ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–2/3/4–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

இவற்றில் எத்தாலே எந்த பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-2
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக்  கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

உப ப்ரும்ஹ்யமான  வேதத்துக்கு பிரதிபாத்ய அர்த்த விசேஷத்தாலே இறே பாத பேதம் உண்டாய்த்து –அப்படியே உப ப்ரும்ஹணங்களாயும்  பிரதிபாத்ய விசேஷத்தாலே பேதம் உண்டு இறே –அதில் ஸ்ம்ருதிகள் பூர்வ பாக உபப்ரும்ஹணங்களாயும் -இதிகாசாதிகள்  உத்தர ப்ரும்ஹணங்களாயும் –நிர்மிதங்கள் ஆகையாலே -தத் உபப்ரும்ஹணங்களாயும்   கொண்டே தத் பாக அர்த்தம் நிச்சயம் பண்ண வேண்டி இறே இருப்பது -அத்தைப் பற்ற ஆசார  வ்யவஹார ப்ராயசித்தாதிகளுக்கு பிரதிபாதங்களான இதிஹாச புராணங்கள் ஆகிற மற்றை இரண்டாலும் -ப்ரும்ஹ பிரதிபாதகமான உத்தர பாகத்தில் அர்த்தம் நிச்சயம் பண்ணக் கடவது என்கிறார் –
இப்படி உபய விதமான உப ப்ரும்ஹணங்களாயும்  உபய பாக அர்த்தத்தையும் அறுதி இடுகை யாவது –அநதீத சாகாந்தரங்களுக்கும் பிரதிபாதகங்கள் ஆன இவற்றாலே அதீத சாகார்த்தங்களை அபேஷித விசேஷங்கள் கூடே நிச்சயிக்கை -ஸ்ம்ருதிகள் தன்னிலே பிரம பிரதிபாதனமும் -இதிகாசாதிகளிலே கர்ம பிரதிபாதனமும் உண்டாய் இருந்ததே ஆகிலும் –ஸ்ம்ருதிகளில் பிரம பிரதிபாதனம் கர்மங்களினுடைய தத் ஆராதன
ரூபத்வ ஞாபன அர்த்தமாகவும் -இதிகாச புராணங்களில் கர்ம பிரதி பாதனம் கர்மங்களினுடைய உபாசன அங்கத்தவ ஞாபன அர்த்தமாகவும் ஆகையாலே -இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை –
பராயேண பூர்வ பாகர்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத
இதிகாச புராணாப்யாம் வேதந்தார்த்த பிரகாஸ்யதே -என்னக் கடவது இறே –

———

உத்தர பாக உப ப்ரஹ்மண த்வ்யத்துக்கும் தாரதம்யம் உண்டோ -தன்னில் ஒக்குமோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் மேல் –
அன்றிக்கே –
ஏக பாக விஷயமான இரண்டு உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னத்துக்கு பிராபல்யம் என்னும் அத்தையும் தர்சிப்பிக்க வேணும் என்று தாமே திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் ஆகவுமாம்

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இவை இரண்டிலும் என்று தொடங்கி -அதாவது -ஸ்ரேஷ்ட பாக உப ப்ரும்ஹண தயா வந்த சேர்த்தியை உடைத்தான இவை இரண்டிலும் வைத்து கொண்டு – ப்ரும்ஹணயத்தால் வந்தால் புராணத்திலும் இதிகாசத்துக்கு பிராபல்யம் உண்டு என்கை-புராணத்தில் காட்டில் இதிகாசத்துக்கு பிராபல்யம் –பரிக்ரக அதிசயம் -மத்யஸ்ததை-கர்த்துராப்த தமத்வம் -ஆகிய இவற்றாலே –
இவற்றில் பரிக்ரகம் ஆவது –சாஸ்திர பரிக்ரகம் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே  தசரதாத்மஜே  வேத ப்ராசேதசா தாசீத் சாஷாத் ராமாயணாத்மனா-
மதி மந்தாநமாவித்ய யேனாசொவ் ஸ்ருதி சாகராத் ஜகத்திதாய ஜநிதோ மகாபாரத சந்த்ரமா வியாச வாக்ய ஜலவ்கேன குதர்மத ருஹாரினா வேத சைலா வதீர்னே ந நீர ஜஸ்கா மஹி க்ருதா பிபேதி  கஹனாச் சாஸ்த்ரான் நரஸ் தீவ்ராதி  வவ்ஷதாத்  பாரதஸ் சாஸ்திர சாரோயம் அத காவ்யாத்மனா கருத விஷ்ணவ் வேதேஷூ வித்வத்ஸூ குருஷூ பிராமணேஷூ ச பக்திர் பவதி கல்யாணி பாரததேவ தீமதாம் -இத்யாதிகளாலே புராண விசேஷங்களிலே இதிஹாசம் ஸ்லாகிக்க படா நின்றது இறே –
மத்யஸ்தை யாவது – யஸ்மின் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் பிராமணா புராதஸ்ய தச்யஸ்து மகாத்மியம் தத் ஸ்வரூபென வர்ண்யதே-என்று சர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் பிரம்மாவாய்-அவனுக்கு யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தால் யாதொரு குணம் விஞ்சி இருந்தது -அந்த குண அநு குண தேவதையினுடைய  மகாத்ம்யத்தை புராணத்திலே சொல்லுகையாலே பஷா பாதிகளாய் இருக்கும்
புராணங்கள் போல் அன்றிக்கே -லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயித்திலே அதிக்ருதங்கள் ஆகையாலே ஒரு விஷயத்திலும் பஷ பாதம் இன்றிக்கே இருக்கை–
கர்த்து ஆப்த தமத்வமாவது -பிரபன்ன கர்த்தா வானவன் –யாதா தர்சன
சாமர்த்தத்தையும் யதா த்ருஷ்டார்த்த வாதித்வத்தையும் மிகவும் உடையவனாய் இருக்கை –
அதேதிஹாச புராண யோரிதி ஹாசா பலியாம்ச குத தேஷாம் பரிஹ்ரகாதி குத தேஷாம்
பரிக்ரஹாதி சயாதிகளாலே புராண இதிகாசம் பிராபல்யம் சாமான்யேன– தத்வ நிர்ணயத்திலே உய்யக் கொண்டாராலும் –மகா பாரதம்ஹி பரிக்ரஹ விசேஷாவசிதம்-என்று தொடங்கி-தர்மே சார்த்தேச காமேச மோஷச பரதர்ஷப  யதிஹாச்தி ததனயத்ரா யன் நேஹாச்தி ந தத் க்வசித் – இதி லௌகிக வைதிக சகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேன க்வசிதபி  அபஷ பாதித்வாச்ச புராணேப்யோ பலவத்தரம் -என்னும் அது அளவாக –
பரிக்ரஹ அதிசயத்தாலும் -மத்யஸ்தை யாலும் -புராணங்களில் காட்டில் இதிஹாச விசேஷமான மகாபாரதத்துக்கு உண்டான பிராபல்யம் ஸ்ரீ ஸஹஸ்ர நாம பாஷ்யத்திலே பட்டராலும் பிரதிபாதிக்கபட்டது இறே –

————–

அதின் பிராபல்யத்தை இசைவிக்கிறார் –

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

அந்த ப்ராபல்யத்தாலே –இதிஹாச புராணம் பஞ்சமம் –இதிஹாச புராணாப்யாம்-என்றும் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே இரண்டையும் சேரச் சொல்லுகிற அளவில் -இதிஹாசமானது புராணத்துக்கு முன்னே சொல்லப் பட்டது என்கை –
த்வந்த்வ  சமாசத்திலே -அல்பாஸ்தரமாதல் -அப்யர்ஹிதம் ஆதல் -இறே முற் படுவது –
அதில் அல்பாஸ்தரம் அன்றியிலே இருக்க அது முற் பட்டது அப்யர்ஹிதத்தாலே இறே –
இந்த அப்யர்ஹிதத்துக்கு மூலம் அதி பிராபல்யம் என்று கருத்து –
அதவா –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே என்று -பாக த்வய   உபப்ரும்ஹணங்களாயும் சமஸ்தமாக சொல்லுகிற இடத்தில் –
இதிஹாசஸ் ச புராணா நிச இதிஹாச புராணா நி  சம்ர்தயஸ் ச இதிஹாச புராண நிச ஸ்மர்த்தீதிஹாச புராணாநி -என்று இப்படி சமாச விவஷை ஆகையாலே -அல்பாஸ்தரமான புராணத்துக்கு முன்னே இதிகாசத்தை அருளிச் செய்ததின் கருத்தை -இவை இரண்டிலும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்–
இந்த யோசனையில்-அத்தாலே அது முற் பட்டது -என்கிற இதுக்கு அந்த ப்ராபல்யத்தாலே –
இதிஹாச புராணங்களாலே -என்கிற இடத்தில்  புராணத்துக்கு முன்னே இதிகாசம் சொல்லப் பட்டது என்று பொருளாகக் கடவது –
ஆக
வேதார்த்தம் நிர்ணயம் பண்ணும் அளவில் தத் உப  ப்ரும்ஹணங்களாலே பண்ண வேணும் என்றும் –அதில் பூர்வ உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாயும்  இன்னது என்றும் –உத்தர பாக உப ப்ரும்ஹணங்களாலே இதிஹாச புராணங்களில் இதிகாசம் பிரபலம் என்றும் அருளிச் செய்கையாலே மேல் தாம் அருளிச் செய்ய புகுகிற அர்த்தங்களுக்கு பிரமாணம் ஒருங்க விட்டு அருளினார் ஆய்த்து –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading