திருவாசிரியம்-4- திவ்யார்த்த தீபிகை /-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 

அவன் திரு அடியை பல்லாண்டு எக்காலத்திலும் பாட இசையும்-

உலகமும் யாவரும் இல்லாத பிரளய காலம்-மேல் வரும்-கழிந்த காலம்-பொருள்
பெரும் பாழ்-நீண்ட பிரளயம்  -ஸ்ருஷ்ட்டி போல பிரளயம் நீண்டு-
இரும்-எண்ணில்  அடங்காத –
பெறல் அரும்-பெற அரிய -ஒரு தனி வித்து -தானே ஆக நின்று-இரண்டு வித ஸ்ருஷ்ட்டி சமஸ்த ஸ்ருஷ்ட்டி தானே செய்து
பிரம்மா படைத்து அவரை ஸ்ருஷ்ட்டி பண்ண செய்ய -இனி மேல் வியக்தி ஸ்ருஷ்ட்டி-
கொழு முளை-அங்குரம் முளை-விட்டால் தான் செடி -தான் வித்து நான் முகன் கொழு முளை
நாபி கமலத்தில் ஈன்று பெற்று எடுத்து–முக் கண் தேவு பல- வருணன் குபேரன் அக்னி -பலரும் படைத்து -நுதலி-எண்ணியே சங்கல்பம் மாதரத்தில்
மாயாவி-மா முதல் அடியே -காரணமான திரு அடி-பல்லாண்டு எக் காலத்திலும் பாட -பெரிய ஆழ்வார் அருளியது போல் ஆசை பட்டு அருளுகிறார் –
———————————————————
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
——————————————-

ததீய சேஷத்வம் -அடியவர் கால ஷேபம் எப் படி பரிமாற்றம்-நித்ய அனுஷ்டானம் என்ன- வாழ்க்கை நடை முறை-வாழிய என்று பல்லாண்டு பாடியே காலம் போக்குவார் சம்சாரி ஆத்ம சொரூபம் இது ஒன்றே –

-ஆண்டு /பல ஆண்டு நூறு ஆயிரம் கோடி-இவர் ஊழி ஆரம்பித்து 43  லஷம் வர்ஷம்   சதுர யுகம்
1000 சதுர யுகம் பகல் இரட்டிப்பிது ஒரு நாள் வருஷம் 100 வருஷம் -ஊழி ஆரம்பித்து -பல் ஊழி
-நூறு ஊழி ஆயிரம் ஊழி கோடி ஊழி -வினை சொல் இன்றி சேவடி செவ்வி திரு காப்பு-பல்லாண்டு சொல்லி முடிந்தது எண்ணம் வர வில்லை-
-பிரிவின்றி பல்லாண்டு என்று இருப்பார்-கல்பம் தோறும் நித்ய அக்நி கோதரம் போல் –ஆக்க ஒண்ணாது–
ஓவாது விடாமல்-ஷணம் பொழுது கூட –வாழிய என்று –
சர்வேச்வரனின் சேஷத்வம் உபக்ரமித்து ததீய சேஷத்வம் கிட்டி அதை கொண்டு அவன் திரு அடிகளுக்கு பல்லாண்டு —
அவன் திரு அடி தான் பக்தர்கள்–ஆத்மா அவன் உடல் பக்தர்கள்..யாம்-ஆயுர் ஆசாச்தே –
ஆயுளை கேட்டு இருந்த -பார்த்தது எல்லாம் எனக்கு -தவிர்ந்து-தொழ -மங்களா சாசனம் பண்ணுவது-
இசையும் கொல்-சங்கை-எனக்கே -முதல் படி எனக்கும்   உனக்கும் என்று போந்த -உனக்கே என்று —
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –தனக்கும் பிறர்க்கும் ஆக இருப்பது மாற்றி

அவனுக்கே -நெடு வாசி–பல்லாண்டு எந்த செயல்-அடுத்து

ஸ்ருஷ்ட்டி தொழிலுக்கு –அசத் சமம் ஆக இருந்த காலம்..–அழிந்து கிடந்த வஸ்துவை அடி தொடங்கி–
சிந்தையினோடு கரணங்கள் –அமுதனார் -அசித் அவிவிசே ஷன் -வாசி இன்றி-
-புத்திரன் -அனர்த்தம் சகிக்க மாட்டாமல்-உண்டது உருக்காட்டாதே -சம்பந்தமே ஹேதுவாக –
-குடல் துவக்கு-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல் –
-உத்சாகம் குறையாமல்-பாமரு மூ உலகம் பத்ம நாபாவோ--சோம்பாமல் பல் உலகம் படைத்தீ
ஒன்றும் தேவும் –மற்றும் யாவும் இல்லா அன்று தேவரோடு உலகு படைத்தான் –
-மகோ உபோகாரத்துக்கு பல்லாண்டு –யாவகை உலகமும் யாவையும் இல்லா-பிரளயம்-
நித்ய நைமித்திக பிரளயம்- பிரம்மா பகல் முடிந்த காரணம் அடியாக /
மகா பிரளயம்-லீலா விபூதி எல்லாம் சூஷ்ம ரூபம் -யாதும் இல்லா அன்று பிராக்ருத பிரளயம்-
சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்-ஆத யந்திக பிரளயம்-
திரும்பி வராமல் ஸ்ரீ வைகுண்டம் செல்வது இது  –
-சப்த லோகமும் அழிந்த -யாவகை உலகமும்/ யாவரும்-மார்கண்டேயர் போல்வார் இல்லை
-நித்யர் சிரஞ்சீவி–இல்லா மேல் வரும்-முன்னே சென்றே மேல் என்றது பண்டு வரும் போன –

பெரும் பாழ் காலம்–உவர் தரையை உவர் கழிய நீர் நிறுத்துமா போலே–நம் வாசனை கழிய -கர்ம வாசனை உப்பு போல்–

தனி வித்து அத்வதீய –-பெறுவதற்கு மிக அரியவனாய்
-இரும் பொருள் தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கம பொருள்களுக்கு எல்லாம்
-அசங்கேயமாய் -அசித் உடன் பின்னி பிணைந்த ஜீவ வஸ்துகளுக்கு  -அரிய —ஏகோகவை நாராயண ஆஸீத் —
தனி வித்து நிமித்த உபாதான சக காரி -ஆகிய மூ வகை காரணமும் இவனே –
குடம் பண்ண மண் உபாதான எது எதுவாக மாறுகிறதோ அது அதற்க்கு உபாதான காரணம்
/ எது உபகாரம் ஒத்தாசை சக்கரம் சக காரி கார்யம்..யார் செய்ய சங்கல்பிகிறானோ அவன் நிமித்த காரணம் –
-குயவன் போல மட்டும் இல்லை–பகுச்யாம் நான் ஆக கடவேன்-நானே பல படியாக பிர பஞ்சம் ஆக சங்கல்பிகிறான்-
நிமித்த /சரீரமே மாறுதல் உபாதான காரணம்–சக்தி கொண்டு பண்ணுவதால் சக காரி/
வேர் முதல் வித்தாய்-அன்றிக்கே-நல் வழி பட சிருஷ்டிக்க நினைத்த சர்வ பூத சுக்ருத்தாய் இருக்கும் நீ
தனி–சகாயதுக்கும் வேறு யாரும் இன்றி-நினைத்ததை நிறை வேற்றும சத்ய காமன் சத்ய சங்கல்பன்–
தான் ஆகி-காரண கணம் எல்லாம் தானே ஆகி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி-
-தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி  வைத்தான் வாழியே –
மதுர கவி தாசரை நியமித்து போல் -கோவிலுக்கு நிர்வாகர் ஆக விட்டது போல் பிரம்மாவை உண்டாக்கி-
பிரகிருதி -மகான் அகங்காரம்- -பஞ்ச பூதம் தன்மாத்ரை இந்த்ரியம் கர்ம ஞான -பஞ்சீகரணம்-
ஆகாசம் முதலில்- இரண்டு துண்டு ஒரு பாதி நாலாக்கி ஒவ் ஒன்றுடன்  கலந்து/அடுத்து வாயு-இது போல்–
சேர்ந்து இருந்தால் தானே அழியும் தன்மை வரும்..கூட்டி உருவாக்கி-சரீரம் –
-இது வரை-அசித் பிரகிருதி கொண்டு –இனி ஆத்மா வேணும்–
சமூகம் கணக்கு பார்த்து பிரம்மா ஆகும் தன்மை கொண்ட ஆத்மா தேர்ந்து எடுத்து -புகுத்தி–அவனுக்குள்ளும் தானும் பிரவேசித்து-
-இதர சஜாதீயன்-ஜீவாத்மா கோஷ்டியில் சேர்ந்தவன் தான் பிரம்மாவும்-இனி கார்ய வர்க்கம்–
சிருஷ்டிக்க வேண்டிய சக்தி-கொழு முளை ஈந்து–உதவிக்கு முக் காணான் ஈசன் தேவு பல –

உண்டாக்கி-நுதலி-சங்கல்பித்து–பகுச்யாம்-கருதி என்றான்-

உந்தி தாமரை கீழ் நடு மேல் உலகம் மூன்று —
தானே படைத்த உந்தி —எழில் உந்தி– தேவும் எப் பொருளும் படைக்க —
அவனுக்கு அல்லால் .பூவும் பூசனையும் தகுமோ–
உந்தியான்–இல்லை உந்தி தானே படைத்தது–
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை போல்–
தனுசே விடும்-தடுக்க தான் பெருமாள் -சார்ங்கம் உதைத்த சர மழை
-திரு உந்தி-பத்மமாய் –மாய ஆஸ்ரித சக்தி கொண்ட மா முதல் -காரணமான அடி
-திரு அடிகள் முதல்-திரு மேனி கொண்டே ஸ்ருஷ்டிகிறார்/
மா முதல் மாயக் கடவுள்–அவர் திருஅடி–
-இரண்டு அர்த்தம்-பர தெய்வம் பரம காரண பூதனின் திரு அடி —
பரம பிராப்யமான திரு அடி–மா முதல்-அடியே வாழிய என்று -உன் சேவடி செவ்வி திரு காப்பு என்ற படி..
————————————————————————–
கீழே-தளிர் மா தெய்வத்து அடியவர்களுக்கு ஆளாகவே இசையும் கொல்-என்று
பாகவதர்களை அனுவர்த்தித்துப் பார்த்தார்
அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு –உன் சேவடி செவ்வித் திருக் காப்பு -என்று
இதுவே தொழிலாக இருக்கக் கண்டார் –
இவர்கள் கால ஷேபமே அன்றோ நமக்கு உத்தேயம்
அப்படிப் பட்ட பாக்கியம் கிட்டுமா -என்கிறார் இதில் -யாவகை யுலகமும் என்று தொடங்கி மாயக் கடவுள் வரை எம்பெருமான் பெருமையை பேசி அருளுகிறார் –
பன்மைப் படர் பொருளாது மில் பாழ் நெடும் காலத்து –நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே –தனி வித்து தானாகி
தான் ஒரு தனி வித்தாகி -என்று அந்வயம்
வித்தாகி என்னாமல்
ஒரு -தனி -வித்தாகி -என்றது
நிமித்த உபாதான சஹகாரி மூவகை காரணங்களும் தானே

மேல் வரும் -என்றது விபரீத லஷணையால் கீழ் கழிந்த என்றபடி
மேல் -என்றது பண்டு என்றபடி
வரும் என்றது போன என்றபடி

அரும்பெறல் -நிர்ஹேதுகத்வத்தைக் காட்டும்
தானாகே வந்து முகம் காட்டி கார்யம் செய்து அருளினவன்
தானே நேராக அத்வார ஸ்ர்ஷ்டி செய்து அருளி
நான்முகன் மூலம் சத்வாரக திருஷ்டி
தெய்வ நான்முக கொழு முளை ஈன்று
கப்பும் கிளையும் காயும் கனியும் முளையில் இருந்து வருமே
நான் முகன் முளை யாகக் கூறப் பட்டான்
நான்முகனை நாராயணன் படைத்தான் —
மூல கந்தம் திரு நாபி என்பதால்
மூவுலகும் விளைத்த உந்தி
இத்தை உடைய மாயக் கடவுள் உண்டு
அவனுடைய திருவடிகளை
ஊழி தோறு ஊழி
ஓவாது வாழிய என்று
யாம் தொழ இசையும் கொல்
அந்த திருவடிகளை ஸ்ரமம் படுத்தி கார்யம் கொள்ளாமல்
பல்லாண்டு பாட பெற வேணும்
வாழிய -வியம் கோள் வினை முற்று-

———————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply