயண கதாம் இமாம் -என்றது –
ஆக பிரபந்த த்வ்யத்துக்கும் பிரதான பிரதிபாத்யங்கள் என்னது என்னும் இடம் பிரகாசிக்க பட்டது –

———————————————-

உபய ப்ரக்மன முகேன -வேதார்த்த தாத்பர்யத்தை நிஷ்கரித்து -உஜ்ஜீவனதுக்கு உடலான வற்றைச் சொல்லுவதாக இறே உபக்ரமித்தது -அதில் இப்போது சொன்ன இவற்றால் வேதாந்தத்தில் எவ் அர்த்தங்கள் சொல்லிற்று ஆய்த்து -என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை-6
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

அதாவது –
சிறை இருந்தவள் ஏற்றம்-தூது போனவன் ஏற்றம் -என்ற இவை இரண்டாலும் அபராத பூயிஷ்டரான சேதனருக்கு ஆஸ்ரயநீயை யாம் அளவில் –அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் -க்ருபாதிகளாலும் -நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -வந்து ஆஸ்ரயிகலாம் படி யாய்-அபராதங்களை பார்த்து சீறி –ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும் –
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும் உபாய பூதனானவன் வைபவமும் சொல்லிற்று ஆய்த்து என்கை-
புருஷகாரம் -என்றும் -உபாயம் -என்றும் -இவற்றை நிரூபகமாக அருளிச் செய்தது –
பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -அசாதாரணம் என்று தோற்றுகைக்காக-
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் -என்றும் –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன
மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன
மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்றும் பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளிச் செய்தான் இறே –
மற்றை பிராட்டிமாருக்கும் ஸூரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற புருஷகாரத்வம் இறே உள்ளது -இவளைப் போலே ஸ்வதஸ் சித்தம் அன்றே -ஆகை இறே –
ஏதத் சாபேஷ சம்பந்தா தன்யேஷா மாமலாத்மனாம்
தேவி ஸூரி குரூணாஞ்ச கடகத்வம்  நது ஸ்வத-என்று தீப சங்கரத்திலே ஜீயர் அருளிச் செய்தது
உபாயத்வமும் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமாக சொல்லப் படுகிற
அவனுக்கே ஸ்வதஸ்  சித்தமாய் -ததீயருக்கு ததா சித்தி அடியாக வருகிறது இறே உள்ளது –
ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -நிரூபகமாக
தட்டு இல்லை -இவ் அர்த்தத்தை வெளி  இடுகைக்கு ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –
இப்படி உப ப்ரஹ்மணமான பிரபந்த த்வயத்தாலும் பிரதி பாதிக்க படுகிற புருஷகாரத்வமும் உபாயத்வமும் உப ப்ரும்ஹ்யமான  வேதாந்தத்தில் உக்தமான ஸ்தலம் எது என்னில் கடவல்லி உபநிஷத் சித்தமான த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே உபயமும் சேர உக்தம் இறே இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம் உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணத்துக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் –அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை அன்றிக்கே -கேவல மார்த்தவமேயாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும் குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்-பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு க்ரூர தண்டங்களைப் பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி இருக்கும் ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களை அடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன்  அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading