திருவாசிரியம்-5- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப்பு தேன்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5
———————————

போற்றி-ஆறு தடவை–ஆறு விருத்தாந்தம்-உலகம் அளந்த அடிக்கு பல்லாண்டு இதில்--நெடியோய்-உனக்கு அல்லது அடியதோ உலகேஇவர் தோற்ற துறை இது–

பரம காரணன் -திரு அடி தாமரை-ஓன்று கவிழ்த்தி அலர்த்தி-உள் பக்கம் சிவந்து–
ஒண் சுடர் அடி போது விண் மேல் செலுத்தி
புத்தேள்-தேவதை-நாடு-சத்ய லோகம்–வியந்து உவப்ப
நெறி பட முறை முறை சாஸ்திரம் படி வழிபட்டார்கள்-
தேவர்கள் தலை பட்டதும் தாமரை காடு போல் விகசித்து-
தாமரை காட்டில் இரண்டு பூத்த தாமரை கண்
தாமரை காய்த்து கனி திரு வாய்-
இரு -பரந்த கிரணங்கள் கொண்டசூர்யன் போல்  -முடிக்கு
கற்பக காவு போல் தோள்கள் தழைத்த  போல் –பிரார்த்திக்காமல்

/நன்றி சொல்லாமல்/சந்தோசம் படாமல்-தாய் தூங்கும்  குழந்தைக்கு அணைத்து போல்

அனைவருக்கும் –லோக குள்ளர் திரு விக்ரமன் போல் சுருங்கி—குற்றம் சமர்பித்து கீதா சாஸ்திரம் பெற்ற அர்ஜுனன் போல்-
தோளில் கால் பட அமர்ந்து–உறங்குகிற பிரஜைக்கு தான் அறிந்த ஹிதம் செய்யும் தாய் போல்-உண்டாக்கி -சிருஷ்டித்து -திக்பாலர் நியமித்து
சிறியவரை பெரியவர் நலியாத படி –
இந்த்ரனை -காவலுக்கு நிறுத்தி-ஆசுர பிரக்ருதியால் மகா பலி-ராஜ்ஜியம் இழந்து கண் கலங்கி கை பிசைய -பட்டது படட்டும் என்று இருக்காமல்
கை வாங்கி இருக்காமல்–ஸ்ரிய பதி ஆகிய உன்னை அழித்து இரப்பாள ன் ஆக்கி கொண்டு–
பிச்சைக்கு உசிதம் பிரமச்சாரி-ஆஸ்ரமம்-மாணியாய் நிலம் கொண்ட மாயன்-பிராட்டி கடாஷித்தால் கார்யம் ஆகாதே என்று மறைத்து –
இறையும் அகல கில்லேன்-நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்–மான் தோல் கொண்டு-அந்த புரம் திரை-குறைத்து தாழ் விட்டு கொண்டு-
நெடியவன்-குறுக்கி கொண்டு–சர்வ வியாபகன்–தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி இருப்பவன் குறுக்கி கொண்டு-
-இவை எல்லாம் இந்தரனுக்கு -கோவர்த்தன அபசாரம் பண்ண போகிறவன்

அலம் புரிந்த நெடும் தடக் கை -வரம் தராதி வரதன்-வாங்க போனானே –தன் நிலம்-ஸ்ருஷ்டித்தே தான்-கை ஏந்தி வாங்க போனாய்-

இட்டு வளர்ந்த கை கொண்டு இரந்து–இவை அனுசந்தித்து இவனுக்கே மங்களா சாசனம் –
பேசி அனுபவிகிறார் –இடது திரு அடி மேல் நோக்கி-வலது திரு அடி கீழ் நோக்கி சீர் காழி போல்/
திரு கோவலூரில் மாற்றி அந்த ரிஷிக்கு சேவை சாதித்தார் —
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப–மூவடி மாவலி கொள்வன் நான்-மூன்று வார்த்தையில் முடித்தார்-
யதார்ச்சா லாபம் சந்துஷ்டா -கிடைத்தது கொண்டு மகிழனும்
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையனே அச்சோ அச்சோ-சக்கர அம்சம் அனைத்தும்-
தண்ணீர் பட்டு சிலிர்த்து வளர்ந்தான்
மேல தண் மதியும் கதிரவனும் அப்பால் ஓடி-புனல் உருவி ஒரு கால் நிரப்ப –
ஆழி எழ அப்பன் ஊழி எழ -அன்று கரு மா மணியாய் இரந்த கள்வனே -உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு இந்த்ரன் மகா பலி —
ஸ்ரிய பதி- இரப்பாளான் ஆக– உண்டு இல்லை சொன்னாலும் உகந்து –
-பக்கத்து வீட்டில் பண்ணுவது பண்ணுவேன் கதை போல்-மான அவமானம்

தவிர்த்து–

இரப்பிலே தழும்பு ஏறிய வடிவு–தகனேறிய உடம்பு-மெய்ப்பாடு–உன் படி ஒருவருக்கும் தெரியாத படி மறைத்து —
இந்த்ரன் பிரார்த்தனைக்கு மட்டும் இன்றி-லோக செய்தி-ஆஸ்ரிதர் மார்பில் கை வைத்து உறங்கலாம்-அதற்க்கு செய்த செயல்
ரஷிக்கும் பொறுப்பு நமது இல்லை —
மா முதல் அடி போது-பரம பிராப்யம்-அடைய வேண்டிய பலன்  /காரணத்வம் முதல் அர்த்தம்-
அடி போது அடியாகிய செவ்வி பூ
ஒன்றை கவிழ்த்து அலர்த்தி-மா முதல் சிறியதன் தலையில் பெரியது வைத்தால் மண் முழுதும் அகப் பட்டு-
அடி போது போல் புஷ்பம் -மெத்து மெத்து என்று அகப் பட்டார்கள்-நெருக்கு உண்ண கடவாமல் –அல்லி தாது போல்
ஒண் மிதியில் -மிதிப் பட்டு போகாமல் மிதிக்க பட்ட —
புனல் ஆவரண ஜலம் வரை அகப் படுத்தி கொண்டு
அடுத்த திரு அடி
விண்ணை நோக்கி அளந்து கொண்டது -அண்டம் மீது -அவுணன் மனசு தாண்டி-நினைவும் கடந்து–
சுடர் ஒளி விடுகிற –அகங்காரம் அபிமானம் ஒன்றும் இல்லை என்று தலையில் காலை வைத்த -சுடர்-

பக்ன அபிமானராய் -அபிமான துங்கனாய்-

விண் செலீ –ஏழு லோகம் வரை சத்ய லோகம் வரை-வியப்பவும் செய்தது-நீர்மை இங்கே வந்ததே –
எளிமை பள்ள மடையை கீழ் நோக்கி பாயும் –மேல் மேன்மை –சௌலப்யம் இங்கே வந்ததே வியப்பு-
அகல பார்க்கிலும் தீண்டினான் –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விடோம்-ராமானுஜர் தன் ஆச்சார்யர் சிஷ்யரை தேடி ஆள் கொண்டது போல்
குறை கொண்டு நான் முகன்- குண்டிகை நீர் பெய்து –
-மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற தழுவினான்
அண்டத்தான் சேவடி ஆங்கு–
தர்ம தேவதை  நெகிழ்ந்து உருகி-தீர்த்தம் குண்டிகை –
–பவனார்தம் ஜடா மத்யம் தரித்தான் சிவன்-யோக்யதை பட்டவன் ஆனான்-
கங்காதரன்-தலையிலே சம்பந்தம் விடாமல் கொண்டான் –நல் சரக்கு வந்தால் விடுவார் இல்லையே –
-தலையில் தரித்து விடேன் என்று நின்றான்
சதுர முகன் கையில் சது புயன் தாளில் சங்கரன் சடையில் தங்கி-கங்கை-சர்வேஸ்வரன் –
தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் கை அனைத்தும் ஆற தழுவினான் அநேக கை கொண்ட பயன் –
குறை கொண்டு-தக்க உபசாரம் இல்லை -அபசாரம் ஷமஸ்வ புருஷோத்தமன் –
மறை கொண்ட மந்த்ரம்-புருஷ சுக்தம் -அநந்ய பர வாக்கியம்

-கறை கொண்ட-விஷம பிள்ளைக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பது போல்-

அவிவேகம் விளைவது அறியாமல் அனர்த்த ரூபம் ஆனவற்றை செய்யும் ருத்ரன்-
இனி அமங்கலங்கள் வாராது ஒழிய வேண்டும் என்று
வானவர் -நெறி பட்டு-சாஸ்திரம் வழியாக -வழிபட -திரளாக ஆஸ்ரயிக்க–
திரு அணுக்கன் திரு வாசல் திரளாக திரு அடி தொழுவது போல் –வானவர் முறை முறை –
இனி பெருமாள்-தாமரை காடு பூத்ததது போல் —
ஆதித்யன் கண்டால் தாமரை மலரும் பக்தன் கண்டால் தாமரை கண் மலரும்-செவ்வி பெற்றதாம் –
-காய்த்து கனி -திரு வாய்–மூக்கு கொடி போல்–பழுத்து –நீண்ட அப் பெரிய வாய கண்கள்-
ஆயிரம் ஆதித்யர் போல்-ஒளி கற்றை கொண்ட –சேர உதித்தால் போல் திரு முடி /கற்பக காவு போல் திரு தோள்கள்
-மூன்று முடிக்கு அரசு -பார் அளந்த பேர் அரசே ஓர் அரசே விண் அரசே–
எனக்கே தன்னை தந்த கற்பகம் –
-தோள்கள் பெருத்து கவசம் உடையும் பிராட்டி வைபவம் ஈர் இரண்டு மால் வரை தோள்-பாசுரம் கேட்டு பணைக்கும் –
நெடியோய்-நினைவிலே நெடியான்- திரு மேனியில் நெடியான்–
மகா பலி துன்பம் வரும் முன் காக்க வில்லை-என்று வருந்தி
உடன் இருந்தவன் முடிச்சு அவிழ்த்து பணம் எடுத்தால் போல் வருந்தி..-
-அனைத்தும் பண்ணியும் -தன்னை விச்வசித்து உடன் கிடந்தவன் முடிச்சு அவிழ்ந்தவன் போல் –
முற் கோலி ரஷிக்க பெற்றோம் அல்லோம் நெடியோய் –
-திரு விக்ரமன் சர்வ ஸ்வாமி மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் –
-இவனை தானே மங்கள சாசனம் –
-எல்லோரையும் ஆஸ்ரயித்து கொள்பவர்களும் தங்கள் தலை மேல் உன் திரு அடி இருக்க –
நான் பாடுவதும் உன் திரு அடிக்கே தான்-
————————————————————————–
உலகு அளந்த விருத்தாந்தம் அனுபவித்து
இப்படியும் சௌசீல்யம் சௌலப்யம் உண்டாவதே என்கிறார்
அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி
இவன் திருவடிகளை அன்றி
துகை உண்ட மற்றவர்களை -ஜெயா விஜயீபவ -என்னவோமாமுதல் -திருவடிக்கு விசேஷணமாக மட்டும் கொள்ளாமல்
அண்மை விளியாக்கி
எம்பெருமானுக்கே அன்வயித்து
ஆதி காரணமான எம்பெருமானே -என்னவுமாம்
அடிப்போது கவிழ்த்து உலகம் எல்லாம் ஸ்வா தினம் படுத்திக் கொண்டான்
வானவர் முறை முறை வழி பட நெறீஇ -நல வழிப்படுத்தி
நிறீஇ பாடமும் ஒக்கும் நிறுத்திநான்முகப் புத்தேள் வியப்ப
பிரமதேவர் என்றபடி
அவனுடைய நாடு -தாமரை போல் பரம போக்யமான திருவடி
இங்கே வந்து சேவை சாதிப்பதே என்று
ஆச்சரியமும் சந்தோஷமும் அடையதாமரைக் காடு தொடங்கி உலகு அளந்த பெருமாள்
திவ்ய அவயவங்களையும் திரு அபிஷேகத்தையும் அருளி
இப்படி விலஷணமான
பரம புருஷனுக்குத் தவிர வேற யாருக்கு அடிமைப் பட உரியது இவ்வுலகம் என்கிறார்-

—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading