அருளி செயலின் சாரம்-அவன் அருளால் –ஆழ்வார் அருளால்-பிரமாணிய அதிசயம்
ஏக கண்டர்கள்-தத்வம் ஓன்று ஆகையாலே
அங்கி தலைவர் ஆழ்வார்-திரு வாய் மொழி -அங்கி பிரபந்தம் -பிரபலம்
-ஏவம் பூதம் ஆன இதற்க்கு-இப்படி பட்ட பெருமை கொண்ட பிரபந்தம்
குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை பரம தாதிகளாலே பரிஹரியாமல்
செம்சொல் செம்தமிழ் இன்கவி பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை கொளின் மொழி கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயிக்க
வேண்டுகையாலே வலம் கொண்ட இதுக்கு சேராதவை மநு விபரீதங்கள் போலே –64
வியாசர் ஜைமினி-கற்று-பிரம சூத்திரம் வியாசர் அருளி-ஜைமினி கர்ம விசாரம்-கர்ம மீமாம்ஸா -விசாரம்-பூர்வ மீமாம்ஸ -கர்மம் பிரபலம்
குரு சிஷ்ய விரோதம் –வேதம்/வேதாந்தம் -அபிப்ராய பேதம்-இல்லை-ஆழ்ந்து பார்த்து சொல்ல வேண்டிய நிலை இவற்றுக்கு –
ரிஷிகள் நிலை வேற ஆழ்வார்கள் நிலை வேற -கர்ம விசாரம் நிர் ஈஸ்வர விசாரம் என்பர் சிலர்–பிரம சூத்திரம் பல ஜைமினி சொல்லியதில் அர்த்த பேதம் இல்லை என்கிறார் வியாசர் –பிரணாகுதி ஹோமம்-அக்னி கோதர ஹோமங்களாக பண்ணும் பொழுது -உபாசனன் மார்பு அக்நிகளாக தெரிவிக்கிறது சாஸ்திரம்–பர பிரமத்தை உபாசிப்பவரையே ஆதி வாகிகர் கூட்டி போகிறார்கள் ஜைமினி சொல்கிறார்-பிரம்மென ஜைமினி-அபக்த பாபமா போன்ற எட்டு கல்யாண குணம் முக்தன் அடைகிறான்-பிரம சொரூபம் /தத் குண /தத் உபாசன /தத் பலாதிகளையும் ஜைமினி சொல்ல –மகா பாரதத்திலும் -ஹய சிரஸ் உபாக்யானம் -பரமாத்மா பற்றி வியாசர் உபதேசம் மூலம் தத்வ ஞானம் பெற்றார் ஜைமினி-அதனால் ஏக கண்டர் இருவரும் -தேவதா நிராகரண பண்ணின இது-வேதம் புருஷனால் சொல்ல பட்டது இல்லை என்று சொல்ல வந்தார் —
வேத பாஹ்யர் வார்த்தை நிராகரிக்க சொன்ன வார்த்தை-வேத பிராமண்யம் ஸ்தாபித்து கர்மம் செய்ய வேண்டும் என்று ஸ்தாபித்து
சொன்னார்-நகி நிந்த்யா நியாயம்-நிந்திப்பதர்க்கு மற்று ஒன்றை புகழ சொன்ன வார்த்தை–பர மத கண்டன அந்யபரத்வ வார்த்தை ..
அருளி செயல்களில் அந்யோந்யம் வசன விரோதம் உண்டாய் பரிகாரம் பண்ண வேண்டாத படி
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆள்மின் -செம்மை ஸுயம் பிரயோஜனமாக அருளுவது -மாரி அனைய கை -பச்சை பசும் பொய்கள் சொல்லி உலகோர் புகழ –முதல் ஆழ்வார்கள்–செம் சொல் கவிகாள் வாய் அவனை அல்லது வாழ்த்தாது -கொள்வான் அன்று -இற்றை பறை கொள்வான்-கொடுக்க தான் வந்தோம்–ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் –சேஷத்வம் சித்திக்க கைங்கர்யம்-செம் தமிழ் பாடுவார் -இன் கவி பாடும் பரம கவிகள் பாடிவித்து கொள்ளாது-தென்னா தென்ன என்னும் –திரு மால் இரும் சோலை-என்னை கொண்டு பாடுவித்தான் /பதியே பரவ தொழும் தொண்டர் –திவ்ய தேசம் கொண்டாடும் -தான் உகந்த ஊர் எல்லாம் தன தாள் பாடி –அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர்-பரஸ்பரம் கொண்டாடி கொண்டு நிற்கும் ஆழ்வார் –பேசிற்றே பேசிற்று எல்லாம் –ஏக ரீதியாக அருளும்-என்னில் மிகு புகழார் யாவரே -சேஷிக்கு பெருமை விளைவிக்கும் படி-சாத்விக அகங்காரம்-சர்வ அதிகாரர் ஆழ்வார் -ஆசை இன்றி அகற்றி -துவளில் மா மணி-தம் பெருமை தானே காட்டி கொள்கிறார் -உரை கொள் இன் மொழியால்-ஸ்ரீ ராமாயண மகா பாரதம் விட விலஷனமாக -எச்சில் வாய் -திரு மால் கவி-பல வியாக்யானம் கொண்ட -இன் கவி–திரு வாய் மொழி கொண்டே வேத சங்கை போக்கி கொள்ளும் படி-வலம் கொண்ட ஆயிரம்-பலம் கொண்ட -பிரதி பாதிய வஸ்து கொண்டதால்–தெளிவாக பர பிரமத்தை காட்டும் –தர்ம சாஸ்திரம் மநு-விரோதியான சொல் சொன்னவை தள்ள படுமவை–அது போல் திரு வாய் மொழிக்கு விரோதம் விபரீதமான சொல்ல பட்டவை தள்ள பட வேண்டும் —
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply