ஸ்ரீ திரு விருத்தம் -43-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து
அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட
காட்டவே கண்ட பாதம் போல்
கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –
மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார்
தடம் கண்கள் கீழே
இதில் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் )

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –
தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

கண்ணும் செம் தாமரை –
எம்பிரான் தடம் கண்கள் என்று கண் அழகை அனுபவித்தார் –
அவ்  அழகு தான் அவயவாந்தரத்திலே மூட்டிற்று –
கண்ணும் செம் தாமரை என்று மற்றை அழகுகளோடு ஒருகால் சேர்ந்து அனுபவிக்கிறார் –
முற்பட குமுழி நீருண்டார் –
இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –

கையும் அவை –
கண் இட்டு கொடுக்க அணைத்த கை –
சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று
அக்ருரனை அணைத்தால் போலே –

அடியோ அவையே –
அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –
புண்டரீகாஷா நாம -இறே-
கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –

வண்ணம் இத்யாதி –
எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –
பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று
பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்

கண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்-
மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-

மதி விகற்ப்பால்-
புத்தி பேதங்களால் –

விண்ணும் இத்யாதி –
சம்சாரிகளுக்கு  அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –
அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –
அதுக்கு அவ் வருகான முக்தர் –
நித்யர் –
இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-
எனக்கு உபகாரனான அவன்  உடைய எழிலின் பிரகாரம் –

(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு
உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் )

எம்பிரான்-
தமக்கு அவ் அழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –

(மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –
உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும் )

ந க்ராஹ்யா கேநசித் க்வசித் –
யஸ்ய அமதம் தஸ்ய மதம் -இத்யாதி –
ரூப சம்ஹனனம்-சம்ஸ்நானத்தை-
லஷ்மீம் -சமுதாய சோபை -இருந்தபடி –

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

(தாத்பர்யம்

கீழே திருக் கண்களை அனுபவித்து
அது மற்ற அவயவங்களிலே மூட்ட
மற்றவற்றையும் சேர்த்து மீண்டும் திருக்கண்களை அனுபவிக்கிறார்
இவற்றின் பரபாக சோபை
திருக்கைகளும் திருவடியும் திரு மேனியும்
திருக்கண்கள் நிறத்துக்கு ஏற்ற படி
சிவந்து விளங்கா நின்றன
அஞ்சன மேனி -மைப்படி மேனி அன்றோ
இவனுடைய
சவுந்தர்யம்
லாவண்யம் இவற்றை
ஞானாதிகாரண ப்ரஹ்மாதிகளும்
சர்வஞ்ஞரான நித்யர்களாலும் கூட இவ்வளவு என்று பரிச்சேதித்து அனுபவிக்க முடியாதே –
பகவத் நிர்ஹேதுக கிருபையால்
இந்த அபரிச்சின்ன மானவற்றையும் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் )

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply