இறுதி பாசுரம் முடிவு முதல் பாசுர ஆரம்பம் இல்லை-யாமே முடிந்து ஆரம்பிக்க வில்லை–அந்தாதி தான்-உகப்புக்கு இதற்க்கு மேற் பட இல்லாமையாலே மேலே போகாமல் முடித்தார்-
————————————————————————–
தன்னோடு சிறை இருந்தவர்களை ஆஸ்ரயித்து பலன் உண்டா அரையனை ஆஸ்ரயித்து தானே பலன் அரையன்-அரசன் —
சந்த்ரே சேகரர்-சாதக வேஷம் தோற்ற சந்த்ரனை தலையில் வைத்து கொண்டு–கொடுக்கும் பலன் தரும் அவன்க்ரீடம் தவிர்த்து –
துர் மானம் –ஈஸ்வரன் என்று -மற்றவரும் பேசும் படி அகங்கரிக்க -அவன் தனக்கும் ஜனகன்
–சிருஷ்டிக்கு தக்க நான்கு முகம் கொண்ட- நான்கு வேதம் கொண்டு-
இரண்டு அதிகாரிகள் –குசவனையும் -புற மடக்கி போல்- இருவரும்–
அடுத்து தளிர் ஒளி இமையவர்-போக பிரவணர் அனுபவம் அப்சரஸ் மெய் அனுபவித்து கொண்டு-
யாவகை உலகமும் யாவரும் அகப் பட -இவர்கள் அனைவருக்கும் -காரணம் ஆக இருக்கிற பூத பஞ்சகமும் –
-சுடர் இரு-உண்டாகும் பொழுது முன்னும் அழியும் போதும் இருதியில் அழிவதாலும் –
-மலர் சுடர் பிறவும் உடன் சிறிது-ஏக தேசத்தில் –பெரிய வயிறு எதற்கு—-ரஷிக்க பேர் ஆதரம்–
நீண்ட அப் பெரிய வாய கண்கள்-சில பேருக்கு இட சொல்லி உண்பார் பலர் உண்டாகில் சோறு மட்டம் ஆகும் –
-பல வாகி உள்ளே போக பாரிப்பின் பெருமை-சிறிதாக -மயங்க -லயிக்க கலக்க
-உடன் மயங்க -உடல் மயங்க -என்ற பாடம்-திரு மேனி -ஆல் இலை தளிரில் -கலச –
-பிரி கதிர் படாத படி அனைத்தையும்–பக்தி உழவன்-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத
உண்டிட்டாய் உண்டு ஒழியாத்–வயிற்றை எக்கி காட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லும் படி-
சதா ஏக ரூப ரூபாயா –சிறியதாக ஏக தேசம் அனைத்தும் அடங்கி–
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் மாறா விடிலும் –
சேராதவற்றை சேர்க்கும் சக்தி போல்–கரார விந்தென –வைஷ்ணவ போகய லிப்சயாக
–திரு அடி இனிக்கும் போக்கியம் என்று பார்க்க தானே சாத்தி கொண்டான் முதலில்
இப் பொழுது தானே வாயில் வைத்து கொண்டு பார்த்தான்-
களத்து மேட்டில் அளந்த படி கொண்டே அளக்க வேண்டுமே வீட்டில்-
-திரு அடி கொண்டு அளந்தானே முன்பு அதை கொண்டே
இப் பொழுதும்பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம் வந்து காணீரே –
-முகிழ் விரியாத ஆல் இலை சேர்ந்தான் –ஆல் இலை
-பாலன் தனது உருவாய் எழ உலகு உண்டு -மிக ஞான சிறு குழவி-பால் உண்ட குழவி
-எழ உலகும் உண்டான் –ஆல் இலையின் மேல் வளர்ந்தது மெய் என்பர்-
-எழுதி வைக்க பண்ணினாய்–ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-
தரிக்கைக்கு எசோதாதிகள் அன்றிக்கே இருக்க –யசோதை தேவகி கௌசல்யை மடியில் பார்த்து இருக்கிறேன்
-ஜலத்தில்–அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ–திரு புளிங்குடி -மடியாது துயில் -கொடியார் மாட கோளூர் அகத்தும்
-இறக்கி வைத்து துயிலாயோ –பய நிவர்திகங்களுக்கும் பயப் படுவார்கள் –
தோள் காட்ட அதற்கும் பல்லாண்டு ..–சுசி ஸ்மிர்த்த சிரித்து கொண்டே-துயில்கிறான்
அவ் ஆல் அன்று நீர் உளதோ -ஆகாசத்தில் உள்ளதோ-மண்ணிலே உள்ளதோ-
விண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய்சொல்லு
பருவம் நிரம்பும் முன் ஏழு வயசில் கோவர்த்தனம் தூக்கியவனே சொல்லு-
ஒரு படி பட்டு மலையை -இதுவும் ஓர் ஆச்சர்யம்–இதுவும் சொல்லு அதுவும் சொல்லு –
-மூன்றும் ஆச்சர்யம்-உண்டதும் தூக்கியதும் ஆல் இலை சேர்ந்ததும் –
-அகடிதகடன சாமர்த்தியம் —
அவன் தானும் ஆழ்வார் வந்தால் பதில் கேட்டு கடவோம் என்று நினைத்து இருந்தானாம்-
பின்னையும் -அதுவா இதுவா -தொனி மாற்றி–ஆச்சர்யம்- பட்டு விட்டார்-
சர்வ ஆதர பூதன் நீ -ஓன்று வேறு ஒன்றுக்கு ஆதாரம் இல்லை உன்னை தவிர –
-ஆல் இலை நீரில் ஆகாசம் மண் விண் தாரகம் இல்லையே—நீ தானே தாரகம்-
-உன் உளது புரிந்து கொண்டேன்-மகோ உபகாரம் காட்டி கொடுத்த பின்
–புறம்பே ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் இல்லை–விச்மிதர் ஆனார் பட்டார் அருளி செய்தார் –
வியப்பாயா வியப்பு -இல்லா மெய் ஞான வேதியன்-ஆச்சர்ய யோகம் சொல்கிறது
பெருத்த மா மாயன்—சகல லோகத்துக்கும் இவனே–கால் காணி தெய்வம் இல்லை-
-எடுத்து கழிக்கைக்கு வேறு தெய்வம் இல்லை–நான் உன்னை ரஷிகிறேன் என்று பச்சை இட்டு
-தன சடை முடி நானும் உன்னை போல் சாதக வேஷம் காட்டி-ஒரு தலைவனை பற்றியே இருக்கிறேன் –
அவனை விட்டார் மார்கண்டேயர் -பரா அஸ்ய சக்தி–சந்தி கூட்டி பராசக்தி வராது–விதண்டா வாதம்
அந்தர் ஆத்மா ஆக இருக்கிறான் என்று சொல்லும் வார்த்தை பிறர் இவர்களை ஆச்ரயிகிறார் —
கண்டும் தெளிய கில்லீர் –மார்க்கண்டேயரும் கரியே
பரிமித பலம் தான் இவர்கள் அருளுவார்கள் பரம புருஷார்த்த ஆசை கொண்டால் -மோஷ பிரதன் இவன் ஒருவனே
இவ் அருகு அல்பம் அஸ்திரம்–மோஷம் விரும்பி மத பக்தி அவய விசாரனி–
அநந்ய பக்தி -திரு அடி தன நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்
என்ன கடவரே -பர்தா பார்யா -சம்பந்தம்-பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிவதே பிரதானம் –
-பகவத் பிராவண்யம் கிரமத்திலே வரலாம் தேவதாந்திர சம்பந்தம் விட வேண்டும்.
.முதலில் லோகம் போல் இன்றி நாம் அவனை பல்லாண்டு பாட பெற்ற பேறு கொடுத்து அருளினானே என்று-ப்ரீதி உடன் தலை கட்டுகிறார்-
————————————————————————–
நளிர் மதிச் சடையன் –
சாதக வேஷம் பெற்ற ஜடையைத் தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
துர்மானத்தாலே
ஸூ கப்ரதன் என்று தோன்றும் படி தாழை மடலைக் கீறி தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்த்ரனை தலையிலே தரித்து இருந்த ருத்ரன் –
முதலா யாவகை வுலகமும் யாவையும் அகப்பட –
எம்பெருமான் திரு வயிற்றின் உள்ளே சென்று சத்தை பெற்ற இவற்றை வாய் கொண்டு சொல்லுவதும்
பெரும் பாக்கியம் என்று
நில நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் -என்று மீண்டும் விவரித்து அருளிச் செய்கிறார்சிறிதுடன் மயங்கி –
கீழ்ச் சொன்ன வஸ்துக்கள் சிறியவை
உடன் -ஏக காலத்திலேயே
மயங்க -உள்ளே அடங்கும்படி
அன்றிக்கே
சிறிய உடல் மயங்க
பேதை குழவி -உடலில் என்றுமாம் –
பாலன் தனதுருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் –
முகிழ் விரியாத சிறு குழந்தை வடிவாகி
சிற்றாலம் தளிரிலே கண் வளர்ந்து அருளிய அத்புத சக்தி உடைய
ஸ்ரீ மன் நாராயணனே பரதெய்வம் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நாள் வாய்
ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடலைரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போர் ஆழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே -என்றும்
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே -என்றும்
பெரிய மொழியில் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இ றே
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர் —
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ
ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம் அனுசந்தேயம்
இந்த திரு பிரபந்தம் எம்பெருமான் பரதவ ஸ்தாபனம் -நோக்கு
இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-
————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply