திருவாசிரியம்-6- திவ்யார்த்த தீபிகை/-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஒ!  ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6
————————————————————————–
இவற்றின் சத்தையை -நோக்கி சிருஷ்டித்து–உபாதானம் பண்ணி-இனி மேல் அவை பட்டது படட்டும் -என்று கை வாங்காமல்-
சிறியது பெரியதை நலியு பொழுது தாழ  விட்டு கொண்டு ரஷித்து –இதை அனுசந்தித்து பல்லாண்டு பாடுவதே -கர்த்தவ்யம்-சேதனனுக்கு-
லௌகிகரை பார்த்தார் –உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டல தொடும் கூடுவது இல்லை-
தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே –
-ஏதேனும் காரணத்தால்இவனை  வருந்தி கை விட்டு ஏதேனும் காரணத்தால் மற்ற தெய்வம் பிடித்து –
என் நினைந்து போக்குவர் இப் போது –தோஷம் இருந்தால் விடுவது சுலபம் குணவான் விடுவது கஷ்டம்-
–நம்பியை -எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ–குண பூர்ணன்/ நங்கை குண பூர்ணம் –
-தென் குறுங்குடி  நின்ற -நமக்கு அருகில்–அச் செம்பொனே திகழும்-கோல நீல கொடி மூக்கும் என் நெஞ்சம் நிந்தன அழகன் விட முடியாது–
பெருமை உண்டோ-உம்பர் வானவர் ஆதி அம் சோதியை–நீதி வானவன்
-நம் மேல் கருணையால் அவன் இரங்கி வந்தான்-தவிக்க விட்டானே –
எம் பிரானை -உபகாரன்-மகோ உபகாரம் செய்தவன்–
அழுகிறாய் -பக்தி விளைவித்து சேர்ந்தால் வாழ்வு நினைக்க வைத்ததே உபகாரம்-
என் சொல்லி மறப்பனோ–மறுப்பும் ஞானம் நான் ஒன்றும் உணர்ந்திலேன் மறப்பன் என்று
செம் தாமரை கண்கள் உடன் –மறப்பற என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ
–விடுவதற்கு காரணமே இல்லை வருந்தி கை விடுவது யாதேனும் பற்றி நீங்கும் விரதம் –நாம் இருப்பதை பார்த்து–இவனை ஒழிந்தவரை விரும்பி-ராகம் பரத் பரன் விராகம் மற்றவர்-
நான் என்னும் என்னது என்று அகங்காரம் மம காரம் கொண்டு–இது இருந்தபடி என்-சோகித்து–
நினைக்காமல் போனால் அழ வேண்டும் படி இருக்கிறான் –திரு நாம சங்கீர்த்தனம் பரிகாரம் இழந்தோம் இழவு மாற –
சீரிய தனம் அபகிரதம் ஆனால் கூப்பிடுவது போல் –ஆசுவாசம் பட-ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர் –
–எண்ணிலா மாயம் என்று நினைந்து -ஓலம் இட்ட மாறன்–திரு அடி -குன்னி விடுமே -நினைவே மோஷம் கொடுக்கும் –
-இழவுக்கு கூப்பிட வேண்டி இருக்க அது கூட செய்யாமல்-அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்-

-குறை கூட படாதவர்–

பர துக்கம் -ஆழ்வார் பொறுக்க மாட்டாதே ஒ !ஒ! என்று கூப்பிடுகிறார் —காலம்பெற –நாழி காள்தாமல் சீக்கிரம் கண்ணன் என் ஓக்கலை
யில் ஆனானே –அந்த தேச வார்த்தை ஆழ்வார் –ஈன்ற தாய் இருக்க அசேதனம் மணை -நீராட்டு –
கைங்கர்யம் பண்ணுவான் போல்-படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –
தேர்ந்து ரஷிக்க ஆராய்ந்து-உலகு அளிக்கும்-முதல் பெரும் கடவுள் நிற்ப –ஈன்ற தாய் -போல் நிற்ப-
பல தானறி தானே அறிந்த தேவதை சாஸ்திரம் சொல்லிய படி இன்றி–புடை எம்பெருமானுக்கு விபூதி சரீரம்-பல நிறைய

-தான் அறி தெய்வம்-மணை நீராட்டுதல் போல்

சரபங்கர்-சரபேஸ்வரர்  பிரத்யங்கிர தேவி போல்–இவர்களே கண்டு பிடித்த –
-தானறி தெய்வம்–தன் உடைய புன்மையான அறிவு-வெளி படுத்தி கொண்டாய்-
கொள்வன பல கேட்க்கும்-சுத்திர தேவதை-செய்கை கொல்வன முதலா -அல்லன -செய்ய தகாதவற்றை-
இன்பு துன்பம் கலந்த இன்பமே கொடுப்பார்கள்
தொன் மா மாய பிறவி -பிரகிருதி சம்பந்தம் ஜன்மம்-கொடுத்து இந்த்ரிய விஷய சுகம்-அழுத்தி வைக்கும்-
சம்சாரத்தில் இருந்து வெளி ஏற முடியாமல்-நலிர்ந்து நன்றாக அழுத்தும் -ஒ ஒ உலகின் இயல்பே கதறுகிறார்
இருந்தார்  இருந்த இடங்களில் செவி படும் படி கூப்பாடு போடுகிறார்
இந்த மாதிரி விபூதி-அங்கு தன்னையே அனுபவிக்க கொடுத்து விசேதம் இன்றி அங்கு நடக்க –
இங்கு வைமுக்யம்-பண்ணும் படி வைப்பதே –ஒ நெடு வாசி–
உத்பத்திக்கு முன் சாதன அனுஷ்டானம் பண்ணி கர்பத்தில் தரித்து பிரசவ வேதனை அனுபவித்து
-வெறும் தரையில் படுத்து துவண்டு நோக்கினால்-அறிவு பிறந்து பண்ணியும் உபகாரம் ச்மரிக்கும் அளவானவாறே அவளை விட்டு –
ஒரு உபகாரமும் பண்ணாத நினைக்கவும் இல்லாதா மணை-அசித் பதார்த்தம்- நீராட்டுவார் போல் –
-வகுத்த விஷயம் விட்டு அபிராப்தமாய்  விஷயம் ஆதரித்து —
தாய் போல் -ஆய்சேரி உடைய நங்கை நம் ஆழ்வாருக்கு -திரு வண் பரிசாரம்-உலக தாய்-படைத்து –
போக மோஷ சூன்யமாய் இருக்கும் பொழுது -சூஷ்ம நிலை-நாம ரூப விவாகம் இன்றி–தமோ பூதமாய்-மூல பிரகிருதி -ஆசீத தமோ பூதம்–அசித் கல்பமாய் -இழந்து கிடக்கும் பொழுது ஐயோ ஏங்கி
-நிர்வேதம் வெறுப்பு வர வேண்டும் வாழ்வில்-திரி பாத் விபூதியில்  பரி பூர்ண அனுபவம் நடவா நிற்க உண்டது உருக்காடாதே –
-தேசாந்தர கதனான புத்திரன் பக்கலில் பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே –நிர்கேதுக சம்பந்தம் –
சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் குடி போய்–படு கரணன் விட விகல கரணன் மேல் ஆசை இருக்கும் தாய் போல்
-இவர்கள் உடன் வியாகரிக்கை ஈடான —-நீர்மையினால் அருள் செய்தான் சோம்பாமல்–

-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்–பக்ச்யாம் பிரஜா யேய–என்று சிருஷ்டித்து –

இடந்து–பிரளயம் கொள்ள நீருக்கும் சே  ற்றுக்கும் இறாயாத  மகா வராகம் –உண்டு வயிற்றில் வைத்து ரட்ஷித்து -வெளி நாடு காண உமிழ்ந்து..
இடது பக்கம் ஒருக் கழித்து சயனம்-ஜரிக்கும்–ஜரிக்க கூடாது என்று நம் நோக்கி சயனம் பெரிய பெருமாள்-
-எல்லை நடந்து மீட்டு–சர்வ வித ரட்ஷனம் பண்ணியும் –ஒன்றுமே செய்ய வில்லை
புருஷ அதமன்-செய்யாததை செய்தேன் புருஷ மத்யமன் –புருஷோத்தமன் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் செய்து இருந்தோம் இன்னும் செய்ய வில்லையே –
-தேரை நிறுத்தி குதிரைக்கு நீர் காட்டி தூது நடந்து -கோவிந்தா சப்தம் கேட்டதற்கு —
கடன் தீர்க்காமல் மாம் தூர வாசிநீம்–ருணம் பிரவர்திதம்– –தன்னை விச்வசித்து அருகே –
-மடி தடிவினவன் போல்-தேர்ந்து–உலகு அளிக்கும் உபாயம் சிந்தித்து வேம் கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்க்கே –
-சுமையாக நினைக்கிறான்-ஸ்ரீ ரெங்க நாச்சியார் தலை குனிந்து-தன குறிப்பு ஏற்று அணி
–ஐஸ்வர்யம் அஷர கதிம் பரம பதம் எல்லாம் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்றி வெட்க்கி
ரதி மதி சரஸ்வதி அனைத்தும் கொடுத்து ஆத்மா அனுபவம் பரம பதமும் -அஞ்சலி ஒன்றுக்கு கை கூப்பு செய்கை–
மேல் கொடுக்க ஒன்றும் இல்லை-அம்மா தும் லஜ்ஜசே–பட்டர் –அம் ஜலயதீ அஞ்சலி -அவனைஜலம் போல் உருக்கி விடும்—
சால பல நாள் உயிர் கள் காப்பான் கோல திரு மா மகள் உடன்-எங்கும் எப் பொழுதும் எல்லாரையும் –
எல்லா படிகளிளாலும்–ரஷிக்கிறான்–காத்து நிற்க –நேராக கேட்ட அர்ஜுனனும் கேட்க வில்லை-
-கருட வாகனனும் நிற்க சேட்டை தன மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே —
ஆரோ வருவார் என்று அவசர -சுமந்த்ரன் நின்றது போல் –யேதிவா ராமவா என்று நின்று -காத்து நின்றது போல்-

அது போல் இவன் அவசர பிரயத்யீஷனாய் நிற்கிறான்–இவன் போகாமல் நிற்கிறான்    –இவை அனைத்தையும் பண்ணி இல்லை என்றாலும் அவனையே ஆஸ்ரயிக்க வேண்டும் முழு முதல் கடவுள் என்பதால்-இவனை போல் ஒப்பற்றவன் யாரும் இல்லையே –யயாதி சாதனா அனுஷ்டானம் பண்ணி இந்திர பதவி அடைய -இந்த்ரன் குப்புற தள்ளிய -ஐதீகம்-யார் சிறந்தவன் நானே என்று சொல்ல –தன அனுக்ரகத்தால் வந்தவனை கண்டு பொறாமை-ஆத்மா புகழ்ந்தாய் சொல்லி– கர்ம பூமியில் யார் புண்ய சாலி-தேவதை முன் பொய் சொல்ல கொடாது -ஆத்மா பிரசம்சை பண்ணினாய்-என்று சொல்லி விழும் படி சபித்தான்-பட்டர் வாசித்து சொல்ல -வியாஜ்யம் சாக்கு வைத்து தள்ளினான்–எந்த வேத வாக்கியம் சொல்ல இது –

-தான் தன்னோடு ஒக்க -நிரதிசய ஆனந்தம் கொடுப்பவன் பொறுக்க வல்லவன் பர தேவதை ஒருவனே ஆஸ்ரயிக்க வேண்டும் அவனையே —
அல்லர்தார் ஆச்ரயிநீயர் அல்லர் என்பதை – பிரகாசிக்க –
அவனை விட்டு அவனோடு தோள் தீண்டி -ஓர் அளவில் அருகில் -இன்றி-
நாட்டினான் தெய்வம் எங்கும் -நாஸ்திகரை ஆஸ்திகர ஆக்க –
-நல்லதோர் அருள் தன்னாலே உய்வருக்கு உய்யும் வண்ணம் காட்டினான் திரு அரங்கம்-
அவர் அவர் விதி வழி அடைய நின்றனர்-அந்தர் ஆத்மாவாக கொண்டு நின்றனர்  –

-இவ் அருகே சிலருக்கு மினுக்கம் சொல்லுமே –அவன் பெருமை தோற்ற அவன் அங்கத்துக்கு -சொர்க்கம் பசு மாடுகள் தலை கீழ் நடக்கும்-

உசத்தி சொல்ல -பேசும் அர்த்த வாதம்–இதை அங்கமாக கொண்ட பர தேவன் பெருமை சொல்ல-
-ஒருவனாய் பரம பதம் கொடுப்பவனே இவன் ஒருவனே –
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போல் மற்ற தெய்வம்–பொதி சோறு கட்டி கொண்டு காத்து இருப்பார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்
-நிச்சயம் பிராப்தம் ராமானுஜர் சம்பந்தி என்பதால்
–பிரம்மாவுக்கு பற்றிற்று எல்லாம் விட வேண்டும் –
-ஆரோக்கியம் பாஸ்கரன் -தனம் அக்னி ஈஸ்வரன் ஞானம் -கதி ஜனார்த்தன் –
-சகல பலமும் அளிப்பான் அவன் –பல -ஐஸ்வர்யம் புத்ரம் போன்ற பல தர -தான் அறி தெய்வம் –
சாஸ்திர பிரசித்தம் இன்றி –மொட்டை தலையனை பனி இரும் குழலன் போல் –இவன் கொண்டாட்டம் தான் அவர்கள் புகழ்–
சரணம் –மரணம் ஆனால் வைகுண்டம் கொடுக்கும் பிரான்-அந்தர்யாமி ஆக இருந்து தேவர்களுக்கும் பெருமை கொடுத்தவன் அவன் தான் –
புல் அறிவை வெளிப் படுத்துவதே பலன்–விசேஷ ஞானம் உள்ளராக்கு தான் புல் அறிவை விசேஷித்து காட்டி-
பலம் பெற  பரதேவதையே ஆஸ்ரயிக்க வேண்டுமே காரண வஸ்துவை
-உபாசனம் தமேவ வித்வான் அமிர்தம் இவ பவதி--காரண வஸ்துவை- கொல்வன முதலா அல்லது செய்ய சொல்லும்–
தியானம் விட்டு –பாணன்-மோடி வெற்பும்-கார்திகையானும் -கரி முகத்தானும் முதுகு இட்டு–
நேர் செறிந்தான் –ஒரு நிமிஷம் நின்றால் 12 வருஷம் கிருஷ்ண பக்தி கழியும் –தள்ளி இருக்க வேண்டும்–
பெறாது இருப்பதே நன்றாய் இருக்கும் இந்த வழி பார்த்தல்-நித்யம் ஆக இன்றி துன்பம் கலந்த இன்பம் கிட்டும்-
-ஸ்திரமாய் அந்தமில் பேர் இன்பம் அவன் தானே அருளுவான்–
தன்னோடு ஒருத்தன் போல் ஜீவாத்மா -பவ உபகரண பூதராய்நித்ய சம்சாரி-
நித்ய சம்சாரி ஆக கிருஷி பண்ணினது போல் தொன்மையாய் மா பிறவி-காரணமாய் இருக்கும் மா மாயை-
ஒருவனால் கடக்க முடியாத பிரகிருதி ஏஷா குண மயி மம மாயா கடக்க முடியாது மாம் ஏவ –
கிருபை ஒன்றால் தான் கடக்க முடியும்-மாயை -ஆஸ்ரித செயல்கள் நித்யம் அநித்தியமாக காட்டும்-மயக்கும் –
பிரகிருதி சரீரம் ஜன்மம் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
-பன் மா மாய -சப்தாதி விஷயம் -நளிர்ந்து நன்றாக அழுந்தும்
–உலகினது இயலவே –ஒ ஒ என்கிறார்
7 ஜன்மா சூர்ய பக்தன் –ருத்ர பக்தன் 7 சிவ பக்தன் விஷ்ணு பக்தன் ஆகிறான் பல ஜன்மம் கழிந்து பரம பதம் அடைகிறான் –
மார்கண்டேனும் கரியே–
————————————————————————–
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்க்கு அல்லது மடியாதோ யுலகே -என்று அருளிச் செய அநந்தரம்
உலகோரைப் பார்த்தார்
ஒ ஒ உலகின் இயல்பே -என்று அவன் திருவடி சென்ற உலகங்களுக்கும் மேலே கேட்கும்படி கதறுகிறார்
அவன் செய்து அருளின உபகாரங்களை நினையாமல்
நன்றி பாராட்டாமல்
தேவதாந்தரங்கள் –ஆட்டை வெட்டு -பிள்ளையை கொடு -சொல்லி -சூத்திர பலன்கள் -கொடுத்து –
இப்படி அனர்த்தப் பட்டு போவதே –ஈன்றோள் இருக்க மனை நீராட்டி
பேயிருக்கு நெடுவெள்ளம் பெரு விசும்பின் மீதொடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தம வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே–மணை -ஸ்வ இதர வஸ்துக்கள் எல்லா வற்றுக்கும் உப லஷணம்
நீராட்டுதல் -உபகாரங்கள் பலவற்றையும் சொன்னபடிபுடைப்பல தானறி தெய்வம்
புடை –ஏதோ ஒரு பக்கம் -வேதத்தில் ஒரு மூலையில் சிவன் ருத்ரன் ஹிரண்யகர்பன் கிடந்தால்
பிரகரணத்தையும் பொருளையும் அறிந்துகொள்ளாமல்
தானறி தெய்வம்
புத்ரகாமம் வேண்டி ஒரு தெய்வம்
ஐஸ்வர்யம் காமம் ஒரு தெய்வம் –
ஆரோக்யத்துக்குஒரு தெய்வம் –
கொல்வன முதலா அல்லன –
நீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் -என்றும்
நீர் கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும் கள் இழைத்து ஏன் பயன் -என்றும்
அணங்கு க்கு அரு மருந்து என்று ஆங்கோர் ஆடும் கள்ளும் பாராய் -என்றும்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாத்தூய் கீதமுழவிட்டு நீர் அணங்கா டுதல் கீழ்மையே -என்றும்
தீர்ப்பாரை யாமினி திருவாய் மொழியில் அருளிச் செய்தவை அனுசந்தேயம் –

இன்பு துன்பு அளி -அளி -கொடுத்தல்
சுகம் என்று பிரமிக்கக் கூடிய துக்கம் கொடுப்பவை என்றபடி
நித்ய சம்சாரியாக ஒழிய கிருஷி பண்ணும் செயல்களே இவை
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே -என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
———————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading